- 
	
			
				
					23rd November 2013, 09:10 PM
				
			
			
				
					#431
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							இதில் இருந்து வெளியே வர கஜினி மாத்ருபூதத்தின் பிள்ளைகள் கிட்ட உண்மையை சொல்லி விடுகிறார் , அவர்கள் மாற்றுபூததை திருத்த அவர் சாட்சியளிக்க ஷங்கர் விடுதலை அகுகிறார் 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							23rd November 2013 09:10 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					23rd November 2013, 09:11 PM
				
			
			
				
					#432
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							வெளியே வந்த உடன் தன் மகனிடம் அவர் பாவமணிப்பு கேப்பது போலே பேசும் காட்சி நெஞ்சை கரைய  வைக்கிறது
 
 
 சம்பத் பம்பையில் இருந்து வந்து , என் ஷங்கரை இந்த வம்பில் மாட்டி விட்டிர்கள்  என்று கடித்து கொளுகிறார் . அருண் தான் மாட்டி கொள்ளாமல் இருபதற்கு இது தான் வழி , மற்றும் அஞ்சனவை திருமணம் செய்ய இது தான் வழி என்று சொன்ன உடன் சம்பத் மனம் மாறுகிறார் , அந்த நேரத்தில் மாத்ரபூதம் , ஷங்கர் ,கஜினி , அஞ்சனா அங்க வர சம்பத் வில்லனாக மாறுகிறார் , ஷங்கர் காலேஜ் ல் நடித்த நாடகத்தை நினைவு படுத்துகிறார் (அந்த காட்சியை ஒரு முழு நீள படமாக எடுத்து இருக்காலம் , என்ன கம்பீரம் )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 கடைசியில் சம்பத மனம் மாற , அஞ்சனா சம்பத யை திருமணம் செய்ய
 
 சுபம்
 
 
 
 
				
				
				
					
						Last edited by ragulram11; 23rd November 2013 at 09:18 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					23rd November 2013, 10:02 PM
				
			
			
				
					#433
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							டியர் ராகுல் ராம் - அருமையான பதிவுகள் - இந்த திரியில் திடீரென்று ஏற்பட்ட புயலில் , அழகாக  திசை திருப்பி சொர்கத்தை பதித்து உள்ளீர்கள் - மிகவும் விறு விறுப்பான படம் - தலைவர் மிகவும் அழகாக இருப்பார் - ஒரு குழப்பம் இல்லாமல் செல்லும் கதை . பாடல்கள் ஒவ்வன்றும்  தேனிலும் மேலாக இனிப்பவை - இந்த படத்தை பற்றி பழைய பதிவுகள் இருந்தால் அதையும் இணைத்து போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் -  மனம் குளிர்த  வாழ்த்துக்கள் 
 
 Ravi
    
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					23rd November 2013, 10:26 PM
				
			
			
				
					#434
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
 
 
- 
	
			
				
					23rd November 2013, 10:43 PM
				
			
			
				
					#435
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
 
 
- 
	
			
				
					24th November 2013, 05:40 AM
				
			
			
				
					#436
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							இவ்வாறு சாரதா கூறினார்.
 
 இந்த நிலையில் "திருப்பதி" என்ற தெலுங்கு நாடகத்தில் நடிகை சாரதா நடித்து வந்தார். ஒரு நாள் அந்த நாடகத்திற்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தலைமை தாங்கினார்.
 
 நாடகத்தில் சாரதாவின் நடிப்பு அற்புதமாக இருந்ததை, சிவாஜி கவனித்தார். நாடகத்தில் மிகவும் சிறப்பாக நடித்த சாரதாவை, தமிழ்ப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று சிவாஜி முடிவு செய்தார்.
 
 இதைத்தொடர்ந்து, 1963-ம் ஆண்டு சிவாஜிகணேசன் நடித்த "குங்குமம்" என்ற படத்தில் சாரதா இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகை விஜயகுமாரியும் நடித்தார்.
 
 கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ட் செய்தனர். அதனைத்தொடர்ந்து, "துளசிமாடம்", "வாழ்க்கை வாழ்வதற்கே" போன்ற படங்களில் சாரதா நடித்தார். 1972-ம் ஆண்டில் மாதவன் இயக்கத்தில் "ஞானஒளி" படத்திலும், 1978-ம் ஆண்டு ராமண்ணா டைரக்ஷனில் "என்னைப்போல் ஒருவன்" படத்திலும், சிவாஜியுடன் சாரதா மிகவும் சிறப்பாக நடித்து புகழ் பெற்றார்.
 
 சிவாஜியுடன் நடித்தது பற்றி சாரதா கூறியதாவது:-
 
 "திருப்பதி நாடகத்தில் நான் நடித்துக்கொண்டிருந்தபோது, அந்த நாடகத்திற்கு சிவாஜி தலைமை தாங்க வந்தார். நாடகத்தில் எனது நடிப்பை பார்த்து "குங்குமம்" படத்திற்கு தயாரிப்பாளரிடம் கூறி, எனக்கு வாய்ப்பு கிடைக்கச் செய்தார்.
 
 அப்போது எனக்கு "கேரக்டர்"நடிப்பை சொல்லிக் கொடுத்தார். எப்படி, எப்படி நடிக்க வேண்டும் என்பதை சிவாஜியிடம் கற்றேன். "குங்குமம்" படத்தில் அவருடன் முதன் முதலில் நடிக்க செல்வதற்கு முன்பு ரொம்பவும் பயந்தேன்.
 
 அதற்கு சிவாஜி, "நான் என்ன புலியா, சிங்கமா? நானும் மனிதன்தானே! எதற்காக பயப்படுகிறாய்!" என்றார். அதன் பிறகுதான், எனக்கு பயம் போய் தைரியம் வந்தது. நடிப்பில் ஆர்வம், இருப்பவர்களுக்கு சிவாஜி நடிப்புச் சொல்லி தருவார்.
 
 ஆர்வம் இல்லாதவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்! நடிப்பதற்கு முன்பு `இந்த கேமரா கோணத்தில் இப்படி நடித்தால் நன்றாக இருக்கும்' என்று சொல்லித் தருவார்."
 
 இவ்வாறு நடிகை சாரதா கூறினார்.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					24th November 2013, 05:42 AM
				
			
			
				
					#437
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Rahul Ram,
 
 Your Sorgam postings are enjoyable. Keep it up.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					24th November 2013, 07:47 AM
				
			
			
				
					#438
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							நடிகர்திலகத்தின் பெருந்தன்மை,தொழில் நேர்த்தி.
 
 உலகறிந்த ஒன்று.
 
 அவ்வை ஷண்முகி படத்திற்காக அவரின் இரு நாடறிந்த ரசிகர்கள் கமல்,கே.எஸ்.ரவிகுமார் அவரை தொடர்ந்து வேண்டி கொண்டிருந்தனர்.உடல்நிலை காரணமாக யோசித்த சிவாஜி, கமலிடம்,என்னை ஏண்டா தொந்தரவு பண்றே?மாப்பிளையிடம் போ.அவன் நிஜமாகவே பின்னி விடுவான்.அவனுக்கு பொருத்தமாகவும் இருக்கும் என்று ஜெமினியிடம் அனுப்பித்தாராம்.
 
 படத்தின் வெற்றிக்கு ஜெமினி ரோல் துணை புரிந்ததை சொல்லியா தெரிய வேண்டும்?
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					24th November 2013, 12:07 PM
				
			
			
				
					#439
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
 
 
- 
	
			
				
					24th November 2013, 03:35 PM
				
			
			
				
					#440
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Gopal,S.  
 நான் சுவாசிக்கும் சிவாஜி! (7) - ஒய்.ஜி. மகேந்திரா
 
 கடந்த, 1975ம் ஆண்டு, சென்னை ஏ.வி.எம்., ஸ்டுடியோவில் பிரத்யேக, 'செட்' போட்டு, சிவாஜியின், ஓரங்க நாடகமான, 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தை, 45 நிமிடங்களில் சிவாஜி நடித்து, படமாக்கினர். 45 நிமிடங்களும் சிவாஜி, 'மோனோ ஆக்டிங்' செய்திருப்பார். நடிப்புக் கலையிலே, 'மோனோ ஆக்டிங்' மிகவும் கஷ்டமான வடிவம். ஒரே நடிகர் எல்லா வசனங்களும் பேசி, இல்லாத பல பாத்திரங்களை இருப்பதாக பாவித்து, நடிக்க வேண்டும். இந்தியா முழுவதும் ஒளிபரப்பான, இந்த ஓரங்க நாடகத்தை, தூர்தர்ஷனுக்கு பணமே வாங்காமல், இலவசமாக நடித்துக் கொடுத்தார். இந்தியாவே, சிவாஜியின் நடிப்பை கண்டு, வியந்து பாராட்டியது.
 - தொடரும்.
 
 
 
 சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் --ஒளி நாடா கிடைக்குமா
 
 
 
 
 
 
 
Bookmarks