http://i66.tinypic.com/2ntzq81.jpg
Printable View
http://i68.tinypic.com/25pkdwi.jpg
புகைப்படங்கள் தொடரும் ............!!!!!!!!!!
A rice mill in Palakkad turns into MGR memorial
The Hindu - February 13, 2018
http://www.thehindu.com/news/nationa...?homepage=true
One of the first modern rice mills to come up in Kerala’s Palakkad district, Bhama Rice Mill of Vadavannur village, is being converted into a memorial for iconic Tamil politician and matinee idol M.G. Ramachandran, whose childhood home is located in the same village.
The memorial will also serve as a ‘village heritage centre’ and showcase the culture and agrarian traditions of Palakkad. It is being established by the local chapter of the Indian National Trust for Art and Cultural Heritage (INTACH).
“We have named the heritage centre MAGORA, an abridged version of Maruthoor Gopala Menon Ramachandran. Apart from showcasing Palakkad’s rich and varied rural life, the museum and cultural centre will exhibit photographs and films on the life and times of the former Tamil Nadu Chief Minister,” said Arun Narayanan, convener of INTACH’s local chapter.
Kerala’s Minister for Cultural Affairs, A.K. Balan, will inaugurate the centre on Saturday in the presence of the national director of INTACH, Major General (Retired) L.N. Gupta, and former Chennai Mayor Saidai S. Duraisamy, who is currently involved in renovating MGR’s childhood home in the village.
The heritage centre, located close to Pudunagaram-Kollengode road, is expected to draw tourists interested in rural and agrarian life. Apart from the childhood home and the newly established memorial and heritage centre, the village also has a community hall named after MGR. Palakkad’s art tradition includes three forms of puppetry.
“MAGORA is a first-of-its-kind, village-centric, story-telling space that will help preserve Palakkad’s rich rural traditions and art forms. The centre aims to celebrate the village’s association with MGR through images and words. It will host creative performances, exhibitions, and conversations,” said Dr. K.S. Ragesh, co-convener, INTACH. The heritage centre will feature a photo museum on Palakkad’s cultural diversity, put together by photographer Hariharan Subrahmanyan.
நாளை முதல் மகத்தான ஆரம்பம் என்றும் ஓளி வீசும் திரையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும் பிரமாண்ட முதல் தயாரிப்பு "நாடோடி மன்னன்" திருச்சி- சோனா மீனா a/c , தஞ்சை- ஸ்ரீ ராணி பாரடிஸ் a/c, மன்னார்குடி- சாந்தி, கரூர்- அமுதா a/c, பெரம்பலூர் - ராம் உட்பட அரங்குகளில் வெளியீடு காண்பதாக தித்திப்பு தகவல்...
https://s18.postimg.cc/sjnw2rhyx/53a...d4c071e941.jpg
நாளை
முதல்
கோவை
தர்சனா
திரையரங்கில்
நினைத்ததை
முடிப்பவன்
https://s9.postimg.cc/7u8e4j3tb/IMG_8467.jpg
நாடோடி மன்னன்
25-வது நாள்
வெற்றி விழாவில்
கலந்து கொண்ட
மக்கள் திலகம்
அபிமானிகள்
இடம் - ஆல்பர்ட் தியேட்டர் வளாகம்
கோவை -துடியலூர் முருகன் அரங்கு அருகில் கோவை எம்.ஜி.ஆர். பக்தர்கள்
http://i65.tinypic.com/15ogk91.jpg
கடந்த வாரம் ஊட்டி ஏ.டி.சி.யில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "எங்க வீட்டு பிள்ளை " வெற்றி நடை போட்டது .
தகவல் உதவி : கோவை பக்தர் திரு.அய்யாசாமி .
வெள்ளி முதல் (13/4/18) சென்னை அகஸ்தியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
திரை மற்றும் அரசியல் உலகில் "ஆயிரத்தில் ஒருவன் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது (மேட்னி /மாலை )
http://i63.tinypic.com/2q2o19y.jpg
வெள்ளி முதல் (13/4/18) சென்னை பிருந்தாவில் நடிக மன்னன் / கலை வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களின் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/2aqn1e.jpg
வெள்ளி முதல் (13/4/18) சென்னை ஏ.வி.எம். ராஜேஸ்வரியில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் "
தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .(மாலை / இரவு )
http://i66.tinypic.com/2hoe2k8.jpg
ஆல்பட் அரங்கில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் :நாடோடி மன்னன் " மகுடம் சூட்டிய மகத்தான 4 வது வாரம் .(தினசரி 2 காட்சிகள் )
மற்றும் திருச்சி -சோனா , தஞ்சை -ராணி பாரடைஸ் , கரூர் -அமுதா ,பெரம்பலூர் -ஸ்ரீராம் , மன்னார்குடி -சாந்தி அரங்குகளில் 13/4/18 முதல் தமிழ் புத்தாண்டு வெளியீடு
http://i65.tinypic.com/do07tj.jpg
மதுரை சரஸ்வதியில் 13/4/18 முதல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நிருத்திய வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர் அவர்களின் மகத்தான வெற்றிப்படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/jinl8k.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .
நெல்லை ரதனாவில் வெள்ளி முதல் (13/4/18) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் இரு வேடங்களில் கலக்கலாக நடித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது
http://i68.tinypic.com/2pyqazq.jpg
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா .
ஒருசி ல படங்கள் ஒரமுறை ெவளியிடப்பட்டால் அப்புறம் பல வருசங்களுக்கு வெளியே வராது. ஆனால், புரட்சித் தலைவர் படங்கள் பெட்டிக்குள் தூங்காது. தமிழ்நாடு பூரா ஏதாவது ஒரு தியேட்டரில் ஓடிக் கொ்ணடே இருக்கும்.
ஆயிரத்தில் ஒருவன் படமும் அப்படித்தான். எங்காவது தியட்டரில் ஓடிக் ெகாண்டே இருக்கும். இடைவெளி இல்லாமல் ஓடியும் 2014-ல் புது நவீனமாக டிஜிட்டலில் தமிழநாடு பூரா வெளியாகி சென்னையி்ல் சத்ய்ம் தியேட்டரில் 160 நாள், ஆல்பட்டில் வெள்ளிவிழா தாண்டி 190 நாள் ஓடி சாதனை படைத்தது.
தமிழ்நாடு பூரா நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒரவன். ரிக்சாக்காரன், நினனத்தை முடிப்பவன், எங்க வீட்டுப் பிள்ை என்று புரட்சித் தலைவர் படங்கள் வெற்றி நடை போடுகிறது.
இது எந்த நடிகருக்கும் இல்லாத பெரூமை.
இந்தப் பெருமையை வள்ளல் புரட்சித் தலைவர் நமக்கு கொடுத்திருக்கிறார்.
நான் எம்.ஜியார் ரசிகன் என்று சொல்லும்போதே பெரூமையாக உள்ளது.
புரட்சித் தலைவர் வாழ்க
தமிழகமெங்கும் உள்ள திரை அரங்குகளில் எம்ஜிஆர் பழைய படங்களின் படை எடுப்பு .
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்து
மகிழ்ச்சி வெள்ளத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள்
திரை உலக வரலாற்றில் பல சரித்திர சாதனைகளை நிகழ்த்தி வெற்றி மேல் வெற்றி கண்டவர் எம்ஜிஆர்
எம்ஜிஆர் நடித்துக்கொண்டிருந்த நேரத்திலும் அவர்தான் வசூல் மன்னன் .
திரை உலகை விட்டு அரசியலில் முதல்வராக இருந்த நேரத்திலும் எம்ஜிஆர் படங்கள்தான் பலரையும் வாழ வைத்தது .
எம்ஜிஆர் மறைந்து 30 வருடங்களாக எம்ஜிஆர் படங்கள் தொடர்ந்து திரை இடப்பட்டு வசூலை வாரி குவித்து கொண்டு வருகிறது .
எம்ஜிஆர் 101வது பிறந்த நாள் கொண்டாடி வரும் வேளையில் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு தொடக்கம் முதல் விருந்தாக பழைய படங்கள் வந்த வண்ணம் உள்ளது .
13.4.2018 இந்த வாரம்
சென்னை
நாடோடி மன்னன் -ஆல்பட்டில் 4 வது வாரம்
ரிக் ஷாகாரன் - ஏ.வி.எம் ராஜேஸ்வரி மற்றும் கோபிகிருஷ்ணா
ஆயிரத்தில் ஒருவன் - அகஸ்தியா
எங்க வீட்டு பிள்ளை - ரெட் ஹில்ஸ் லட்சுமி
நினைத்ததை முடிப்பவன் - பிருந்தா
கோவை
தர்சனா - நினைத்ததை முடிப்பவன்
திருப்பூர்
ஜோதி - ரகசிய போலீஸ் 115
மதுரை
ரிக் ஷாகாரன் - சரஸ்வதி
நெல்லை
ரத்னா - நினைத்ததை முடிப்பவன்
திருச்சி- சோனா மினா Complex A/C, தஞ்சை - ராணி பாரடைஸ் A/C, கரூர் - அமுதா A/C, பெரம்பலூர் - ஸ்ரீராம், மன்னார்குடி - சாந்தி dts, முசிறி- ஸ்ரீராம் உட்பட எங்கும் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது...
இன்னும் பல நகரங்களில் எம்ஜிஆர் படங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது .
எம்ஜிஆரின் சக்தி
எம்ஜிஆர் ரசிகர்களின் வெற்றி .
என்றென்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் .
நிழலை உண்மையாகவே நிஜமாக்கிய மஹானுபாவர், அன்றும் - இன்றும் -என்றும் திரையுலக சக்ரவர்த்தி புரட்சி நடிகர், நாடாண்ட, பாராண்ட MGR முதன் முதல் தயாரித்து, இயக்கி, இரு வேடங்களில் நடித்த இப்போது 60 ம் ஆண்டு வைர விழா காணும் நேரத்திலும் அருமையான வசூல் அளித்து கொண்டிருக்கும் "நாடோடி மன்னன்" இன்று முதல் TT ஏரியா... திருச்சி- சோனா மினா Complex A/C, தஞ்சை - ராணி பாரடைஸ் A/C, கரூர் - அமுதா A/C, பெரம்பலூர் - ஸ்ரீராம், மன்னார்குடி - சாந்தி dts, முசிறி- ஸ்ரீராம் உட்பட எங்கும் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது...
இறைவன் அருள் கொண்டும், மக்கள் திலகம் ஆறி
ஆசிர்வாதம் பெற்றும் அனைவர்க்கும் இனிய சுபிட்சமான தமிழ் புத்தாண்டு பிறக்கும் நாளில் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்...
https://s31.postimg.cc/w9fg0hdrv/IMG_8467.jpg
நாடோடி மன்னன்
25-வது வெற்றி விழா
நாளில்
மக்கள் திலகம்
அபிமானிகள்
இடம் - சென்னை ஆல்பர்ட் திரையரங்கம்
எம்.ஜி.ஆர். இயக்கி நடித்த “நாடோடி மன்னன்” 60 ஆண்டுகளுக்குப் பிறகு படத்தின் டிஜிட்டல் வெர்சனில் வெளியாகி 25 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது
1958-ஆம் ஆண்டு “பொன்மனச் செம்மல்”, “புரட்சித் தலைவர்” எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாடோடி மன்னன்”. அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. இணைந்து எழுதினார்கள்.
இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள். அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 80 லட்சம் பட்ஜெட்டில், எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைந்து “எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்” சார்பில் தயாரித்தார்கள்.
இப்படம் எம்.ஜி.ஆருக்கு 1 கோடி வசூலைக் குவித்தது மட்டுமல்லாமல், அவரது அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணை புரிந்தது.
இவ்வளவு பெருமைகளை உள்ளடக்கிய இத்திரைப்படம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிடப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு 25 நாட்களைக் கடந்து ரீ-ரிலீசிலும் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை.துரைசாமி கலந்துகொண்டார். அவருடன் ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
Courtesy malaimalar
14.4.2018 சென்னையில் எம்ஜிஆர் திருவிழா
சென்னை காமராஜர் அரங்கில் இதயக்கனி பத்திரிகை நடத்தும் எம்ஜிஆர் 101வது பிறந்த நாள் விழா
ஆல்பட் அரங்கில் எம்ஜிஆரின் நாடோடிமன்னன் 25 வது நாள் வெற்றி விழா
பெருந்தலைவர் காமராஜர் சொத்து எதையும் சேர்க்கவில்லை . ஆனால் தன சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தன்னுடைய செல்வாக்கை வைத்து பல் வேறு சலுகைகள் தந்து பலரை கோடீஸ்வர்களாக உயர்த்திய பெருமை அவருக்கு சேரும் .இதில் பெருமை கொள்வதில் என்ன இருக்கிறது ? எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி மூவரும் நடித்து பெயரும் பணமும் ஈட்டினார்கள் . எல்லோரும் சொத்துக்களை வாங்கினார்கள் . எம்ஜிஆர் மட்டும் தன்னுடைய சொத்துக்களை ஏழை மக்களுக்கு வழங்கி நிரந்தர வள்ளலாக இன்றும் வாழ்கிறார் .
எனவேதான் உலக வரலாற்றில் எம்ஜிஆர் இடம் பிடித்துள்ளார்.
நன்றி முகநூல்
சென்னை: "நாடோடி மன்னன் படத்தில் ஏழை மக்களுக்காக பேசிய வசனங்களை தமிழக முதல்வரானதும் நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர்.,' என்று நடிகை சரோஜா தேவி புகழாரம் சூட்டினார். எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, எம்.என்.ராஜம் நடித்த "நாடோடி மன்னன்' படம் 1958ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் கடந்த சில ஆண்டுகளாக தியேட்டர்களில் திரையிடப்படாமல் இருந்தது. தற்போது சென்னையில் நான்கு தியேட்டர்களில் "நாடோடி மன்னன்' படம் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் 49ம் ஆண்டு விழா சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நேற்று நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த ஏழு நாயகிகள் கலந்து கொண்டனர். விழாவில் நடிகை சரோஜாதேவி பேசும் போது, ""எம்.ஜி.ஆரைப் போல சிறந்த மனிதர் கிடையாது. மனித நேயம் உள்ள மகா மனிதன். "நாடோடி மன்னன்' படத்தில், "நாடாள வந்தால் ஏழைகளுக்காக எல்லாம் செய்வேன்' என்று எம்.ஜி.ஆர்., வசனம் பேசினார். அவர் முதல்வர் ஆனதும் படத்தில் சொல்லிய அத்தனையும் மக்களுக்கு செய்தார். ஒரு அரசியல்வாதி எளிதாக முதல்வராகிவிடலாம். ஆனால், ஒரு நடிகர் முதல்வராவது கஷ்டம். எம்.ஜி.ஆர்., தமிழகத்தை ஒரு ஆண்டு அல்ல இரண்டாண்டு அல்ல, பதினொரு ஆண்டுகள் ஆண்டார். மக்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்தார். எம்.ஜி.ஆர்., இறக்கவில்லை. எல்லார் நெஞ்சத்திலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திகழ்ந்தால் எம்.ஜி.ஆரைப் போல திகழவேண்டும், வாழ்ந்தால் எம்.ஜி.ஆரைப் போல வாழ வேண்டும். எனது கடைசி மூச்சிருக்கும் வரை எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டிருப்பேன். தமிழக மக்களை மறக்க மாட்டேன்,'' என்றார்.
அன்று எம்.ஜி.ஆருடன் கதாநாயகிகளாக நடித்த நடிகைகளான எம்.என்.ராஜம், பத்மினி, சரோஜாதேவி, ராஜசுலோசனா மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோருடன் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனும் நாடோடிமன்னன் படத்தினை இரசிக்கின்றார்கள்.
நடிகை பத்மினி பேசும் போது, ""மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்தேன். "மருதநாட்டு இளவரசி, ராஜா தேசிங்கு, அரசிளங்குமரி, ராஜ ராஜன்' என 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். சரித்திரம் படைத்தவர் எம்.ஜி.ஆர்., அவரே ஒரு சரித்திரம்,'' என்றார். நடிகை எம்.என்.ராஜம் பேசும் போது, ""இங்கு வந்திருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது படம் இன்று தான் வெளியானது போல் இருக்கிறது. படம் வெளியாகி 49 ஆண்டுகள் ஆகிவிட்டன. எம்.ஜி.ஆர்., புகழ் இன்னும் நுõறாண்டுகளுக்கு மேல் இருக்கும். "நாடோடி மன்னன்' படத்தில் ஒரு சீனில் "என்னை நம்புகிறாயா சகோதரி' என்று எம்.ஜி.ஆர்., என்னிடம் வசனம் பேசுவார். அதற்கு "நான் மட்டுமல்ல நாடே நம்பும்' என்று பதில் சொல்வேன். எம்.ஜி.ஆர்., முதல்வரானதும் ஒரு முறை என்னிடம் பேசும் போது "நாடே என்னை நம்பும் என்று சொன்னாய்; முதல்வராகி விட்டேன்' என்று சந்தோஷமாக கூறினார். அதனை மறக்க முடியாது,'' என்றார்.
நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா பேசும் போது, ""நான் வாழும் வாழ்க்கையில் சிறப்பு இருக்கிறது என்றால் அதற்கு எம்.ஜி.ஆர்., தான் காரணம். உயிருள்ள வரை எம்.ஜி.ஆரின் நினைவு என்னை விட்டு போகாது,'' என்றார். நடிகை மஞ்சுளா பேசும் போது, ""இன்று எனது பேத்திக்கு பிறந்த நாள். அதில் பங்கு கொள்ளாமல் இங்கு வந்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் மீது அத்தனை மரியாதை வைத்திருக்கிறேன். எம்.ஜி.ஆருடன் நடிக்க வேண்டும் என்று நினைத்த போது எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பம். எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் இணைந்து நடித்த படத்தில் சரோஜாதேவியின் படத்தை நீக்கிவிட்டு என் படத்தை ஒட்டி வைப்பேன். அப்படியிருந்த நான் எம்.ஜி.ஆருடன் "ரிக்ஷாக்காரன்' படத்தில் நடித்தேன். அதன்பிறகு நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். இன்றைக்கும் நான் சாப்பிடும் போது பெருமாளேன்னு நினைக்கும் போது எம்.ஜி.ஆரையும் நினைத்துக் கொள்வேன்,'' என்றார். நடிகை ராஜசுலோசனா பேசும் போது, ""ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்., அவரைப்போல இனி ஒருவரை பார்க்க முடியாது,'' என்றார்.
திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பேசும் போது, ""எம்.ஜி.ஆருக்கு ஏராளமான பாடல்களை பாடியுள்ளேன். நான் பாடியதைப் போல உலகத்தில் யாரும் பாட முடியாது. "நான் பார்த்திலே அவர் ஒருத்தரைத்தான் நல்ல அழகனென்பேன்' என்றால் அது எம்.ஜி.ஆரைத்தான் சொல்வேன். எம்.ஜி.ஆர் சரோஜாதேவி சினிமாவில் பொருத்தமான ஜோடியாக ரசிகர்கள் மனதில் இடம்பெற்றிருந்தனர். எம்.ஜி.ஆர்., படத்தில் சொன்ன நல்ல விஷயங்களை நிஜத்தில் அவர் ஆட்சியில் செய்து காட்டினார்,'' என்றார். திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பேசும் போது, ""சரித்திரம் படைத்தவர், சாதனையாளர். அவரோடு பணி புரிந்ததை பாக்கியமாக கருதுகிறேன். எம்.ஜி.ஆர்., மக்களின் மனதில் என்றென்றும் வாழ்வார்,'' என்றார். விழாவில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜஸ்ரீ, சச்சு உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து "நாடோடி மன்னன்' படம் பார்த்து மகிழ்ந்தனர்.
நன்றி: தினமலர்
http://www.dinamalar.com/
நன்றி: தினமணி.காம்
"காலத்தை வென்றவன்"
-பா.ஜெகதீசன்-
அண்மையில் சென்னையில் திரையிடப்பட்டுள்ள 'நாடோடி மன்னன்' ...... "இந்தப் படம் வெற்றிப் பெற்றால் நான் மன்னன். தோல்வி அடைந்தால் நாடோடி'- "நாடோடி மன்னன்' படம் வெளியானபோது எம்.ஜி.ஆர். உதிர்த்த வார்த்தைகள் இவை!
தமிழக திரையரங்குகளில் படம் வெளியாகி, முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்கள் எம்.ஜி.ஆர். போஸ்டரைப் பார்த்து சொன்ன வார்த்தைகள்: "நீங்கள் நாடோடியும் அல்ல. மன்னனும் அல்ல. மன்னாதி மன்னன்!'. ரசிகர்களின் வாக்கு பொய்க்கவில்லை. "நாடோடி மன்னன்' படம், வெற்றி பெற்று எம்.ஜி.ஆரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்று, "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்' என்று, ரசிகனை நோக்கி எம்.ஜி.ஆரைப் பாட வைத்தது.
நாடோடி மன்னன் படம் வெளியாகி 50 ஆண்டுகளாகிற இன்றைய நிலையிலும் அந்தப் பாட்டின் வெற்றிச் சப்தம் மட்டும் இன்னும் ஓயவே இல்லை. இப்போதும் நாடோடி மன்னன் தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. வெளியான முதல் நாளே ஹவுஸ்புஃல்லாகி பலர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்துள்ளனர்.
வசூலிலும் இப்போது வெளிவந்துள்ள புதிய படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்போது போலவே 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான போதும், அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த படங்களிலேயே வசூலில் முதல் இடத்தைப் பிடித்ததும் இந்தப் படம்தான். ஒரு கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் படம்!
"தமிழக திரைப்படத்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக' எனச் சொல்கிற சிறப்பு நாடோடி மன்னன் படத்துக்கு வசூலில் மட்டும் அல்ல. பலவற்றிலும் உண்டு.
எம்.ஜி.ஆர். தயாரித்த முதல் சொந்த படம். எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம். எம்.ஜி.ஆர். இயக்கிய முதல் படம். தமிழில் வெளியான முதல் "பகுதி வண்ணப் படம் (பார்ட்லி கலர்)'. சரோஜா தேவி கதாநாயகியாக அறிமுகம்... என பல "முதல்... முதல்'களின் சிறப்புகள் வெளிப்பட்ட படம் இது. பிரம்மாண்டமான செட்டுகள், கண்ணதாசனின் எழுச்சியூட்டும் வசனங்கள், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள், சந்திரபாபு உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகள், "தூங்காதே தம்பி தூங்காதே' போன்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் எந்தக் காலத்திலும் நம்மைத் தூங்க விடாத பாடல்கள்... என பல சிறப்பம்சங்கள் இந்தப் படத்திற்கு உண்டு. இத்தகைய சிறப்புகளுடைய நாடோடி மன்னன் படம் மீண்டும் ரிலீசாகி ஓடும் வண்ணாரப்பேட்டை பாரத் திரையரங்கிற்குப் போனோம்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் படம் வெளியாகி இருப்பதுபோல திரையரங்கே விழாக்கோலமாய் இருந்தது. எம்.ஜி.ஆர். கத்திச் சண்டை போடுவது போன்ற போஸ்டர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் பேனர்களுக்கும் குறைவில்லை. சேரில் கூட்டம் நிறைந்து பலர் தரையில் உட்கார்ந்திருக்கின்றனர். புதுப் படத்தைப் பார்க்கப் போவதைபோல பரபரப்பாய் இருக்கிறது கூட்டம். "படத்தைப் போடு படத்தை போடு' என உக்கிரக் கோஷம். படம் போடப்படுகிறது!
திரையில் எம்.ஜி.ஆர் தோன்றுகிற காட்சி. திரைக்கு முன்னால் உள்ள சுவரில் வரிசையாக தயாராக வைக்கப்பட்டுள்ள சூடங்களை ரசிகர்கள் கொளுத்துகிறார்கள். விசில் சத்தம் அமர்ந்திருப்பவர்களின் காதைக் கிழிக்கிறது. படத்தின் தொடக்கத்தில் இருந்து க்ளைமேக்ஸ் வரை படத்தின் முக்கியமான கட்டங்களில் விசில் சத்தம் நிற்கவே இல்லை. குறிப்பிட்ட அந்தக் காட்சிகளில் எம்.ஜி.ஆர். பேசும் "பன்ச்' டயலாக்குகள் சில:
"நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள், நான் மக்களிடம் இருந்து மாளிகையைப் பார்க்கிறேன்'
"என்னை நம்பிக் கெட்டவர்கள் கிடையாது - நம்பாமல் கெட்டவர்கள்தான் உண்டு'
ஒரு எம்.ஜி.ஆர். நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரை மற்றொரு எம்.ஜி.ஆர் சுற்றி வந்தபடியே பேசுகிற வசனத்துக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத அந்தக் காலத்திலேயே இரட்டை வேடக் காட்சியை வெகு இயல்பாக எடுத்திருப்பதை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
கடைசியாக க்ளைமேக்ஸ் காட்சி. சூப்பர்... சூப்பர்... என எத்தனை தடவை சொன்னாலும் தகும். தீவைச் சூழ்ந்திருக்கும் வெள்ளம். அந்த வெள்ளத்தின் மீது கயிற்று நடைப்பாலத்தில் எம்.ஜி.ஆரும், பி.எஸ்.வீரப்பாவும் சண்டை போடுகிறார்கள். இவருக்கு அவர், அவருக்கு இவர் சளைத்தவர் இல்லை என்பது போல விறு விறு சண்டை. திடீரென கயிற்று பாலம் அறுந்துவிடுகிறது. தொங்குகிற கயிற்றை பிடித்துக்கொண்டு எம்.ஜி.ஆரும், சரோஜா தேவியும் தப்பிக்கிறார்கள். அப்பாடா...இக்காட்சியின்போது திரையரங்கில் இருப்பவர்களுக்கு உயிர்போய் உயிர் வருகிறது.
50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகி உள்ள படத்திற்கு இத்தனை உயிர்ப்பா? எனச் சிலிர்த்தபடியே தியேட்டரை விட்டு வர மனதில்லாமல் வெளியில் வந்தோம். இதே ஈர்ப்புடன் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான நடிகர் சத்யராஜ் பேசுகிறார்:
""1958-ல் நாடோடி மன்னன் படம் ரிலீசானது. நான் 1954-ல்ல பிறந்தேன். படம் ரிலீசானபோது எனக்கு 4 வயசுதான் என்பதால் அந்தப் படத்தை ரிலீசான அன்றே பார்க்க முடியவில்லையே என்கிற வருத்தம் உண்டு. ஆனால், அதுக்குப் பிறகு நாடோடி மன்னன் படத்தை பதினைஞ்சுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன்.
உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், நாடோடிமன்னன் ஆகிய மூன்று படங்களுக்கு இன்னும் டிவி ரைட்ஸ்க்கு கொடுக்கவில்லை. இதனால் கடந்த பத்துப் பதினைந்து வருஷமாக நாடோடி மன்னன் படத்தைப் பார்க்க முடியவில்லை. ஆல்பர்ட் தியேட்டர்ல போட்டதும் போய் பார்த்துவிட்டு வந்தேன்.
தலைவர் படத்தையெல்லாம் வீட்டுல உட்கார்ந்து முறுக்கு தின்னுக்கிட்டு டிவியில பார்க்கக்கூடாது. ரசிகர்களோட சேர்ந்து விசிலடிச்சி, கைதட்டி பார்க்கணும். அப்பதான் தலைவர் படம் பார்த்தாப்போல இருக்கும்.
நாடோடி மன்னன் படத்துக்கு ஏகப்பட்ட சிறப்பு இருக்கு. எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் எடுத்த படங்கள்ல இந்தப் படமும் ஒண்ணு. இந்தப் படத்துல வர்ற "தூங்காதே தம்பி தூங்காதே' பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுல "தினம் அல்லும் பகலுமே வெறும் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டமில்லையென அலட்டிக்கொண்டார்' என்ற வரி ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதில் எவ்வளவு பெரிய பகுத்தறிவு கருத்து இருக்கு.
எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் பற்றி பேசுறப்ப எனக்கொரு ஆதங்கம் எப்போதும் உண்டு. தலைவர் என்னை கூப்பிட்டு எம்.ஜி.ஆர். பிச்சர்ஸ் எடுக்கிற அடுத்த படத்துல நடிக்கிறியான்னு கேட்டார். எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாரும் எம்.ஜி.ஆர் பிச்சர்ஸில நடித்ததில்லை. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கைகூடாமலே போய்விட்டது. அதுக்குள்ள தலைவர் நம்மைவிட்டுப் போய்விட்டார். அதுக்குப் பிறகு படம் எடுக்கப்படவில்லை.
நாடோடி மன்னனைத் தொடர்ந்து பழைய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்தால் ஓடுமான்னு கேட்டீங்கன்னா... அடிச்சு சொல்வேன் நிச்சயமா ஓடாது.'' என்கிறார் சத்யராஜ்.
எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்துக் காந்த சக்தி சத்யராஜை மட்டுமல்ல எல்லோரையும் என்றென்றைக்கும் கவர்ந்துகொண்டே இருக்கும். எம்.ஜி.ஆர் பாடலைக் கொண்டே சொன்னால்: "காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ.'
நன்றி: தினமணி.காம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு , சென்னை பிருந்தாவில் வெள்ளி முதல் (13/4/18) புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/2qbsz2g.jpg
வெள்ளி முதல் (13/4/18) சென்னை சரவணாவில் கலை வேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "பணம் படைத்தவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/dff0qo.jpg