-
22nd May 2013, 02:49 PM
#1131
Junior Member
Platinum Hubber
1947 இல் வெளிவந்த ராஜகுமாரி படம் அவருக்கு நல்ல நடிகர் அந்தஸ்துக்கு உயர்த்தியது. பின்னர் 1950 களில் திரையுலகம் எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக்கி கொண்டாடியது. 1954 இல் வெளிவந்த மலைக்கள்ளன் படம் எம்.ஜி.ஆரை உயரத்தில் கொண்டு நிறுத்தியது. பின்னர் அரசியல் களத்திலும் கோலோச்ச தொடங்கினார். 1977முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடமையிலிருந்தார். மூன்று தடவை தொடர்ச்சியாக இவர் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சானார்.
முதன்முறையாக திரைப்பட நடிகர் ஒருவர் இந்திய மாநிலம் ஒன்றின் முதலமைச்சராக பதவியேற்ற பெருமை எம்.ஜி.ஆரையே சாரும். 1984ம் ஆண்டு கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போதும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வர் எனும் பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. இவரது கலைச்சேவை, பொதுச்சேவைக்கு கிடைத்த செல்வாக்கு, கௌரவம் என்பன அத்தேர்தலை அதிமுக வெற்றிகரமாக எதிர்நோக்க பெரிதும் உதவியது.
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக கொள்கையை கடைப்பிடிக்கும் திராவிட கட்சியில் இருந்த போதிலும் தமிழ்நாட்டில் பலர் இவரை கடவுள் போன்றே போற்றினார்கள். தமிழ் மொழிக்கு என தனியே ஒரு தமிழ் பல்கலைக்கழகம் வேண்டுமென 1921ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, நடைமுறை சாத்தியமாக்கினார் எம்.ஜி.ஆர்.
1981ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் முயற்சியில் தான் தமிழக அரசால் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம உருவாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகளில், பாரத் விருது, பாரத ரத்னா விருது, என்பன குறிப்பிடத்தக்கன. இதில் பத்மசிறீ விருதை அவர் ஏற்க மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
யுத்த தேவைகளுக்காக நிதியுதவி செய்த முதலாவது அரசியல் தலைவர் எனும் பெருமையும் எம்.ஜி.ஆரை சாரும். 1962ம் ஆண்டு, சீனாவுடனான யுத்தத்தின் போது ரூ.75,000 யுத்த நிதியுதவியாக இந்திய இராணுவத்திற்கு கையளித்தார். அதோடு இலங்கையிலிருந்து தமிழீழம் தனி நாடாக சுதந்திரம் பெறவேண்டுமென வெளிப்படையாகயே வி.புலிகளுக்கு நிதியுதவி செய்தவ எம்.ஜி.ஆர் ஆவார்.
அதோடு தீ, வெள்ளம், சூறாவாளி போன்ற இயற்கை அழிவுகளில் சிக்கிய பிரதேசங்களின் மீள் நிவாரண பணிகளுக்காகவும் தனிப்பட்ட முறையில் அதிக நிதியுதவி செய்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் போதே, 1987ம் ஆண்டு டிச.24ம் திகதி எம்.ஜி.ஆர் மறைவை எய்தினார். எம்.ஜி.ஆர் மீது கொண்டிருக்கும் தனிப் பற்றுதல் காரணமாக மட்டுமே, அதிமுகவுக்கு ஆதரவு வழங்குபவர்கள் இன்று வரை தொடர்கின்றனர்.
courtesy-kalapam
-
22nd May 2013 02:49 PM
# ADS
Circuit advertisement
-
22nd May 2013, 03:25 PM
#1132
Junior Member
Devoted Hubber
அரசியலுக்கு அப்பாற்பட்டும், மககள் திலகத்தைப் போற்றுபவர்கள் ஏராளம்.
-
22nd May 2013, 05:09 PM
#1133
Junior Member
Veteran Hubber
சென்னை மாவட்ட எம் ஜி ஆர். மன்ற மூத்த உறுப்பினரும், கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை நிறுவனர்களில் ஒருவரும், அனைத்துலக எம். ஜி..ஆர். பொது நல சங்க துணைத் தலைவருமாகிய, திரு. க. இ . பாஸ்கரன் - பா. அவ்வை செல்வி அவர்களின் குமாரத்தி
செல்வி சண்முகப்ரியா B.Sc. (Nutrition) அவர்களுக்கும்,
திருமதி தமிழரசி மாணிக்கம் அவர்களின் குமாரன்
செல்வன் மா. கணேசன், M.B.A. SAP (FICO) அவர்களுக்கும்,
கடந்த 20-05-2013 திங்கள்கிழமையன்று மதுரை திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் அமைந்துள்ள வி எஸ் ஆர். ராமதிலகம் மஹாலில், திருமணம்,. வெகு விமர்சையாக,
பரமக்குடி மஞ்சள்பட்டினம் தெய்வத்திரு வீ . கருப்பையா பிள்ளை - அம்மணி அம்மாள், தெய்வத்திரு. க. இருளப்ப பிள்ளை - செண்பகம் அம்மாள் மற்றும் மதுரை திருமங்கலம் தெய்வத்திரு. வீ. மாயாண்டி பிள்ளை - ராமுத்தாய் அம்மாள், தெய்வத்திரு. மா. வீரபத்திர பிள்ளை - ரத்தினம் அம்மாள்
ஆகியோரின் பரிபூரண நல்லாசியுடன், சீரும் சிறப்புடனும், நடை பெற்றது.
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திரளாக வந்திருந்து சிறப்பித்து, மணமக்களை, எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ, வாழ்த்திய, எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களை சார்ந்த எம். ஜி. ஆர். பக்தர்கள், அன்பர்கள் அனைவரையும், திரு. க. இ . பாஸ்கரன் அவர்களின் புதல்வன் திரு. பா. கவின்குமார், திரு. க. இ . பாஸ்கரன் அவர்களின் சகோதரர் பழனிகுமார் மற்றும் திரு. மா. ராஜேஷ்கண்ணன், செல்வி. ரா. சசிகலா ஆகியோர் இன்முகத்துடன் உபசரித்து வரவேற்றனர்.
மணமக்களுக்கு, மக்கள் திலகம் திரியின் பதிவிடுவோர் மற்றும் பார்வையிடுவோர் சார்பில் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்., எங்கள் இறைவன்
-
22nd May 2013, 05:14 PM
#1134
Junior Member
Veteran Hubber
மக்கள் தலைவர் என்றால் அது எம். ஜி. ஆர். தான் -
நமது இதய தெய்வம் எம். ஜி. ஆர் . அவர்கள் பற்றி, திரு. E.v.k.s. இளங்கோவன் அவர்கள், அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல். ஏ. சதாசிவம் மணிமண்டப திறப்பு விழா . கூட்டம் ஒன்றில் பேசியது .
26-05-13 தேதியிட்ட குமுதம் ரிபோர்ட்டர் இதழில் பிரசுரமானது :
விவரம் தொடர்கிறது.
:
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
22nd May 2013, 06:25 PM
#1135
Junior Member
Veteran Hubber

Originally Posted by
masanam
மக்கள் திலகம் மட்டுமே சட்டமன்ற தேர்தலில், தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று, முதல்வராகி அதிலும் சாதனையைப் படைத்தவர்.
MGR has to reborn to break this record in Tamil Nadu.
-
22nd May 2013, 06:28 PM
#1136
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ravichandrran
வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாமல் வாரி வழங்கி
எட்டாவது வள்ளலென எட்டா புகழ் பெற்ற
எங்கள் தங்கத்தை பூந்தோட்டத்தில் வைத்த அருமை நண்பர்
திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.
-
22nd May 2013, 06:34 PM
#1137
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
திண்டுக்கல் இடைத்தேர்தல் 1973
ஒட்டு எண்ணிக்கையும் -மக்கள் திலகத்தின் ரசிகர்களின் கொண்டாட்டமும் .
திண்டுக்கல் இடைதேர்தல் ஒட்டு எண்ணிக்கை அன்று பிற்பகல் வரை நிலவரம் ஒன்றும் தெரியாத சூழ் நிலையில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் நாங்கள் ஒன்று கூடி பெங்களூர் ''தினசுடர்'' மாலை பத்திரிகை அலுவலகம் முன்பு கூடினோம் . அந்த நேரத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பெங்களூர் நகர எல்லா பகுதியிலிருந்தும் சுமார் 300 பேர் வந்திருந்தனர். அதே நேரத்தில் சிவாஜி ரசிகர்களும் - திமுக -அதிமுக தொண்டர்களும் மொத்தமாக 500 பேர்கள் மேல் கூடியிருந்தனர்.
பக்கத்தில் pti அலுவலகமும் இருந்ததால் அங்கும் மக்கள் வெள்ளம் கூடியிருந்தது .
Pti அருகில் ஸ்ரீ சினிமா அரங்கத்தில் மக்கள் திலகத்தின் ''நாடோடிமன்னன்'' படம்
தினசரி 3காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது .
முதல் கட்ட எண்ணிக்கை நிலவரப்படி அதிமுக வேட்பாளர் மாயதேவர் அவர்கள் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முந்துகிறது என்றவுடன் மக்கள் திலகம் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர் .
பின்னர் ஒவ்வொரு மணி நேரமும் வாக்குகள் வித்தியாசம் 20,30, 40 ஆயிரம் என்று .மின்னல் வேகத்தில் வித்தியாசம் சென்றது .
இரவு 10 மணியளவில் 1,00,000 வாக்குகள் வித்தியாசம் என்றதும் மக்கள் வெள்ளம் அனந்த வெள்ளத்தில் மகிழ்ச்சியினை கொண்டாடி ஊர்வலமாக ''ஸ்ரீ' அரங்கத்தினுள் சென்று பிரமாண்டமாக கொண்டாடினர் .
இந்த இனிய அனுபவம் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு என்றென்றும் இனிய
மக்கள் திலகத்தின் - அதிமுகவின் இமாலய வெற்றியின் - நினைவுகள் என்றால் அது மிகையல்ல .
ஒரு நடிகராக ''உலகம் சுற்றும்வாலிபன்''- அரசியல் களத்தில் '' திண்டுக்கல்''
என்ற உலக புகழ் தந்த '' இரட்டை இலை '' என்ற இரண்டு விருந்து கொடுத்த
மக்கள் திலகத்தின் சாதனையை மறக்க முடியுமா ?
திண்டுக்கல் வெற்றியை திரைப்படம் போல் முன் நிறுத்தி
நினைக்க நினைக்க நெஞ்சில் திகட்டாத இன்பம் தந்த
திரு. வினோத் சார் அவர்களுக்கு நன்றி...அந்த வேளையில் நான் இல்லையே.... அந்த நாள் வந்திடாதோ என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்களே ஐயா....
நீங்கள் அந்த வேளையில் இருந்து இப்பிறவி பெற்ற பயனை அடைந்து விட்டீர்கள்..நாங்கள்?
-
22nd May 2013, 06:37 PM
#1138
Junior Member
Veteran Hubber

Originally Posted by
makkal thilagam mgr
சென்னை மாவட்ட எம் ஜி ஆர். மன்ற மூத்த உறுப்பினரும், கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை நிறுவனர்களில் ஒருவரும், அனைத்துலக எம். ஜி..ஆர். பொது நல சங்க துணைத் தலைவருமாகிய,
திரு. க. இ . பாஸ்கரன் - பா. அவ்வை செல்வி அவர்களின் குமாரத்தி
செல்வி சண்முகப்ரியா B.Sc. (Nutrition) அவர்களுக்கும்,
திருமதி தமிழரசி மாணிக்கம் அவர்களின் குமாரன்
செல்வன் மா. கணேசன், M.B.A. SAP (FICO) அவர்களுக்கும்,
கடந்த 20-05-2013 திங்கள்கிழமையன்று மதுரை திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் அமைந்துள்ள வி எஸ் ஆர். ராமதிலகம் மஹாலில்,
திருமணம்,. வெகு விமர்சையாக,
பரமக்குடி மஞ்சள்பட்டினம் தெய்வத்திரு வீ . கருப்பையா பிள்ளை - அம்மணி அம்மாள், தெய்வத்திரு. க. இருளப்ப பிள்ளை - செண்பகம் அம்மாள் மற்றும் மதுரை திருமங்கலம் தெய்வத்திரு. வீ. மாயாண்டி பிள்ளை - ராமுத்தாய் அம்மாள், தெய்வத்திரு. மா. வீரபத்திர பிள்ளை - ரத்தினம் அம்மாள்
ஆகியோரின் பரிபூரண நல்லாசியுடன், சீரும் சிறப்புடனும், நடை பெற்றது.
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திரளாக வந்திருந்து சிறப்பித்து, மணமக்களை, எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ, வாழ்த்திய, எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களை சார்ந்த எம். ஜி. ஆர். பக்தர்கள், அன்பர்கள் அனைவரையும், திரு. க. இ . பாஸ்கரன் அவர்களின் புதல்வன் திரு. பா. கவின்குமார், திரு. க. இ . பாஸ்கரன் அவர்களின் சகோதரர் பழனிகுமார் மற்றும் திரு. மா. ராஜேஷ்கண்ணன், செல்வி. ரா. சசிகலா ஆகியோர் இன்முகத்துடன் உபசரித்து வரவேற்றனர்.
மணமக்களுக்கு, மக்கள் திலகம் திரியின் பதிவிடுவோர் மற்றும் பார்வையிடுவோர் சார்பில் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்., எங்கள் இறைவன்
மணமக்கள் இருவரும் இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்கவென புதுச்சேரி பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அனைத்துலக அறக்கட்டளையின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறோம்.
-
22nd May 2013, 06:38 PM
#1139
Junior Member
Veteran Hubber
' இரட்டை இலை '' என்ற இரண்டு விருந்து கொடுத்த
when this dialog was said by Isari Velan in Ithayakani movie I did not know the real meaning behind, now I understand the real meaning.
-
22nd May 2013, 06:45 PM
#1140
Junior Member
Platinum Hubber
நன்றி திரு kpv சார்
இன்று நினைத்தாலும் நம் மக்கள் திலகத்தின் - அரசியல் சினிமா நினைவுகள் மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது .
உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது இன்னும் சற்று மன நிறைவு தருகிறது .
Bookmarks