ஒரு பழைய படத்துக்கு -டிக்கட் கட்டணம் ரூ. 80 என்று அதிகமாக வைக்கப்பட்டிருந்தாலும், ஞாயிறு மாலை காட்சி அரங்கம் நிறையும் என்பது முன்பே எதிர் பார்த்ததுதான்.
ஆனால் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே full ஆகி விட்டதும் பிளாக்கில் டிக்கட் 150 முதல் 200 விற்கப்பட்டதும் ஆச்சரியமே. என்ன இருந்தாலும் " ஒரு நாளைக்கு 10௦,000 ரூபாய்க்கு மேல பீஸ் வாங்கி ஊரெல்லாம் ரஜினிகாந்த் , ரஜினிகாந்துன்னு பேச வச்ச " வசூல் மன்னராச்சே நம்ம Barrister .
DVD யில் சௌகரியமாகப் பார்க்க வாய்ப்பிருந்தும் அதனை விடுத்து பல திரைக் கலைஞர்கள் நேரில் வருகை தந்திருந்தார்கள். நடிகர் திலகத்தின் தீவிர அபிமானியான ஒரு கலைஞர் தனது VIP அம்மா உட்பட ( 4 தலைமுறைகளைச் சேர்ந்த ) குடும்பத்துடன் வந்திருந்ததையும் அவர்கள் அனைவருமே படத்தை மிகவும் ரசித்துப் பார்த்ததையும் காண முடிந்தது.
டிவி , DVD இவற்றின் வீச்சையும் தாண்டி நல்ல பழைய படங்களுக்கு இன்னும் திரையரங்க மார்க்கெட் இருக்கிறது என்பதை இந்த படம் நிரூபித்துவிட்டது.
இனி வரப்போகும் தங்கப்பதக்கம் , எங்கள் தங்க ராஜா, வசந்த மாளிகை, கர்ணன் மற்றும் கட்டபொம்மன் படங்கள் இந்தக் கருத்தை உறுதி செய்து , Multiplex திரையரங்களில் பழைய படங்கள் திரையிடப்படும் காலத்தை உருவாகினால் மகிழ்ச்சியே.
படத்தை பற்றி என்ன சொல்ல ?
" அட்வகேட் ரங்கபாஷ்யம் அப்பாயின்டட் அஸ் ஹைகோர்ட் ஜட்ஜ் " என்ற செய்தி வாசிப்பை தொடர்ந்து வரும் குமுறலையா?
" என்ன போஸ்ட்மேன் வரவேண்டிய நேரத்துல பொலிஸ்மேன் வந்திருக்கேள்" என்று செந்தாமரையைப் பார்க்காமலே பேசும் மிதப்பையா?
" லுக் மைடியர் யெங் மேன்" என்று அதே காட்சியில் தோளைக் குலுக்கும் பாங்கையா?
" நான் கோர்டுக்கு போகும்போது புலி கூட குறுக்கே போகாது" என்ற வார்த்தைகளில் உள்ள கர்வத்தையா?
கோட்டைக் கேட்டு கண்ணன் வரும் காட்சியில் பைப்பை பிடித்துக்கொண்டு காலைக் குறுக்கே வைத்துக்கொண்டு மாடியின் மேல் நிற்கும் தோரணையையா?
'அது யாரால முடியும் பெரியப்பா?' என்று கேட்கும் கண்ணனிடம் ' என்னால முடியும்டா' என்று சொல்வதில் உள்ள தற்பெருமையையா?
" இன்னைக்கு ஜட்ஜ்மென்ட் டே" என்று சொல்லிவிட்டு பட்டன் போடாத முழுக்கை சட்டையின் பட்டையை விளக்கி மணிபார்க்கும் வேகத்தையா?
வெறுமனே மாடிப்படியில் அமர்ந்திருப்பது போன்ற காட்சியில் கூட கைத்தட்டல் வாங்குமளவுக்கு அமர்ந்திருக்கும் ஸ்டைலயையா?
எதைச் சொல்வது எதை விடுவது?
மொத்தத்தில் Barrister ஒரு One man army. படம் ஒரு one man show.
Bookmarks