கர்ணன் அமெரிக்காவில் திரையிடப் படும் அரங்குகள் பற்றிய மேலதிக விவரங்கள்
டியர் மகேஷ் சார்,
தங்களை 'வருக ! வருக !' என மனமார வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்..!
தங்களின் அன்புக்கும், பாராட்டுக்கும், தாங்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கும் எனது கனிவான நன்றிகள்..!
என்னால் இயன்ற அளவு என்ன முடியுமோ அதனை இங்கே அவசியம் செய்கிறேன்..!
நமது திரியின் இரு கண்கள் வாசுதேவன் சாரும், ராகவேந்திரன் சாரும்..! அவர்களது அபரிமிதமான பங்களிப்புகளாலும் மற்றும் mr_karthik, சந்திரசேகரன் சார் மற்றும் பல அன்புள்ளங்களின் சிறந்த பதிவுகளாலும், இந்த மகாமெகா வெற்றியை நமது திரி அடைந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சேவை மனப்பான்மையுடன் இங்கே தொண்டாற்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த எளியேனது ஆத்மார்த்தமான நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
தங்களின் உயர்ந்த பாராட்டுக்கும், மேலதிக விவரங்களுக்கும் மேன்மையான நன்றிகள்..! தன்னுடன் பணியாற்றிய சககலைஞர்களுக்கு, நடிகர் திலகம் இதுபோன்று (சுயவிளம்பரமின்றி, சுயதம்பட்டமின்றி) செய்த உதவிகள்தான் எத்தனை எத்தனை..!
"காவல் தெய்வம்" காவியத்தை, வடசென்னை 'ஸ்ரீமுருகன்' திரையரங்கில் மறுவெளியீட்டில், தாங்கள் பார்த்து ரசித்த அனுபவம் பற்றிய பகிர்வு இதயத்தைத் தொட்டது.
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் இதயபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!
கலைநிலவுக்கு மிகச் சரியான முறையில் அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள்..!
டிஜிட்டல் "கர்ண"னின் அமெரிக்க வெளியீட்டை அறிவிக்கும் விளம்பரம் மற்றும் அறிவிப்பு வீடியோ இரண்டும், மிக உன்னத பகிர்வுகள்..!
தங்களுக்கு எனது உளப்பூர்வமான பாராட்டுக்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்..!
தங்களின் கைவண்ணத்தில் தாங்களும், ராமஜெயம் சாரும் இணைந்து கொடுத்துள்ள டிஜிட்டல் "கர்ண"னின் 140வது நாள் விளம்பரம் படுஅமர்க்களம்..!
"கும்கி" இசை வெளியீட்டு விழாத்தகவல் மற்றும் பாடல் சுட்டிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!
அன்புடன்,
பம்மலார்.