Originally Posted by 
N.V.Raghavan
				 
			இந்த வார துக்ளக் இதழில் சுப்பு என்பவர் எம்.ஜி.ஆரின் படங்களில் ஈ.வெ.ரா. விற்கு எதிரான பிரச்சாரம் என்ற கட்டுரையில் எம்.ஜி.ஆரின் மதுரை வீரன் படம் அந்தக் காலத்திலேயே 40 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடியதாகவும், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகவும் தவறான தகவலைப் பதிவிட்டிருந்தார். அதை மறுத்து அந்தத் தகவல் தவறானது என்று துக்ளக் இத்ழில் சுட்டிக்காட்டியிருந்த எனது பதிவு.
தவறான தகவல் அதுவும் துக்ளக்கில் ? எம்.ஜி.ஆரின் ஆதிக்காலப் படங்கள் மட்டுமல்ல மிக பெரிய வெற்றிப் படங்களான உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண், மாட்டுக்கார வேலன், ரிக்ஷாக்காரன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா உட்பட எந்தப் படங்களும் தமிழகத்தில் 40 திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடியதாக சரித்திரம் இல்லை. அதுவும் மத்ரை வீரன் படம் ஒரு கோடி ரூபாய் வசுலித்தது என்பதுவும் தவறு.