http://i1094.photobucket.com/albums/...EDC4695a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4697a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4700a-1.jpg
http://i872.photobucket.com/albums/a...tingspotfw.jpg
வசந்த மாளிகை நினைவலைகள் தொடர்ச்சி
பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் நிழற்படங்கள் ...
இந்த நிழற்படங்களுக்குள்ளே ஒளிந்திருப்பது என்ன ..
கோடானு கோடி ரசிகர்களின் ஆர்வம், உழைப்பு, தங்கள் உடல், பொருள், ஆவி, வாழ்க்கை என அனைத்தையும் அர்ப்பணித்து நடிகர் திலகம் என்கிற கலைக் கடவுளையும் அவருடைய பெருமையினையும் ஊரறியச் செய்த மகத்தான சாதனையின் வடிவமல்லவா இந்த நிழற்படங்கள்.. எத்தனை முறை ஒவ்வொரு ரசிகரும் இப்படத்தைப் பார்த்திருப்பர் என்பது அவர்களாலேயே சொல்ல முடியாது. அந்த அளவிற்கு ஒவ்வொரு ரசிகரின் உதிரத்திலும் ஊறித் திளைத்தது நடிகர் திலகம் என்ற பெயர்.
72ன் உச்சகட்ட வெற்றியின் அடையாளம் மறுநாள் வெளியாகிறது என்கிற புளகாங்கிதமும் பெருமையும் உடலில் தனி வேகத்தையும் உணர்வையும் உந்தி விட்டன. சாந்தி திரையரங்கின் உச்சியில் இருந்த இடிதாங்கி அருகில் ஒரு கம்பம் வைத்து அங்கிருந்து அதனுடைய மறுகோடி வரை அகலமாக கயிறமைத்து, அங்கிருந்து சிண்டிகேட் பாங்க் முன்புறம் சுவற்றில் கிட்டத் தட்ட 15 அடி உயரத்தில் அதே அகலத்திற்கு இந்த முனையில் ஒரு கயிறு கட்டி இரு முனையும் கிட்டத் தட்ட 15 முதல் 20 வரிசைகள் வரும் அளவில் கயிறுகளை குறுக்கே கட்டி தோரணங்களைக் கட்டித் தொங்க வைத்து அழகிற்கு அழகு சோ்த்தனர். கொடிகளில் பெரும்பாலும் மூவர்ணக் கொடிகள் அதில் பெருந்தலைவர் காமராசரின் உருவம் அல்லது ராட்டை சின்னம் இருக்கும். ஒவ்வொரு வரிசையிலும் கிட்டத் தட்ட 10 முதல் 15 ஸ்டார்கள் தொங்க வைக்கப் பட்டிருக்கும். ரம்மியமான காட்சி யல்லவா அது..
தொடரும்...