Originally Posted by
vasudevan31355
அன்பு பம்மலார் சார்,
புகழ் பெற்ற தலைவர்களின் பிறந்த நாட்கள் ஆனாலும் சரி, நினைவு தினங்களானாலும் சரி...அவர்களை மறக்காமல் நம் இதய தெய்வத்தின் வாயிலாக நினைவு கூர்வது தாங்கள் 'தேசிய செம்மல்' நம் அன்பு நடிகர் திலகத்தின் தேசிய வழியில் நடந்து வருபவர் என்பதை பறைசாற்றுகிறது. அதற்காக என் மனமுவந்த பெருமைமிகு பாராட்டுக்கள்.
மூதறிஞர் அவர்களுடன் கட்டுக்கடங்காத கம்பீரத்துடன், பொன்னாடை சகிதமாக காட்சியளிக்கும் நம் 'கட்டபொம்மர்' ஸ்டில்லை பதிவிட்டமைக்கு எண்ணிலடங்கா நன்றிகள்.
அமரகவி பாரதியாரின் 130வது ஜெயந்தியை முன்னிட்டு தங்களால் பதிவு செய்யப்பட்டுள்ள பாரதி கணேசர் கண்கள் வழியே நுழைந்து, நெஞ்சை நிறைத்து, நிலைத்து நின்றுவிட்டார்.
உயர்ந்த மனிதர் நடிகர் திலகத்தைப் பற்றி திரு.ஏவிஎம் சரவணன் கூறியுள்ள கருத்துக்கள் அவரை 'மறக்க முடியாத சரவணன்' என்று கூற வைத்து விட்டன. அதுமட்டுமல்லாமல் இந்த அற்புத பதிவை அளித்த தாங்கள் எல்லோராலும் 'மறக்க முடியாத ஆவணச் செம்மல்' என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
'மனிதனும் மிருகமும்' என்ற தலைவரின் அபூர்வ ,பெரும்பாலும் யாரும் பார்த்திராத திரைப்படத்தின் அதுவும் 53-இல் வெளியான படத்தின் அற்புத, அரிய விளம்பரக் கட்டிங்குகளை மெருகு குலையாத புத்தம் புது காப்பி போல இடுகை செய்து எங்கள் வயிற்றில் தேனை வார்த்து விட்டீர்கள். இதன் ஒரு விளம்பரத்தைக் கூட நான் பார்த்தது கிடையாது நேற்றுவரை. அள்ளித்தரும் கலைப்பொக்கிஷ வள்ளலாய் தாங்கள் இருக்கையில் நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி இறுமாப்புடனே கூட தங்கள் ஆவணங்களுடன் வலம் வரலாம். அப்படி தலை நிமிரச்செய்து எங்களை உலா வந்துகொண்டிருக்க செய்ததற்கு ஒப்புயர்வில்லா நன்றிகளை தங்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன். இதுவரை நான் பார்க்காத இப்படத்தை பார்த்த திருப்திக்கு உள்ளாக்கி விட்டது தங்கள் இந்த மிக உயர்ந்த அற்புதப் பதிவு. மறுபடியும் தங்களுக்குக் கோடானு கோடி நன்றிகள்.
தங்களின் அன்புப் பாராட்டுதல்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்