-
22nd September 2012, 11:21 AM
#11
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொன்ன ஒவ்வொருவருக்கும் கொஞ்சமும் சளைக்காமல் பரிசாக தலைவரின் ஒவ்வொரு அற்புத நிழற்படங்களைப் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். அதிலும் கூட 'பாத்திரம் அறிந்து பரிசு இடு' என்ற பழமொழிக்கேற்ப அவரவர் டேஸ்ட்டுக்கான படங்களை அளித்துள்ளீர்கள்.
நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை என்றும் உணர்த்தும் காவியத்திலிருந்து, ஆளவந்தாரின் மகன் அப்துல் ரகீமுடன் அவருடைய இணை மேரி இணைந்துநிற்கும் அற்புத நிழற்படத்தை எனக்களித்து பெருமைப்படுத்தி விட்டீர்கள். எல்லோருக்கும் தனித்தனிப படங்களையளித்து விட்டு எனக்கு மட்டும் அண்ணனும், 'அண்ணி'யும் இணைந்து நிற்கும் படத்தைத் தந்து மனம் மகிழச்செய்து விட்டீர்கள்.
ராஜேஷுக்கு உயர்ந்த மனிதன், சந்திரசேகருக்கு சிக்கல் சண்முக சுந்தரம், வாசுதேவனுக்கு அருணுக்குள் ஒளிந்திருக்கும் அந்தோனி, ஆனந்துக்கு இளைய ஜமீன்தார் விஜய் ஆனந்த், சிவாஜிசெந்திலுக்கு பாசத்தின் உறைவிடம் ராஜசேகர், செந்திலுக்கு துப்பறியும் ராஜா....... இப்படியே பார்த்துக்கொண்டு வந்த எனக்கு, நண்பர் கோபால் அவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ள நிழற்படத்தைப் பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
தாங்கள் அளித்துள்ள சென்னை தினத்தந்தியிலிருந்தும், நண்பர் வினோத் அவர்கள் பதிவிட்டுள்ள கோவை தினத்தந்தியிலிருந்தும், நவீனப்படுத்தப்பட்ட 'திருவிளையாடல்' சென்னை (2 அரங்கு), காஞ்சீபுரம், பொன்னேரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கோபி ஆகிய பல ஊர்களில் சத்தமில்லாமல் வெளியாகி ஓடிக்கொண்டிருப்பது தெரிகிறது.
இனி அந்தப்படத்துக்கு எங்கிருந்து பிரம்மாண்ட வெளியீடாவது ஒண்ணாவது..?. அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளிவர இருக்கும் (நவீனப்படுத்தப் படவிருக்கும்) வீரபாண்டிய கட்டபொம்மனாவது ரசிகர்களின் விருப்பப்படி, அவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெளியாகட்டும். அவ்வளவுதான் சொல்ல முடியும்.
தங்கள் பொன்னான பதிவுகளுக்கு நன்றி.
-
22nd September 2012 11:21 AM
# ADS
Circuit advertisement
Bookmarks