-
7th June 2011, 02:47 PM
#11
Senior Member
Senior Hubber
பல வருடங்களுக்குப் பிறகு நடிகர் திலகத்தின் படங்களை மறுபடியும் திரை அரங்கத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம். அதுவும் சக ஹப் நண்பர்கள் திரு. முரளி, திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. கிருஷ்ணாஜி, திரு. ராதா அவர்களுடன் காணக் கிடைத்தது இன்னும் பெரிய கொடுப்பனை.
படம் 1973 இறுதியில் வெளிவந்த போது, நான் அன்று படித்துக் கொண்டிருந்த பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், 1974 ஏப்ரல் மாதத்தில், இந்தப் படத்தின் அற்புதப் பாடலான, "இன்குலாப் ஜிந்தாபாத்" பாடலைப் பாடியது நினைவுக்கு வருகிறது.
1974-க்குப் பிறகு, கடந்த ஞாயிறு அன்றுதான், ரங்கதுரையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்றாலும், படம் முதலில் வெளிவந்தபோது கிடைத்த வரவேற்பு - ஏன் அதை விட மேலான உணர்ச்சிமயமான வரவேற்பு - அன்று கிடைத்தது - இது, இன்றும், என்றும், நடிகர் திலகத்துக்கு மட்டுமே சாத்தியம்.
நடிகர் திலகம் ரங்கதுரை என்ற நாடக நடிகனின் கதாபாத்திரத்தை மிக அற்புதமாக, சித்தரித்திருந்தார். அவர் எந்தப் படம் நடித்தாலும், ஏதாவது ஒரு காட்சியிலாவது, அவரது பிரத்தியேக ரசிகர்களுக்கு நடித்து விடுவார் - கதாபாத்திரத்தை சிதைத்து விடாமல். இந்தப் படத்தில், அவரது ட்ரேட் மார்க் ஸ்டைல் - "மதன மாளிகை" பாடலில் மட்டுமே அவருக்கு அந்த வாய்ப்பு அமையும் - இத்தனைக்கும் - ஒரு கட்டத்தில் அவர் சாதாரணமாக நின்று கொண்டிருப்பார். அந்தக் காலத்திலேயே, கைத்தட்டல்களை அள்ளிய கட்டம் -அன்றும் அது குறையவில்லை.
ராஜபார்ட் ரங்கதுரை படத்தைப் பற்றி சுருக்கமாக அழகாகப் பதிவிட்ட திரு. முரளி அவர்களுக்கும், அங்கு நடந்த அளப்பரைகளை படத்திற்கு வராதவர்களுக்கு, அற்புதமாகக் காட்சிக்கு விருந்தாக்கிய, திரு. ராகவேந்தர் மற்றும் திரு. பம்மலார் அவர்களுக்கும் கோடி நன்றிகள். திரு. ஒய்.ஜி.எம். அவர்கள் திருமதி. மாலதி ரங்கராஜன் (ஹிந்து நாளிதழ்) அவர்களுக்கு எழுதியிருந்த கடிதத்தையும் சூட்டோடு சூடாகப் பதிவிறக்கம் செய்த திரு. ராகவேந்தர் அவர்களுக்கு மற்றுமோர் நன்றி.
எத்தனையோ படங்களுக்கு அவருக்கு பாரத் அவார்ட் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும், கண்டிப்பாக, இந்தப் படத்திற்கும் அது அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் - ஆனால், இல்லை - என்னும் போது, திரு. ஒய்.ஜி.எம். அவர்கள் குறிப்பிட்டது போல், இந்தியனாகப் பிறந்ததற்கு உண்மையிலேயே வெட்கமாயிருக்கிறது.
அன்புடன்,
பார்த்தசாரதி
-
7th June 2011 02:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks