Originally Posted by
mr_karthik
டியர் கிருஷ்ணாஜி,
'உயர்ந்தவர்கள்' படத்தைப்பற்றி பதிவிட்டு என் எண்ணங்களை கடந்த காலத்தை நோக்கி திருப்பி விட்டீர்கள்.
உயர்ந்தவர்கள் நான் நடித்த படம்..... அதிர்ச்சி வேண்டாம்.
அந்தப்படத்தில் கமலின் குழந்தை ஒரு கடையின் முன்னாள் காணாமல் போகும் அல்லவா?. அந்தக்காட்சி சென்னை எட்வர்ட் எலியட்ஸ் ரோட்டிலுள்ள 'டாய் செண்டர்' என்ற கடையில் படமாக்கப்பட்டது. கடையின் வாசலில் தள்ளுவண்டியில் உட்கார வைக்கப்பட்டிருந்த குழந்தையைக் காணோம் என்று அந்தப்பெண் கடையின் உள்ளே வந்து கடையின் உரிமையாளர் அபுல்கலாம் என்பவரிடம் விசாரிக்கும்போது, கடையிலிருந்து ஒரு பையன் (கொஞ்சம் இளைஞன் என்றும் சொல்லலாம்) கடையில் பொம்மை வாங்கிக்கொண்டு வெளியே செல்வதுபோல ஒரு காட்சி வரும். அந்த இளைஞன் பக்கத்தில் நிற்கும் இன்னொரு பையன் நான்தான்.
கடையில் நின்றுகொண்டிருக்கும்போது யதார்த்தமாக வந்து படமெடுத்தார்கள் (உரிமையாளரிடம் முன்கூட்டியே சொல்லியிருப்பார்கள் போலும்). இயக்குனர் டி.என்.பாலு வரவில்லை. சிறிய காட்சியென்பதால் அவரது உதவியாளர்தான் வந்து எடுத்தார். இனி அந்த படம் பார்க்க வாய்ப்புக்கிடைத்தால் அந்தக்காட்சியில் உற்றுப்பாருங்கள். அதில் நான் ஒரு செகண்ட் ஹீரோ. அதாவது ஒரே ஒரு செகண்ட் மட்டுமே வருவேன்.