டியர் ராகவேந்திரன் சார், பாராட்டுக்கு நன்றி !
டியர் ஜோ சார், நன்றி !
டியர் பார்த்தசாரதி சார், மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
Printable View
டியர் ராகவேந்திரன் சார், பாராட்டுக்கு நன்றி !
டியர் ஜோ சார், நன்றி !
டியர் பார்த்தசாரதி சார், மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா
கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா
சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்
பராசக்தி
[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்
நடிகர் திலகமும் திரை இலக்கியத்திலகமும்
http://i1094.photobucket.com/albums/...alaignar-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
PR- Wonderful writeup on padikkatha mEdhai... (idhellaam appadiyE varradhu thaan... illa)
We had a wonderful time watching this beauty. We laughed out when Rangan mentions "ஓ..இப்படி (தலையை சுத்தி மூக்கைத் தொடுவார்)..."
We felt the pain when Rangan realizes that SVR is gone!
The innocence Rangan had was genuine. Nowhere we thought he was playing the character. Flawless portrayal of Rangan. I need to watch it again.
செஞ்சோற்றுக்கடன் தீர்த்தான் 'கர்ணன்' அன்று...
செய்நன்றிக் கடன் தீர்த்தான் 'பாபு' இன்று...
'பாபு' சொல்லும்போதே நா இனிக்கிறது. ஆனால் மனம் கனக்கிறது. கைரிக்ஷாவண்டி இழுத்த எங்கள் பாபுவை மறக்க முடியுமா?..
தனக்கு ஒருவேளை சாப்பாடு போட்ட செய்நன்றிக்காக ஒரு நல்ல மனிதனின் குடும்பம் அத்தலைவனை இழந்து தவிக்கும் போது,அந்தக் குடும்பம் தழைக்க காலமெல்லாம் கைரிக்ஷா இழுத்து அவர் மகளை தன் மகளாக பாவித்து, அவளைப் படிக்க வைத்து உழைப்பாலும்,முதுமையாலும் உருக்குலைந்து தன்னை முழுவதுமாக அந்தப் பெண்ணின் வாழ்வுக்காகத் தியாகம் செய்து தன்மானத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் உயிர் நீக்கும் கவரிமானான எங்கள் பாச பாபுவை மறக்க முடியுமா?...
சுட்டெரிக்கும் வெயிலிலே கால்களில் மிதியடி கூட இல்லாமல் தார் ரோடுகளில் கைரிக்ஷாவை சிரித்த இன்முகத்தோடு இழுத்துக் கொண்டு ஓடும் எங்கள் பாபுவை மறக்க முடியுமா?...
ரிக்ஷாவில் காதலியை அமரவைத்து அழகு பார்த்து நகர்வலம் வரத்தெரியாமல் அவளிடம் தன் வயிற்றுப் பசியை மட்டும் தீர்த்துக் கொண்டு பின் அவளையும் பறிகொடுத்துவிட்டு அனாதையாக நின்ற பாபுவை எங்களால் மறக்க முடியுமா?...
'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே' என்று பாசச் சோற்றினை எங்களுக்கெல்லாம் ஊட்டி ஊட்டி வளர்த்த எங்கள் பாபுவை மறக்க முடியுமா?...
பழுத்த முதுமை அடைந்த பின்னர் முதுகு வளைந்து கால்கள் அகன்று நொடித்து தள்ளாடிய ஓட்டமாய் இருமிக்கொண்டே தன்னை வருத்தி ,ஓடாய்த் தேய்ந்து, கைரிக்ஷாவண்டி இழுத்து உருத்தெரியாமல் போன பாபுவை எங்களால் மறக்க முடியுமா?...
தான் வளர்த்த பெண்ணின் திருமணத்திற்கு அவளுக்குத் தெரியாமல் சென்று சாப்பாட்டுப் பந்தியில் கூட இடம் கிடைக்காமல் பிச்சைக்காரன் போல் விரட்டியடிக்கப்பட்டு சோதனைகளின் சுமைதாங்கியாய் தன் உயிரை விடும் எங்கள் பாபுவை மறக்க முடியுமா?...
எல்லாவற்றுக்கும் மேல் உடல் வருத்தி, உச்சி வெயிலில் கைரிக்ஷா இழுத்து, முதுமைத் தோற்றத்தைக் கொண்டுவருவதற்கு கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் தாடி ஒட்டி, முகம் ரணகளமாக சுருக்கங்கள் ஏற்றி ,அந்த இளம் வயதில் கண்களை ஒளி குன்றச் செய்து ஒரு அழுக்குக் கைலியையும், கிழிந்த சட்டையும் அணிந்துகொண்டு மேக்-அப் என்ற பெயரில் தன் மேனியினை நோக வைத்து (மாஸ்க் போன்ற நவீன மேக்-அப் சாதனங்கள் இல்லாமல்)அரும்பாடுபட்டும் பட்டபாட்டிற்கு பலனே இல்லாமல்,"நீ உண்மையான ரிக்ஷாக்காரன் இல்லை...உனக்கு சிறந்த நடிகர் அவார்டும் இல்லை ...உன்னைவிட சிறந்த ரிக்ஷாவாலாக்களெல்லாம் இருக்கிறார்கள்" என்று சொந்த மண்ணில் பிறந்தவர்களாலேயே நிராகரிக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்ட பச்சைத் துரோகத்தைத் தான் எங்களால் மறக்க முடியுமா?...
அத்தனை துரோகங்களையும் தாண்டி, "நீதானடா நடிகன்" என்று உலக நாடுகள் அனைத்தும் (சொந்த மண்ணைத் தவிர) உச்சி முகர்ந்து எங்கள் பாபுவைப் பாராட்டி,பாராட்டி கௌரவித்து,உயரிய உரிய பட்டங்கள் அளித்து மகிழ்ந்து, உள்ளம் குளிர்ந்து ஆனந்தக் கூத்தாடுகிறதே... அந்த ஆனந்த அங்கீகாரத்தைத்தான் எங்களால் மறக்க முடியுமா?...
'பாபு' 40- ஆவது ஆண்டு நிறைவு விழா
http://i1087.photobucket.com/albums/..._000005494.jpg
http://i1087.photobucket.com/albums/..._000016279.jpg
http://i1087.photobucket.com/albums/..._000212921.jpg
http://i1087.photobucket.com/albums/..._000003440.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
http://i1087.photobucket.com/albums/..._000462915.jpg
http://i1087.photobucket.com/albums/..._001288207.jpg
http://i1087.photobucket.com/albums/..._002143215.jpg
http://i1087.photobucket.com/albums/..._004941038.jpg
http://i1087.photobucket.com/albums/..._077401479.jpg
http://i1087.photobucket.com/albums/..._085596247.jpg
Thank you parthasarathy, pammalar, RC and Murali sir.
Yeah a totally captivating performance. Ranga Rao's performance in this film is one of my father's favourites. He keeps quoting "indha thuNi ellAm salavaikku pOgudhA, illai salavailErndhu varudhAmmA" many times :lol:Quote:
Originally Posted by Murali Srinivas
We were flipping chanels Sunday evening and just saw the scene where RangaRao asks Rangan to leave the house. One of my favourite scenes in the film as I mentioned once here (ungaLukku oNNum theriyAdhu mAmA :lol:). Thereafter we were totally glued to the film.
டியர் பிரபு சார்,
தங்களின் படிக்காத மேதை ரங்கனின் அட்டகாசங்கள் பற்றிய ஆய்வு மிகப் பிரமாதம். அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.ரங்கனைப் பற்றி லட்சம் பக்கங்கள் எழுதலாம். அப்படிப்பட்ட அற்புதப் புதையல் அந்த ரங்கர். நன்றி சார்,
அன்புடன்,
வாசுதேவன்.
Dear Vasu
superb note
kumareshan prabhu
அன்பு கார்த்திக் சார்,
தங்களின் மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு நன்றி.
டியர் பார்த்தசாரதி சார்,
தங்கள் அன்புக்குத் தலை வணங்குகிறேன். தங்கள் பாராட்டு உவகை அளிக்கிறது. மகானுக்கு நம் சேவை என்றும் தொடரும்.
அன்பு ஆனந்த் சார்,
தங்களின் இதய பூர்வமான வாழ்த்துக்கு நன்றி. உத்தமபுத்திரனிலேயே நடனத்தில் கொடி நாட்டியவரல்லவா நம் தெய்வ மகன்! அதே போல் இருதுருவத்தில் தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே பாடலில் நடனத்தில் அசத்தியிருப்பார். நன்றி ஆனந்த்.
அன்பு பம்மலார் சார்,
தங்களின் பராசக்தி பதிவுகள் மனமகிழ்ச்சியை அள்ளித் தருகின்றன. நடிப்பரசரும் கவியரசரும் புகைப்படம் அருமை!
"பராசக்தி" கணேசனுடன் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் இருக்கும் புகைப்படம் மனித நேயத்துக்கோர் சான்று. அனைத்துக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள். தங்கள் பாராட்டுக்கும் நன்றிகள்.
அன்பு முரளி சார்,
தங்களின் பராசக்தி குணசேகரனைப் பற்றிய அற்புதப் பதிவை பலமுறை படித்து விட்டேன். அற்புதமான ஆத்மார்த்தமான அஞ்சலிப் பதிவு. பாராட்டுக்கள். தங்களின் உளப்பூர்வமான பாராட்டுகளுக்கும் மனம் நெகிழ்ந்த நன்றிகள்.
டியர் ராகவேந்திரன் சார்,
இடைவிடாப் பணியிலும் கவியரசர் பற்றிய நினைவு அஞ்சலி பதிவுகளை இட்டு தாங்கள் கடமை தவறா ரசிக வேந்தர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். அதிலும் யாரந்த நிலவு வீடியோப் பதிவு அட்டகாச அற்புதம். தங்களுக்கு இதயபூர்வமான நன்றிகள் சார். தங்கள் பராசக்தி மற்றும் பாபு பதிவுகளுக்கான பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றிகள் சார்.
Thank u very much kumareshan sir.
Vasudevan.
டியர் பம்மலார், வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தை முன்னிட்டு தாங்கள் பதிவிட்ட ஆவணங்கள் அருமை.
அதோடு, பராசக்தி, அமுதசுரபி, கண்ணதாசன் நினைவு பதிவு என்று, ஒரு special treat அளித்த உங்களுக்கு நன்றி.
1971 அக்டோபர் 18 - 'பாபு' நினைவலைகள்.....
தீபாவளியன்று நடிகர்திலகத்தின் 'பாபு' படம் ரிலீஸாகிறதென்ற பெருமிதம் தீபாவளியை பன்மடங்கு உற்சாகமாக்கியது. கள்ளமறியா, கவலையில்லா பள்ளிப்பருவம். ரிலீஸுக்கு ஒருவாரம் முன்பு ரிசர்வேஷன் ஆரம்பிக்கும்போதே, அதற்காகவே சேர்த்து வைத்திருந்த பணத்தில் வடசென்னை 'கிரௌன்' திரையரங்கில் டிக்கட் ரிசர்வ் செய்து விட்டேன். (முதல் வகுப்பு டிக்கட் 2ரூ 90பை. அதற்கே அந்தப்பாடு).
தீபாவளிக்கு முதல் நாள் கிரௌனில் சவாலே சமாளி 107 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய, மறுநாள் 'பாபு' ரிலீஸ். அதே தீபாவளிக்கு கிரௌன் தியேட்டரை அடுத்த ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில் ரிக்ஷாக்காரன் 140 நாட்களில் மாற்றப்பட்டு அங்கே 'நீரும் நெருப்பும்' ரிலீஸ் ஆகிறது. மே 29-ல் ரிக்ஷாக்காரனுக்குப்பிறகு அடுத்தபடம் அக்.18-ல்தான் வெளியாகிறது. ஆனால் இங்கே ஜூலை 3-ல் சவாலே சமாளி வெளியான பின் அக் 18-க்கு முன் இரண்டு படங்கள் (தேனும் பாலும், மூன்று தெய்வங்கள்) வந்து விட்டன. மூன்றாவதாக அக்.18-ல் பாபு)
தீபாவளிக்கு முன் டீக்கடை, பேப்பர் கடை எங்கு பார்த்தாலும் 'நீரும் நெருப்பும்' பற்றித்தான் பேச்சு. பாபு படத்தை ரசிகர்களைத்தவிர யாரும் கண்டுகொள்ளவில்லை. (இவ்விரு படங்களோடு மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் வண்ணப்படம் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை'யும், கே.எஸ்.ஜி.யின் பிரம்மாண்ட வண்ணப்படம் 'ஆதிபராசக்தி'யும் ரிலீஸ்). ஆக தீபாவளி ரேஸில் மூன்று வண்ணப்படங்களுக்கு மத்தியில் ஒரே கருப்பு வெள்ளைப்படமாக 'பாபு' மட்டுமே வந்தது. ரசிகர்களுக்கெல்லாம் ஒரே சோர்வு. நடிகர்திலகம் வேறு ஏதாவது பிரம்மாண்ட வண்ணப்படத்தை இந்த தீபாவளிக்கு வெளியிட்டிருக்கலாமே என்று ரசிகர்களுக்குள் பேச்சு. (அப்போது இரு பிரம்மாண்ட வண்ணப்படங்களாக ராஜாவும், தர்மம் எங்கேயும் தயாரிப்பில் இருந்தன).
எதிர் அணி படத்தைப்பற்றி என்னென்னவோ பேச்சுக்கள், எதிர்பார்ப்புக்கள், இன்னொரு வெள்ளி விழாப்படம் என்ற ஆரூடங்கள், இதற்கு முந்தைய சைக்கிள் ரிக்ஷாவையே ஓட்டத்திலும் வசூலிலும் முந்தும் என்ற கணிப்புக்கள், இரட்டை வேடமாம், ஈஸ்ட்மென் கலரில் உருவாகியிருக்கிறதாம், பிரம்மாண்ட செட்டுக்களாம், ஏகப்பட்ட நடிகர்களாம், ரொம்ப நாளைக்கப்புறம் கத்திச்சண்டக்காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம், நிச்சயம் பயங்கர வெற்றிதான்.... பாவம் கணேசனின் பாபு படம் இப்போட்டியில் சிக்கி நசுங்கப்போகிறது, அதுல அந்த ஆளுக்கு சரியான ஜோடிகூட இல்லையாம், மலைநாட்டு மங்கையில் நடித்த விஜயஸ்ரீதான் ஜோடியாம் என்றெல்லாம் ஏகடியங்கள், கிண்டல்கள், கேலிப்பேச்சுக்கள். நடிகர்திலகத்தின் ரசிகர் தரப்பில் வழக்கம்போல பொறுமை காக்கப்பட்டது.
ஆனால் எல்லா ஆர்ப்பாட்டமும் தீபாவளிக்கு படங்கள் ரிலீஸாகும் வரைதான். வெளியானதோ இல்லையோ நிலைமை தலைகீழாக மாறியது. சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் 'பாபு' வசூலில் முந்தியது. எந்தப்படம் பெரும் போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதோ அது பின் தங்கியது. நாட்கள் ஆக ஆக, 'பாபு'வுக்கும் ஆதிபராசக்திக்கும்தான் எல்லா ஊர்களிலும் போட்டியாக இருந்தது. மூன்றாவது இடத்தை ஜெய்சங்கரின் வீட்டுக்கு ஒரு பிள்ளை பிடிக்க, ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட 'பிரம்மாண்டம்' பின் தங்கி நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
ஓலைக்குடிசை, கைரிக்ஷா, கருப்புவெள்ளை, வெறும் நான்கே முக்கிய கதாபாத்திரங்கள், கிழிந்த உடைகள், தாடி மீசை இவற்றோடு நடிகர்திலகத்தின் 'பாபு' போட்ட போடில் வண்ணங்கள் வெளுத்துப்போயின, பிரம்மாண்டங்கள் சரிந்தன. பாபுவுடன் போட்டியிட வந்த படம் பிரீஸ்டீஜுக்காக 50 நாட்கள் ஓடுவதே இழுபறியாகிப்போனது. பாபுவோ சர்வ சாதாரணமாக வசூலை வாரிக்குவித்தது.
இதில் எதிர் அணிக்கு இன்னொரு சோகம் என்னவென்றால், வழக்கமாக 'அவரது' படங்களைப்பொறுத்தவரை, ஓட்டத்தில் சுமாரான படங்களில் கூட பாடல்கள் பாப்புலராகி விடும். ஆனால் இப்போது அதுவும் பொய்த்துப்போனது. அப்படத்தின் பாடல்கள் எங்கும் பாப்புலராகவேயில்லை (இன்றுவரை). ஆனால் பாபுவின் 'வரதப்பா வரதப்பா', 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே' பாடல்கள் அட்டகாசமாகப் பாப்புலராயின. வானொலிகளில் தினமும் ஒலித்தன. கேலியும் கிண்டலும் பேசிய வாய்கள் அடைத்துப்போயின. ரிலீஸுக்கு முன் சோர்வாகக்காணப்பட்ட நடிகர்திலகத்தின் ரசிகர்கள் தெம்பாக வலம் வந்தனர். 1972-ம் ஆண்டின் அட்டகாச பவனியை 1971 இறுதியில் 'பாபு' துவக்கி வைத்தது.
அக்டோபர் 18 மாலைக்காட்சிக்கு டிக்கட் வாங்கியிருந்தேன். (தீபாவளியன்றைக்கு மாலைக்காட்சிக்கு டிக்கட் கிடைத்தால் அது எவரெஸ்ட்டில் ஏறியது போல). டிக்கட் ரிசர்வ் செய்திருந்தாலும் கரெக்டாக காட்சி நேரத்துக்குப் போவது எனக்குப்பிடிக்காது. கியூவில் நின்று டிக்கட் வாங்குபவர்களைவிட முன்னதாகவே போய் விடுவேன். அன்று மாலை மூணரைக்கெல்லாம் கிரௌன் தியேட்டர் வாசலில் ஆஜர். வழக்கம்போல ரசிகர்க மன்றங்களால் பந்தல்கள், ஏகப்பட்ட தோரணங்கள், கொடிகள், நட்சத்திரங்கள், கட்-அவுட்களுக்கு மாலைகள் என ஏக அமர்க்களங்கள் (கிரௌன், ஸ்ரீகிருஷ்ணா இரண்டு தியேட்டர்களிலும்). அதுபோல இரண்டு தியேட்டர் முன்பும் தெருவையே அடைத்து ரசிகர் கூட்டங்கள். அவ்வப்போது பட்டாசு வெடிக்கும் சத்தம் அந்த இடத்தையே இரண்டு பண்ணியது.
ஒரு வழியாக மேட்னி ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்தது. வெளியில் நின்ற ரசிகர்கள் அவர்களை மொய்த்து ரிசல்ட் கேட்கத்துவங்கினோம். தாய்மார்கள் பெரும்பாலோர் கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்தனர், ரசிகர்களும்தான். எங்களுக்குப்புரியத் தொடங்கியது. கிளைமாக்ஸ் கண்டிப்பாக சோகம் போலும். ஒரு ரசிகர் சொன்னார் 'பாசமலர், வியட்நாம் வீடு படங்களுக்குப்பிறகு இந்தப்படத்துலதான்யா நான் அழுதேன்' என்று.
மாலைக்காட்சிக்கு கரண்ட் டிக்கட் விற்பனை துவங்கியது. அவ்வளவுதான் அதுவரை போலீஸார் கட்டுப்படுத்தி வைத்திருந்த கூட்டம் அனைத்தும் உடைபட்ட வெள்ளமென கவுண்ட்டரை நோக்கி முன்னேறியது. முன்பதிவு செய்திருந்த டிக்கட்டைக்காட்டி உள்ளே சென்றோம். விளம்பரப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் அரங்கு நிறைந்து விட்டது. ரசிகர்களின் பொறுமையை மேலும் சோதிக்காமல் உடனே நியூஸ் ரீல் போட்டு, அது முடிந்ததும் படத்தைத் துவக்கினார்கள். படம் துவங்கியது முதல் ரசிகர்களின் அலப்பறையும், விசிலும் கைதட்டலும் படத்தை களைகட்ட வைத்தன. இடைவேளை வரை படம் படு உற்சாகமாகப்போனது. அவர் ஸ்டைலாக முகத்தில் புன்சிரிப்புடன் ரிக்ஷா இழுத்துக்கொண்டு ஓடுவது, பாலாஜியின் அன்பில் நெகிழ்வது, இலையில் இருந்த கத்தரிக்காயை ஸ்ரீ தேவி எடுத்துச்சாப்பிட்டதும் பதறுவது, அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பாலாஜியின் பெருந்தன்மையில் கண் கலங்குவது, அந்த சம்பவத்தை ரயில்வே ட்ராக்கில் உட்கார்ந்துகொண்டு காதலி விஜயஸ்ரீயிடம் குதூகலமாகச்சொல்வது, வரதப்பா வரதப்பா பாடலின்போது ரிக்ஷாக்கானுக்கே உரிய ஸ்டைலுடன் ஆடுவது, கீசக வதம் நாடகம், விஜயஸ்ரீயின் பரிதாப மரணம், அதைத்தொடர்ந்து நம்பிராஜனுடன் சண்டை என்று படம் படு அட்டகாசம்.
இடைவேளைக்குப்பின்னர் நம்மை அப்படியே கதையில் ஒன்றவைத்து சோகத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றுவிடுவார். சௌகாரின் பாந்தமான நடிப்பு பெரும் துணையாக இருக்கும். பாபுவை உதாசீனமாகப்பேசும் தன் மகள் நிர்மலாவை கண்மண் தெரியாமல் அடிப்பதும், பின்னர் தான் பிச்சையெடுத்த ப்ளாஷ் பேக்கை நினைத்துப்பார்க்கும் நிர்மலா, மாமா என்று பாபுவைக் கட்டி அணைத்துக்கொண்டதும் தள்ளி நின்று பாசத்தில் கண் கலங்குவத்மாக சௌகாரும் தன் பங்கை சிறப்பாக நிறைவேற்றியிருப்பார். கடைசியில் நிர்மலாவின் திருமணத்தின்போது அவரை தனியே சந்தித்து நாய் பொம்மையை நடிகர்திலகம் நிர்மலாவுக்குப் பரிசாகக்கொடுக்கும்போது தியேட்டரே கதறி அழுதது. தன்னைச்சுற்றி அத்தனை பேரும் தன்மீது அவ்வளவு அன்பு செலுத்துவது கண்டு அவர் நெகிழ்ச்சியோடு உயிரிழப்பதோடு படம் நிறைவடைய கலங்காத கண்களும் இருக்க முடியுமா?.
எங்கள் 'பாபு'வுக்கு இன்று 40 ஆண்டுகள் நிறைந்தன. இன்னும் பலநூறு ஆண்டுகள் ரசிகர்கள் இதயங்களில் சிரஞ்சீவியாக வாழ்வார்.
திரு.வாசுதேவன் சார், பராசக்தி, பாபு ஆல்பம் அருமை. நன்றி.
Karthik sir, tears in my eyes, wow what a write up, I could feel how would be 1st day evening show and that to on Deepavali day. Hats off to you sir. Excellent writeup... I believe even our opposition actor fan's also like your writing...
Please make us happy like this Karthik sir...
Cheers,
Sathish
அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,
என்ன ஒரு கட்டுரை! உள்ளத்தில் தோன்றியதை, மடை திறந்த வெள்ளமெனக் கொட்டித் தீர்த்து விட்டீர்கள்!
ரங்கனை எப்படி மறக்க முடியாதோ, அது போல் "பாபு"வையும் யாராலும் மறக்க முடியாது.
நடிகர் திலகம் எத்தனை எத்தனையோ படங்களில் மக்களை அழ வைத்தார். படிக்காத மேதை ஒரு விதம் என்றால், பாபு வேறு ஒரு தனி விதம்! ஒற்றுமை என்னவென்றால், இரண்டுமே, மிக மிக எளிமையான பாத்திரப் படைப்புகள் மற்றும் நடிப்பு!!
ஏற்கனவே பலராலும் எழுதப் பட்டது, நானும் எழுதியிருக்கிறேன். எனினும், மீண்டும் ஒரு முறை (அடக்க முடியவில்லை), இவர் ஒருவர் தான், ஒரே படத்திலேயே, ஏன்? மிகச் சிறிய கால அவகாசத்திற்குள், வெகு ஜனத்திற்கு, அமரிக்கையாகவும், ஸ்டைலாகவும் (அதுவும், நம்மைப்போன்ற அவருடைய பிரத்யேக ரசிகர்களுக்காக) நடித்து, மின்னல் வெட்டும் நேரத்திற்குள், அந்தக் கதாபாத்திரத்திற்குள் நுழைந்து, அந்தப் பாத்திரமாகவே மாறி, நம்மையும், அவருடனே கூட்டிச் சென்று விடுவார்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மட்டுமல்ல, விவரமறிந்த அத்தனை பேரின் உள்ளக் குமுறல்களையும், பிரதிபலித்து விட்டீர்கள். அதுவும், "ராமன் எத்தனை ராமனடி" படத்தில், நடிகர் திலகம் எஸ்.என்.லட்சுமியுடன் பேசும் பாணி மற்றும் ஸ்டைலிலேயே!
மாறாத, மறையாத ரணமல்லவா, அது!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Dear Karthick Sir,
It was a re-enactment of those lovely days and how we were all overwhelmed by our Greatest Actor in the world.
An excellent Tribute by you for our Great Man.
Anm
டியர் பிரபுராம்,
எப்போதும் விடிவெள்ளி படம் தான் உங்கள் பதிவைக் கண்டதும் என் நினைவுக்கு வருகிறது. நடிகர் திலகத்தின் அருந்தவப்புதல்வர்களைத் தங்களுடைய பெயரில் பதித்து என்றைக்கும் மறக்க முடியாத பெயரோடு திகழ்கிறீர்கள்.
எங்கிருந்தோ வந்தான் பாடலின் முடிவில் அந்த வீட்டின் வாசலில் நுழைவார், நுழையும் போதே வீட்டில் ஒரு விதமான அமைதி நிலவும், அதனைத் தான் உணர்வதைத் தன் முகத்திலேயே காட்டுவார், பின் ஒவ்வொரு பக்கமாகப் பார்த்துக் கொண்டே வருவார். அந்தக் காட்சி கிட்டத்தட்ட45 விநாடிகள் ஓடும், அதன் பிறகே ரங்கராவ் படத்தைப் பார்ப்பார். ஆனால் அந்த 45 விநாடிகள், பொதிகை ஒளிபரப்பில் இடம் பெறவில்லை. ஏதாவது தொழில் நுட்பக் காரணமாயிருந்திருக்கலாம். அதன் பிறகு அவர் உள்ளே கண்ணாம்பா அவர்களை அந்தக் கோலத்தில் கண்டதும் தன் உணர்வினைக் கட்டுப்படுத்த இயலாமல் தன் சோகத்தை வெளிப்படுத்துவார்.
உலகத்தில் எத்தனை நடிப்புக்கல்லூரிகள் உள்ளதோ அத்தனையிலும் பாடம் எடுக்க நிர்ணயிக்க வேண்டிய நடிப்பு....
இந்தப் படத்தைப் பற்றிய தங்களின் அற்புதமான கருத்துரை அத்தனை ரசிகர்களின் உள்ளத்தையும் பிரதி பலித்தது.
தங்களுடைய பதிவுகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
டியர் கார்த்திக்,
அக். 18, 1971ஐ கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள். மறக்க முடியுமா அந்த நாட்களை...
தீபாவளியன்று சென்னையில் பார்க்க முடியாவிட்டாலும், உடனேயே ஒரு வாரத்தில் சென்னை திரும்பி முதல் வேலையாக சாந்தி திரையரங்கில் அட்டெண்டன்ஸ் கொடுத்து விட்டுத் தான் மறு வேலை...
பகல் காட்சிகளில் தாய்மார்களின் படையெடுப்பு... 0.84 பைஸா டிக்கெட்டுகள் கொடுக்கும் போதே 1.25 பைஸா டிக்கெட்டும் 1.66 டிக்கெட்டும் கொடுத்து விடுவார்கள். பால்கனி டிக்கெட் பெரும்பாலும் முன் பதிவிலேயே நிறைந்து விடும். 84 பைஸா டிக்கெட்டும் 1.25 பைஸா டிக்கெட்டும் ஆளுக்கு ஒரு டிக்கெட், 1.66 மட்டும் சில சமயங்களில் தாய்மார்கள் ஆண்களுக்கும் சேர்ந்து வாங்கிக் கொள்ளலாம். இது பொதுவாக அனைத்துத் திரையரங்குகளிலும் இருந்த நடைமுறை. இந்த டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக பங்களா தேஷ் அகதிகளுக்காக 5 பைஸா, 10 பைஸா அல்லது 40 பைஸா, என்று டிக்கெட் கட்டணத்தின் அடிப்படையில் வரியாக கூடுதலாக வசூலிப்பார்கள். அரங்கமே களையாக இருக்கும். மாலைக்காட்சிகளுக்கோ, கேட்கவே வேண்டாம், கார்களுக்குப் போக மீதம் மனிதர்களுக்கு என்ற அளவிற்கு வாகன நிறுத்துமிடம் நிறைந்திருக்கும்.. அந்த மாலையும் இரவும் சந்திக்கும் நேரங்களில், பிரகாசமான ஒளி விளக்கில் புதிதாய்க் கட்டிய தோரணங்களும் ஏராளமான ரசிகர் மன்ற ஸ்டார்களும் கண்ணைப் பறிக்கும் வண்ணம் அமர்க்களமாய் இருக்கும்.
என்ன இருந்தாலும் அந்தக் காலத்துத் திரையரங்க அமர்க்களங்களைக் காணக் கண் கோடி வேண்டும், தவம் செய்திருத்தல் வேண்டும்.
அன்புடன்
பாபு திரைப்படத்திற்காக பொம்மையில் வெளிவந்த விளம்பரத்தின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/a...bommai05fw.jpg
இந்த விளம்பரத்தினைப் பாருங்கள்... கம்ப்யூட்டர் என்றால் என்ன வென்று தெரியாத காலத்தில், ஈஸ்வர் ராவ் அவர்கள் தன் தூரிகையில் தத்ரூபமாக நடிகர் திலகத்தின் பாத்திரத்தைத் தீட்டியிருப்பதை...
இந்த ஈஸ்வர் அவர்களின் விளம்பரங்களுக்காக நான் தீவிர ரசிகனாகவே ஒரு சமயத்தில் ஆகி விட்டேன் என்றால் அது மிகையன்று... நடிகர் திலகத்தின் படங்களுக்கு பெரும்பாலும் ஈஸ்வர் அவர்களின் வரி ஓவியம் தவறாமல் இடம் பெற்று விடும், அது தினத் தந்தியில் முழுப் பக்கத்தில் பிரசுரமாகும் போது அதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருந்ததும் உண்டு.
பாபு திரைப்படத்தைப் பற்றி பொம்மை இதழில் வெளிவந்த படத் தொகுப்பின் நிழற்படங்கள்
http://i872.photobucket.com/albums/a...bommai04fw.jpg
http://i872.photobucket.com/albums/a...bommai03fw.jpg
http://i872.photobucket.com/albums/a...mmai0102fw.jpg
பாபு படத்தைப் பார்த்தோம், சிறந்த நடிகர் விருது வழங்கப் படவில்லை என்பதைப் பற்றியும் விவாதித்தோம்... ஆனால் திரையில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே அவர் பெற்ற விருதை நாம் அறிய வேண்டாமோ... இன்று வரை யாருக்கும் இப்படிப் பட்ட பெருமை கிடைத்தாய் நாம் அறியவில்லை...
முதலில் இந்த நிழற்படத்தைப் பாருங்கள்...
http://i872.photobucket.com/albums/a...sakthiadfw.jpg
தான் திரையில் தோன்றுவதற்கு முன்பாகவே தனக்கென்று ஒரு பத்திரிகையின் முகப்பில் விளம்பரம் வரப் பெற்றவர், அதுவும் தன் குரலுக்கு...
யாரையாவது சுட்டிக் காட்டுங்களேன்...
டியர் mr_karthik,
பொன்மனம் படைத்த "பாபு" பற்றிய தங்களின் பதிவுக்கட்டுரை 24-காரட் தங்கம். தீபாவளித் திருநாளான அக்டோபர் 18, 1971 அன்று நடந்த "பாபு" நிகழ்வுகளை தங்கள் எழுத்தின்மூலம் ஒளிப்பேழையாகத் தந்து அசத்திவிட்டீர்கள்.
"பாபு" வருகைக்கு முன் இருந்த சூழல்...
அக்காவியத்தின் ஆரம்பநாள் அமர்க்களங்கள்...
இத்திரைஓவியம் குறித்த ஒரு மினி திறனாய்வு...
"பாபு"வின் பிரம்மாண்ட வெற்றி பவனி...
என ஒரே பதிவில் ஒரு தகவல் பிரளயத்தையே தந்து "பாபு"வின் வெற்றிக்கீரிடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதித்துவிட்டீர்கள் !
தங்களுக்கு எனது உளங்கனிந்த பாராட்டுக்களுடன் கூடிய உளப்பூர்வமான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
"பாபு"வை மறக்க முடியுமா என வினவி மறக்க முடியாத பதிவுகளை அளித்து விட்டீர்கள் !
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !
டியர் ராகவேந்திரன் சார்,
"பராசக்தி", "பாபு" ஆவணப்பதிவுகள் பிரமாதம், பாராட்டுக்கள் !
அன்புடன்,
பம்மலார்.
குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா
கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா
சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்
பராசக்தி
[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்
புகைப்பட ஆல்பம்
http://i1094.photobucket.com/albums/...ekaran16-1.jpg
http://i1094.photobucket.com/albums/...ekaran5a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...ekaran14-1.jpg
http://i1094.photobucket.com/albums/...aran12-1-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
20.10 - மறக்க முடியாத நாள்
இதே நாளில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் சீனாவுடனான யுத்தம் தொடங்கிய நாள் ...
(இந்திய சீன யுத்தத்தைப் பற்றி அறிய வைக்கியின் இணைப்பில் காணுங்கள்)
எங்கெங்கு காணினும் யுத்த சூழல்... மாலையானால் கும்மிருட்டு, ஊரடங்கு உத்தரவு அமல், யாராயிருந்தாலும் ஏதேனும் விமான சத்தம் கேட்டால் உடனே படுத்து விட வேண்டும்... பொருட்கள் ரேஷனில் அளவுடன் தான் வழங்கப் படும்...
குழந்தைகளாகிய நாங்கள் பள்ளி விட்டு வரும் போது முழங்கிக் கொண்டே வருவோம்... இந்தியா வாழ்க, சீனா ஒழிக....
அந்த நாட்களை இன்று நினைவு கூர்வதற்கு காரணம் ரத்த திலகம் படம்...
இந்தியாவில் நிலவிய யுத்த சூழலை அப்படியே படத்தில் பிரதிபலித்தார்கள் தாதாமிராசியும் நடிகர் திலகமும். அதை நமக்கு பாடல் மூலம் தந்தார்கள் கவியரசர், கேவிஎம் டிஎம்எஸ் கூட்டணி....
ஏராளமான நினைவுகள் ஒவ்வொருவருக்கும் இருக்கலாம்...
தற்காலத் தமிழ் மக்களுக்கு ஊரடங்கு உத்தரவு, யுத்த சூழல் எல்லாம் என்ன வென்றே தெரியாது...
அந்தப் போர் சூழலை ஒலி வடிவில் தெரிந்து கொள்ள புத்தன் வந்த திசையிலே பாடலைக் கேளுங்கள்.
புத்தன் வந்த திசையிலே போர்
dear Karthi , raghavendra sir
what a superb note sir superb
regards
kumareshan prabhu
அகிலனின் 'பாவை விளக்கு' 51-ஆம் ஒளி வீசும் ஆண்டு அமர்க்கள ஆரம்பம்.
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்...(நடிகர் திலகத்தின் ரம்மியமான சொந்தக் குரலில்)
ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே...
காவியமா நெஞ்சின் ஓவியமா...(சாகா வரம் பெற்ற பாடல்)
அற்புதப் பாடல்களும்,மயக்கும் ஷாஜஹானாக நம் நடிகர் திலகத்தின் நடையழகும், ஒரிஜினல் தாஜ்மஹாலில் படமாக்கப் பட்ட பெருமையும்,அகிலனின் அற்புதப் படைப்பு போன்ற பல பெருமைகளைத் தக்க வைத்துக் கொண்ட காவியம். காவியமாகவும் நெஞ்சில் ஓவியமாகவும் நிலைத்து நிலை பெற்றுவிட்ட அற்புதப் படைப்பு இந்த பாவை விளக்கு.
http://im.in.com/connect/images/prof...ilakku_300.jpg
http://lulzimg.com/i07/973aee.png
http://i1098.photobucket.com/albums/...ilakku0002.jpg
http://i1098.photobucket.com/albums/...ilakku0003.jpg
http://i1098.photobucket.com/albums/...ilakku0005.jpg
அன்புள்ள சந்திரசேகர் சார், சதீஷ் சார், பார்த்தசாரதி சார், ஆனந்த் சார், ராகவேந்தர் சார், பம்மலார் சார், குமரேசன் சார்......
உங்கள் அனைவரின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்.
'பாபு' திரைக்காவியம் பற்றி நம் அனைவரது எண்ண ஓட்டங்களும் ஒரே மாதிரியாக அமைந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.
அன்புள்ள வாசுதேவன் சார்,
தங்களின் 'பாபு' திரைக்காவியத்தின் நிழற்பட வரிசை மிகவும் அருமை, ஸ்டில்கள் அனைத்தும் தெள்ளத்தெளிவாக உள்ளன, நன்றிகள்.
அன்புள்ள ராகவேந்தர் சார்,
பொம்மை திரையிதழில் வெளிவந்த 'பாபு' விளம்பரமும், அப்படம் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய தகவல் பக்கங்களும் மிக அருமை. விளம்பரத்தில் வரைகோட்டு சித்திரம் மூலமாக நடிகர்திலகத்தின் கள்ளமில்லா வெள்ளைச்சிரிப்ப்புடன் கூடிய முகபாவங்களைப்படைத்த ஓவியர் ஈஸ்வர் ராவ் நிச்சயம் பாராட்டுக்குரியவர்.
நீங்கள் குறிப்பிட்டது போல, அந்தப்பொன்னான நாட்கள் கோடி கோடியாய் கொட்டிக்கொடுத்தாலும் திரும்பி வாராது. நம் நினைவில் தங்கியுள்ள அந்த இனிய நாட்களை நம் தலைமுறையினருக்கு நினைவூட்டுவதும், இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்வதும் ஒரு தனி இன்பம்தான். படம் வெளிவரும் முன்பே அட்டையில் இடம்பெற்ற 'பராசக்தி' விளம்பரம் ஒரு அரிய ஆவணம்.
அன்புள்ள பம்மலார் சார்,
பராசக்தி புகைப்படத்தொகுப்பு தொடர்வது கண்டு மகிழ்ச்சி. 'பாபு'வின் 100-வது நாள் விளம்பரம் காண ஆவலாயுள்ளோம்.
பிரபுராம் சார்,
படிக்காதமேதை ரங்கனைப்பற்றிய ஆய்வு மிகவும் அருமை. பாராட்டுக்கள்.
'பாவை விளக்கு' நிழற்பட வரிசை தொடர்ந்து.......முடிகிறது.
http://padamhosting.com/out.php/i554...snap108937.png
http://padamhosting.com/out.php/i554...snap110521.png
http://padamhosting.com/out.php/i554...snap109924.png
http://padamhosting.com/out.php/i554...snap102218.png
http://padamhosting.com/out.php/i554...snap102457.png
http://padamhosting.com/out.php/i554...snap108701.png
அன்புடன்,
வாசுதேவன்.
மனதை மயக்கும் காலத்தால் அழிக்க முடியாத காவியமா... நெஞ்சின் ஓவியமா..பாடற்காட்சி
http://www.youtube.com/watch?v=UYABJ...yer_detailpage
'பாவை விளக்கு' படத்தில் வரும் புகழ் பெற்ற பாடலான 'ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே' பாடலை நம் அருமை ஷண்முக சுந்தரம் நாதஸ்வரத்தில் வாசிப்பதைக் கண்டு கேட்டு மகிழலாமா?..
http://www.youtube.com/watch?v=O5AY2kVHag4&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
' பெற்றமனம்' நடிகர் திலகத்தின் 65- ஆவது படம். வெளியான நாள்: 19-10-1960. அற்புத பாடல்களுக்கான லிங்க் கீழே
http://www.inbaminge.com/t/p/Petra%20Manam/
அன்புடன்,
வாசுதேவன்.