Thanks a lot Mr. Ragavendra sir for RPR Sunday's gala photos.
I hope Barrister Rajinikanth will visit soon at Shanthi and make us happy.
Cheers,
Sathish
Printable View
Thanks a lot Mr. Ragavendra sir for RPR Sunday's gala photos.
I hope Barrister Rajinikanth will visit soon at Shanthi and make us happy.
Cheers,
Sathish
Dear raghavendra sir and pammal sir,
thankyou very much for gala photos.
dear murali sir,
thanks for the short and sweet note on sunday alapparai.
Hope barrister will get arousing and unforgettable welcome.
பல வருடங்களுக்குப் பிறகு நடிகர் திலகத்தின் படங்களை மறுபடியும் திரை அரங்கத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம். அதுவும் சக ஹப் நண்பர்கள் திரு. முரளி, திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. கிருஷ்ணாஜி, திரு. ராதா அவர்களுடன் காணக் கிடைத்தது இன்னும் பெரிய கொடுப்பனை.
படம் 1973 இறுதியில் வெளிவந்த போது, நான் அன்று படித்துக் கொண்டிருந்த பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், 1974 ஏப்ரல் மாதத்தில், இந்தப் படத்தின் அற்புதப் பாடலான, "இன்குலாப் ஜிந்தாபாத்" பாடலைப் பாடியது நினைவுக்கு வருகிறது.
1974-க்குப் பிறகு, கடந்த ஞாயிறு அன்றுதான், ரங்கதுரையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்றாலும், படம் முதலில் வெளிவந்தபோது கிடைத்த வரவேற்பு - ஏன் அதை விட மேலான உணர்ச்சிமயமான வரவேற்பு - அன்று கிடைத்தது - இது, இன்றும், என்றும், நடிகர் திலகத்துக்கு மட்டுமே சாத்தியம்.
நடிகர் திலகம் ரங்கதுரை என்ற நாடக நடிகனின் கதாபாத்திரத்தை மிக அற்புதமாக, சித்தரித்திருந்தார். அவர் எந்தப் படம் நடித்தாலும், ஏதாவது ஒரு காட்சியிலாவது, அவரது பிரத்தியேக ரசிகர்களுக்கு நடித்து விடுவார் - கதாபாத்திரத்தை சிதைத்து விடாமல். இந்தப் படத்தில், அவரது ட்ரேட் மார்க் ஸ்டைல் - "மதன மாளிகை" பாடலில் மட்டுமே அவருக்கு அந்த வாய்ப்பு அமையும் - இத்தனைக்கும் - ஒரு கட்டத்தில் அவர் சாதாரணமாக நின்று கொண்டிருப்பார். அந்தக் காலத்திலேயே, கைத்தட்டல்களை அள்ளிய கட்டம் -அன்றும் அது குறையவில்லை.
ராஜபார்ட் ரங்கதுரை படத்தைப் பற்றி சுருக்கமாக அழகாகப் பதிவிட்ட திரு. முரளி அவர்களுக்கும், அங்கு நடந்த அளப்பரைகளை படத்திற்கு வராதவர்களுக்கு, அற்புதமாகக் காட்சிக்கு விருந்தாக்கிய, திரு. ராகவேந்தர் மற்றும் திரு. பம்மலார் அவர்களுக்கும் கோடி நன்றிகள். திரு. ஒய்.ஜி.எம். அவர்கள் திருமதி. மாலதி ரங்கராஜன் (ஹிந்து நாளிதழ்) அவர்களுக்கு எழுதியிருந்த கடிதத்தையும் சூட்டோடு சூடாகப் பதிவிறக்கம் செய்த திரு. ராகவேந்தர் அவர்களுக்கு மற்றுமோர் நன்றி.
எத்தனையோ படங்களுக்கு அவருக்கு பாரத் அவார்ட் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும், கண்டிப்பாக, இந்தப் படத்திற்கும் அது அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் - ஆனால், இல்லை - என்னும் போது, திரு. ஒய்.ஜி.எம். அவர்கள் குறிப்பிட்டது போல், இந்தியனாகப் பிறந்ததற்கு உண்மையிலேயே வெட்கமாயிருக்கிறது.
அன்புடன்,
பார்த்தசாரதி
05.06.11 அன்று மாலை சாந்தியில் நம் ஹப் நண்பர்கள் திரு. முரளி, திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. கிருஷ்ணாஜி, திரு.பார்த்தசாரதி உடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, அரங்கிற்கு உள்ளேயும் வெளியேயும் ரசிகர்களின் ஆரவாரம், ஆர்ப்பரிப்பு சொல்லில் அடங்காது, குறிப்பாக மதன மாளிகையில், அம்மம்மா, இன்குலாப் மற்றும் ஜிஞ்சினுக்கான் பாடல் காட்சிகளின் போது ரசிகர்களை நிர்வாகிகள் மிகவும் கஷ்ட்டப்பட்டு கட்டுபடுத்தினார்கள், பலமுறை இந்த படத்தை பார்த்த போதும் நம் ரசிகர்களின் அளப்பரையோடு பார்க்கும் போது நம் மகிழ்ச்சிக்கு அளவேது?
ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்வை படம் பிடித்து இங்கு நம் பார்வைக்கு வைத்த திரு ராகவேந்தர் மற்றும் திரு பம்மலார் அவர்களுக்கு நம் நன்றிகள்.
பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்த சதீஷ், கார்த்திக, ரங்கன், ராதாகிருஷ்ணன், பம்மலார், பார்த்த சாரதி மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.
மேலும் இது போன்ற வாய்ப்புகள் அமையும் என்று நம்புவோம்.
அன்புடன்
பக்தித் திலகத்தின் தெய்வீக ராகங்கள் - 01
எந்த ஒரு சமய நிகழ்ச்சி அல்லது பண்டிகை என்றாலும் உடனே மக்கள் நினைவுக்கு வருபவர் நடிகர் திலகம். எப்படி விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்டு மக்கள் வணங்கி தங்கள் நிகழ்ச்சிகளைத் தொடங்குகிறார்களோ, அதே போன்று முழுமுதற் பாடலாக அல்லது படமாக நடிகர் திலகத்தின் படங்கள் அல்லது பாடல்களே இடம் பெறுகின்றன. குறிப்பாக திருவிளையாடல். அவ்வாறு பக்தி மணம் கமழும் பாடல்களை நடிகர் திலகத்தின் படங்களிலிருந்து இங்கே நாம் பகிர்ந்து கொள்வோம்.
தொடக்கமாக, மிகவும் அபூர்வமான ஒரு பக்திப் பாடல். தற்போதைய தலைமுறை ரசிகர்கள் பலர் இப்பாடலைக் கேட்டிருக்க அல்லது பார்த்திருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம், அதனால் இப்பாடலை அறிமுகப் படுத்துவது பெருமையாகவும் உள்ளது.
கிட்டத்தட்ட ராமாயணத்தைத் தழுவி எடுக்கப் பட்ட படம் நானே ராஜா. கல்பனா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு இசையமைத்திருந்தவர் டி.ஆர்.ராம்நாத். அனைத்துப் பாடல்களும் நெஞ்சை அள்ளும். இப்படத்தில் நடிகர் திலகத்திற்கு டி.எம்.எஸ். குரல் கொடுத்துப் பாடியிருக்கும் ஒரு பக்திப் பாடல் இங்கே இடம் பெறுகிறது. வேறொரு தலைப்பில் இதே படத்தில் இடம் பெற்ற மிகப் பிரபலமான பாடலான மந்த மாருதம் தவழும் பாடல் இடம் பெற உள்ளது.
இங்கே இடம் பெறும் பக்திப் பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்த ஆதியந்தம் இல்லா அருள்ஜோதியே என்ற பாடலாகும். தனிப்பட்ட முறையில் இப்பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடலாகும்.
இப்படத்தில் நடிகர் திலகத்தின் தோற்றமும் ஒய்யாரமும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்.
இதோ அந்த பக்திப் பாடல்
http://www.youtube.com/watch?v=la5-yM9mPQE&
அன்புடன்
பம்மலார் & ராகவேந்திரன்
கிறங்க வைக்கும் பாடல் மயங்க வைக்கும் ராகம் - 01
காதலியிடம் சிருங்கார ரசம் கொட்டும் பாடலாகட்டும், வார்த்தைகளில் போதை கலந்து கிறங்க வைக்கும் பாடலாகட்டும், எந்த விதமான சூழ்நிலைப் பாடலாயினும் தன்னுடைய நடிப்பால் அதை சிறக்கச் செய்யும் நடிகர் திலகத்தின் பாடல்களில் இந்த வகைப் பாடல்களை இங்கே நாம் அலசலாம். முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல் நானே ராஜா படத்தில் நம்மை அள்ளிக் கொண்டு போகும் பாடலான மந்த மாருதம் பாடல் இங்கே இடம் பெறுகிறது. இந்தப் படப்பாடல்கள் கடைசியில் சிறிது முன்பாகவே முடிவது நமக்கு வருத்தமே என்றாலும் கிடைத்த வரையில் மன நிறைவு கொள்வோம் என்கிற எண்ணத்தில் இங்கே பகிர்ந்து கொள்ளப் படுகிறது.
பாடல் - மந்த மாருதம் தவழும்
குரல் - டி.எம்.சௌந்தரராஜன்
இசை - டி.ஆர்.ராம்நாத்
படம் - நானே ராஜா
http://www.youtube.com/watch?v=MfdZ03zVK1A&
அன்புடன்
பம்மலார் & ராகவேந்திரன்
ராகவேந்தர் சார் மற்றும் பம்மலார் சார்,
நடிகர்திலகத்தின் 'ராஜபார்ட் ரங்கதுரை' காவியத்தின் ஞாயிறு விழாக்காட்சிகள் அனைத்தும் அருமை. மிக அழகாக படமெடுத்து, எங்கள் அனைவரின் கண்களுக்கும் விருந்தாக்கி விட்டீர்கள். நிச்சயம் அவற்றைப்பார்க்கும்போது பழைய காலங்கள் நினைவுக்கு வந்து, இப்போது நாம் அங்கில்லையே என்ற ஏக்கம் ஏற்படுகின்றது.
அரங்கத்துக்கு வெளியே நிகழ்ந்த கோலாகலங்களையும், அரங்கத்தின் உள்ளே நடந்த அலப்பரைகளையும் காட்சி வடிவில் தந்து விட்டீர்கள். சாந்தி வளாகத்தினுள் ஒரு படம் கூட எடுக்கப்படவில்லை என்பது மட்டுமே குறை. அதை பாடல் காட்சிகளின் புகைப்படங்கள் ஈடு செய்து விட்டன.
சாலைகளில் செல்வோரையும், பேருந்துகளில் செல்வோரையும் கவனத்தைக் கவர சரவெடிகள் அவசியம்தான். ஆனால் 176 தேங்காய்கள் உடைப்பு என்பதுதான் சற்று நெருடுகிறது. அந்தப்பணத்தை மன்றத்தினர் இன்னும் சற்று பயனுள்ளதாக செலவழித்திருக்கலாம். உதாரணமாக, கவுண்ட்டரில் இருந்து டிக்கட் வாங்கிக்கொண்டு வெளியே வருவோருக்கு அவ்விடத்தில் மன்றத்தினர் நின்று இனிப்புகள் வழங்கலாம். நாங்கள் மன்ற செயல்பாட்டில் இருந்தபோது அப்படி செய்வது வழக்கம். பாதுகாப்புக்கருதி தீபாராதனையை ரசிகர்கள் கைவிட்டது மகிழ்ச்சியான விஷயம்.
முரளிசார், பார்த்தசாரதி சார் மற்றும் ராதா சார்,
ஞாயிறு மாலை அரங்க நிகழ்வுகள் பற்றிய உங்களின் சுருக்கமான வர்ணனைகள் மனதைக்கவர்ந்தன. நன்றி.
ஒய்.ஜி.மகேந்திரனின் கடிதத்தைப் பதிவேற்றிய சந்திரசேகர் சார் அவர்களுக்கும் நன்றி.
எல்லாம் சரி, நமது உறுப்பினர்கள் (Hubbers) அனைவரும் சேர்ந்து எடுத்து இங்கு பதிப்பதாக வாக்களித்த குரூப் போட்டோ என்னவாயிற்று..??. அதிலும் இம்முறை கிட்டத்தட்ட எல்லோரும் ஒன்றினைந்து படத்தைப்பார்த்திருக்கிறீர்கள்.
அன்புள்ள திரு. சந்திரசேகர் அவர்களுக்கு,
திரு. ஒய்.ஜி.எம். அவர்களின் கடிதத்தை சூட்டோடு சூடாகப் பதிவிட்டீர்கள். அவசரத்தில், உங்கள் பெயரைச் சொல்வதற்கு பதில், திரு. ராகவேந்தர் பெயரைக் குறிப்பிட்டு விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.
திரு ஒய்.ஜி.எம். அவர்களுக்கும் ஒவ்வொரு நடிகர் திலகத்தின் ரசிகரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்.
நன்றியுடன்,
பார்த்தசாரதி
நான் இந்த ஹப்-க்கு வருவதற்கு முன்னால் சென்னையில் 5 வருடங்கள் இருந்த போது எனக்கு இது போன்ற எந்த தொடர்புகளும் கிடைக்காமல் போனதே என வருத்தமாக இருக்கிறது ..ஏனென்றால் அப்போது இண்டு இடுக்குகளில் எங்கு நடிகர் திலகம் படங்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் எதையும் பகிர்ந்து கொள்ள யாருமின்றி தனியாக சென்று உட்கார்ந்து ரசித்திருக்கிறேன் ..சாந்தி தியேட்டருக்கு பல முறை சென்று சுவரில் எழுதப்பட்டிருக்கும் நடிகர் திலகத்தின் பட வரிசையை வெறித்து வெறித்து பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன் :lol: எந்த அரங்கிலும் நடிகர் திலகம் சம்பந்தமாக எந்த நிகழ்வு நடந்தாலும் கூட வர நட்புகள் யாருமின்றி சென்று வந்து கொண்டிருந்தேன் அப்போது மன்றம் அறிமுகமாகி இந்த நட்புகள் கிடைத்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்குமே என இப்போது மனம் ஏங்குகிறது