டியர் ராகுல்றாம்,
சொர்க்கம் திரைப்படத்தைப் பார்காதவர்களுக்கு, காட்சிக்கு காட்சியாக விவரித்து, காட்சிகள் இணைப்புடன் ஒரு முழுத் திரைப்படத்தையும் அளித்துவிட்டீர்கள். பாராட்டுக்கள். நன்றி.
Printable View
டியர் ராகுல்றாம்,
சொர்க்கம் திரைப்படத்தைப் பார்காதவர்களுக்கு, காட்சிக்கு காட்சியாக விவரித்து, காட்சிகள் இணைப்புடன் ஒரு முழுத் திரைப்படத்தையும் அளித்துவிட்டீர்கள். பாராட்டுக்கள். நன்றி.
நான் சுவாசிக்கும் சிவாஜி (8) - ஒய்.ஜி.மகேந்திரா
http://www.dinamalar.com/supplementa...d=18096&ncat=2
Gopal sir,
Thanks for your comments
KC Sekar sir,
Iam thanking you for 2 reasons one for reading my article and commenting
second for taking steps in retaining NT statue in same place
Yes I read ur comments in Junior Vikatan today hats off sir
ஏற்கனவே நமது திரியில் திரு.வாசுதேவன் அவர்கள் இந்த நாடகத்தின் பிரத்தியேகத் தகவல்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். அப்போதைய விவாதத்தின்போது இந்த ஒளிநாடா காணாமல் போய்விட்டதான தகவலும் தெரிவிக்கப்பட்டு, அதற்காக பலரும் தங்களின் கவலையைப் பகிர்ந்துகொண்டிருந்தனர்.
திரியின் மூத்த நண்பர்களுக்கு,
முன்பெல்லாம் Google Search இல் நடிகர்திலகம் திரியின் Part எண் குறிப்பிட்டு தேடினால் அந்த பாகத்திற்கு செல்ல முடிந்தது. தற்போது அதுமாதிரி சென்றால், பாகம் -11 வரைதான் வருகிறது. காரணம் தெரியவில்லை. திரியில் வருகைக் குறைவுக்கு, பலருக்கு திரியின் இணைப்பு கிடைக்காமல் இருப்பதுகூட காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. 11-ஆம் பாகத்தின் இறுதியில் 12 ஆம் பாகத்தின் இணைப்பைக் கொடுத்து உதவியிருந்தால் நன்றாக இருக்கும்.
Mr Gopa,
I have already mentioned in the previous thread that I do not have a system and
posting the same from office. I am also interested in to give analysis on NT's
various movies but due to prior comittment the same has not been materialised.
I am not an expert like you but one day the same will be done in my own style.
Till such time pardone me for my three line posting.
Regards
Mr Vasu Sir,
Do visit and start your postings.
JUNIOR VIKATAN - Current Issue
http://i1234.photobucket.com/albums/...ps1692ac38.jpg
http://i1234.photobucket.com/albums/...psa70e74b6.jpg
Dear KC sir,
Thanks for your effort in thalaivar statue
SIVAJI PERAVAI and k.c. sir always giving loud voices to protect NT'S name and fame. we sicerely hope and pray the verdict will come in our favour.
thanga surangam write-up by rahulram very lively,
keep it up.
uthamautran always giving good feast for eyes next to vasu sir.
இப்போதுதான் ஒரு சலசலப்பு நடந்து முடிந்தது என்று நினைத்தால் மீண்டும் சில வேதனையான காட்சிகள் நமது திரியில் அரேங்கேற்றம். நண்பர் சின்னக் கண்ணன் அவர்கள் தன் மனதில் தோன்றிய ஒரு சில எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டார். அவரை பொறுத்தவரை பாட்டுக்கு பாட்டு திரியிலும் கவிதைக்கு கவிதை திரியிலும் அவருடன் சேர்ந்து பங்களிப்பு செய்யும் ஆட்களை அவர் நன்கு அறிவார். அவர்களுடன் ஒரு நல்ல rapport-வும் அவருக்கு உண்டு, அதே போன்ற சூழலை அவர் இங்கே எதிர்பார்த்தார் என தோன்றுகிறது. இங்கே நிலவும் சூழல், புதிய ID-க்களின் வரவு, பயன்படுத்தப்பட்ட மொழி ஆகியவை அவரை disturb செய்து விட்டது என தோன்றுகிறது. அதை அவர் தன பதிவில் வெளிப்படுத்தியிருக்கிறார். இதற்கு ஒரு சில நண்பர்கள் எதிர்வினையாற்றிய முறை சரியான தரத்தில் அமையவில்லை என்று கேள்விப்படுகிறேன். அதை நான் படிக்கவில்லை. ஆனால் நமது திரியின் மாண்பிற்கு சற்றும் பொருந்தாத வகையில் வார்த்தை பிரயோகங்கள் அமைந்திருந்ததாக கேள்விப்பட்டேன்.
சின்ன கண்ணன் அவர்கள் பதிவு செய்திருந்தது அவரது மனதின் எண்ணங்களை. அவற்றில் கருத்து வேறுபாடு இருப்பின் அல்லது அவர் சொன்னவற்றை மறுக்க நினைத்தாலோ அதை கண்ணியமான வழியில் நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி சொல்லியிருக்கலாமே. அதை விடுத்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது, இந்த திரியை விட்டு போ என்றெல்லாம் சொல்லுவது நமது நடிகர் திலகத்தின் திரிக்கு அதன் பெருமைக்கு களங்கம் விளைவிப்பதாகவே அமையும். மாற்று கருத்துக்களை சொல்பவர்கள் யாரும் திரிக்கு வரக் கூடாது என்பது சரியான நிலைப்பாடு கிடையாது. நடிகர் திலகத்திடமே கருத்து வேறுபாடு கொண்ட ரசிகர்கள் அதாவது அவர் எடுத்த அரசியல் நிலைப்பாட்டை பற்றியே மாற்று கருத்து கொண்டு அதை அவரிடமே நேரில் சொன்ன தீரா மறவர் கூட்டம் நமது ரசிகர் கூட்டம். ஆகவே மாற்று கருத்தை எதிர்க்க வேண்டாம். அதே நேரத்தில் வேண்டுமென்றே விஷமத்தனமான கருத்துகளை இங்கே யாராவது எழுதினால் அதற்கு நாம் தக்க பதில் அளிக்கலாம். அதுவும் கூட நாகரீகமாக.
இந்த exchanges காரணமாக இனி மய்யம் இணையதளத்திற்கு வரமாட்டேன் என்று சின்ன கண்ணன் எழுதியிருந்ததாக அறிகிறேன். அவர் அந்த முடிவை கைவிட்டு மீண்டும் திரும்ப வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கார்த்தி (Honest Raj),
இந்த திரி பற்றிய உங்கள் கருத்தை நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள். அது உங்கள் உரிமை. அதே நேரத்தில் பாராட்டை கேட்டு வாங்குபவர்கள் என்ற தொனியில் நீங்கள் எழுதியிருப்பது வருத்தத்துக்குரியது. ஒருவரின் பதிவை பாராட்டுவது எனபது ஒவ்வொருவரின் விருப்பம். அதை குறையாக சுட்டிக் காட்டியதை தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
அன்புடன்
சின்னக் கண்ணன் சார்
நடிகர் திலகம் பிறந்த நாள் விழாவில் ஏராளமான ரசிகர்களை சந்தித்து உரையாடியது உண்மை. அதில் சரஸ்வதி லக்ஷ்மி என்ற பெயரில் யாரையும் நான் சந்திக்கவில்லை. பிறகு சுப்பு என்கிற சுப்ரமணியம் அவர்கள் தன் பதிவுகளில் தான் பல்வேறு ஐ.டி.களில் வருவதாக சொன்னதன் மூலமும் அவரே சரஸ்வதி லக்ஷ்மி என்று எழுதியதைப் படித்த பிறகே நான் இவரை அடையாளம் தெரிந்து கொண்டேன். அவரை நடிகர் திலகம் பிறந்த நாள் விழாவில் சந்தித்தது சாதாரண விஷயம். அதுவும் சரஸ்வதி லக்ஷ்மி தான் என்னை சந்தித்தாக எழுதினாரே தவிர நான் அவரை சந்தித்ததாக என் பதிவில் எழுதவில்லை. இதைத் தெளிவு படுத்தவே இந்த பதிவு.
மாடரேட்டர் அவர்களே,
சின்னக் கண்ணன் கூறிய ஒரு கூற்றில் தகவலைத் திருத்தம் செய்யத் தான் இதை எழுதியிருக்கிறேன். உடனே இதையும் எடுத்து விடாதீர்கள். இந்தப் பதிவில் எந்தத் தவறான கருத்தும் இல்லை என எண்ணுகிறேன்.
சுப்பு அவர்களே,
ஒரு ரசிகராய் தாங்கள் கூறும் கருத்துக்களில் மற்ற தீவிர ரசிகர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தங்களுடைய வார்த்தைப் பிரயோகங்கள் நாகரீகம் என்கிற எல்லையைப் பல முறை தாண்டியிருக்கின்றன. இதனால் தங்கள் கருத்து மற்றவர்களுக்கு சென்று சேரும் வாய்ப்புத் தடுக்கப் படுகிறது என்பதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் எழுத்துக்களையும் தேவையில்லாமல் பெரிய அளவில் இடுவதை விட்டு விடுங்கள். அவரவர்க்கு அவரவருடைய தலைவர் அல்லது நடிகர் தான் முக்கியம். எனவே மாற்றுத் திரியில் சென்று வேகமான முறையில் பதிவுகளை இடுவதை இனிமேல் முற்றிலும் தவிர்க்கவும். தற்போது தாங்கள் எந்த பயனாளர் பெயரில் பதிவுகளை இடுகிறீர்களோ அதனைத் தக்க வைத்துக் கொள்ளவும். கருத்துக்களில் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம்.
நண்பர்களே,
நமது நடிகர் திலகத்தின் காணொளிகளையும் நிழற்படங்களையும் நாம் லட்சக் கணக்கான பக்கங்களுக்கு வர்ணனையும் ஆய்வுரைகளையும் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் ஒரே பக்கத்தில் பல வீடியோக்களைப் பதிவிடும் போது அவை பக்கங்களின் தரவிறக்க வேகத்தை முற்றிலும் குறைத்து விடுகின்றன. இதன் காரணமாக இந்தப் பக்கங்களைப் பலர் பார்க்காமலே தவிர்த்து விடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு பக்கத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வீடியோக்கள் அளவிற்கு மேல் பதிவிடாமல் தவிர்த்தால் பக்கங்களின் தரவிறக்க வேகம் கூடுவதோடு அல்லாமல் தாங்கள் சொல்ல வந்த கருத்தும் தவறாமல் சென்றடையும்.
நிழற்படங்களைப் பொறுத்த வரையில் அதிக பட்சம் 100 கேபி அளவிற்கு மேல் செல்லாத வாறு அளவினைக் கணக்கில் கொண்டு பதிவிட்டால் பக்கங்களின் வேகத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
முரளி சார்,
இணைய இணைப்புக் கிடைக்காமல் சில நாட்களாக இந்தத் திரியினை நான் பார்வை இடக் கூட முடியவில்லை. இப்போது கூட இரவல் வாங்கித் தான் இணைய இணைப்புப் பெற்று இதை எழுதுகிறேன்.
நம்முடைய ரசிகர்கள் பாராட்டை எதிர் பார்த்து எந்தப் பதிவினையும் இடுவதில்லை என்பது தங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு பதிவிற்கும் வாசு சாராகட்டும், பம்மலாராகட்டும் கோபாலாகட்டும், எவ்வளவு உழைப்பை தருகிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியாதது அல்ல. ஆனால் இதையெல்லாம் கொச்சைப் படுத்தும் வகையில் நண்பர் ஹானஸ்ட் ராஜ் அவர்கள் எழுதியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமாக இருக்கிறது. அதை மற்றோர் நண்பர் வழிமொழிந்திருக்கிறார்.
நண்பர் ஹைதராபாத் ரவி சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். இந்த மாதிரி கமெண்டுகளுக்கெல்லாம் தாங்கள் சற்று வருத்தத்தை ஆழமாகத் தெரிவித்தால் நல்லது. ஏனென்றால் இந்தத் திரியிலேயே தாங்கள் தான் மூத்த உறுப்பினர். அனைவரும் தாங்கள் என்ன சொன்னாலும் கேட்கக்கூடியவர்கள் என்ற நம்பிக்கையில் தான் வேண்டுகோள் வைக்கிறேன்.
நடிகர் திலகத்தை நேரடியாக கருத்துக்களைச் சொன்னதைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். இல்லை என்று சொல்ல வில்லை. அங்கே நம்முடைய வீரத்தைக் காட்டிலும் அவருடைய பெருந்தன்மைதான் தெரிகிறது. வேறு யாரையாவது இது போல் பார்த்துப் பேச முடியுமா. நடிகர் திலகம் அனுமதித்ததால் தான் நம்மால் கருத்துக்களைக் கூற முடிந்தது. அவர் சொல்ல அனுமதித்ததால் அவர் செய்தது எல்லாம் தவறு, நாம் சொன்னது தான் சரி என்று ஆகி விடுமா. மனதில் சரி என்று பட்டதைத் தான் அவர் வாழ்வில் செய்திருக்கிறார். நாம் கருத்து சொல்வதால் மட்டுமே அவர் செய்தது தவறு என்றாகி விடாது.
நான் முன்னரே கூறியது போல், முன்பு அளவிற்கு இந்தத் திரியில் இனி நான் அதிகம் தொடரப் போவதில்லை. இருந்தாலும் தங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து நண்பர்களுக்கும் ஒரு விஷயம் மட்டும் கூற விரும்புகிறேன்.
தயவு செய்து எந்தக் காரணத்தை முன்னிட்டும், சினிமாவானாலும் அரசியலானாலும் நடிகர் திலகத்தை பொதுவில் விட்டுக் கொடுக்காதீர்கள். அது அவரை நாம் இழிவு செய்வதற்கு ஒப்பாகும். நம்முடைய மேதாவித் தனத்தை முன் நிறுத்தி அவரைப் பற்றி மற்றவர்கள் செய்யும் விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
இங்கு நான் உரிமையுடன் ஒவ்வொரு சிவாஜி ரசிகரிடமும் வைக்கும் வேண்டுகோள் இது மட்டும் தான்.
திரு ராகவேந்திரா, என்னைத் தான் குறிப்பிடுகிறீர் என்பதால்.. "ஒருவர் சொல்வதை இன்னொருவர் வழிமொழிகிறார் என்றால் வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி அப்படியே என அர்த்தம் கொள்ளத் தேவையில்லையே! சரி.. அவர் சொல்வதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை நீங்களே சொல்லலாமே! - யாருமே இங்கே நடக்கும் தவறுகளை குத்திக் காட்ட மட்டுமே பதிவு செய்யவில்லை. சிறப்பாக சென்றுகொண்டிருந்த ஒரு திரிக்கு இப்படிப்பட்ட களங்கம் வந்துவிடுகிறதே என்ற அக்கறையினால்தான்!"
சின்னக்கண்ணன் திரும்ப வரவேண்டும். பிரச்சினைகளை பெரிதாய் எடுத்துக்கொண்டோமானால் இந்த திரியில் குப்பை கொட்ட முடியாது. குப்பையென்று பொதுவாய் சொன்னேன் - அதற்கும் கோபம் வேண்டாம். "பரவாயில்லை, என் கருத்துகளுக்கும் மற்றவர்களுக்கு உள்ளதைப் போலவே எதிர்ப்பாளர்கள் உண்டு. நான் மட்டும் தனியாக இல்லை. அப்பாடா." என்று நிம்மதியாக இருங்கள். உங்கள் நடை தொடரை தொடருங்கள். புதிதாகவும் எழுதுங்கள். படிப்போர் படிக்கட்டும். படியாதோர் விடட்டும். போகட்டும் நடிகர் திலகம் திரிக்கேவென்று.
தொடர்ந்து சிவாஜி சிலைக்காக பாடுபடும் திரு.சந்திரசேகர் அவர்களுக்கு உலக சிவாஜி பக்தர்கள் சார்பாக எனது நன்றி யையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Ramachandran.C
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..என்ன சொல்வதென்று தெரியவில்லை....
இந்த இழையைக் கொஞ்சம் மெதுவாக மாற்றியமைக்கு நானும் ஒரு காரணம் என்பதால் வருந்துகிறேன்..
*
சந்திர சேகர் சார், உங்கள் முயற்சிகள் வெகுவாகப் பாராட்டத் தக்க ஒன்று..தொடருங்கள் உங்கள் நற்பணியை..மிக்க நன்றி..
*
ராகவேந்திரர் சார்..மன்னிக்க.. நீங்கள் சொன்னது என நினைத்தது என் தவறு தான்..
*
ஒரு இனிய பதிவுடன் உங்களை வந்து சந்திக்கிறேன்..
கீழ்கண்ட பதிவை நேற்றே பதியும் நேரம், மின்சார இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது. ராகவேந்தர் சார் இந்த விஷயத்தை அழகாய் குறிப்பிட்டிருக்கிறார். இருந்தாலும் திரியை open செய்ய முடியாமல் பல முறை அவதிப்பட்டவன் என்ற முறையில் என் கருத்தையும் பதிவு செய்கிறேன்.
ராகுல்,
சொர்க்கம் பற்றிய விவரணை ok. அதே நேரத்தில் அந்தப் பதிவில் இத்துணை video-கள் தேவையா? காரணம் இத்துணை வீடியோக்கள் பதிவிடும் போது பல நேரங்களில் திரியை open செய்வதே ஒரு சவாலாக இருக்கிறது. Broad Band உபயோகிக்கும் எனக்கே இந்த நிலைமை என்றால் dial up connection இருக்கிறவர்களை நினைத்து பாருங்கள். பலர் இதனாலேயே திரிக்குள் வராமல் சென்று விடுகிறார்கள். ராகுல் என்றல்ல வீடியோக்கள் பதிவிடும் அனைவருக்கும் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். வீடியோவே வேண்டாம் என்று சொல்லவில்லை. அளவோடு தேவையான இடங்களில் மட்டும் பதிவிடலாம். இந்த திரிக்கு வரும் 99% மனிதர்களும் படிக்க தான் வருகிறார்கள். இது போன்ற வாசகர்கள் வேறு எந்த திரிக்கும் கிடையாது. ஆகவே குறைந்த அளவு வீடியோ, நிறைந்த செய்திகள் என்று தொடருவோம். அனைவரும் புரிந்துக் கொண்டு ஒத்துழைப்பீர்கள் என நம்பிக்கையுடன்
அன்புடன்
ராகவேந்தர் சார்,
நீங்கள் திரியில் நேரிடையாக வந்து பல விளக்கங்களை அளித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. காரணம் நான் உங்களிடம் அலைபேசியில் உரையாடியபோது சொன்னது போல் சில தவறான impressions-ஐ அகற்ற அது பயன்படும். அதே போல் நண்பர் சின்ன கண்ணன் அதை புரிந்துக் கொண்டிருக்கிறார். இனி நீங்கள் சொன்ன சில points-கு வருகிறேன்.
ஒவ்வொருவரின் பதிவுகளுக்கு பின்னல் இருக்கும் உழைப்பை அறியாதவன் அல்ல நான். குறிப்பாக வாசுவிடமே நான் அதை கூறியிருக்கிறேன். ஹிட்லர் ஆய்வைப் பற்றிய பதிவை பற்றிய என் கருத்தை கூட நீங்கள் படித்திருக்கலாம். நண்பர் கார்த்தி (HR) எழுதியது சரியல்ல என்றுதானே குறிப்பிட்டிருக்கிறேன். இன்னும் கடுமையாக சொல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்வது எப்படி என்று புரியவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் (அது உங்களுக்கே கூட தெரியும்) என்னால் யாரையும் கடுமையாக பேச முடியாது. அது எனக்கு வராது. என்னை நேரிடையாக தாக்கி எழுதியவர்களை கூட நான் அப்படி பேசியதில்லை. ஆழமாக வருத்தத்தை பதிவு செய்யவில்லை என்பதாலே நண்பர் HR சொன்ன கருத்தை நான் ஒப்புக் கொள்கிறேன் என்றோ எதிர்க்கவில்லை என்றோ அர்த்தம் ஆகி விடாது. இது நண்பர்களுக்கு புரியும் என நம்புகிறேன்.
இரண்டாவது point. மாற்று கருத்தை பற்றி சொல்லியிருந்ததை வைத்து நடிகர் திலகம் செய்தது தவறு என்று ஆகி விடாது என்று சொல்லியிருக்கிறீர்கள். அவர் செய்தது தவறு என்று நான் எங்கே சொல்லியிருக்கிறேன்? மீண்டும் படித்துப் பாருங்கள் "அவர் எடுத்த அரசியல் நிலைப்பாட்டை பற்றியே மாற்று கருத்து கொண்டு அதை அவரிடமே நேரில் சொன்ன தீரா மறவர் கூட்டம் நமது ரசிகர் கூட்டம்" என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.சரி, தவறு என்ற விவாதமே அங்கே வரவில்லை. மாற்றுக் கருத்தையும் வரவேற்போம் என்றுதான் சொன்னேன்.
இன்னும் சற்று விளக்கமாக சொன்னால் பெருந்தலைவர் மறைவிற்கு பின் நடிகர் திலகம் எடுத்த அரசியல் நிலைப்பாட்டை ஆதரிப்பவர் நீங்கள். அதில் மாற்றுக் கருதது கொண்டவன் நான். நாம் இருவரும் இந்த கருத்தில் மாறுபடுகிறோம் என்பது நம் இருவருக்கும் தெரியும் இந்த திரியை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கும் தெரியும். அதனால் நம் நட்பில் விரிசல் விழுந்து விட்டதா இல்லையே! இல்லை நமது திரியை பாதித்து விட்டதா,இல்லையே!
இதே போல் அருமை நண்பர் ஜோ திராவிட இயக்கங்களையும் குறிப்பாக திமுகவையும் அதன் தலைவரையும் ஆதரிப்பவர். நான் திராவிட இயக்கங்களுக்கு எதிரானவன். Current Topics பகுதியில் நானும் அவரும் பல முறை இது பற்றி விவாதங்கள் நடத்தியிருக்கிறோம் என்பதும் உங்களுக்கு தெரியும். ஆனால் எங்கள் நட்பில் விரிசல் இல்லை. நமது திரியை பாதித்து விட்டதா,இல்லையே! இவ்வளவு ஏன் நண்பர் கார்த்திக் கூட திமுக ஆதரவாளர்தான். அவருடனும் arguments நடந்திருக்கிறது. ஆனால் அது நடிகர் திலகத்தின் திரியை பாதித்ததில்லை. சுருக்கமாக சொன்னால் சுயமாக சிந்திக்க தெரிந்தவன் சிவாஜி ரசிகன். இதை எந்த இடத்திலும் பெருமையாக சொல்லுவேன்.
மூன்றாவது point. நடிகர் திலகத்தை விட்டுக் கொடுப்பது. இதை எந்த காலத்திலும் செய்ததுமில்லை இனி செய்ய போவதுமில்லை. இந்த திரியிலும் பல முறை பதிவு செய்திருக்கிறேன். பலரிடமும் நேரில் சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். இந்த திரி எனக்கு அறிமுகமானபோது நான் எழுத ஆரம்பித்த போது எனக்குள் இரண்டு இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டேன். ஒன்று நடிகர் திலகம் என்றாலே முதல் மரியாதை & தேவர் மகன் என்ற குறுகிய வட்டத்துக்குள் ஒரு பிம்பமாக அவரை நினைத்துக் கொண்டிருந்த இளைய தலைமுறை மற்றும் நடுத்தர வயதை எட்டிப் பிடிக்கும் தலைமுறையிடமும் நடிகர் திலகம் என்பவர் இது போன்ற சட்டமிட்ட பிரேமில் வரையப்பட்டவர் அல்ல. எதனுள்ளிலும் அடக்க முடியாதவரும் எதனாலும் அளக்க முடியாதவரும் கூட என்பதை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது. இரண்டாம் இலக்கு பல வருடங்களாக மறைத்து வைக்கப்பட்ட அவரது பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை வெளியுலகதிற்கு உரக்க சொல்லுவது என்பதுதான். ஆண்டவன் அருளாலும் நீங்கள், சுவாமி, வாசு மற்றும் கோபால் போன்றவர்களின் பங்களிப்பாலும் இந்த இரண்டு இலக்குகளையும் முழுமையாக அடைந்து விட்டோம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கணிசமான தூரத்தை வெற்றிகரமாக கடந்திருக்கிறோம் என்பதை பெருமையாக் சொல்லிக் கொள்ளலாம்.
இப்போதும் அந்த மன நிலையில் மாற்றமில்லை என்பதனால்தான் நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான தகவல்கள் வரும்போது அதை சுட்டிக் காட்டி உண்மைகளை உரக்க சொல்லும் உண்மை உணரும் நேரம் போன்றவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். இனியும் அது தொடரும்.
கசப்புணர்வுகளை மறந்து திரிக்கு மீண்டும் பங்களிப்பு செய்யுமாறு உங்களையும் வாசுவையும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
மதுரை ஜெய்ஹிந்தபுரம் அரவிந்த் திரையரங்கிற்கு விஜயம் செய்திருக்கிறார் பாரிஸ்டர் ரஜினிகாந்த். பாரிஸ்டர் வந்தாலே பரபரப்பிற்கு பஞ்சம் வராதே! சனி ஞாயிறு இரண்டு தினங்களும் திரையரங்கும் சரி அரங்க வளாகம் மற்றும் அரங்கம் அமைந்திருக்கும் தெருவும் சரி இரண்டுபட்டு விட்டது என்று நேரில் கணடவர்கள் சொன்னார்களாம். ஞாயிறு மாலை அரங்க வாசலில் வைத்திருந்த போஸ்டர் ஒட்டிய தட்டியே கீழே விழுந்து விடுமோ என்று நினைக்கும் அளவிற்கு மலர் மாலைகள் குவிந்து விட்டனவாம். உள்ளே வெளியே நடந்த அலப்பரையையும் கூட்டத்தையும் பார்த்துவிட்டு அண்மைக் காலத்தில் இப்படி ஒரு சந்தோஷ கொண்டாட்டத்தையும் கூட்டத்தையும் பார்த்ததில்லை என்று தியேட்டர் நிர்வாகத்தினர் வியந்து சொன்னதாக தகவல்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை நம்முடன் பகிர்ந்து கொண்ட திரு குப்புசாமி அவர்களுக்கும் நண்பர் ராமஜெயம் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன்
முரளி,
நீங்கள் சொன்னது மிக சரியான நிலை பாடு.நான் நடந்ததை மறந்து பாரிஸ்டர் விஜயத்தை கொண்டாட என் பார்வையில் பாரிஸ்டர் ஐ கொண்டாட முடிவு செய்துள்ளேன். 1973 இல் பாரிஸ்டர் உம ,பைரவனும் என் விரிவான பார்வையில் விரைவில் உலா வருவார்கள்.
முரளி சார்,
என்னைப் பொறுத்தவரை மாற்றுக்கருத்து உள்ளவர்களிடையே தான் உள்ளார்ந்த மரியாதையும் நட்புணர்வும் நிலவும் .அரசியல் ரீதியாக நாம் வேறுபட்டு நிற்பதல்ல முக்கியம் அதன் உள்ளார்ந்த நியாயங்களையும் அவ்வாறு வேறுபட்டு நிற்பதற்கான உரிமையை மதிப்பதும் தான் முக்கியம் .அத்தகைய மனநிலை இருந்து விட்டால் இங்கே நடைபெறும் குழப்பங்களுக்கு இடமில்லை .
சிலர் சில இயக்கத்தை கொள்கையை ஏற்றுக்கொண்டதால் அந்த இயக்கத்தை சார்ந்த கலைஞருக்கு ரசிகராக இருக்கலாம் .சிலர் ஒரு கலைஞருக்கு ரசிகராக இருப்பதால் அவர் சார்ந்திருக்கும் இயக்கத்தை கொள்கையை ஆதரிக்கலாம் .சிலர் இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கலாம் ,அதனால் வேறு வேறாக அமையலாம் .சிலருக்கு இரண்டுமே ஒத்ததாய் இயல்பாய் அமைந்து விடலாம் .இதில் நான் மூன்றாம் ரகம் .நீங்கள் நான்காம் ரகம் என நினைக்கிறேன் . இதில் எந்த ரகமாய் இருந்தாலும் அதில் தவறில்லை , இல்லை என் ரகம் தான் சரி என்று மல்லுக்கட்டாதவரை .
டியர் CK - உங்கள் வருகை மிகவும் சந்தோஷத்தை தருகின்றது - முரளி சாரின் பதிவையும் , ராகவேந்திர சாரின் பதிவையும் படித்த பிறகு , யாருக்கும்மே மன்னிக்கும் தன்மையும் , மன்னிப்பு கேட்கும் தன்மையும் , மற்றவர்கள் பதிப்புகளில் இருக்கும் தவறுகளை மறக்கும் தன்மையும் , பிறர் மனதை புன்படுத்தகூடாத பெருந்தன்மையும் வந்துவிடும் .
என்னை பொறுத்தவரை , தவறுகளை எடுத்து சொல்வதில் பிரச்சனையே இல்லை ஆணால் அதுவே மற்றவர்களை புண்படுத்தும்படி இருக்ககூடாது - புண்படுத்தும்படி இருக்குமானால் அவர்கள் தவறுகளை திருத்திகொள்ளும் வாய்ப்பை தவற விடுகிறார்கள் .
உங்கள் ரசிகன் என்ற உரிமையில் உங்களுக்கு ஒரு பதிவு இட்டிருந்தேன் - நீங்கள் பதில் போடாததினால் , என்மீதும் கோபம் கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன் - அப்படி இருக்காது என்றால் தயவு செய்து , கிருபா சாரையும் திரிக்கு மீண்டும் வர வையுங்கள் - நீங்கள் கூப்பிட்டால் கண்டிப்பாக வருவார் - அவர் பதிவுகளில் சின்ன சின்ன தவறுகள் இருக்கலாம் நான் பதிவிடுவதைபோல - ஆனால் அவர் வந்த பிறகு , இந்த திரியில் , நகைச்சுவை உணர்ச்சி அதிகமானது - திரியும் வேகமாக செல்ல ஆரம்பித்தது - மீண்டும் உங்களிடம் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் - இங்கு நாம் தமிழில் பட்டம் பெற வரவில்லை - நம் மனதை கவர்ந்த NTயை புகழ வந்திருக்கிறோம் - அவரவர்கள் தன் தனிப்பட்ட திறமையின் மூலம் பக்தியை காட்டுகிறார்கள் - பிடித்திருந்தால் படிப்போம் - பாராட்டுவோம் - பிடிக்காவிட்டால் விட்டுவிடுவோம் அவர்கள் மனம் புண்படாமல் - அடுத்த உங்கள் பதிவையும் , கிருபா சாரின் பதிவையும் ஆவலுடன் எதிபார்க்கும்
அன்புடன் ரவி
:):smokesmile:
http://ts3.mm.bing.net/th?id=H.4620698834700602&pid=1.7
http://upload.wikimedia.org/wikipedi...x-Gauravam.jpg
http://moviegalleri.net/wp-content/g..._movie_240.jpg
Thank you Murali sir and also thanks to Mr. Kuppusamy and Ramajeyam.
Is it possible to get snaps of Sunday galas?
Cheers,
Sathish
Dear Murali Sir,
I got your point, I knew it was too much on my part to include many videos but considering the very good print I was overjoyed and hence I did it, sorry sir, I will make sure that I restrict videos to minimal max 4-5 in case or nil
thanks for pointing out
சற்று முன் வந்த தகவல்.... (தினமணி இணையதள செய்தி)
"மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றலாம் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தமிழக அரசு பதில் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில், காமராஜர் சாலையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்பும் போது, மற்ற மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களை இந்த சிலை மறைப்பதால், இந்த பகுதியில் அதிக விபத்துகள் நேர்ந்துள்ளன என்றும், இதனால் அநதச் சிலையை அகற்றலாம் என்றும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது."
இந்த அரசுக்கு நம் நடிகர்திலகத்தின் மீது என்ன பகை? யார் யார் சிலைகளோ இங்கு வீற்றிருக்க நம் தலைவர் சிலை மீது கை வைக்கிறார்கள் என்றால் ஏதோ உள்நோக்கம் உள்ளதோ என சந்தேகிக்க வேண்டி உள்ளது.
சே.. சே ..அந்த அம்மாவுக்கு நடிகர் திலகம் மீது ரொம்ப மரியாதை .இந்த கருணாநிதிக்கு தான் நடிகர் திலகம்-னாலே ஆரம்பத்திலிருந்து சுத்தமா பிடிக்காது .அவரை அவமானப்படுத்தவே உள்நோக்கத்தோடு சிவாஜிக்கு சிலை வைத்தார் . இந்தாளு சிலை வக்காம இருந்தா தாயுள்ளம் கொண்ட அம்மா அதை அகற்ற வேண்டி வந்திருக்குமா ? இதுக்கெல்லாம் காரணம் அந்த கருணாநிதி தான் .
அன்புள்ள தம்பி ராகுல்ராம்,
சொர்க்கம் படத்தின் தொடர் பதிவுகளும் இணைக்கப்பட்ட விடியோக்களும் நன்றாக இருந்தன. எனினும் திரு முரளி சார் அவர்களின் ஆலோசனையை நீங்கள் கவனிக்கவில்லைஎன்று நினைக்கிறேன். நீங்கள் எழுதியிருப்பது ஆய்வுக்கட்டுரையோ அல்லது விமர்சனமோ அல்ல. பாட்டுப்புத்தகங்களில் காணப்படும் கதைச்சுருக்கம் போன்றது. சொர்க்கம் படத்தின் கதை நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரைப்படம் பார்க்கும் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் அத்துப்படியானது.
இத்தகைய பாட்டுப் புத்தக கதைச்சுருக்கத்தை பதிவிட நீங்கள் இவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டியதில்லை. வீடியோக்களையும் இப்படி பிய்த்துப் பிய்த்து போட்டிருக்க வேண்டியதில்லை. 'சொர்க்கம் முழுப்படத்தையும் பார்க்க' என்று தலைப்பிட்டு ஒரே பதிவில் ஒரே வீடியோவில் முடித்திருக்கலாம். ஏனென்றால் படத்தை பற்றியோ, அதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் பற்றியோ எந்த கூடுதல் குறிப்பும் தங்கள் பதிவில் இடம்பெறவில்லை. ஒவ்வொரு காட்சியாகப் பார்த்து அதைப்பற்றி இரண்டிரண்டு வரிகளில் சொல்லியிருக்கிறீர்கள். அதுதான் காட்சியிலேயே இருக்கிறதே.
இங்கு பதிவிடுபவர்கள் மட்டுமல்ல, பதிவைப் படிக்க மட்டுமே செய்பவர்கள் கூட சொர்க்கம் படத்தின் கதையை தலைகீழாக சொல்லும் திறமை கொண்டவர்கள். எனவே ஆய்வுக்கட்டுரை அல்லது விமர்சனக் கட்டுரை என்ற பெயரில் பாட்டி வடை சுட்ட கதை பாணியில் ஆரம்பிக்க வேண்டாம்.
முரளி அவர்கள் ஏற்கெனவே சொன்னது போல இதுபோன்ற பிரபலமான படங்களைப் பற்றி எழுதும்போது கதைச்சுருக்கத்தை தவிர்த்து மற்ற சிறப்பம்சங்கள் பற்றி எழுதச் சொல்லியிருந்தார். இதற்கு முந்தைய உங்கள் ஆய்வுகளில் உங்களின் சொந்த கருத்துக்கள், காட்சி மற்றும் நடிப்பு பற்றிய ஆய்வுகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் இந்த சொர்க்கம் பதிவில் கதைச்சுருக்கம் தவிர வேறெதுவும் இல்லை. அதனால் சுவாரஸ்யம் இல்லை
நீங்கள் இதே பாணியில் மேலும் மேலும் உங்கள் பொன்னான நேரத்தை செலவழிக்கக் கூடாது என்பதற்காகவே இப்பதிவு. பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். பிடிக்கவில்லையா, 'இவன் யாரு நமக்கு சொல்வதற்கு' என்று தள்ளிவிட்டு போய்க்கொண்டேயிருங்கள்.
(Thanks to Mr. Hari for typing this message for me)
Dear Adiram sir,
Sure , I will rectify, it, point noted from Murali sir & your advice, will focus more on my writing instead of giving description for videos,
I got carried away when I started watching sorgam
நாஞ்சில் சம்பத் : வைகோ நடிப்பதில் வல்லவர் . நடிகர் திலகம் சிவாஜி மறையவில்லை .வைகோ வடிவில் வாழ்கிறார்.
ஜெயலலிதா : அப்புறம் எதுக்கு சிவாஜி சிலை ? தூக்கிருங்க !
எல்லாருக்கும் வணக்கம்
இந்த ஹப்புல கலந்துக்க சந்தோஷம். ரொம்ப நாள் இந்த ஹப்புல நீங்க பெரியவங்க எல்லாரும் எழுதறீங்க. ரொம்ப நல்ல இருக்கு நானும் ஆசபட்டதால இங்க எழுதறேன். என் பேரு சந்துரு. சென்னைல இருக்கேன். ரெண்டு நாள் முன்னாடி சிவாஜி சார் நடிச்ச அன்பை தேடி படம் பாத்தேன். சன் லைப் ல.
ரொம்ப நல்லா இருந்துச்சி. இன்னிக்கி அரசு சார்புல போட்ட போடு எனக்கு ஜெயலலிதா மேல கோவமே வந்திடிச்சு.
சிவாஜி சார இப்புடி அவமானபடுதறாங்க, நம்ம ஊர்ல எல்லாரும் சொரணையே இல்லாம இருக்காங்க . ரொம்ப வருத்தமாயிடுச்சி.
ஏதோ என்னால முடிஞ்சத இங்க எழுதறேன்..உங்க லெவல் வராது. தப்பு இருந்த என்ன திட்டாதீங்க ப்ளீஸ் ! திருத்துங்க ! எனக்கு சந்தோஷம் அது !
இந்த திரியின் ஒரு தனித்தன்மை என்னவென்றால் ஒரு idயில் 3000 பதிவுகள் போடுபவர்களும் உள்ளனர்..3000 id யில் ஒவ்வொரு பதிவு போடுபவர்களும் உள்ளனர்.:-D
நடிகர் சிவாஜி சிலையை அகற்ற ராமதாஸ் எதிர்ப்பு!
Posted Date : 15:35 (26/11/2013)Last updated : 15:41 (26/11/2013)
சென்னை: சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றக்கூடாது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் ''சென்னை கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உருவச் சிலையை அங்கிருந்து அகற்றலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அரசின் இந்த புதிய நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகின் அடையாளமாக திகழ்ந்தவர். சத்ரபதி சிவாஜி வேடத்தில் சிறப்பாக நடித்ததால் சிவாஜி என்ற பட்டத்தை தந்தைப் பெரியாரிடமிருந்து பெற்றவர். வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட விடுதலைப் போராட்டத் தலைவர்களை நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர். பிரான்ஸ் அரசின் செவாலியே விருதையும், இந்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்று தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்தவர்.
சிறப்பாக நடிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்பவர். தமது சிறப்பான நடிப்பால் என்னைப் போன்ற ஏராளமான ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தவர். இத்தனை பெருமைகளைக் கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு செய்யும் வகையில்தான் கடந்த 2006 ஆம் ஆண்டில் அவரது நினைவு நாளான ஜூலை 21 ஆம் தேதி கடற்கரைச் சாலையில் அவரது உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.
அப்போதே சிவாஜி சிலையை திறப்பதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தடை விதிக்க மறுத்து விட்டனர். அதன்பின் 7 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் 23 ஆம் தேதி இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் சார்பில் நேர்நின்ற தலைமை வழக்கறிஞர், கடற்கரை சாலையில் சிவாஜி சிலையால் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும், இதனால் சிலையை அகற்றத் தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.
அடுத்த ஒரு மாதத்திற்குள் சிவாஜி சிலையால் கடற்கரை சாலையில் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதனால் அச்சிலையை அங்கிருந்து அகற்றலாம் என்றும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.
கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அமைக்கப்பட்ட பின்னர் கடந்த 7 ஆண்டுகளில் அப்பகுதியில் சொல்லிக்கொள்ளும்படி விபத்துக்கள் எதுவும் நடக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில் சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு கூறியிருப்பதைப் பார்க்கும்போது இதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் உள்ளதோ என்று தான் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக எந்த அமைப்பும் ஏற்படுத்தப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன். ஆனால், சிவாஜி சிலையால் கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் அதை அகற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது.
சிவாஜி கணேசனை சிறப்பிக்கும் வகையில் கடற்கரை சாலையில் அமைக்கப்பட்ட சிலையை அகற்றுவது தமிழக மக்களின் மனதை புண்படுத்தும் செயலாகவே அமையும். எனவே, சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்'' என வலியுறுத்தி உள்ளார்.
நன்றீ ஜுனியர் விகடன்
பரம ஏழை நாஞ்சில் நம்பி,விவசாயி சுந்தரம் இவர்களை இன்னொரு திரியில் கவனிப்பதால் ,இங்கு பணக்காரர்களை மட்டுமே கவனித்து விட்டேன் போல. சரி. உங்களுக்காக முதலில் ரங்கதுரை.