கார்த்திக்,

உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றையும் அதனுடன் பின்னிப் பிணைந்த அரசியல் நிகழ்வுகளையும் எழுதுவதில் எனக்கு எத்துனை இன்பமோ அத்துணை இன்பம் உங்களுக்கு அதைப் படிப்பதில் என்பது எனக்கு தெரியும். நீங்கள் சில காலம் திரிக்கு வராமல் இருந்த காலக்கட்டத்தில் நான் ஒரு வரலாற்று குறிப்பு எழுதினேன். அதாவது எங்கள் மதுரையில் 1978 மார்ச் 4-ந் தேதி தியாகம் வெளியான நாள் முதல் அந்தப் படம் 175-வது நாளை நிறைவு செய்த ஆகஸ்ட் 25-ந் தேதி வரை வெளியான் திரைபபடங்கள், சில முக்கியமான அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றிய ஒரு பதிவு அது. நீங்கள் அதை படித்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால் அந்த பதிவை இட்ட போதும் அதை பற்றிய பின்னூட்டங்கள் பலரும் பதிந்த போதும் நீங்கள் எழுதவில்லை என்ற குறை மனதில் இருந்தது நிஜம். ஆனாலும் எப்போதும் இது போன்ற பதிவுகளுக்கு மேலதிக தகவல்களுடன் கூடிய உங்கள் பதில் பதிவு எப்போதும் படிக்க சுவை.

அன்புடன்