டியர் பம்மலார்,
நேற்று இரவு பயணம் முடிந்து வீடு திரும்பியதும் முதல் வேலையாக அமர்ந்தது நமது திரியில் உள்ள பதிவுகளைப் பார்க்கத் தான். மலைப்பு என்ற வார்த்தைக்கு பொருளாக தங்கள் உழைப்பைத் தான் சொல்ல வேண்டும். 4ம் தேதி விழா 4 மணி நேரம் என்றால் அதை நாங்கள் பார்வையிட தங்களுக்குத் தேவைப்படும் உழைப்பு 4 நாட்களும் அதற்கு மேலும். என்ன என்று சொல்வது.

நமக்காக வைத்திருந்த அழைப்பிதழில் ஒன்றினை மிகவும் வயது முதிர்ந்த ஒரு ரசிகருக்கு கிட்டத்தட்ட 70 வயதுக்கும் மேல் அவருக்கு இருக்கும், அவருக்கு கொடுத்து விட்டதனால் நம்முடைய அழைப்பிதழ் எண்ணிக்கையில் உபரி எதுவும் இல்லாத காரணத்தால் முரளி சாரின் அழைப்பிதழை மற்றொரு நண்பருக்கு தர வேண்டிய சூழ்நிலை. உபரி இருந்திருந்தால் மேலும் நமது நண்பர்களை அழைத்திருக்கலாம். மேலும் அடியேன் முன் கூட்டியே உள்ளே செல்ல வேண்டியது இருந்ததால், காத்திருந்து நண்பர்களை வரவேற்க இயலாத நிலைமை. இவற்றை நமது முரளி சார் நன்கு அறிந்திருப்பார் என நம்புகிறேன். அதனால் தான் அவருடைய அழைப்பிதழை மற்றொருவருக்குத் தரும் நிலைமை.

ஸ்வாமி சார் தங்களுடைய பதிவுகளின் மூலம் இந்த மய்யத்தின் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறீர்கள். பாராட்டுக்கள். தங்களுக்கும் வாசுதேவன் சாருக்கும் மீண்டும் மீண்டும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.

ராகவேந்திரன்