சென்னை மாவட்ட எம் ஜி ஆர். மன்ற மூத்த உறுப்பினரும், கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை நிறுவனர்களில் ஒருவரும், அனைத்துலக எம். ஜி..ஆர். பொது நல சங்க துணைத் தலைவருமாகிய,
திரு. க. இ . பாஸ்கரன் - பா. அவ்வை செல்வி அவர்களின் குமாரத்தி
செல்வி சண்முகப்ரியா B.Sc. (Nutrition) அவர்களுக்கும்,
திருமதி தமிழரசி மாணிக்கம் அவர்களின் குமாரன்
செல்வன் மா. கணேசன், M.B.A. SAP (FICO) அவர்களுக்கும்,
கடந்த 20-05-2013 திங்கள்கிழமையன்று மதுரை திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் அமைந்துள்ள வி எஸ் ஆர். ராமதிலகம் மஹாலில்,
திருமணம்,. வெகு விமர்சையாக,
பரமக்குடி மஞ்சள்பட்டினம் தெய்வத்திரு வீ . கருப்பையா பிள்ளை - அம்மணி அம்மாள், தெய்வத்திரு. க. இருளப்ப பிள்ளை - செண்பகம் அம்மாள் மற்றும் மதுரை திருமங்கலம் தெய்வத்திரு. வீ. மாயாண்டி பிள்ளை - ராமுத்தாய் அம்மாள், தெய்வத்திரு. மா. வீரபத்திர பிள்ளை - ரத்தினம் அம்மாள்
ஆகியோரின் பரிபூரண நல்லாசியுடன், சீரும் சிறப்புடனும், நடை பெற்றது.
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திரளாக வந்திருந்து சிறப்பித்து, மணமக்களை, எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ, வாழ்த்திய, எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களை சார்ந்த எம். ஜி. ஆர். பக்தர்கள், அன்பர்கள் அனைவரையும், திரு. க. இ . பாஸ்கரன் அவர்களின் புதல்வன் திரு. பா. கவின்குமார், திரு. க. இ . பாஸ்கரன் அவர்களின் சகோதரர் பழனிகுமார் மற்றும் திரு. மா. ராஜேஷ்கண்ணன், செல்வி. ரா. சசிகலா ஆகியோர் இன்முகத்துடன் உபசரித்து வரவேற்றனர்.
மணமக்களுக்கு, மக்கள் திலகம் திரியின் பதிவிடுவோர் மற்றும் பார்வையிடுவோர் சார்பில் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
http://i44.tinypic.com/2ugfbww.jpg
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்., எங்கள் இறைவன்