Heh, unggalukku appadi. Here the are not even re-screening the films. Apart from latter films, I had never seen any of them on big screen :cry:
Printable View
Heh, unggalukku appadi. Here the are not even re-screening the films. Apart from latter films, I had never seen any of them on big screen :cry:
திரு பார்த்தசாரதி அவர்களே, நன்றி நமக்குள் யாருக்கு சொன்னாலும் ஒன்றுதான். தவறில்லை.
திரு கார்த்திக் அவர்களே நன்றி.
இத்தகைய அருமையான் ஒரு விமர்சனத்தை தி ஹிந்து நாளிதழுக்கு எழுதிய நம்மைபோன்ற ஒரு தீவிர ரசிகர் திரு y .g . மகேந்திரா அவர்களுக்குத்தான் இந்த நேரத்தில் நாம் நன்றி சொல்லவேண்டும்.
ஜோ சார்,
அவ்வாறு நீங்கள் வந்திருந்தபோது 'சாந்தி'யில் நின்றவரகளிடம் பேச்சுக்கொடுத்து பழக்கம் ஏற்படுத்தியிருந்தாலே, அங்குள்ள ரசிகர் வட்டத்தில் இணைந்திருப்பீர்கள். ஆரம்ப காலத்தில் நானும் அப்படித்தான். அங்கு சிறு சிறு குழுக்களாக ரவுண்ட் கட்டிப்பேசிக்கொண்டிருந்த கூட்டத்தில் தலையை விட்டு, கவனிக்க ஆரம்பித்து, பின்னர் பேச்சில் பங்குகொண்டு, படிப்படியாக தீவிர ரசிகர்களின் தொடர்பு ஏற்பட்டு, பின்னர் நானும் அங்கு முக்கியஸ்தர்களில் ஒருவனாக ஆனதும், மன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு, பட வெளியீடுகளில் முக்கிய பங்காற்றியதும் வாழ்வின் வசந்த காலங்கள்.
இங்கே கூட சில பக்கங்களுக்கு முன் ராகவேந்தர் அவர்களிடம் பழைய சாந்தி நண்பர்கள் பலரைப் பற்றி விசாரித்ததும், அதற்கு அவர் விவரமாக பதிலிறுத்ததையும் பார்த்திருப்பீர்கள். இன்றைக்கும் சென்னை செல்லும்போதெல்லாம் தவறாமல் சந்திக்கும் பிரமுகர்களில் "மாப்பிள்ளையும்" (திரு.வேணுகோபால் சார்) ஒருவர்.
சென்னையிலும் ஒரு கிளை அலுவலகத்தை ஏற்படுத்தாத என் நிறுவனத்தை இப்போது சபிக்கிறேன். அது மட்டும் நடந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
திரு Y.G. மகேந்திரா அவர்களின் கடிதம் நாளைய அதாவது 10.06.2011 தேதியிட்ட, ஹிந்து நாளிதழில், வெளியாக உள்ளது. அதன் இணைய இணைப்பைக் கீழே காண்க.
http://www.thehindu.com/arts/cinema/article2090497.ece
அன்புடன்
கதைக்களப் பாடல்களில் நடிகர் திலகம் - 02
இந்தப் பாடல் காதலை வெளிப்படுத்துவதாக அமைந்தாலும் இருவர் ஒரு பெண்ணிடம் தம் காதலை கூறுவதாக அமைக்கப் பட்டது. மிகச் சிறந்த நகைச்சுவைப்படமான மணமகன் தேவை படத்தில் இடம் பெற்றது. நடிகர் திலகத்திற்கு கண்டசாலா பாடிய பாடல்களில் ஒன்று. உடன் பாடுபவர் பி.பானுமதி. டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு குரல் கொடுத்திருப்பவர் பிதாபுரம் அவர்கள். இசை ஜி.ராமநாதன். மிகவும் அருமையான ஹிட் பாடல். சூழ்நிலையை பாடலே விளக்கும்.
http://www.youtube.com/watch?v=RovoI4VGj6k
அன்புடன்
பம்மலார் & ராகவேந்திரன்
கடந்த ஞாயிறு அன்று அனைத்து சாலைகளும் சென்னை சாந்தி நோக்கி என்றால் மிகை ஆகாது . அந்த அளவுக்கு மக்கள் வெள்ளம் நமது வலைபதிவர்களுடன் கழித்த நேரம் சுமார் 2 மணி நேரம் மட்டுமே ஆனால் இனிமையான நேரம் 22 /12 /1973 ரங்கதுரை அவர்கள் முதன் முதலாக திரையில் தோன்றிய நேரம் நினைவுக்கு வந்தது அன்று சனி கிழமை என்று நினவு .எனக்கு அப்போது வயது 13 திருநெல்வேலி MDT ஹிந்து ஹை ஸ்கூல் 9th ஸ்டாண்டர்ட் படித்து கொண்டு இருந்தேன் பள்ளி அன்று விடுமுறை என்னுடைய கிளாஸ் டீச்சர் திரு வானமாமலை அவர்கள் ஒரு சிவாஜி ரசிகர் .வகுப்புகள் எடுக்கும் போது (45 நிமிடங்கள் ஒரு வகுப்பு ) குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் திரு சிவாஜி அவர்கள் பற்றி பேசுவார் அவர்கள் முந்தைய தினம் "நாளை நடிகர் திலகத்தின் புதிய திரை படம் வர இருப்பதால் திங்கள் கிழமை 10 நிமிடங்கள் ராஜபார்ட் ரங்கதுரை பற்றி விவாதிப்போம் " என்று கூறி விட்டு சென்று விட்டார் அதனால் எப்படியாவது திரை படம் பார்த்து விடவேண்டும் என்று பிடிவாதம்
திருநெல்வேலியில் எல்லோருமே சனி அன்று தாமிரபரணியில் எண்ணெய் குளியல் எடுப்பது வழக்கம் எங்கள் வீட்டில் எனக்கும் என் உடைய தம்பிக்கும் கையில் எண்ணெய் கிண்ணமும் சியக்காய் தூள் கொடுத்து அனுப்பினார்கள் அப்போது தாமிரபரணியில் மழை காலம் முடிந்து வெள்ளம் வடிந்து நீர் கரை ஓரம் ஓடி கொண்டு இருந்தது. அன்று ராகு காலம் 9 முதல் 10 .30 வரை. ஆகையால் திரைப்படம் 8 .55 க்கு ஆரம்பித்து விடுவார்கள் என்றும் நானும் எனது தம்பியும் இன்னொரு நண்பர் கனகராஜ் (திருநெல்வேலி அண்ணாமலை ஸ்டோர் owner ) (அவரும் சிவாஜி ரசிகர்) குளிக்காமல் நேராகவே பார்வதி திரை அரங்கு சென்று விட்டோம் . பாதி டிக்கெட் கொடுத்து கொண்டிருக்கும் போது (தரை டிக்கெட் 45 காசுகள் ) முதல் பாட்டு போட்டு விட்டார்கள் அடித்து பிடித்து உள்ளே சென்று நின்று கொண்டே பாதி படம் பார்த்தோம் இடைவேளைக்கு பிறகுதான் உட்கார இடம் கிடைத்தது கையில் எண்ணெய் கிண்ணமும் சியக்காய் தூள் வேறு யாரும் அதை தட்டிவிடாமல் பார்த்து கொண்டே படம் பார்த்தோம் பிறகு மதியம் 1 மணிக்கு சென்று டவுன் குறுக்குதுறை அருகே சென்று குளித்துவிட்டு வீட்டிற்கு சென்றோம் சுகமான மலரும் நினைவுகள் . நடிகர் திலகத்தின் tobe ஓர் நாட் to பே விசில் காதை பிளந்தது அப்போது அதை பற்றி விவாதம் குரல் நடிகர் திலகமா அல்லது வேறு யாரவது ஒருவர் உடையதா என்று . அப்போது மதி ஓளி பத்திரகையில் வேறு அது நடிகர் திலகம் குரல் தான் ரீ ரெகார்டிங் ஜ.ஜ. மாணிக்கம் ஓலிபதிவு குரலை மாற்றி உள்ளது ஆங்கில வேடத்திற்கு என்று மதி ஓளி சண்முகம் எழுது விட்டார்கள் . பசுமையான இனிமை யான நினைவுகள்
அன்பு கிருஷ்ணாஜீ,
தங்களுடன் அன்று படம் பார்த்தது சுகமான அனுபவம் என்றால், 73ல் தாங்கள் அனுபவித்தது அதை விட சுவாரஸ்யமானது. புராணத்தில் நாரதர் எண்ணெய்க் கிண்ணத்தை வைத்துக் கொண்டு நாராயணனை மறந்தது போல் அல்லாமல், தாங்கள் நம்முடைய ஆண்டவனையும் மறக்காமல் எண்ணெய்க் கிண்ணத்தையும் மறக்காமல் படம் பார்த்தது நிச்சயம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இது போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சுவையான அனுபவம் இருக்கும் என்பது திண்ணம்.
ஷேக்ஸ்பியர் நாடக வசனத்தைப் பேசியவர், பேராசிரியர் சுந்தரம். இவர் பாடகி எஸ்.ஜானகியின் கணவர்.
அன்புடன்
27.05.2011 அன்று மாலை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்களின் உரையாற்றும் நிழற்படம்
http://www.facebook.com/photo.php?fb...64145250307603
http://www.facebook.com/photo.php?fb...64145250307603
அதிலேயே மற்ற நிழற்படங்களையும் பார்க்கலாம். FACE Book இணைய தளத்தில் உள்ளதால், அநேகமாக பயனாளர் குறியீடு தேவைப்படலாம்.
அன்புடன்
கிருஷ்ணாஜி,
வெகு நாள் கழித்து வந்தாலும் சுவையான மலரும் நினைவுகளோடு வந்ததற்கு இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் 22-12-1973 அன்று சனிக்கிழமைதான். சில வாரங்களாக விகடனில் மூங்கில் மூச்சு என்ற பெயரில் ஒரு தொடர் வெளியாகிறது. இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்த சுகா என்பவர் [இவர் காங்கிரஸ் பேச்சாளார் தமிழ் கடல் நெல்லை கண்ணனின் மகன்] தன் நெல்லை அனுபவங்களை அதிலும் குறிப்பாக தியேட்டர் அனுபவங்களை எழுதி வருகிறார். இந்த வாரம் கூட நெல்லையில் வெளியான பழைய படங்களைப் பற்றியும் அந்த ஊர் மனிதர்கள் எப்படி அந்தப் படங்களை துரத்தி துரத்தி பார்த்தார்கள் என்பதை சுவைப்பட எழுதியிருக்கிறார். அதை படித்து விட்டு இங்கே வந்தால் நீங்கள் பார்வதி தியேட்டர் ஓபனிங் ஷோ அனுபவங்களை எழுதியிருக்கிறீர்கள்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை என் அனுபவம் வேறு வகையானது. படம் வெளியான நாள் டிசம்பர் 22 அன்றுதான் பள்ளிக்கூடத்தில் அரை வருட தேர்வுகள் முடியும் நாள். எனவே ஓபனிங் ஷோ போக முடியவில்லை. மதுரையில் சென்ட்ரலில் ரிலீஸ். சாதாரணமாகவே அனைத்து நடிகர் திலகத்தின் படங்களையும் ஓபனிங் ஷோ பார்த்து விடக் கூடிய அன்று கல்லூரி மாணவனாக இருந்த என் கஸின் இந்தப் படத்தையும் ஓபனிங் ஷோ பார்த்து விட்டான். படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் [தேவி சித்ரம்] வேறு அவனது நண்பனின் உறவினர் என்பதால் வேலை எளிதானது. மீண்டும் அன்றிரவு காட்சியும் வேறு நண்பர்களுடன் போய் விட்டான். எனக்கு பார்க்க வேண்டும் என்று ஒரே ஆவல். படத்திற்கு நல்ல ரிப்போர்ட் என்பதோடு மட்டுமல்லாமல் தியேட்டர் எங்கள் வீட்டிற்கு அருகாமையிலும் என்பதால் அடிக்கடி தியேட்டர் வாசலில் போய் பார்க்க பார்க்க ஆவல் அதிகரித்துக் கொண்டே போனது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் சோதனையாக பார்க்க முடியவில்லை. திங்களன்று போகலாம் என்று வீட்டில் ஞாயிறு அன்றே அனுமதி வாங்கியாகி விட்டது.
திங்களன்று காலை அதே நினைவோடு எழுந்து மத்தியான காட்சிக்கு காலையிலே மானசீகமாக தயாராகி கொண்டிருக்கும் போது வானொலி செய்தி வருகிறது. நோய்வாய்ப்பட்டு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியார் ஈ.வெ.ரா. காலமானார் என்று [24-12-1973 ]. ஐயோ இன்று படத்திற்கு போக முடியாது போலிருக்கே என்று ஒரே கவலை, வருத்தம். தியேட்டர் பக்கம் சென்று பார்த்தால், காட்சிகள் இருக்குமா என்பதைப் பற்றிய அறிவிப்பு ஒன்றுமில்லை. காலையிலிருந்து மதியம் ஒரு மணி வரை எத்தனை முறை போய் தியேட்டர் பக்கம் போய் வந்தேன் என்பதற்கு கணக்கே இல்லை.
ஒரு மணிக்கு மேல் அம்மாவை கன்வின்ஸ் செய்து அவர்களையும் அழைத்துக் கொண்டு போனேன். படம் வெளியான முதல் ஒரு சில வாரங்களில் சென்ட்ரலில் பெண்களை பின் கேட் வழியாகவே உள்ளே அனுமதிப்பார்கள். அதன் வழியே உள்ளே சென்றால் நல்ல கூட்டம். கேட் கீப்பரிடம் ஷோ இருக்கிறதா என்று கேட்ட போது இருக்கிறது என்று பதில் வந்தாலும் மனதில் ஒரு கலக்கம் .தீடிரென்று காட்சி ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு வருமோ என்ற பயம். டிக்கெட் வாங்கி உள்ளே சென்று உட்கார்ந்த பிறகும் பயம் விலகவில்லை. படம் தொடங்கி சற்று நேரம் வரை அதே நினைப்பு. பிறகு படத்தில் லயித்து விட்டேன், இடைவேளை வருகிறது. மீண்டும் அதே உணர்வு. அம்மா வேறு முன்பு நடந்த ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் [ இப்படிதான் தேவியில படம் பார்த்துக் கொண்டிருந்தோம். நேரு போய் விட்டார் என்று நியூஸ் வந்தது. படத்தை நிறுத்திட்டான்]. இடைவேளை சீக்கிரம் முடியாதா என்று ஒரு பதைபதைப்பு. இடைவேளை முடிந்ததும் படம் ஆரம்பித்தது, தொடர்ந்தது, நிறைவடைந்தது. படத்தை ரசித்தேன் என்றாலும் இந்த டென்ஷன் படத்தை முழுமையாக ரசிக்க முடியாமல் செய்திருந்ததால் இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் நண்பர்களுடன் சென்று படத்தை பார்த்தேன் ரசித்தேன்.
உங்கள் அனுபவத்தை படித்தவுடன் என் அனுபவம் நினைவுக்கு வந்தது. மீண்டும் நன்றி.
அன்புடன்
ஜோ போன்ற பெரியாரிஸ்ட்களுக்கு sorry.