Page 155 of 400 FirstFirst ... 55105145153154155156157165205255 ... LastLast
Results 1,541 to 1,550 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1541
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆனந்தன் நடித்த படங்களில் இன்னொரு படம் மறக்க முடியாதது.

    யானை வளர்த்த வானம்பாடி மகன்.

    வண்ணப்படம். கடலூரில் (முத்தையா ) மிக அருமையாகப் போனது.
    காட்டில் விலங்குகள் வளர்க்கும் சிறுவன் ஆனந்தன் பெரியவனாக வளர்ந்து யானை மேல் 'ஜாம் ஜாமென்று சந்தோஷமா' பாடி வருவார்.
    பாட்டு வித்தியாசமாக இருக்கும்.

    'ஜாம் ஜாமென்று சந்தோஷமா
    நீ தளிர்நடை போடடா ராஜபீமா'

    ஆனந்தனை பெரியவனாக்கிக் காட்டும் போது பாலா குரலில் பாட்டு அதம் பறக்கும்.

    'காட்டிலுள்ள பாம்புகளில் நஞ்சும் இருக்கு
    ஆனால் கடிக்கக் கூடாது என்ற நெஞ்சும் இருக்கு'.
    நாட்டிலுள்ள மக்களிடம் நாலும் இருக்கு
    அந்த நாலோடு சேர்ந்து கொஞ்சம் வாலும் இருக்கு

    தேவராஜன் இசை கிளப்பியிருப்பார்.

    நிறைய காட்டு விலங்குகளுடன் துணிச்சலாக ஆனந்தனுக்கு சண்டைக்காட்சிகள் உண்டு.



    இன்னொரு பாடலும் அருமை



    'ராஜா மகன் ராஜாவுக்கு ஆணை மேலே அம்பாரி
    ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி'

    Last edited by vasudevan31355; 9th July 2014 at 02:40 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1542
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அப்போதுதான் மு.க.ஸ்டாலின் அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டு வந்த நேரம். ஸ்டாலினும் அப்போது தி.மு.க.விலிருந்த 'விஜயபுரி' ஆனந்தனும் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் எங்கள் ஏரியாவில் நடந்தது. (ஸ்டாலின் மிசாவில் சிறை செல்வதற்கெல்லாம் முன்பு). அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த தஞ்சை சுல்தான் எங்களுக்கெல்லாம் ரொம்ப தெரிந்தவர். சிறுவனான நான் அவரிடம் ஆனந்தனையும் ஸ்டாலினையும் கிட்டே பார்க்கணும் என்ற ஆசையைச்சொல்ல, சரியென்று மேடைக்கு அழைத்துச்சென்றவர் என்னை ஸ்டாலின் மற்றும் ஆனந்தன் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தினார்.

    ஆனந்தன் எப்போதுமே அழகானவர். அன்றைக்கு லேசான மேக்கப்பும் போட்டிருந்தார். சுருள் சுருளான தலைமுடியுடன், மேடை வெளிச்சத்தில் ரொம்பவே அழகாக இருந்தார். என்னைப்பார்த்து 'படிக்கிறியா?. எந்த கிளாஸ்?' என்று கேட்க நான் ஏதோ உளறிவைத்தேன். 'நல்லா படிக்கணும் என்ன?' என்று சொன்னவர், நான் ஆட்டோகிராப் வாங்க புக் எதுவும் எடுத்துச்செல்லவில்லைஎன்று தெரிந்துகொண்டு, தன் பாக்கெட்டிலிருந்து அவருடைய விசிட்டிங் கார்டை எடுத்து அதில் ஆட்டோகிராப் போட்டுத்தந்தார். ஸ்டாலினும் அதே போல தன்னுடைய விசிட்டிங் கார்டில் ('மாணவர் தி.மு.க. அமைப்பாளர்' என்று போட்டிருந்தது) ஆட்டோகிராப் போட்டுத்தந்தார். இத்தனைக்கும் நான் அப்போது அந்த சின்ன வயதிலேயே தீவிர ஸ்தாபன காங்கிரஸ்காரன்.

    மறுநாள் அந்த இரண்டு விசிட்டிங் கார்டுகளையும் பள்ளி தோழர்களிடம் காட்டி ரொம்ப பெருமையடித்துக் கொண்டேன்.

  4. #1543
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி கார்த்திக் சார்
    எல்லாம் ஆனந்த மயம்
    gkrishna

  5. #1544
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Interesting Karthik sir
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #1545
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மலை நாட்டு மங்கை 1974
    ஜெமினி விஜயஸ்ரீ (தெய்வமகன்,அதே கண்கள் புகழ்)
    இந்த படத்திலும் ஆனந்தன் நடித்து இருப்பார்
    நீலா productions
    p சுப்ரமணியம் இயக்கம் (இவர் திருவனத்தபுரம் நியூ, பத்மநாபா போன்ற திரை அரங்குகளுக்கு உரிமையாளர்
    விஜயஸ்ரீ இன் மரணத்தில் இவர் பெயரும் கொஞ்சம் 'அடி' பட்டது )
    தேவராஜன் இசை
    ஜேசுதாஸ் சுசீலா குரல்களில்
    'நீலமாம் கடல் அலையில் '



    gkrishna

  7. #1546
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    நேற்றைக்கு முரசு தொலைக்காட்சியில் 'யானை வளர்த்த வானம்பாடி மகன்' முழுத்திரைப்படம் ஒளிபரப்பானது. அழகான வண்ணத்தில்.

    ஆனந்தன், ராஜஸ்ரீ, சோ, மனோரமா, மனோகர் உள்பட பலர் நடித்திருந்தனர். ஆனந்தன் புலியுடன் சண்டையிடும் காட்சியெல்லாம் இடம்பெற்றிருந்தது. ஆனந்தன் தரையிலேயே நடக்காமல் மரத்துக்கு மரம் தாவியே செல்வது வித்தியாசமாக இருந்தது.

    1971-ல் பிரபாத்தில் ரிலீசானபோது பார்த்தது. நேற்றுத்தான் மீண்டும் பார்த்தேன்...

  8. #1547
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    நேற்றைக்கு முரசு தொலைக்காட்சியில் 'யானை வளர்த்த வானம்பாடி மகன்' முழுத்திரைப்படம் ஒளிபரப்பானது. அழகான வண்ணத்தில்.

    ஆனந்தன், ராஜஸ்ரீ, சோ, மனோரமா, மனோகர் உள்பட பலர் நடித்திருந்தனர். ஆனந்தன் புலியுடன் சண்டையிடும் காட்சியெல்லாம் இடம்பெற்றிருந்தது. ஆனந்தன் தரையிலேயே நடக்காமல் மரத்துக்கு மரம் தாவியே செல்வது வித்தியாசமாக இருந்தது.

    1971-ல் பிரபாத்தில் ரிலீசானபோது பார்த்தது. நேற்றுத்தான் மீண்டும் பார்த்தேன்...
    அச்சச்சோ! தெரியாமல் போயிற்றே! நானும் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டன. ரிலீசில் பார்த்ததோடு சரி!
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #1548
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்,

    இந்த திரியை அர்த்தமுள்ள இசைத்திரியாக விளங்கச்செய்யும் வண்ணம் ராகங்களைப்பற்றிய அபூர்வ விளக்கங்களுடன் மிளிரச்செய்த நீங்கள், தற்போது தற்காலிக ஓய்வு பற்றிய அறிவிப்பால் எல்லோரையும் மிரளச்செய்வது ஏன்?.

    ராகங்களைப்பற்றிய விவரணங்களை நிறுத்திவைத்தாலும், பாடல்கள் பற்றிய விவாதங்களில் / அரட்டைகளில் பங்குபெறுங்கள்.

    நீங்கள் இல்லாத திரி, நிலவில்லாத வானம்...

  10. #1549
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    'மலை நாட்டு மங்கை'யில் இன்னொரு நல்ல பாடல். ஜேசுதாஸ் பாடியிருப்பார்.

    வந்தாள் காட்டு பூச்செண்டு
    எந்தன் வீட்டுப் பொன்வண்டு

    மலையாளத்தில் 'காடு' என்ற படமே தமிழில் மலை நாட்டு மங்கை ஆனது. கவர்ச்சிக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை.
    மலையாளத்தில் வின்சென்ட் ஏற்ற பாத்திரத்தை தமிழில் ஜெமினி செய்தார்.



    Last edited by vasudevan31355; 9th July 2014 at 02:39 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1550
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கார்த்திக் சார்!

    அப்படி இல்லை. கோபால் சார் ஆபிஸ் வேலை நிமித்தம் வெளியிடங்களுக்கு சென்றுள்ளார் என்று நினைக்கிறேன். அதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •