-
28th September 2012, 12:01 PM
#1391
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றிகள். இறைவனுக்கு தொண்டு செய்வது நாம் பெற்ற பாக்கியமல்லவா!
அக்டோபர் 1, 2012, நடிகர் திலகத்தின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் பதிப்புக்கு மிக்க நன்றி! சேலம் நகர சிவாஜி ரசிகர்கள் சார்பில் நண்பர் விஜயராம் கண்ணன் மற்றும் நண்பர்கள் வைத்துள்ள பதாகையில் உள்ள தலைவர் புகழ் பாடும் கவிதை அருமை!
-
28th September 2012 12:01 PM
# ADS
Circuit advertisement
-
28th September 2012, 05:51 PM
#1392
Senior Member
Veteran Hubber

Originally Posted by
rajeshkrv
pammalar sir
for u
Dear rajeshkrv Sir,
What a gift..! What a gift..you have given me..! I am speechless Sir, Thanks a trillion..!
Alexander the great, Chandragupta, Chanakya : தென்னகத் திரைவானின் மூவேந்தர்கள்..! அடியேன் இதுவரை பார்த்திராத இந்தச் "சாணக்கிய சந்திரகுப்தா(1977)" காணொளியை இன்ப அதிர்ச்சியாக அளித்து 'அசத்தல் சிகர'மாகி விட்டீர்கள்..! தங்களுக்கு மீண்டும் எனது கோடானுகோடி நன்றிகள்..!
Warm Wishes & Regards,
Pammalar.
-
28th September 2012, 06:28 PM
#1393
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களுடைய உளமார்ந்த தொடர் பாராட்டுதல்களுக்கு எனது உளங்கனிந்த அன்பான நன்றிகள் சார்..!
தாங்கள் எனக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கிய நிழற்படங்கள் ஒவ்வொன்றும் அசத்தலோ அசத்தல்..! அதில் என் உள்ளத்தை அதிகம் கொள்ளைகொண்டது அந்த "நீதி(1972)" காவிய நிழற்படம். அதற்கான [நகைச்சுவை இழையோடும்] காரணத்தை தங்களிடம் கைபேசிமுலம் தெரிவித்து நாம் இருவரும் சிரித்து மகிழ்ந்தது ஒரு அலாதியான அனுபவம்..! தாங்கள் பிறந்தநாள் பரிசாக அளித்த நிழற்படங்களுக்கு எனது பிரத்தியேக நன்றிகள்..!
செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் 'இந்த வார தமிழ்த் திரைப்படங்கள்' பற்றிய தொகுப்பு வழக்கம்போல் வெகு அருமை..! தொடர்ந்து இதனை மிகுந்த சிரத்தையோடு தொகுத்தளித்துவரும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..!
கோவை 'சாரதா'வை அலங்கரித்துள்ள சிவாஜி பெருமானின் புகழ்பாடும் பதாகைகள், பார்க்கப் பார்க்கப் பரவசம்..!
முத்தாய்ப்பாக, தாங்கள் பதித்துள்ள 'கர்ணன் 2012 - ஒரு பின்னோட்டம்' பதிவு ஒரு மிகச்சிறந்த டைம்லி ஆக்ஷன். இதில் தாங்கள் கூறியுள்ள ஒவ்வொரு கருத்தையும் அடியேனும் வழிமொழிகிறேன்..! "கர்ணன்" போல் " திருவிளையாட"லும் பிரம்மாண்ட வெற்றிபெற வேண்டும். அதற்கு அந்த 'பரமசிவன்'தான் நல்ல பதில் சொல்ல வேண்டும் என நிறைவு செய்திருப்பது brilliant பஞ்ச்..! கூடிய விரைவில் நல்லவை நிகழட்டும்..!
அன்புடன்,
பம்மலார்.
-
28th September 2012, 07:14 PM
#1394
Junior Member
Platinum Hubber
PREMNAGAR - TELUGU- NAGESHWARA RAO
VASANTHA MAALIGAI - NADIGAR THILAGAM
RAMANAIDU - SRIKANTH
TOMORROW [29.9.1972 - 29.9.2012] VASANTHA MAALIGAI ENTERING 41ST ANNIVERSARY.
Last edited by esvee; 28th September 2012 at 07:18 PM.
-
28th September 2012, 08:34 PM
#1395
Senior Member
Veteran Hubber

Originally Posted by
BALAA
Dear Pammalar Sir,
What a collection of NT'S Black&white Photos really Superb!
Dear BALAA Sir,
Thanks for your whole-hearted compliments..!
Warm Wishes & Regards,
Pammalar.
-
28th September 2012, 08:45 PM
#1396
Senior Member
Seasoned Hubber
டியர் வினோத் சார்,
வசந்தமாளிகை சிறப்பு நிழற்படம் அருமை அரிது. மிக்க நன்றி. துல்லியமாக உள்ளது. பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th September 2012, 08:53 PM
#1397
Senior Member
Veteran Hubber
டியர் esvee சார்,
தங்களுடைய இதயங்கனிந்த பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்..!
மக்கள் திலகம் தலைமை தாங்கிய, ஒரே நடிகர் திலகத்தின் திரைப்பட வெற்றிவிழா என்ற பெரும்பெருமைகொண்ட நடிகர் திலகத்தின் "ஜல்லிக்கட்டு(1987)" 100வது நாள் விழா நிழற்படங்கள் வெகுஜோர்..!
"அருணோதயம்" close-ups, கொள்ளையடித்துவிட்டன என் உள்ளத்தை..!
கலையுலக மாணிக்கத்தின் crystal clear pictures, simply superb..! இதற்காக தங்களுக்கு நமது அன்புச்சகோதரர் கார்த்திகேயர் அளித்த பாராட்டுப்[பதில்]பதிவு அந்த நிழற்படங்களைப் போலவே crystal clear..!
காலத்தை வென்ற காதல் இதிகாசத்தின் 41வது ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு, சற்றுமுன் தாங்கள் அளித்துள்ள
"வசந்த மாளிகை" நிழற்படம் ஒரு சிகர ஸ்டில்..!
அன்புடன்,
பம்மலார்.
-
28th September 2012, 08:53 PM
#1398
Senior Member
Seasoned Hubber
வசந்த மாளிகை - நினைவலைகள்
40 ஆண்டுகள் ஓடி விட்டன. காலம் மட்டும் தான் ஓடுகிறது. நாம் ஓட விரும்ப வில்லை. ஓடவும் இல்லை. இன்னும் நாம் 1972ல் தான் இருக்கிறோம். ஒரு வாரத்திற்கு முன்பே சிறப்புக் காலைக் காட்சிக்கு பதிவு செய்தாகி விட்டது. முதல் நாள் மாலை ... விழாக் கோலம் என்றால் அதுவல்லவோ விழாக் கோலம்... படம் வெளியாகி விட்டதோ என பார்ப்போர் மலைக்கும் அளவிற்கு முதல் நாள் மாலையில் சாந்தியில் கொண்டாட்டங்கள் துவங்கி விட்டன. மன்றங்கள் போட்டி போட்டுக் கொண்டு துணி பேனர்கள் என்ன, ஸ்டார்கள் என்ன, தோரணங்கள் என்ன என்று அணிவகுத்து வந்தவாறே இருந்தனர். இதையெல்லாம் எதிர்பார்த்தோ என்னவோ, பட்டிக்காடா பட்டணமா படத்தை கடைசியாக சாந்தியில் பார்த்து விட வேண்டும் என உந்துதல். மேட்னி படம் பார்த்து விட்டு தேநீர் அருந்தி விட்டு மீண்டும் சாந்தியில் டேரா. நாம் ஆவலுடன் எதிர்பார்த்த நண்பர்கள் வந்து விட்டனர் ... ஆம் ஷ்யாம் பிரசாத் ஓட்டல் நண்பர்கள் ... அவர்கள் தனியாக ஒரு மன்றமே நடத்தி வந்தனர் அதுவும் வசந்த மாளிகை படத்தின் போது அந்த மன்றத்திற்கு 10வது ஆண்டு விழாவோ அல்லது குறிப்பிடத் தக்க நிகழ்வோ நினைவில்லை. அவர்கள் மிக சிறப்பாக அமைத்து வந்தனர். சாந்தியில் நுழையும் போது தென்படும் முதல் துணி பேனர் எப்போதுமே அவர்களுடையதாகத் தான் இருக்கும். அதனைத் தொடர்ந்து சைதை சிவந்த மண் சிவாஜி ரசிகர் மன்றம் ராம்தாஸ் அவர்கள் தலைமையில் அணி வகுத்து வரும். அன்று இரவு வைகுண்ட ஏகாதசி தான் ....
அடுத்த பதிவில் தொடரும்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th September 2012, 09:03 PM
#1399
Senior Member
Seasoned Hubber
வசந்த மாளிகை நினைவலைகள் - தொடர்ச்சி

பட்டிக்காடா பட்டணமா மேட்னி முடிந்து வெளியே வரும்போதே நண்பர்கள் சொல்லி விட்டனர் படமும் சூப்பர், படத்தின் ரிப்போர்ட்டும் சூப்பர் என்று. பத்திரிகைக் காட்சியின் மூலம் வெளிவந்த தகவல்கள் முரசடிக்கத் தொடங்கி விட்டன. என்றாலும் உலகப் பெரும் நடிகனின் ரசிகர்களிடம் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கக் கூடிய அளவிற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். இருந்தாலும் மறுநாள் ஹிந்து பத்திரிகையில் வெளிவந்த விமர்சனம் நம் வேகத்திற்கு சற்றே முட்டுக் கட்டை போட்டது போல் அமைந்திருந்தது. குறிப்பாக பாடல்கள் ஏமாற்றம் அளித்ததாகவும் கலை மகள் கைப்பொருளே பாடல் மட்டும் கேட்கும் படி உள்ளதென்றும் அந்த விமர்சனத்தின் தொனி அமைந்திருந்தது. ஆனால் இவையெல்லாம் யார் சார் கவலைப் பட்டார்கள். 28.09.1972 மாலை இருந்த ஆரவாரமும் பரபரப்பும் ஆஹா... என்ன சுகமான அனுபவம் ... எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்த காட்சி கண் கொள்ளாக் காட்சி [தற்போது அது மீண்டும் தொடர்ந்து விட்டது மிகுந்த மகிழ்ச்சி யளிக்கிறது. அப்போதைய நண்பர்கள் பலரைப் பார்க்க முடியா விட்டாலும் அடுத்த தலைமுறை, அதற்கடுத்த தலைமுறையும் இன்னும் சாந்தியில் தொடர்ந்து கூடி தலைவரைப் பற்றி அன்றாடமோ அல்லது அடிக்கடியோ கூடிப் பேசி வருவது தெம்பூட்டும் விஷயம் ].
தொடரும்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th September 2012, 09:04 PM
#1400
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
pammalar
Dear rajeshkrv Sir,
What a gift..! What a gift..you have given me..! I am speechless Sir, Thanks a trillion..!
Alexander the great, Chandragupta, Chanakya : தென்னகத் திரைவானின் மூவேந்தர்கள்..! அடியேன் இதுவரை பார்த்திராத இந்தச் "சாணக்கிய சந்திரகுப்தா(1977)" காணொளியை இன்ப அதிர்ச்சியாக அளித்து 'அசத்தல் சிகர'மாகி விட்டீர்கள்..! தங்களுக்கு மீண்டும் எனது கோடானுகோடி நன்றிகள்..!
Warm Wishes & Regards,
Pammalar.
ungalukku illamala .. you are welcome sir
Bookmarks