Originally Posted by
KALAIVENTHAN
இங்கே காவல்காரனின் வசூல் சாதனை விவரங்களை பார்த்தவுடன் , அவர்கள் நடிகரின் 200 வது பட விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர். இது குறித்து இங்கே நாம் ஏற்கனவே பலமுறை பதில் கூறியாகிவிட்டது. அவர்கள் முகாமைச் சேர்ந்த, அவர்களது நடிகரை வைத்து படம் எடுத்த முக்தா சீனிவாசன் அவர்களே புரட்சித் தலைவரின் இதயக்கனி படம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கொடுத்ததாக பகிரங்கமாக பொது மேடையிலேயே கூறியுள்ளார். ஆகவே அவர்களது படம் ஒன்றும் புதிய சாதனையை ஏற்படுத்தவில்லை.
சரி அதுதான் போகட்டும். இதுவரை அந்தப் படம் ரூ.1 கோடி வசூலித்ததாக கூறி வந்தவர்கள் (விளம்பரமும் அப்படித்தான் கூறுகிறது. ஏற்றுக் கொள்வோம்) திடீரென்று ரூ.2 கோடி வசூலித்ததாக அள்ளி விடுகிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் மிகப் பெரிய வெற்றி என்று நாம் சொன்னால் உடனே, சென்னையில் மட்டும் ஓடிய மர்மம் என்ன? ஏன் ஒரு தியேட்டரில் மட்டும் ஓடியது? (உண்மையில் இரண்டு தியேட்டர்கள், கர்ணன் ஒரு தியேட்டர்தான்) என்று கேட்பவர்கள், அவர்களது இந்த ரூ.2 கோடி வசூல் மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டும். உண்மையிலேயே அவர்களது படம் ரூ.2 கோடி வசூலித்திருந்தால் அந்த விளம்பரத்தையும் பதிவிடலாமே?
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்