ஹரி காம்போதி.
"முல்லை நிலப் பெரும்பண்ணான, முல்லையாழ் - செம்பாலை, தற்காலம் அரிகாம்போதி என்று பெயர் பெற்றுள்ளது. தலைமைப் பாலையாக விளங்கும் சிறப்பைக் கொண்டுள்ளதால் இதற்கு "பாலை யாழ்” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.".
தொல்காப்பியம் ,மதுரை காஞ்சி,சிலப்பதிகாரம் என பழங்கால தமிழ் நூல்களில் ,நமது தமிழர்களின் நில பகுப்பு முறையில் பகுக்க பட்ட சங்கீதம்,பண் மற்றும் யாழ் என்று வழங்க படுகிறது. சுலபமாக சொன்னால் ,முல்லை பண் 5 ஸ்வரங்கள் கொண்ட மோகன ராகத்தை ஒத்தது.செம்பாலை பண் 7 ஸ்வரங்களுடன் ஹரி காம்போதி ஒத்தது.
ஹரி காம்போதி ஒரு மேளகர்த்தா சம்பூர்ண ராகமே.இது ஹிந்துஸ்தானி,மேற்கத்திய,மற்றும் நம் பாரம்பரிய இசையில் அங்கம் வகிப்பது.
நிறைய ஜன்ய உறவினர்கள்.மோகனம்,பஹுதாரி,கமாஸ்,காம்போதி,சஹான ா ,யதுகுல காம்போதி என்று.ஸ்வரங்களை சற்றே கிரக பேதம் செய்தால், கல்யாணி,சங்கராபரணம்,நட பைரவி,கரகரப்ரியா என்று மற்ற ராகங்களாய் விரியும்.
கிசு கிசு குரலில் உங்கள் அத்தை மகள் உங்களை விளித்து (நிறைய பேரின் நடுவே),ரகசிய காதல் சமிக்ஞை செய்தால் உங்கள் உள்ளம் கிடந்து ஆனந்தத்தால் துடித்து தள்ளாடுமே ,அந்த உணர்வு தரும் ராகம். நம் ஆதி சிந்தனையின் தேக்க விரிவாக,நம் மனதிற்கு உகந்தே நிற்கும் ராகம்.
ஐம்பதுகளில், மதராசி பிலிம்களை உதாசீனம் செய்த வடக்கிந்தியர்களை,நம்மை நோக்கி திரும்பி பார்க்க வைத்தவர்கள்,வாசனும்(சந்திரலேகா),சிவாஜியும் (நடிப்பில், வீரபாண்டிய கட்டபொம்மன் உலக விருது)ஆவர்.சிறிதே பத்மினியும்,வைஜயந்தியும் புண்ணியம் கட்டினர்.ஆனாலும் மெல்லிசைக்கு பெயராத நமது இசை அவர்களுக்கு பொருட்டாகவே இல்லை. ஒரே ஒரு படம் 1961 இல்,குறிப்பாக ஒரே ஒரு பாடல் ,அந்த பாடகி,இரட்டை இசை மேதைகளை நோக்கி நவுஷாத்,ரோஷன் முதல் லதா,ரபி வரை திரும்பி பார்த்து அதிசயிக்க வைத்தது.ஒரு தமிழ் இலக்கிய பாடலின் (கல்லைத்தான்,மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா)உந்துதலில் ,கண்ணதாசன் எழுதிய,வடக்கை நம் பக்கம் ஈர்த்து ,விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்களை இந்தியாவின் Best composers என்று எல்லோரையும் வியக்க வைத்து,இப்படி ஒரு பாடகியா என்று லதாவை அதிசயிக்க வைத்த உன்னதம் "அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்".
ஒரு உலக நடிகனின் உலக பட கனவு ,அவர் தயாரிப்பிலேயே நனவானது. தமிழில் அவர் தயாரித்த முதல் படம்.(வடக்கில் கொடி ஐம்பதுகளிலேயே பறக்க விட்டாயிற்று. amardeep மூலம்).பிரம்மாண்டம் நடிப்பில்,இயக்கத்தில்,படப் பிடிப்பில்,கதையமைப்பில்,தயாரிப்பில்.பிரமாண்டம ் என்பதால் ,முதல் காட்சியே பிரம்மாண்ட கப்பலில்,பிரம்மாண்ட மாலை பார்ட்டி.தான் கண்டு மையல் கொண்ட மங்கையை ,அந்த கனவான் பாட அழைக்கும் அந்த கண்ணியமிக்க ரசிக்கத்தக்க மீறல்,மங்கையின் கூச்ச மிகு ஆவல் எல்லாம் அப்படியே மிளிர்ந்த இரட்டையர்களின் சாதனை படங்களில் ஒன்றான
"உன்னை ஒன்று கேட்பேன்".(நடிகர்திலகம் பியானோ,trumpet வாசிக்கும் நேர்த்தி!!!)
அந்த பாடலாசிரியர் -இசையமைப்பாளர் பிரிவு ,இரட்டையர் பிரிவு அளவு அல்லோல கல்லோல பட்டது.நல்ல இணை.உன்னதம் தொட்ட பாடல்கள்.பாடலாசிரியர் மிக பாதிக்க பட்டு டப்பிங் படங்கள் எழுதினார் .அப்போது டி.வீயில் அவரெழுதி உடனே மெல்லிசை மன்னர் tune போட்ட ஒரு நிகழ்ச்சியில் இரு பாடல்கள் என்னை பளிச்சென்று கவர்ந்தது.(இசை பாடாவதி ரகம்தான்)ஒன்று சின்ன சின்ன ஆசைகள்.(இசையமைப்பாளர் அவர் குரலில் ஆசைஹள் என்று நீட்டுவார்).இன்னொற்று அழகு அழகு அழகு. 1992. தமிழ் நூற்றாண்டில்
நிம்மதியாக பகல் தூக்கம் போட்டு கொண்டிருந்த என்னை (வடை,பாயச சாப்பாடு),உலுக்கி எழுப்பிய என் சகோதரி(தற்போது சிங்கப்பூர் எழுத்தாளர்)இந்த பாட்டை கேளுடா ,யாரோ ரகுமான்னு புது பையன் போட்டதாம் என்று டி.வியின் புது பாடல் நிகழ்ச்சியில் கேட்க செய்ய உறைந்து போனேன். அந்த அழகான கவிதை,அந்த அபார இசையால் அதற்குரிய உன்னத இடத்தை அடைந்திருந்தது.அடுத்த கவிதை. அந்த பையனின் அடுத்த வருட படம் புதிய முகம் படத்தில் "அழகு அழகு அழகு கண்ணுக்கு மை அழகு" என்று அதற்குரிய அழகை பெற்றது.வைரமுத்து-ரகுமான் என்ற புது கவிதை கூட்டணி ,பழைய மரபுகளை உடைத்து ,இசைக்கு புது தங்க நாற்கர சாலை அமைத்தது.
ஹரி காம்போதியின் மற்ற பாடல்கள்.
ஒரே பாடல் உன்னை அழைக்கும்- எங்கிருந்தோ வந்தாள் .
அவள் ஒரு நவரச நாடகம்-உலகம் சுற்றும் வாலிபன்.
மாமன் ஒரு நாள் மல்லிகைபூ- ரோசாப் பூ ரவிக்கைகாரி
பழமுதிர் சோலை -வருடம்-16.
ஜன்ய ராகம் யதுகுல காம்போதி பாடல்கள்.
மலர்களை போல் தங்கை-பாச மலர்.
காசிக்கு போகும் சந்நியாசி-சந்திரோதயம்.
ஜன்ய ராகம் காம்போதி பாடல்கள்.
ஞான பழத்தை பிழிந்து- திருவிளையாடல்.
கல்வியா செல்வமா வீரமா-சரஸ்வதி சபதம்.
அறுபடை வீடு கொண்ட -கந்தன் கருணை.(ராக மாலிகை)
விழியே கதை எழுது- உரிமை குரல்.