சட்டென புரிந்துகொண்டீர்களே என் செல்வங்களே !
Printable View
சட்டென புரிந்துகொண்டீர்களே என் செல்வங்களே !
ஒரு புதுத் தொடர்
அதுவும் விஷுவல் தொடர் ஆரம்பிக்கலாம்னு ஒரு ஐடியா. தம்பி ராகுல்ராம் கேட்டிருக்கார். இல்லையென்று மறுக்க முடியுமா? தலைவரின் உடையலங்காரங்களைப் பற்றி. தலைவர் உடைகளில் காட்டிய கவனம், அதை உடுத்துவதில் காட்டும் கவனம், எந்த உடையாய் இருந்தாலும் அவருக்கு அற்புதமாய் பொருந்தும் அழகு. இவற்றை வருங்கால சந்ததியினர் அறியட்டும் என்ற பேராசையில் ஒரு தொடர். விஷுவலாக. அனைவர் கருத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
எப்போ எய்த்ரீங்கோ ?
எய்தில...ஸ்டில் மட்டுந்தான்.
Thanks for your comments KC Sekar sir, S vasudevan sir & Murali sir
Thanks for your comments KC Sekar sir, S vasudevan sir & Murali sir
பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்...! குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்..! சிரிக்காதீர்...இதில்..நீங்கள் எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று உங்களுக்கே தெரியும்...!
https://www.youtube.com/watch?v=P1mj0ZSNcGc
அன்புள்ள முரளி சார் மற்றும் கோபால் சார்,
மெகா ஸ்டார் மம்மூட்டி அவர்கள் நடிகர்திலகத்துடன் சேர்ந்து நடிக்கவில்லையே தவிர நடிகர்திலகத்துக்கு புகழ்மாலை சூட்ட அவர் என்றைக்கும் தயங்கியதில்லை. அவர் ஒருமுறை பேட்டியில் சொன்னது....
"நான் நடிக்க வந்தபோது நடிகர்திலகம் சிவாஜி சாரின் நடிப்பில் மயங்கி அவருடைய நடிப்பில் பத்தில் ஒருபங்கு நடித்தாலே போதும் என்று விரும்பினேன். தொடர்ந்து நடித்து வந்தபோது எனக்கு மூன்று முறை சிறந்த நடிகர் என்று தேசிய விருது கொடுத்தார்கள். மூன்று தேசிய விருதுகளையும் கையில் வைத்துக்கொண்டு இப்போது சொல்கிறேன். நான் இன்னும் சிவாஜி சாரின் நடிப்பில் பத்தில் ஒருபங்கைத் தொடவில்லை".
என்ன ஒரு அற்புதமான கமெண்ட்.
இரு மலையாள சூப்பர் ஸ்டார்களுடன் திரையுலக பீஷ்மர்.
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...04574145_n.jpg
ஆஹா, அன்டாகாகுசம், அபுகா ஹுசும் ,படம் வேண்டும் சீசே என்றால் ஒரு பூதம் நம்மிடையே தயார். பேய்,பூதம், பிசாசு எப்படி வேண்டுமானாலும் வசதி படி வைத்து கொள்ளலாம். எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை.
மலையாள நடிகர்களுடன் நம் மன்னவர்
மலையாள நடிகர் சத்யனுடன்.
http://i1087.photobucket.com/albums/..._004209640.jpg
திக்குரிச்சி சுகுமாரன் நாயர் அவர்களுடன்
http://i1087.photobucket.com/albums/..._007912480.jpg
பிரேம் நசீருடன்.
http://i1087.photobucket.com/albums/..._001898400.jpg
http://i1087.photobucket.com/albums/..._000361680.jpg
மலையாள 'மது'வுடன்.
http://i1087.photobucket.com/albums/..._000801377.jpg
super song from 'yathramozhi'
http://www.youtube.com/watch?v=hbxVV...yer_detailpage
Vasudevan sir,
Friday and Saturday @ NLC
N - Needhi
L - Lakshmi Kalyanam
C - Chiranjeevi
.....?
காலையில் ஒரு வேலை நிமித்தமாக வெளியில் சென்று விட்டு மாலையில் வந்து பார்ப்பதற்குள்...
42 பதிவுகள் ....
சூப்பர் ... கலக்குங்கள் நண்பர்களே....
வாசு சார்,
தங்களின் புதிய காட்சித் தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம்... விரைவில் ஆரம்பியுங்கள்....
இதற்கு உந்து சக்தியான திரு ராகுல் ராம் அவர்களுக்கு மிக்க நன்றி.
N - Nadigar thilagam
L - Leader of Act
C - Clever personality
ராகுல் ராம்
ராஜா திரையரங்க அனுபவம் தங்களுக்கு புதிய உலகத்தின் கதவுகளைத் திறந்து விட்டிருக்கும். தங்கள் தலைமுறையில் நடிகர் திலகத்தின் படங்களுக்கு முன்பிருந்ததை விட அதிக அளவில் ரசிகர்களிடம் உத்வேகம் நிறைந்திருப்பதை நாங்கள் எண்ணி வியப்பதோடு மட்டுமின்றி தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த பேறை எண்ணி பெருமையும் பேருவகையும் கொள்கிறோம்.
இது போல் தொடர்ந்து பல அனுபவங்களைத் தாங்கள் பெற வேண்டும். அவற்றை தாங்கள் இங்கு எழுத வேண்டும். நாங்கள் படித்து மனம் நிறைவடைய வேண்டும்.
நன்றி.
வாசு சார்
கேரள மக்கள் என்றுமே கலையை நன்கு மதிக்கத் தெரிந்தவர்கள். அவர்களிடம் நடிகர் திலகத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு இருப்பதில் வியப்பில்லை என்றாலும் அது அவருடைய புதல்வர் இளைய திலகம் பிரபு அவர்களுக்கும் தொடர்ந்து கிடைப்பது தான் மிகப் பெரிய விஷயம். பிரபு அவர்களின் நடிப்பு கேரளத் திரையுலகில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளதும் பாராட்டுக்குரியது.
திக்குரிச்சி சுகுமாரன் நாயர் நடிகர் திலகத்துடன் தவப் புதல்வன் திரைப்படத்தில் உலகின் முதலிசை பாடல் காட்சியில் நடித்திருப்பார்.
ஒ்வ்வொரு கலைஞருடனும் நடிகர் திலகத்தின் நிழற்படம் மிக அருமை. தங்கள் உழைப்பு பிரமிப்பூட்டுகிறது. பாராட்டுக்குரியது.
நம்முடைய திரி நண்பர்களுக்கு,
நமது மையம் திரியின் மூலம் இளைய தலைமுறையினரிடம் நடிகர் திலகத்தை பற்றிய எவராலும் பேசபடாத அல்லது அவரது பல திறமைகள் பகிரங்கமாக தாழ்புணர்ச்சி காரணம் மறைக்கப்பட்ட விஷயங்களை எடுத்து கூற என்ன வழி என்று நமது நண்பரும், "சித்தரின்" தீவிர அபிமானியுமான திரு.ஆனந்தும், நானும் யோசித்து அதை ஒரு ஒலி-ஒளி வடிவமாக கொண்டு சென்றால் என்ன என்ற எண்ணத்தின் பயனாக விளைந்ததுதான் இந்த 29 நிமிட கருத்து பரிமாற்றம் "நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல் !!
எங்கே இதை எடுக்கலாம் என்று எண்ணும்போது நமது நினைவுக்கு வந்தது அண்ணாசாலையில் உள்ள செம்மொழி பூங்கா. எந்த வித முநேர்பாடும் இல்லாமல், என் கையில் இருந்த Sony Ericson Hazel Mobile Phone வழியாக ஹெட்-செட் மாட்டிகொண்டு மாறி மாறி படம் பிடித்தோம்.
இதில் பாடல்கள் வரும் இடத்தில் மற்றும் சில காட்சிகளில் பாடலுக்கு பதிலாக ஒரு மேலைநாட்டு இசை பயன்படுத்திஇருக்கிறோம் காரணம், இதை பார்க்கும்போது பாடல்களில் கவனம் சிதறக்கூடாது என்பதற்குதான்.
எதனால் நடிகர் திலகம், நடிகர் திலகமாக அழைக்கப்பட்டார் என்ற கேள்வி முதலில். வெறும் நடிப்பு மட்டுமா..அல்லது மற்ற எல்லா அம்சமும் ஒருங்கே பெற்ற திறமை காரணமா ? இந்த கேள்விக்கு விடை காணும் முயற்சியின் முதல் பாகம் தான் "நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல் !!
திரி நண்பர்கள் அனைவரும் இது எப்படி இருக்கிறது என்ற உங்களுடைய மேலான கருத்தினை, மற்றும் இந்த முயற்சியின் நிறை குறைகள் இருப்பின் அதனையும் சுட்டிக்காட்டினால் இன்னும் நன்றாக இதுபோல விஷயங்களை மேம்படுத்தமுடியும் என்று நம்புகிறோம். !
இந்த ஒளி-ஒலி ஒரு சிலருக்கு முதலில் இருந்து வருவதற்கு YouTube Play cursor சிறிது பின்னோக்கி இழுத்தால் முதலிலிருந்து ஒளிபரப்பாகும்.
http://www.youtube.com/watch?v=ydHGXXpVGdE
LIST OF OUR NADIGAR THILAGAM 100 DAYS FILMS @ KONGU MANDALAM - KOVAI - THE HERO WHO GAVE THE MAXIMUM NUMBER OF 100 DAYS FILMS IN KOVAI IN WHICHEVER PERIOD THE GENUINE STATISTICS MAY BE TAKEN - courtesy - Senthil Facebook
Attachment 2426
வாசு சார்,
நடிகர் திலகம் மலையாள நடிகர்களுடன் இணைந்து நடித்த விவரங்களை பற்றி நான் எழுதியதை படித்தவுடன் அவர்களோடு நடிகர் திலகம் இணைந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதிலும் குறிப்பாக [ஏற்கனவே பார்த்த புகைப்படம் என்றாலும் கூட] கலையுலக பீஷ்மர் தன மாணாக்கர்களோடு காட்சியளிக்கும் அந்த அரிய புகைப் படத்திற்கு நன்றி. உங்களுக்காக ஞான ஒளி பற்றிய ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு.
தேவனே என்னைப் பாருங்கள் பாடலைப் பற்றி பேசினோம். அந்த பாடல் எப்போது படமாக்கப்பட்டது தெரியுமா?
1972-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி புதன்கிழமை வசந்த மாளிகை படத்திற்கு பூஜை போடப்பட்டு அன்றே படப்பிடிப்பும் துவங்கியது. முன்பொரு முறை குறிப்பிட்டது போல முதல் நாள் வாணிஸ்ரீயின் திருமண நாள் அன்று நடிகர் திலகம் முதலில் வாசல் வழியாக வருவதும் பின்னர் பின்புற வாசல் வழியாக வந்து ஆசி கூறி செல்வதுமான காட்சிதான் முதன் முதலாக படமாக்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு முதல் ஷெட்யூல் நடைபெற்றது.
அடுத்த புதன்கிழமை ஜனவரி 26. நம் யாராலும் மறக்க முடியாத ராஜா ரிலீஸ் ஆன நாள். விமானப் படை அதிகாரிகளின் குடும்ப நல நிதிக்காக [ராகவேந்தர் சார், கரெக்ட்தானே?] சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் காலையில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் நடிகர் திலகமும் ஏனைய கலைஞர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரண்டு நாள் மீண்டும் மாளிகை ஷூட்டிங். 28-ந் தேதி வெள்ளி இரவு நடிகர் திலகம் கொடைக்கானல் புறப்பட்டார்.
29-ந் தேதி சனிக்கிழமை முதல் பிப்ரவரி 1 வரை நான்கு நாட்கள் கொடைக்கானலில் ஞான ஒளி படப்பிடிப்பு. தேவனே என்னைப் பாருங்கள் பாடலும் மற்றும் சில வெளிப்புற காட்சிகளும் அப்போதுதான் படமாக்கப்பட்டன.
பிப்ரவரி 2 அன்று காலையில் மீண்டும் சென்னை திரும்பிய நடிகர் திலகம் அன்று கலந்துக் கொண்ட நிகழ்ச்சி என்ன தெரியுமா? அன்றுதான் சாரதா ஸ்டுடியோவில் ராஜ ராஜ சோழன் பூஜை நடைப்பெற்றது. அங்கே சென்று அந்த தொடக்கவிழா பூஜையில் கலந்து கொண்டுவிட்டு முதல்நாள் சம்பிரதாயமான படப்பிடிப்பிலும் நடித்தார்.
ஒரே பதிவில்
கார்த்திக்கிற்கு பிடித்த வரலாற்று சுவடுகள்!
கோபாலை குஷிப்படுத்த வசந்த மாளிகை!
ராகவேந்தர் சாரின் மனம் கவர்ந்த ராஜா!
வாசுவின் உள்ளதோடு கலந்து விட்ட ஞான ஒளி!
சுப்புவிற்கு ராஜ ராஜ சோழன்!
அன்புடன்
வாசு சார்,
ஆடை அலங்கார அணிவகுப்பை சீரும் சிறப்புமாக துவக்குங்கள்!
கார்த்திக்,
உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றையும் அதனுடன் பின்னிப் பிணைந்த அரசியல் நிகழ்வுகளையும் எழுதுவதில் எனக்கு எத்துனை இன்பமோ அத்துணை இன்பம் உங்களுக்கு அதைப் படிப்பதில் என்பது எனக்கு தெரியும். நீங்கள் சில காலம் திரிக்கு வராமல் இருந்த காலக்கட்டத்தில் நான் ஒரு வரலாற்று குறிப்பு எழுதினேன். அதாவது எங்கள் மதுரையில் 1978 மார்ச் 4-ந் தேதி தியாகம் வெளியான நாள் முதல் அந்தப் படம் 175-வது நாளை நிறைவு செய்த ஆகஸ்ட் 25-ந் தேதி வரை வெளியான் திரைபபடங்கள், சில முக்கியமான அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றிய ஒரு பதிவு அது. நீங்கள் அதை படித்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால் அந்த பதிவை இட்ட போதும் அதை பற்றிய பின்னூட்டங்கள் பலரும் பதிந்த போதும் நீங்கள் எழுதவில்லை என்ற குறை மனதில் இருந்தது நிஜம். ஆனாலும் எப்போதும் இது போன்ற பதிவுகளுக்கு மேலதிக தகவல்களுடன் கூடிய உங்கள் பதில் பதிவு எப்போதும் படிக்க சுவை.
அன்புடன்
Thanks for encouraging words Ragavendran sir and Neyveli Vasu sir
Neyveli Vasu sir,
You have asked why I did not upload photos, my camera was not good secondly when I went there I was completely awestruck by celebrations there superb, gala time but decent at same time, Iam sure from now on more NT movies would be screened in Kovai following the success of Raja , will surely upload photos from nwxt time
Thank you very much for considering my request starting a series on NT dressing style & accessories
Dear hubbers,
Are Chiranjeevi, En desam En makkal, Anjal Petti 520(other than Raj video vision) available in DVD's in market kindly help
Thank u Raghul.
That is not 'En desam En makkal'. 'En tamizh en makkal'.
இன்றைய சூப்பர் நிழற்படம் (விஜய்)
http://i1087.photobucket.com/albums/...20-2/IMG-6.jpg
ஆஹா, என் மகனின் பெயர் கொண்ட(பெயருக்கு காரணமான?) ,அவனை போலவே நான் நேசிக்கும் ஒருவன்.
கார்த்திக் சார்,
நானும் recommend பண்ணுகிறேன். நிஜமாகவே மிக நல்ல சுவாரஸ்யமான பதிவு அது.திரி-10 .பக்கம்-126. பதிவு எண்கள் 1256,1257. அவர் பாணியில் சொன்னால் "அற்புதம்" என்ற ஒற்றை சொல்லை தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது.(முரளி சார் ,நீங்கள் பம்மலார் என்ற புனை பெயரில் எழுதியிருந்தால் கார்த்திக் சார் ஓடோடி வந்திருப்பார்.)