Thank u very much Harish sir.
'கர்ணன்' 150- ஆவது வெற்றி விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் பகலென்றும், இரவென்றும் பாராது திரியில் பதிவிட்ட அன்பு பம்மலார் அவர்களையே அனைத்துப் பெருமைகளும் சாரும். ரசிக வேந்தரின் பங்கும் அபரிமிதமானது. சில சொந்த வேலைகளின் காரணமாக நான் விழாவிற்கு போக முடியாமல் போய் விட்டது. அதனாலென்ன? விழாவை நேரடியாகக் கண்டு களிப்பதைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பாக ரசித்து மகிழும் படி பம்மலார் தன் ஈடு இணையற்ற பதிவுகளின் மூலம் அசத்தி விட்டாரே! மறுபடி மறுபடி அவருக்கு என் இதயம் நெகிழ்ந்த நன்றிகள் நம் அனைவர் சார்பாகவும்.