Thiruvilayadal crystal clear scenes
http://i1087.photobucket.com/albums/...ps112260a8.jpg
http://i1087.photobucket.com/albums/...ps980ee742.jpg
Thiruvilayadal crystal clear scenes
http://i1087.photobucket.com/albums/...ps112260a8.jpg
http://i1087.photobucket.com/albums/...ps980ee742.jpg
hi vasu how are you
my best wishes to Mr.Pammalar sir
regards
kumareshanprabhu
Dear Kumareshanprabhu sir,
Fine. Thank u. How are you? what about kumki and when it release? How is our friends?
Thiruvilayadal Stills continue.....
http://www.shotpix.com/images/70772732415058742141.png
http://www.shotpix.com/images/75421989763928011332.png
http://www.shotpix.com/images/33583676368053983708.png
http://www.shotpix.com/images/88152380765806457402.png
http://www.shotpix.com/images/66856502257679185417.png
http://cinemachaat.files.wordpress.c...a-the-poet.png
http://cinemachaat.files.wordpress.c...dal_devika.png
http://cinemachaat.files.wordpress.c...e-question.png
http://cinemachaat.files.wordpress.c...al_torment.png
அன்புள்ள பம்மலார் சார்,
தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொன்ன ஒவ்வொருவருக்கும் கொஞ்சமும் சளைக்காமல் பரிசாக தலைவரின் ஒவ்வொரு அற்புத நிழற்படங்களைப் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். அதிலும் கூட 'பாத்திரம் அறிந்து பரிசு இடு' என்ற பழமொழிக்கேற்ப அவரவர் டேஸ்ட்டுக்கான படங்களை அளித்துள்ளீர்கள்.
நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை என்றும் உணர்த்தும் காவியத்திலிருந்து, ஆளவந்தாரின் மகன் அப்துல் ரகீமுடன் அவருடைய இணை மேரி இணைந்துநிற்கும் அற்புத நிழற்படத்தை எனக்களித்து பெருமைப்படுத்தி விட்டீர்கள். எல்லோருக்கும் தனித்தனிப படங்களையளித்து விட்டு எனக்கு மட்டும் அண்ணனும், 'அண்ணி'யும் இணைந்து நிற்கும் படத்தைத் தந்து மனம் மகிழச்செய்து விட்டீர்கள்.
ராஜேஷுக்கு உயர்ந்த மனிதன், சந்திரசேகருக்கு சிக்கல் சண்முக சுந்தரம், வாசுதேவனுக்கு அருணுக்குள் ஒளிந்திருக்கும் அந்தோனி, ஆனந்துக்கு இளைய ஜமீன்தார் விஜய் ஆனந்த், சிவாஜிசெந்திலுக்கு பாசத்தின் உறைவிடம் ராஜசேகர், செந்திலுக்கு துப்பறியும் ராஜா....... இப்படியே பார்த்துக்கொண்டு வந்த எனக்கு, நண்பர் கோபால் அவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ள நிழற்படத்தைப் பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
தாங்கள் அளித்துள்ள சென்னை தினத்தந்தியிலிருந்தும், நண்பர் வினோத் அவர்கள் பதிவிட்டுள்ள கோவை தினத்தந்தியிலிருந்தும், நவீனப்படுத்தப்பட்ட 'திருவிளையாடல்' சென்னை (2 அரங்கு), காஞ்சீபுரம், பொன்னேரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கோபி ஆகிய பல ஊர்களில் சத்தமில்லாமல் வெளியாகி ஓடிக்கொண்டிருப்பது தெரிகிறது.
இனி அந்தப்படத்துக்கு எங்கிருந்து பிரம்மாண்ட வெளியீடாவது ஒண்ணாவது..?. அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளிவர இருக்கும் (நவீனப்படுத்தப் படவிருக்கும்) வீரபாண்டிய கட்டபொம்மனாவது ரசிகர்களின் விருப்பப்படி, அவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெளியாகட்டும். அவ்வளவுதான் சொல்ல முடியும்.
தங்கள் பொன்னான பதிவுகளுக்கு நன்றி.
அன்புள்ள வாசுதேவன் சார்,
தாங்கள் எனக்காக மிகவும் சிரமப்பட்டு தொகுத்தளித்திருக்கும் நிழற்படத் தொகுப்புக்கு மிக்க நன்றி. அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் படமென்றாலே அது எப்போதுமே ஸ்பெஷல்தான்.
குமுதம் இதழின் பேசும்படம் பிரிவில் வெளியான 'சத்ரபதி சிவாஜி' தொலைக்காட்சி நாடகத்துக்கான பக்கங்களை பதிவிட்டு, நீங்கள் தெரிவித்திருக்கும் வேதனை நிச்சயமாக ஒவ்வொரு ரசிகரின் மனதிலும் முள்ளாய்க் குத்தும் என்பதில் ஐயமில்லை. எவ்வளவு அரிய ஆவணம் அது. அதை எப்படி சொல்லிவைத்தாற்போல இரண்டு தொலைக்காட்சி நிலையங்களும் தொலைத்தார்கள்?. ஊர் பேர் தெரியாத வித்வான்கள் பாடும் கர்னாடக சங்கீதக் கச்சேரிகளையும், வயலின் கச்சேரிகளையும் மெனக்கெட்டு சேகரித்து பத்திரப்படுத்தி வைத்திருக்கும் சென்னை தொலைக்காட்சி நிலையம், மக்களில் பெரும்பாலோருக்கு பிடித்த, இனி எப்போதும் பிடிக்கக்கூடிய இந்த அருமையான வரலாற்றுப் பதிவைத் தொலைத்து விட்டார்கள் என்று சொல்வதைப்பார்க்கும்போது, இந்த மனிதர் இங்கே வந்து பிறந்திருக்கவே வேண்டாம் என்றே தோன்றுகிறது. ஒரு மனிதனுக்கு இப்படியா எல்லாப்பக்கங்களிலும் சதி நடக்கும்?. ஏற்கெனவே நடந்து முடிந்த திருவிளையாடல் சதியையே இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.
என்னத்த சொல்ல...., என்னத்த செய்ய.....
திரு பம்மல் சார்,
வாழ்த்து சொன்ன அனைவருக்கும் தலைவரின் அற்புத படங்களை பரிசாக தந்து அசத்தி விட்டீர்கள். எனக்கு அளித்த ஸ்டைல் சக்ரவர்த்தியின் ராஜா பட ஸ்டில் சூப்பர்,நன்றி.
கார்த்திக் சார் சொன்னது போல திருவிளையாடல் படத்தின் ஆரவாரமான வெளியீட்டையும் அதன் பிரம்மாண்டமான வெற்றியையும் எதிர்நோக்கி காத்திருந்த நமக்கெல்லாம் பெருத்த ஏமாற்றம்.என்னத்தை சொல்ல? தருமியின் அனல்மூச்சுதான் நினைவுக்கு வருகிறது.ஒருவேளை திட்டமிட்ட சதியோ என்று எண்ணத்தோன்றுகிறது (முரளி சார் மன்னிக்கவும்).
டியர் முரளி சார்,
கோபால் அவர்களின் உயர்ந்த மனிதன் ஆய்வுக்கு தாங்கள் அளித்துள்ளது கோபாலுக்கான விமர்சன ஆய்வு என்று எடுத்துக் கொள்வதைவிட உயர்ந்தமனிதனுக்கான தங்களின் மறு ஆய்வு என்றுதான் எனக்கு எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது...வாவ்...excellent. பிரமாதப்படுத்தி விட்டீர்கள். நடிகர் திலகத்தைப் பற்றி விடுங்கள்... அவர் பிரளயம். ஆனால் மறக்காமல் ஜி.சகுந்தலா அவர்களின் அற்புத நடிப்பைப் பற்றித் தாங்கள் குறிப்பிட்டுள்ளது நடிகர் திலகத்தின் ரசிகர்கள் திறமை எங்கு இருந்தாலும் ஓடி வந்து பாராட்டத் தயங்கவே மாட்டார்கள் என்பதற்கு ஒரு மறுக்க முடியாத சான்று. injection போடும் அந்தக் காட்சி முடிந்து சௌகார் திரும்பியதும் அசோகன் சௌகாரிடம், "தோ பாருங்க... இப்ப நான் போட்ட Injection ல ஏதாவது ரியாக்ஷன் இருந்தாலும் இருக்கும்," என்று சொல்ல அதற்கு நம்மவர் "அட ஏண்டா" என்று அசோகனைப் பார்த்தவாறு சலித்துக் கொள்ளுமிடம் தங்கள் பதிவைப் போலவே மணிமகுடம்தான். (பாரதி மட்டும் நடிகர் திலகத்துக்கு ஜோடியாக இருந்திருந்தால் விட்டிருப்பாரா வியட்நாமார்? சிவக்குமாருக்கு ஜோடியாகப் போய் (போட்டு) விட்டதால் கோபம். அப்படித்தானே கோபால்?) மறக்காமல் தங்கள் பதிவில் என்னைப்பற்றிக் குறிப்பிட்டு பெருமைப்படுத்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் முரளி சார்.
ஹரிஷ் சார்,
'என்னத்தச் சொல்ல' என்றே ஒரு திரி தொடங்கிவிடலாம் போல. புலம்ப விட்டு விட்டார்கள். அந்த அளவிற்கு சோதனைகளும் வேதனைகளும் தலைவரையும், நம்மையும் பாடாய்ப் படுத்துகின்றன. இருந்தாலும் நடிகர் திலகம் பீனிக்ஸ் பறவை போல மறுபடி மறுபடி உயிர்த்தெழுந்து சோதனைகளை சாதனைகளாக்கிக் காட்டியவரல்லவா! அவர் வழியில் பயணித்து வெற்றி சிகரங்களை எட்டுவோம்.