ஆனந்தன் நடித்த படங்களில் இன்னொரு படம் மறக்க முடியாதது.
யானை வளர்த்த வானம்பாடி மகன்.
வண்ணப்படம். கடலூரில் (முத்தையா ) மிக அருமையாகப் போனது.
காட்டில் விலங்குகள் வளர்க்கும் சிறுவன் ஆனந்தன் பெரியவனாக வளர்ந்து யானை மேல் 'ஜாம் ஜாமென்று சந்தோஷமா' பாடி வருவார்.
பாட்டு வித்தியாசமாக இருக்கும்.
'ஜாம் ஜாமென்று சந்தோஷமா
நீ தளிர்நடை போடடா ராஜபீமா'
ஆனந்தனை பெரியவனாக்கிக் காட்டும் போது பாலா குரலில் பாட்டு அதம் பறக்கும்.
'காட்டிலுள்ள பாம்புகளில் நஞ்சும் இருக்கு
ஆனால் கடிக்கக் கூடாது என்ற நெஞ்சும் இருக்கு'.
நாட்டிலுள்ள மக்களிடம் நாலும் இருக்கு
அந்த நாலோடு சேர்ந்து கொஞ்சம் வாலும் இருக்கு
தேவராஜன் இசை கிளப்பியிருப்பார்.
நிறைய காட்டு விலங்குகளுடன் துணிச்சலாக ஆனந்தனுக்கு சண்டைக்காட்சிகள் உண்டு.
http://www.youtube.com/watch?feature...&v=v8rnGMVvk_k
இன்னொரு பாடலும் அருமை
https://lh5.googleusercontent.com/pr...BW=w426-h240-n
'ராஜா மகன் ராஜாவுக்கு ஆணை மேலே அம்பாரி
ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி'
http://www.youtube.com/watch?v=rB7aUWM3KJc&feature=player_detailpage