Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் அவர்களே
நடிகர்திலகத்தின் புகழ்பாடும் பூங்குயிலாய், எங்களுக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷமாய் அவதரித்த தங்களின் பிறந்தநாளில் தங்களை வாழ்த்துவது எங்களுக்கு கிடைத்த பெரும் பேறு.
எண்ணிக்கையில் ஓராண்டு நிறைந்தாலும், தாங்கள் இன்று போல் என்றும் இளமைப்பொலிவுடன் திகழ்ந்து, நடிகர்திலகத்தின் புகழையும், பெருமைகளையும், சாதனைகளையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச்சொல்ல, எடுத்துச்செல்ல தாங்கள் எல்லா நலன்களையும் பெற்று பல்லாண்டுகள் வாழ்ந்திட இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.