http://i59.tinypic.com/k9f890.jpg
Printable View
சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் கொண்டுவரும் நோக்கத்துடன், நம் புரட்சித்தலைவர் அவர்கள், 1983ல் ஆந்திர மாநிலத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, தெலுங்கு கங்கா திட்டம் நடைமுறையில் இப்போதும் இருந்து வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தெலுங்கு கங்கா திட்ட விழாவில் - நம் புரட்சித்தலைவர் அவர்கள்.
http://i61.tinypic.com/2ahv2pf.jpg
1965 ஆம் ஆண்டு இலங்கை பயணத்தின்போது
யாழ்பாணம் பலாலி விமான நிலையத்தில் மக்கள் திலகம்
அன்ட் அபிநயசரஸ்வதி
http://i60.tinypic.com/2h3yij4.jpg
இலங்கை பயணத்தின்போது எடுக்கப்பட்ட இதுவரை பார்த்திராத மக்கள் திலகத்தின் அரிய புகைப்படத்தை பதிவிட்ட அன்பு நண்பர் திரு.சிவா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
திரு.சிவா சார். நடிகர் திலகம் திரியில் நீங்கள் ஸ்டில்லை வெளியிட்டு என்ன படம் என்று கேட்டுள்ளீர்களே? அது மோகனப் புன்னகை படத்தின் ஸ்டில். ‘தலைவி.. தலைவி. என்னை நீராட்டும் ஆனந்த அருவி..’ என்ற அருமையான பாடல் அந்தக் காட்சியில் இடம் பெறும். நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
எங்கள் திரிக்கு வந்து அரிய புகைப்படத்தை பதிவிட்டதற்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இனிய நண்பர்கள் திரு கலைவேந்தன் , திரு செல்வகுமார் , திரு சி. எஸ். குமார் திரு .முத்தையன் ,திரு ரவி ,
திரு சிவாஜி செந்தில் ,திரு,சிவா . திரு ரவிச்சந்திரன் , திரு யுகேஷ் -உங்கள் அனைவரின் பதிவுகள் எல்லாமே அருமை .
திரு குமார் - இன்று உங்களுடனும் , திரு வினோத் அவர்களுடனும் போன் இல் பேசினது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கின்றது . 10 நிமிடம் , பேசினதில் நீங்கள் குறைந்தது 10,000 தடவையாவது மக்கள் திலகத்தை பற்றி , அவர் சாதனைகளை பற்றி பேசி இருப்பீர்கள் ( நான் கணக்கில் வீக்) - எண்ணிக்கை 10000 த்திற்கு மேலாகவும் இருக்கலாம் - உங்களிடம் இருக்கும் அந்த பக்தி என்னை அசர வைத்து விட்டது - உங்களிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் இன்னும் நிறைய உள்ளது என்பதையும் உணர்கிறேன் . மீண்டும் என் நன்றிகள்
அன்புடன்
ரவி
சென்னை சரவணாவில் தொடர்ந்து 3 வது வாரமாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படம் . இன்று முதல் (24/04/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
(புகழ் ) "இன்று போல் என்றும் வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டியை காண்க.
http://i57.tinypic.com/1zeq9h.jpg
10/04/2015 முதல் "ஊருக்கு உழைப்பவன் "
17/04/2015 முதல் "விவசாயி "
தினசரி 3 காட்சிகள் வெளியாகி வெற்றி நடை போட்டது குறிப்பிடத்தக்கது.