From Today (19.08.2011) at Srinivasa Theatre, West Mambalam, Chennai, daily three shows, Nadigar Thilagam's evergreen and classic:
http://www.cinehour.com/gallery/even...eatre-(22).jpg
Printable View
From Today (19.08.2011) at Srinivasa Theatre, West Mambalam, Chennai, daily three shows, Nadigar Thilagam's evergreen and classic:
http://www.cinehour.com/gallery/even...eatre-(22).jpg
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படமும் அவருடைய அனைத்து ரசிகர்களின் மனதிலும் நீங்காமல் நிலை பெற்று விட்டாலும், சில படங்கள் (இது மட்டும் ஒவ்வொருவருக்கும் மாறலாம்!) அவரவர்களுடைய பழைய நினைவுகளைப் பெரிதாகக் கிளறி விடும். அந்த நினைவுகள் எப்போதும் இனியவையாகவும் அதே சமயம் கண்களில் நீரைப் பெருக்குவதாயும் அமையும்.
அந்த வகையில், அறுபதுகளிலும் அதற்குப் பிறகும் பிறந்த அனைத்து ரசிகர்களுக்கும் "தங்கை" தொடங்கி அவர் நடித்த பல படங்கள், நீங்கா இடம் பெறும். ஏனென்றால், ஒவ்வொரு மனிதனுக்கும் அவன்/அவள் வாழ்க்கையில் இளம் வயதில் நடக்கும் நிகழ்வுகள் தான் என்றென்றைக்கும் சாஸ்வதமாக மனதில் நிலைத்து இடம் பிடிக்கும். அதற்காக, தங்கைக்கு முன்னர் வந்த படங்கள் குறைத்து மதிப்பிடப்பட முடியாது. அவருடைய ஒப்பற்ற பல படங்கள் தங்கைக்கு முன்னர் தான் வெளிவந்தன. எனக்கும் அவைகள் மிகவும் பிடிக்கும். இருப்பினும், தங்கையிலிருந்துதான், அவருடைய ரசிகர்கள் வருடக்கணக்காக ஏங்கி எதிர்பார்த்துக் கொண்டிருந்த, அவரது புதிய பரிமாணம் துவங்கியது.
என் மனதுக்கு மிகவும் பிடித்த படங்கள் எத்தனையோ (closest to my heart). அதில் எப்போதும் தவறாமல் இடம் பிடிக்கும் படம் "ராமன் எத்தனை ராமனடி". இந்தப் படத்தில், குறிப்பாக, அவர் நடிகராகி அவரது பூர்வீக கிராமம் பூங்குடிக்கு வந்து ரயில் நிலையத்தின் வாசலில் வந்து, அந்த கூலிங் க்ளாசுடன் நின்றவுடன், அவரை முதலில் அவமானப்படுத்திய நான்கு பேரும், நடிகர் திலகம் வாயில் சிகரெட்டை வைத்தவுடன், லைட்டரை எடுத்துப் போகும் இடம் முதல், "அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு" சோக வடிவம் முடியும் வரை, அவர் செய்யும் அட்டகாசம், இந்த உயிர் உள்ளளவும் நிலை பெற்று விட்ட ஒன்று.
ஒன்றுக்கும் உதவாத சிறு பிள்ளைத்தனமான மனிதனாக இருந்தவரின் மனதில் இடம் பிடித்து, அந்தப் பெண்ணை அடைவதற்காக, பெரிய மனிதனாக ஆகி, அதே கிராமத்துக்குத் திரும்பவும் அவளுக்காகவே அடங்காத ஆவலுடன் வந்து - அதுவும் குறிப்பாக, அந்தக் கனவுப்பாடல், "சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்" -பார்க்கும் ஒவ்வொருவரையும், அந்த விஜயகுமார் பாத்திரத்துக்குள் நுழைத்து, அத்தனை பேரையும் விஜயகுமாராகவே ஆக்கி, - கடைசியில், காதலி தனக்கில்லை என்று தெரிந்தவுடன், அவர் அந்த அதிர்ச்சியை எதிர்கொள்ளுகிற விதம். அந்த சோக வடிவப் பாடல் துவங்குவதற்கு முன்னர், சதை படர்ந்த அந்த அழகு முகத்தில் காட்டுகின்ற நுணுக்கமான பாவங்கள் - முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் - பெரிய கண்களில் தெரியும் அந்த சோகம் கலந்த ஏமாற்றம் - வாய் விட்டு அழாமல் - ஆண்மையுடன் அந்த வலியைக் காட்டும் அந்த நேர்த்தி - what a controlled brilliant performance! கடைசியில் பாடல் முடிந்தவுடன், கையில் உள்ள ஸ்டிக்கால் தரையை ஆத்திரத்துடன் தட்டிக் கொண்டே, காலையும் உதைத்துக் கொண்டே, அந்த உணர்வுகளை வெளிப்படுத்திய விதம்! (இத்தனைக்கும், அவருடைய பின் புறம் தான் மக்களுக்குத் தெரியும் ("ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ" பாடல், ஆண்டவன் கட்டளையில் சில இடங்கள் என்று இந்த வகையில் பலவற்றை அடுக்கி கொண்டே போகலாம்.). காதலி தனக்கில்லை என்ற செய்தியை எதிர்கொண்டு அந்த அதிர்ச்சி கலந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விதத்திற்கு இலக்கணம் அமைத்த காட்சி; பின்னர் எத்தனை எத்தனையோ நடிகர்களுக்கு inspiration-ஆக அமைந்த நடிப்பு (இப்படி பல நடிப்புகள் உள்ளன என்றாலும்!).
அவர் இறப்பதற்கு முன்னால், அவருடைய நடிப்பில் கடடுண்டு அழுதிருக்கிறேன் (றோம்). ஆனால், அவர் இறந்த பின், ஒவ்வொரு முறை அவருடைய பல்வேறுபட்ட நடிப்பினைத் தாங்கிய படங்களையும், பாடல்களையும், காட்சிகளையும் பார்க்கும் போது, "ஆஹா எப்பேர்பட்ட நடிகன்! போய் விட்டாயே!!" என்ற உணர்வால், அழது கொண்டிருக்கிறேன் (றோம்).
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
நன்றி அன்பு பார்த்தசாரதி சார்.
இரு ஒன்றுபட்ட ஒரே ரசனையுள்ள உள்ளங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும்போது ஏற்படும் மகிழ்ச்சியும், ஆனந்தமும் வார்த்தைகளில் அடங்கி விடாது. அந்த அதி அற்புத பாக்கியத்தை நமக்களித்த நம் 'இதய தெய்வத்திற்கு' நன்றி சொல்வதைத் தவிர வேறு நான் என்ன சொல்ல!.....
உங்கள் ரசனைக்குத் தலை வணங்கும்,
உங்கள் அன்பன்,
நெய்வேலி வாசுதேவன்.
Alright, I have sent mine. Here's the mail:
Dear sir,
By now you are already inundated with angry or sad mails concerning the error in your invitation letter. The reason I write is to let you know that there are fans from all over the world who's aware who Nadigar Thilagam Sivaji Ganesan is. I am from Malaysia.
The error reflects poorly on your organisation, and it might even embarass K. Balachander himself, who might take the error as reflection of how the award has lost its credibility. I hope I am wrong.
Hopefully, you will do some correction, before hurting more Sivaji fans, which includes many of your future award candidates.
Take care and thanks for your attention.
--
Rakesh Kumar Premakumaran
Batu Caves, Malaysia
ராகேஷ், உணர்வு பூர்வமாகவும் அதே சமயம் பொருளை விட்டு விலகாமலும் தங்களுடைய கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி, பாராட்டுக்கள்.
அன்புடன்
டியர் வாசுதேவன் மற்றும் பார்த்த சாரதி,
வாழ்நாளில் என்றைக்கும் மறக்கவே முடியாத உன்னதத் திரைக்காவியத்தைப் பற்றித் தாங்கள் நினைத்து நினைத்து எழுதியுள்ள வரிகள் உணர்ச்சிகரமாயும் கருத்தாழத்துடனும் உள்ளன. தாங்கள் கூறியது போல், இளம் வயது நினைவுகள் மனிதனின் சரீரத்தையும் தாண்டி உயிருடன் கலந்து அவன் மரணித்து விட்டாலும் கூட, அவனுடன் சேர்ந்து ஆத்மாவில் கலந்து பூமியில் சஞ்சாரித்துக் கொண்டே இருக்கும். அதுவும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு சொல்லவே வேண்டாம். அப்படி உயிருடனு்ம் ஆத்மாவுடனும் கலந்த படங்களில் ஒன்று ராமன் எத்தனை ராமனடி. தாங்கள் கூறிய காட்சிகளின் நிழற்படங்கள் இங்கே நம் நினைவுகளை அசை போடுவதற்காக...
http://i872.photobucket.com/albums/a...Rvarietyfw.jpg
அன்புடன்
"கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
.................................................. ...........................
குணத்திற்குத் தேவை மனசாட்சி
மயிலைப் பார்த்து கரடி என்பான்
மானைப் பார்த்து வேங்கை என்பான்
குயிலைப் பார்த்து ஆந்தை என்பான்
அதையும் சிலபேர் உண்மை என்பான்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
................................
சிவாஜியைப் பார்த்தால் என்ன செய்வது "
அன்புள்ள வாசுதேவன் சார், பார்த்தசாரதி சார் மற்றும் ராகவேந்தர் சார்....
'ராமன் எத்தனை ராமனடி' படத்தில் நீங்கள் குறிப்பிடும் காட்சி பற்றி, சாரதா அவர்கள் தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் இடம் இதோ.....
""// ......படத்தில் இரண்டு முறை வரும் ' அம்மாடீ.... பொண்ணுக்குத் தங்க மனசு' பாடல் அப்போது (இப்போதும்) SUPER HIT.. அதிலும் இரண்டாவது பாடலைவிட, முதலில் அப்பாவி ராமு பாடும் பாடல், மெட்டு ரீதியாகவும், காட்சி ரீதியாகவும் ரொம்பவே பாப்புலர். இந்தப்பாடலுக்கு முன்னால், கே.ஆர்.விஜயாவும் தோழிகளும் வருமுன்னர் கூட்டாளிகளோடு 'கொலை கொலையா முந்திரிக்கா' விளையாடிக் கொண்டிருக்கும் நடிகர்திலகத்தைக்காட்டி, ‘இவர்தாம்பா வீரபாண்டிய கட்டபொம்மனிலும், பாசமலரிலும் நடித்தவர். இவ்வளவு ஏன், இதற்கு முந்தைய படமான வியட்நாம் வீட்டில் பிரிஸ்டீஜ் பத்மனாபனாக நடித்தவர்தான்யா இதோ ‘கொலை கொலையா முந்திரிக்கா’ விளையாடிக் கொண்டிருக்கிறார்’ என்றால் யாராவது நம்புவார்கள் என்கிறீர்களா?. ஆம், எங்கள் அண்ணன் நடிப்பின் எல்லா நீள, அகல, உயர, ஆழங்களையும் அளந்து முடித்தவர் என்று மார்தட்டிச்சொல்வோம்.
சில ஆண்டுகளுக்குப்பிறகு அதே லொக்கேஷனில், தனித்தவராக ஏமாற்றத்தின் விளிம்பில் நின்று அவர் பாடும்... 'அம்மாடீ... பொண்ணுக்கு தங்க மனசு... தங்க மனசு... தங்க மனசு...' அடுத்த வரி பாட முடியாமல், அண்ணாந்து பார்க்க, அங்கே எரிந்துகொண்டிருக்கும் டியூப் லைட், கிராமம் ரொம்ப மாறிவிட்டது என்பதற்கு அடையாளம் காட்டும்.
எந்த தேவகி என்ற மந்திரச்சொல் தன் வாழ்க்கைப்பாதையையே மாற்றி அமைத்ததோ அந்த தேவகியை சந்திக்கப்போகிறோம் என்ற உற்சாகத்துடன் ரயிலில் வந்துகொண்டிருக்கும் ராமுவுக்கு, முந்தைய ஸ்டேஷனிலேயே தன்னை வரவேற்க வந்து நிற்கும் தேவகியுடன், ரயிலில் பயணிக்கும்போது தேவகி (கே.ஆர்.விஜயா) பாடுவதாக வரும், 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்' பாடல் மெல்லிசை மன்னரின் அபார திறமைக்கு எடுத்துக்காட்டு. 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்' என்பது ஒரு மெட்டு, 'தேரில் வந்த ராஜராஜன் என்பக்கம்' இன்னொரு மெட்டு, சரணத்தில் 'அந்நாளிலே நீ கண்ட கனவு காயாகி இப்போது கனியானதோ' என்பது இன்னொரு மெட்டு... இந்த வாமனர், தன் மூன்று காலடிகளில் இசையுலகையே அளந்து முடித்து விட்டார் என்றால் அது மிகையா?. இல்லவே இல்லை. இப்பாடலுக்கு பக்க வாத்தியமாக வரும் ரயிலின் தாலாட்டு, அது பக்க வாத்தியமல்ல 'பக்கா' வாத்தியம். அக்கால நீராவி எஞ்சினின் விசில் சத்தமாகக்காட்டி அதையே, ஸ்ருதி மாறும்போது ராமு என்கிற விஜயகுமார், புல்லாங்குழல் வாசிப்பதாகக்காட்டுவது மெல்லிசை மன்னரின் கம்போஸிங்கை இயக்குனர் பி.மாதவன் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம். பாடலும் தேவகியும் கனவு என்று அறியும்போதும், அதை மாஸ்டர் பிரபாகர் கிண்டல் செய்யும்போதும் அவர் முகத்தில் தோன்றும் நாணம்.
இந்தப்பாடல் முடிந்து ஸ்டேஷனில் வந்திறங்கும்போது, ஃபுல் சூட்டும் கண்களில் குளிர்க்கண்ணாடியுமாக, ரயில் பெட்டியின் வாசலில் தோன்றும்போது ரசிகர்களின் கைதட்டல் காதைக்கிழிக்கும். (வரவேற்கும் பேண்டு வாத்தியத்தில் 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே' பாடல்) இதே உடையுடனும், மைனர் அணிவிக்கும் ஆளுயர மாலையுடனும் அவர் நிற்கும் போஸ்தான் படத்தின் முழுப்பக்க விளம்பரம். .........//""
'ராமன் எத்தனை ராமனடி'பற்றிய சாரதாவின் முழு ஆய்வுக்கட்டுரையும் படிக்க, இங்கே சொடுக்கவும்....
http://www.mayyam.com/talk/showthrea...890#post427890