அருமையான பதில் ! இவர்கள் எல்லாம் நடிகர் திலகம் ரசிகர்கள் என்ற போர்வையில், அவரை விமர்சிக்க மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வல்லவர்கள் !
Printable View
பதிலுக்கு நன்றி நண்பரே.
ஒய்.ஜி.மகேந்திரன் ஆதிக்க எண்ணம் உயர் மேட்டுக்குடி மனப்பான்மை கொண்டவர். அதான் சுவாதி கொல்லப்பட்ட நிகள்ச்சி பற்றி பேஸ்புக்கில் வந்த தகவலை ஷேர் செய்துவிட்டு பின்னர், மன்னிப்பு கேட்டார்.
அவர் குடும்பம் நடத்தும் ஸ்கூலில் நீச்சல் குளத்தில் ஒரு மாணவன் விழுந்து செத்துபோனான். அதற்காக அவர்கள் குடும்பத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், ஜேப்பியார் நடத்தும் ஸ்கூலில் ஒரு நீச்சல் குளத்தில் ஒரு மாணவன் விழுந்து செத்து போனதுக்காக ஜேப்பியாரை கைது செஞ்சார்கள். அப்போ, ஜேப்பியாருக்கு ஒரு நீதி, மேட்டுக்குடிங்களுக்கு ஒரு நீதியா? என்று யார் கேட்கிறது?
திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சிநடிகர், மக்கள்திலகம் அவர்களது என்றும் பொக்கிஷமாக விளங்கும் " படகோட்டி "காவியத்தைத்தான் அங்கோர் நண்பர் ஏதும் அறியாமல் அரை வேக்காட்டு தனமாக படுதோல்வி என உளறி இருக்கிறார் . பாவம்... அன்றும் அக்காவியம் மகத்தான வெற்றி பெற்றது... இன்றும் இக்காவியத்தின் மறு வெளியீட்டு விநியோக உரிமையை பெற பலர் முயற்சித்த பொழுதும் கிடைக்காமல் , அதாவது உரிமை தொகை மிக அதிக அளவில் பேசப்படுவதால் உடன்பாடு ஏற்படாமல் இருப்பதை அவர் அறிவாரா? இந்த மாதிரி செழுமையான வியாபார போட்டி வேறு எந்த நடிகர், நடிகை திரைப்படங்களுக்கு , எந்த மொழியிலாவது --- உள்ளதா?!
கொடுப்பவன் தானே மேல்ஜாதி, கொடுக்காதவனே கீழ் ஜாதி.
நாடோடி படத்தில் ஜாதி வெறியை எதிர்த்து நம் தெய்வத்தின் அறிவுரை சொல்லும் சூப்பர் பாடல்.
கடவுள் செய்த பாவம்..
https://youtu.be/61t4CBURuAI
http://i63.tinypic.com/2ikb43p.jpg
DEIVATHAI- 18.7.1964
M.G.R
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்
தமிழ் - அண்ணா - கடமை - திமுக - எம்ஜிஆர்
இப்படி பல மூன்றெழுத்தில் உள்ள வார்த்தைகள் - வாலியின் வரிகள் நிஜ வாழ்வில் மக்கள் திலகத்தின் புகழை பிரதிபலித்தது .
எம்ஜிஆரின் பெயர் - எம்ஜிஆரின் படங்கள் - எம்ஜிஆர் இயக்கத்தின் ஆட்சி .
சரித்திரம் புகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது .
இந்த அதிசயம் உலகில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே .
1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்த வாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது. எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாக இருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.
இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியை சுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டு பொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.
இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர் கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும் இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.
எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப் பயன்படுத்தியிருப்பார்கள்.
இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத் தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின் தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.
https://youtu.be/ufwwcCxpz8E
பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரை அட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..
பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26 நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவது இடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி 2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம் தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46 நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09 நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில் பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசை கேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.
அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால் யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின் எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் கணேஷும் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல் அற்புதமாக இசைத்துள்ளார்.
Courtesy- ilavenirkaalam