பக்கம் பக்கமாக கதைகளை சொல்லி புரிய வைக்க முடியாத தெரிய வைக்க முடியாத விஷயங்களை, ஒரு படம் சொல்லும் என்பார்கள். அப்படி ஒரு படம் இதோ-
http://i872.photobucket.com/albums/a...board17711.jpg
சென்னை சாந்தி நிகழ்வுகளின் உணர்வுகளை தொடரும் பதிவுகளில் காண்க...
Printable View
பக்கம் பக்கமாக கதைகளை சொல்லி புரிய வைக்க முடியாத தெரிய வைக்க முடியாத விஷயங்களை, ஒரு படம் சொல்லும் என்பார்கள். அப்படி ஒரு படம் இதோ-
http://i872.photobucket.com/albums/a...board17711.jpg
சென்னை சாந்தி நிகழ்வுகளின் உணர்வுகளை தொடரும் பதிவுகளில் காண்க...
அன்பு சகோதரி சாரதா
தங்களின் பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றி. அனைத்தும் திலகத்திற்கே.
முரளி சார்,
அனைவரையும் குறிப்பிட்டு பாராட்டியமைக்கும் தகவல்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இதே போல் பாராட்டுக்களைத்தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் அடியேனின் நன்றி.
டியர் பம்மலார்,
அசத்தல்-அருமை-அட்டகாசம்-- இவற்றிற்கெல்லாம் பொருள் தேட அகராதிகளை இனிமேல் தேட வேண்டாம். தங்களுடைய உழைப்பையே கூறுவது தான் பொருத்தம்.
தொடரும் பதிவுகளில் கௌரவம் நிகழ்வுகளைக் காணலாம்...
அன்புடன்
wiki and other sources state that sivaji enacted bhagat singh, is this true?
Sunil, it was stage play within the movie, Rajapart Ranggathurai, where he plays a stage actor. It's a crucial scene in the movie, where....no I don't want to spoil it. Watch it and you will know.
RR - beautiful movie!
Where can I buy the original DVDs of NT? Apart from Raj Video Vision.
சாந்தியில் 12 . 30 மணி காட்சிக்கு சென்ற பொது ஆச்ரியம், அதிசயம். 38 வருடங்களுக்கு முன் வந்த படம் "கெளரவம்". பலமுறை தொலை காட்சியிலும், dvd / cd ரூபத்தில் வந்த போதிலும், கிட்ட தட்ட முக்கால் வழி ரசிக பெருமக்கள் திரை அரங்கத்தில். அமைதியாக படம் பார்க்க முடிந்தது.
மீண்டும் 6 .45 மணி காட்சிக்கு சென்ற பொது, ரசிகர்களின் அலப்பறை. பாரிஸ்டர் வரும் காட்சி எல்லாம், ரசிகர்களின் அலப்பறை கேட்கவும் வேண்டுமா ? சரியாக விவரிக்க தெரியாததால் , முரளி, ராகவேந்திரா, பம்ம்ளார்யிடம் விட்டுவிடுகிறேன். நடிகர் திலகத்தின் தலை முடி முதல் கால் நகம் வரை எல்லாமே நடிக்கும் என்பார்கள். உதாரணம், முகதில் உணர்சிகளை நடிகர் திலகத்தை போல் வேறு எவரும் கொண்டுவர முடியாது. பெங்களூரில் இருந்து சென்னை வந்து, இரண்டு காட்சிகள் பார்த்து மீண்டும் பெங்களூர் திரும்பி (AC class ) ஆன செலவு, ஒரு சீன்கே நிகர் ஆகிவிட்டது. அந்த சீன் - மேஜர் இரண்டாம் முறையாக நடிகர் திலகத்தை (பாரிஸ்டர்) காலை பிடித்து காப்பாற்றுமாறு கேட்பார். அப்பொழுது , செந்தாமரை இட் இஸ் டூ லேட் சார் என்று சொல்ல, நடிகர் திலகம் வாயில் பைப்பை வைத்து கொண்டு, பாதி வாயின் முலம் புகையை வெளியேற்றி, இரண்டு கண்களின் கிழே உள்ள கண்ணங்களின் சதையை மட்டும் அசைக்கும் பொது, செலவு செய்த பணம் எல்லாம் இந்த ஒரு சீன்கே சரியாகி விட்டது.
படம் முடிந்து வெளியே வரும் பொது, சிலர் பேசியது. "இன்று ரசிகர்களுடன் பார்ப்பது ஒரு அனுபவம், மீண்டும் நாளை (18 ஆம் தேதி) வந்து படம் பார்க்க வேண்டும் - ஒவ்வொரு சீன் ரசித்து பார்க்க".
HUB நண்பர்களான , முரளி, ராகவேந்திரா, பம்மலார், ராதா, சேகர், பெங்களூரில் இருந்து வந்த ரசிகர்களையும் மற்றும் சில நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இல்லாததால், உரையாட முடியவில்லை. அடுத்த முறை இதற்காகவே நேரம் ஒதுக்க முயற்சி செய்கிறேன்.
கை கொடுத்த தெய்வம் 'ரகு'விற்கு 48வது ஜெயந்தி
[18.7.1964 - 18.7.2011]
அர்ச்சனைப் பூக்கள்
முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
http://i1094.photobucket.com/albums/.../GEDC3910a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC3911a.jpg
50வது நாள் : சுதேசமித்ரன் : 5.9.1964
http://i1094.photobucket.com/albums/.../GEDC3907a.jpg
100வது நாள் : தினத்தந்தி(மதுரை) : 25.10.1964
http://i1094.photobucket.com/albums/...EDC3913a-1.jpg
[100வது நாள் சென்னைப் பதிப்பு விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் அவசியம் பதிவிடுகிறேன்.]
"கை கொடுத்த தெய்வம்" 1964-ம் ஆண்டின் வசூல் சாதனைக் காவியம்.
அன்புடன்,
பம்மலார்.
ஒரு பழைய படத்துக்கு -டிக்கட் கட்டணம் ரூ. 80 என்று அதிகமாக வைக்கப்பட்டிருந்தாலும், ஞாயிறு மாலை காட்சி அரங்கம் நிறையும் என்பது முன்பே எதிர் பார்த்ததுதான்.
ஆனால் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே full ஆகி விட்டதும் பிளாக்கில் டிக்கட் 150 முதல் 200 விற்கப்பட்டதும் ஆச்சரியமே. என்ன இருந்தாலும் " ஒரு நாளைக்கு 10௦,000 ரூபாய்க்கு மேல பீஸ் வாங்கி ஊரெல்லாம் ரஜினிகாந்த் , ரஜினிகாந்துன்னு பேச வச்ச " வசூல் மன்னராச்சே நம்ம Barrister .
DVD யில் சௌகரியமாகப் பார்க்க வாய்ப்பிருந்தும் அதனை விடுத்து பல திரைக் கலைஞர்கள் நேரில் வருகை தந்திருந்தார்கள். நடிகர் திலகத்தின் தீவிர அபிமானியான ஒரு கலைஞர் தனது VIP அம்மா உட்பட ( 4 தலைமுறைகளைச் சேர்ந்த ) குடும்பத்துடன் வந்திருந்ததையும் அவர்கள் அனைவருமே படத்தை மிகவும் ரசித்துப் பார்த்ததையும் காண முடிந்தது.
டிவி , DVD இவற்றின் வீச்சையும் தாண்டி நல்ல பழைய படங்களுக்கு இன்னும் திரையரங்க மார்க்கெட் இருக்கிறது என்பதை இந்த படம் நிரூபித்துவிட்டது.
இனி வரப்போகும் தங்கப்பதக்கம் , எங்கள் தங்க ராஜா, வசந்த மாளிகை, கர்ணன் மற்றும் கட்டபொம்மன் படங்கள் இந்தக் கருத்தை உறுதி செய்து , Multiplex திரையரங்களில் பழைய படங்கள் திரையிடப்படும் காலத்தை உருவாகினால் மகிழ்ச்சியே.
படத்தை பற்றி என்ன சொல்ல ?
" அட்வகேட் ரங்கபாஷ்யம் அப்பாயின்டட் அஸ் ஹைகோர்ட் ஜட்ஜ் " என்ற செய்தி வாசிப்பை தொடர்ந்து வரும் குமுறலையா?
" என்ன போஸ்ட்மேன் வரவேண்டிய நேரத்துல பொலிஸ்மேன் வந்திருக்கேள்" என்று செந்தாமரையைப் பார்க்காமலே பேசும் மிதப்பையா?
" லுக் மைடியர் யெங் மேன்" என்று அதே காட்சியில் தோளைக் குலுக்கும் பாங்கையா?
" நான் கோர்டுக்கு போகும்போது புலி கூட குறுக்கே போகாது" என்ற வார்த்தைகளில் உள்ள கர்வத்தையா?
கோட்டைக் கேட்டு கண்ணன் வரும் காட்சியில் பைப்பை பிடித்துக்கொண்டு காலைக் குறுக்கே வைத்துக்கொண்டு மாடியின் மேல் நிற்கும் தோரணையையா?
'அது யாரால முடியும் பெரியப்பா?' என்று கேட்கும் கண்ணனிடம் ' என்னால முடியும்டா' என்று சொல்வதில் உள்ள தற்பெருமையையா?
" இன்னைக்கு ஜட்ஜ்மென்ட் டே" என்று சொல்லிவிட்டு பட்டன் போடாத முழுக்கை சட்டையின் பட்டையை விளக்கி மணிபார்க்கும் வேகத்தையா?
வெறுமனே மாடிப்படியில் அமர்ந்திருப்பது போன்ற காட்சியில் கூட கைத்தட்டல் வாங்குமளவுக்கு அமர்ந்திருக்கும் ஸ்டைலயையா?
எதைச் சொல்வது எதை விடுவது?
மொத்தத்தில் Barrister ஒரு One man army. படம் ஒரு one man show.
டியர் பம்மலார்,
கை கொடுத்த தெய்வம் என்று நேற்றைய அரங்கு நிறைவில் விநியோகஸ்தர் நடிகர் திலகத்தை உள்ளூர மகிழ்வுடன் நன்றி பாராட்டியிருப்பார் என்பதை உணர்த்தும் வண்ணம் பத்திரிகை விளம்பரங்களை பதிவிட்ட தங்களை எங்ஙனம் பாராட்டுவது.. சொல்லத்தான் ஓர் வார்த்தையில்லை...
நேற்றைய நிகழ்வுகளை அழகாய் எடுத்துரைத்த பாலகிருஷ்ணன் மற்றும் மகேஷ் ஆகியோரின் பதிவுகள், நடிகர் திலகத்தின் தாக்கம் இல்லாத ரசிகர்களே இல்லை என்பதை நீரூபித்துள்ளன. பாராட்டுக்கள்...
நேற்றைய அரங்க காட்சிகள் சில இங்கே...
கொண்டாட்டங்கள் தனியாக பம்மலார் பதிவிடுவார் என எண்ணுகிறேன்.
எனக்கென தனியாக புகைப்படக் கருவி தந்துதவிய நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு இதய பூர்வமான நன்றிகள்.
இதோ படங்களின் அணி வகுப்பு. வர்ணனை தேவையில்லை என எண்ணுகிறேன்.
http://i872.photobucket.com/albums/a...nergarland.jpg
http://i872.photobucket.com/albums/a...introscene.jpg
http://i872.photobucket.com/albums/a...ezuguvathi.jpg
http://i872.photobucket.com/albums/a...ezuguvathi.jpg
தொடரும்
உணர்ச்சிப் பெருக்கில் பார்வையாளராக திருவாளர்கள் ஒய்.ஜி.மகேந்திரா, மற்றும் இயக்குநர் சேரன் .
http://i872.photobucket.com/albums/a.../cheranygm.jpg
சேரன் :thumbsup: நீ நம்மாளுய்யா :clap:
WoWWWW !!!!! What a great way to spend a Sunday evening !!! Just terrific......i was thrilled, excited and filled with myriad of emotions. As Saradha mam said, it was a dream come true for us.
To make it short, i would like to share Mahesh's sentiments.
The audience simply loved Barrister and almost ignored Kannan as if it was played by some other actor !!! That's the power of Nadigar Thilagam the one and only G I A N T of an actor.
Barrister says to Chella (paraphrasing) " Yaana keezha vizhundha eppadi irukkum theriyuma ? Adhaala ezhundirukkavey mudiyadhu.....adhathana inga ellarum edhirpakura....ivan eppada keezha vizhuvannuttu...Nadakkadhudee, nadakkadhu.......I can face anybody's challenge ". Well, he stood by that sentence. Now, in 2011, he took up this challenge with guts and proved that he is KING OF KINGS !!
I really feel proud to shamelessly admit that as i was watching one after another of my favourite scenes on big screen, where my beloved Barrister Roars, Laughs, Cries, Emotes.....I felt tears rolling down from my eyes.
Thanks to everyone who has made this happen. I am a very contended person now, as the CHANGE that we have been yearning for is there, right in front of us !!!!
LONG LIVE NADIGAR THILAGAM.
17.7.11 அன்று ஞாயிறு மாலை கெளரவம் திருவிழாவில் நம் ஹப் நண்பர்கள் திரு ராகவேந்தர், திரு முரளி, திரு பம்மலார், திரு பார்த்தசாரதி, திரு பாலா,திரு மகேஷ் திரு மோகன் (ரங்கன்) உடன் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, நல்ல கூட்டம், அரங்கு நிறைந்து டிக்கெட் கிடைக்காமல் திரும்பியோர் பலர், பல வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படத்திற்கு இப்படி ஒரு வரவேற்ப்பு இருக்கிறதென்றால் அதுதான் நடிகர் திலகம்.
பாடல் காட்சிகளில் குறிப்பாக நீயும் நானுமா பாடலின் போது ரசிகர்கள் திரைக்கு வெகு அருகில் நின்று ஆட, அவர்களை கட்டு படுத்த போலீஸ் வரவேண்டி இருந்தது, வழக்கம் போல் திரு y.g மகேந்திரன் தனது குடும்பத்தோடு வந்திருந்தார், குறிப்பாக அவரின் தாயார் நடக்க இயலாத நிலையில் வீல் சேரில் வந்தது வியப்பை தந்தது,
Sathya,
Forget Raj video Vision. Their quality is not good. Visit AVM Sound Zone at TTK Road. When you come from Alwarpet, it comes after Narada Gana Sabha on your left. There you can find DVDs from all vendors. You can get a variety of NT movies with a good quality print.
Makesh and Mohan,
Great write ups.
Bala, nice attempt in Tamil. Please continue.
Regards
Dear Raghavendran Sir,
Cent percent true ! A PICTURE IS WORTH MORE THAN A THOUSAND WORDS !!
AN NT PIC IS WORTH MORE THAN 'N' NUMBER OF PAGES !!!
அகமும் புறமும் உண்மை
http://i1094.photobucket.com/albums/.../GEDC3963a.jpg
அன்புடன்,
பம்மலார்.
Dear Sunil_M88,
Nadigar Thilagam as National Thilagam [Bhagat Singh] in RAJAPART RANGADURAI
http://i1094.photobucket.com/albums/...agatSingh1.jpg
Warm Wishes & Regards,
Pammalar.
டியர் ராகவேந்திரன் சார்,
தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் உச்சமான பாராட்டுக்களுக்கு அடியேனது உளப்பூர்வமான நன்றிகள் !
நாம் ஒவ்வொருவருமே நமது நடிகர் திலகத்திற்கு தொண்டாற்றி வருகிறோம் என்பது நாம் பெற்ற பாக்கியம் !
டியர் பாலா சார், பதிவு அருமை !
Rajinikanth & Rangan, A Rare Combo !
அன்புடன்,
பம்மலார்.
sorry to be a pest but is there one of him like this in hat and a western dress
http://topnews.in/law/files/Bhagat_Singh.jpg
Here it is, my dear friend !
http://i1094.photobucket.com/albums/.../GEDC4004a.jpg
This is a promo still for the stage play 'Bhagat Singh' in RR.
கௌரவக் கொண்டாட்டம்
சென்னை சாந்தி : 17.7.2011 : ஞாயிறு மாலை
கணேசலங்காரம்
http://i1094.photobucket.com/albums/.../GEDC3915a.jpg
சரம் மாரி பொழிதல்
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3916.jpg
மக்கள் வெள்ளம்
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3923.jpg
மீண்டும் 'கார்'காலம்
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3932.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
WOW :shock: very nice share
கௌரவக் கொண்டாட்டம்
சென்னை சாந்தி : 17.7.2011 : ஞாயிறு மாலை [தொடர்ச்சி...]
ஜன சமுத்திரம்
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3925.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3926.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3927.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3928.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
Early morning checking this thread, I got nothing but lump in my throat. My favourite movie, still so powerful. Still drawing crowd. Still relevant. This character could be our version of Citizen Kane, but to hell with Kane, Barrister Rajinikanth is up there with Hamlet, except Hamlet is frickin' wimp! Long live NT's fame.
Mahesh, and rangan, beautiful posts! Thanks.
NOV, when can we ever have something like this over here. Very sad.
Pammalar sir, I've never seen that still myself (with hat). Kettathum tak-nu kuduttenggale! You are great sir!
Infinite thanks to Pammalar and Ragavendran sir for soaking us into happy mood and making us virtually to present inside Shanthi theatre and enjoying Sunday show, hats off to you guys.
I should agree Chennai fan's started beating our Madurai "Allapparai"...
Cheers,
Sathish
Thank you, Mr.Sunil_M88 & Mr.Rakesh.
Thank you very much, goldstar Satish.
Regards,
Pammalar.
Thank you, Mr.Sunil_M88 & Mr.Rakesh.
Thank you very much, goldstar Satish.
Regards,
Raghavendran
we completely second you madamQuote:
உலகமகா நடிகனுக்கு, அஞ்சலி,அஞ்சலி.கண்ணீர்அஞ்சலி!
அஞ்சலி,அஞ்சலி கண்ணீர் அஞ்சலி! ஜூலை 21!கருப்புதினம்...என் நாள்காட்டியிலே,கையேட்டிலே,வீட்டிலே,,நாட்டிலே ,ஏன் உலகத்திற்கே கருப்பு நாள்! உலகமகா நடிகன்,நடிகர்திலகம்,கலைக்குரிசில்,நடிப்பின் அகராதி உயிர்கூட்டைப் பிரிந்து பறந்த நாள்! நடிப்பும் இறந்தது!!!! நீ அப்பாவாக நடித்தாய்,எனக்கு அப்பாவைப் பிடித்தது!நீ அண்ணனாக நடித்தாய்...எனக்கு அண்ணனில்லயே என்று அழுதேன்!நீ மகனாய் நடித்தாய் எனக்கு மகனில்லயே உன்னைப்போல் என்று வருந்தியிருக்கிறேன்! நீ காதலனாய்,கணவனாய் திரையில் வந்த பொழுது உன்னோடு மனதோடு வாழ்ந்திருக்கிறேன்!!நீ இறக்கும் படங்களைப் பர்த்து கதறியிருக்கிறேன்!கட்டபொம்மனை,வ.உ.சியை,ராஜராஜசோழனை ,பரதனை,ஷண்முகசுந்தரத்தையும்,அப்பர் சாமிகளையும்,வீரபாகுவையும்,நாரதரையும்,சுந்தரம்பிள் ளையையும்,நரசிம்மாச்சரியையும் பார்த்து,பார்த்து இன்றுவரை பார்த்துக்கொண்டே இருக்கேன்,அலுக்கவில்லை எனக்கு!!!போடாத வேஷமில்லை,சிந்தாத கண்ணீர் இல்லை,சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை! எத்தனை வேஷங்கள்.....வாழ்ந்து இருக்கிறாய்!பத்மனாப அய்யர்,பாரிஸ்டெர் ரஜினிகாந்த்,மில்முதலாளி ராஜலிங்கம்,தெய்வமகன் கண்ணன் இனிமேல் எவனும் நடிக்கிறேன் சொல்லிக்கொண்டு வரமுடியாத அளவுக்கு ஒரு இமயமலையாய்,அண்ணாந்து பார்க்ககூட முடியாத இடத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறாய்!கவிதைக்கும்,பாடலுக்கும் உயிர் கொடுத்தாய்!நீ வாசிக்காத வாத்தியமே இல்லை,நீ ஆடாத நடனமே இல்லை!முதல்மரியதை உனக்கு கொடுக்காம வேற யாருக்கு கொடுக்கிறது? உனக்கு விருதுகள் தேடி வந்து ஒட்டிக்கொண்டு பெருமையொடு மார்தட்டிக்கொண்டு பூரிப்பு அடைந்தது!!! எல்லாம் சரி!என்ன அவசரம் என்று இவ்வளவு வேகமாய் ஓடினாய்? திரையுலகு பொட்டிழந்த விதவையாய் நிற்கிறது!! உன்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கிறவர்கள் உன் நிழலைக்கூடத் தொட முடியாமல் பாதியிலேயே நிற்கிறார்கள்!தேவர்மகனை நம்பிக்கொண்டு இருக்கிறோம்!அவருக்கு உனக்கு கிடைத்த பாத்திரங்கள் அளவு கனமான பாத்திரங்கள் இன்னும் கிடைக்கவில்லை!நீ நீதான்!!!!இனிமேல் யார் வந்தாலும் உன்னைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட கதைதான்!!! STYLE:style style,people talk about style now,what is that bloody style,you created that word i will vouch,your wlking style in PAARTHAAL PASITHEERUM,THIRUVILAYADAL,BAGAPIRIVINAI,GOWRAVAM ,KATTABOMMAN.......WOW!NOBODY can even try that!Your gestures,hats off!!!!Your dialogue delivery......"PLEASE"in PUDHIYAPARAVAI before UNNAIONDRU KETPEN,your smoking style in Yaar andha nilavu,in PAARTHAGNABAGAM ILLAYO SONG,Mella nada,mella nada scene,Paalooti valartha kili song scene,THILLANA MOHANAMBAL(WHOLE MOVIE)KARNAN,whole movie especially with savithri in EDUKKAVO KORKAVO SCENE,KAPPALOTTIATHAMIZHAN,VEERAPANDIAKATTABOMMAN full movie,UYARNDHAMANIDHAN...."SIVAKUMAR sappadu konduvandhu sappidara scene,pal kuthura scene etc etc,etc....The list goes on and on LIKE RMKV SAREE,INDIA'S SCAM REPORT.......!!!!!!! I have so many things to write about you but it will go as big as A SKY,A SEA OR AS VAST AS THE UNIVERSE! AS YGM puts it "THERE IS ALWAYS ONE SUN,ONE MOON................ONLY ONE SHIVAJI!!!!!!!!As long us i live,i can never accept anybody a great actor because ACTING means SHIVAJI SIR!Others can try,try try again and again ......to reach your perfection!No words more..................high time for me to mourn!!!!!!!
Visali Sriram
thanks to facebook website.
கௌரவக் கொண்டாட்டம்
சென்னை சாந்தி : 17.7.2011 : ஞாயிறு மாலை [தொடர்ச்சி...]
பேனர்களின் பேரணி
பாரிஸ்டருக்கு பேனர்கள்
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3929.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3922.jpg
நினைவு நாள் பதாகைகள்
http://i1094.photobucket.com/albums/.../GEDC3919a.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3920.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார், ராகவேந்தர், முரளி, மகேஷ், ராதாகிருஷணன் மற்றும் பாலா....
கௌரவம் திரைக்காவியத்தின் ஞாயிறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை செய்திகளாகவும், புகைப்படங்களாகவும் தந்து அசத்தி விட்டீர்கள். அனைத்தும் மிக அருமை என்பதோடு, அரங்குக்கு வர இயலாதோரை நமது திரி வழியாகக் காண வைத்து விட்டீர்கள்.
மகேஷ்,
நீங்கள் பாரிஸ்ட்டரின் ஸ்டைல் காட்சிகளை வரிசைப்படுத்திய விதம் அருமை. இன்னும் நிறைய இருக்கிறது. அவர் வரும் காட்சிகள் அனைத்தும் ஸ்டைல்தானே. (புகைப்படங்களில், திரைக்காட்சிகள் சிவப்பு நிறமாக இருப்பதைப்பார்த்தால் படம் பழைய பிரிண்ட்டோ என்று தோன்றுகிறது. ரசிகர்களின் இவ்வளவு எதிர்பார்ப்புக்களுக்கிடையே, அவர்களின் பெருத்த ஆதரவோடு திரையிடப்படும் படம் புதிய பிரிண்ட்டாக திரையிட்டிருக்கலாம்).
பாலா,
இப்படத்துக்காக நீங்கள் பெங்களூரிலிருந்து வந்து சிறப்பித்திருப்பது பிரமிக்க வைக்கிறது. நடிகர்திலகத்தின்மீது நீங்கள் வைத்திருக்கும் அபிமானம் சிலிர்க்க வைக்கிறது. இது முதல் முறையல்ல என்பது கூடுதல் சுவாரஸ்யம்.
'பாரிஸ்ட்டர்' மோகன்,
உங்கள் உணர்ச்சிகளை என்னால் உணர முடிகிறது. சாந்தி நிர்வாகம் இப்போதாவது ரசிகர்களின் உணர்ச்சி வேகத்தைப் புரிந்துகொண்டு, நடிகர்திலகத்தின் படங்களை பெரிய திரையில் காணச்செய்வதற்கு நன்றிகள். (சிறிது காலம் சென்னை அரங்குகளில் நடிகர்திலகத்தின் படங்களையே பார்க்க முடியாமல் இருந்தது. இதுபற்றி சகோதரர் ராகவேந்தர் பலமுறை குறைபட்டுள்ளார்).
கௌரவம் பலதரப்பட்ட ரசிகர்களையும் திருப்திப்படுத்துவதாக அமைந்ததும் அதன் பெரிய வெற்றி. நடிகர்திலகத்திடம் ஸ்டைலுடன் கூடிய சற்றுமிகை நடிப்பை ரசிக்க விரும்புவோருக்கு பாரிஸ்ட்டர் பாத்திரம். அடக்கி வாசிக்கப்பட்ட இயல்பான நடிப்பை விரும்புவோருக்கு கண்ணன் பாத்திரம் என இரண்டையும் தந்திருந்தார். பாரிஸ்ட்டருக்கு கிடைத்த அபார வரவேற்பின் மூலம், ரசிகர்களும் பொதுமக்களும் நடிகர்திலகத்திடம் என்ன விதமான நடிப்பை எதிர்பார்த்தனர் என்பதற்கும் விடை சொல்லியது இப்படம். இருப்பினும் கண்னன் பாத்திரமும் சோடைபோகவில்லை.
பெரியவருக்கு எதிராக தன்னை பிரைன்வாஷ் செய்யும் சகவக்கீல்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தாமரையிடம், 'எல்லோரும் சேர்ந்து இந்த மெழுகு பொம்மைக்கு உயிர் கொடுக்கப்பார்க்கிறீர்கள். ஆனா, எங்க பெரியப்பா 'கண்ணா'ன்னு கூப்பிட்டு ஒருதடவை பார்த்தாருன்னா இந்த பொம்மை அப்படியே உருகிடும் சார்' என்று சொல்லும்போது பெரியவரிடம் இருக்கும் பக்தியை அருமையாக வெளிப்படுத்துவார். 'இன்னும் கொஞ்சூண்டு நெய் போடுறேன். சமர்த்தா சாப்பிடுங்கோ' என்று பெரியப்பாவிடம் கொஞ்சும் அழகு, பெரியவரின் கோர்ட் கவுனை வாங்க வந்த இடத்தில் பெரியவரைப் பார்க்கும் முன் பண்டரிபாயிடம் பேசும்போது கொட்டும் உணர்ச்சிப்பிரவாகம், கோர்ட் சீனில் பெரியப்பாவைப்பார்த்து 'Let him take his own time' என்று சொல்லுமிடம், கடைசியில், கேஸில் தான் ஜெயித்ததற்குக்கூட பெருமைப்படாமல், பெரியப்பாவுக்கு ஜஸ்டிஸ் போஸ்ட் கிடைத்து விட்டது என்பதையறிந்து குழந்தைபோல குதூகலித்து ஓடும் அழகு... என்று கண்ணனும் தன் பங்குக்கு அசத்தியிருப்பார்.
கோல்டன் சதீஷ்,
சென்னை என்ன மதுரை என்ன, தமிழக திரையரங்குகள் அனைத்துமே நடிகர்திலகத்தின் கோட்டைகள்தான், தாராசுரம் டூரிங் டாக்கீஸ் உள்பட.
முந்தாநாள் கௌரவம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.
Three Thilagams
http://abkhlabhi.blogspot.com/2011/0...thilagams.html
3 wonders with one
http://abkhlabhi.blogspot.com/2011/0...-with-one.html
NT 2 NT
http://abkhlabhi.blogspot.com/2011/07/nt-2-nt.html
ALL GREATS
http://abkhlabhi.blogspot.com/2011/07/blog-post.html
http://abkhlabhi.blogspot.com/2011_07_01_archive.html
ஆட்சியில் இல்லை, அதிகாரத்தில் இல்லை, ஆலாய்ப் பறக்க ஏவல்கள் இல்லை,
காசு, பணம், பதவிகளில்லை, டிக்கெட் கிழிக்க செல்வாககுள்ளவர்கள் இல்லை,
ஆனால்
மக்கள் உண்டு, நெஞ்சங்கள் உண்டு, உயிராய்த் தாங்கும் உள்ளங்கள் உண்டு,
உயிருள்ளவரை உன்னைத் தவிர, வேறு ஏதும் எண்ணாதவர்கள், உத்தம புத்திரர்கள் ஏராளமுண்டு,
ஏசுவோர் ஏசினாலும் தூற்றுவோர் தூற்றினாலும்,
சிகரத்தைக் கைகளால் மறைக்க இயலாது
என்பதை நிரூபித்து வரும் நடிகர் திலகத்தின் கௌரவம் காவியம் பெற்ற வெற்றியை
நானிலம் கொண்டாட நல்லெண்ணம் கொண்டு
இணையத்தில் ஏற்றிய இந்தியா க்ளிட்ஸுக்கு
இதயம் முழுதும் இறைந்து வரும் நன்றிகள்.
http://www.indiaglitz.com/channels/t...nts/28326.html
நடிகர் திலகத்தின் தலையில் குவிந்திருக்கும் ஏராளமான கிரீடங்களில் கோஹினூர் வைரக்கிரீடம் கௌரவம் - திருமதி மதுவந்தி அருண்
நடிப்புக்கு இலக்கணம் நடிகர் திலகம் என்றால் ரசிப்புக்கு இலக்கணம் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் - திரு மோகன்ராம்
நாங்கள் நடிகர் திலகத்தை மறந்து விட்டோம் என்றால் நாங்கள் இறந்து விட்டோம் என்று பொருள் - திரு நெய்வேலி வாசுதேவன்
இவையெல்லாம் என்ன காசு கொடுத்து சொல்லச் சொல்லும் கோஷங்களா இல்லை, உள்ளத்தின் அடித்தளத்தில் உணர்ச்சிப் பெருக்கில் எழும் உண்மைகள்
இவை போன்ற உணர்ச்சிமயமான காட்சிகளைத் தொகுத்து தந்திருக்கும் இந்தியா க்ளிட்ஸ் இணையதளத்தின் நிர்வாகத்திற்கு உளமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
Indiaglitz :thumbsup: சிவாஜி - பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல :)