Originally Posted by
pammalar
டியர் mr_karthik,
தங்களுடைய மனப்பூர்வமான பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..!
'அங்கே' உள்ள கோபாலகிருஷ்ண அடிகளாருக்கு மகுடம் சூட்டும் வகையில், 'இங்கே' தாங்கள் இங்கிதமாகப் பாடிய 'கணேச கோபால' புராணம் வெகு சுவாரஸ்யம்..!
நமது அன்புக்குரிய அடிகளாருக்கு கனிவான பாராட்டை நல்கிய அதே நேரத்தில், "உயர்ந்த மனிதன்" குறித்த அரிய தகவல்களையும் அளித்து அசத்திவிட்டீர்கள்..! இசை வானத்தின் ஸோலோ இசையில் அடிகளாருக்கு "உயர்ந்த மனிதன்(1968)", உங்களுக்கு "சிவந்த மண்(1969)" என்றால் அடியேனுக்கு "ஊட்டி வரை உறவு(1967)".
அன்புடன்,
பம்மலார்.