http://i60.tinypic.com/5cyi39.jpg
Printable View
நன்றி .அந்தி மழை - இணையத்தளம்
1966-ல் தெருவில் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து பிப்ரவரி மாதம், 11 வது வட்ட திமுக.உட்கிளையாக `மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம்’ ஆரம்பித்திருந்தோம். ஜனவரியில் ஆரம்பிப்பதாக இருந்தது, லால் பகதூர் சாஸ்திரி இறந்ததால் அதைத் தள்ளி வைத்து பிப்ரவரியில் திறந்தோம்.திருச்சி, திமு க எம் எல் ஏ , எஸ் எஸ் .மணி திறந்து வைத்தார்.கலைஞரை அழைக்கும் கனவில் ஆரம்பித்து, காஞ்சி கல்யாண சுந்தரம், காட்டூர் கோபால், என்று விசாரித்து. எஸ்.எஸ்.மணியில் வந்து நின்றது. அவருக்கு போக்கு வரத்து செலவுக்கு ஐம்பது ரூபாய் மணி ஆர்டர் நான் தான் அனுப்பி வைத்தேன்.அதிலிருந்து மன்றத்தின் கடிதப் போக்கு வரத்துக்கு நானே பொறுப்பானேன்.எங்கள் வீட்டு முகவரியான `28.சுடலை மாடன் கோவில் தெரு’அதற்கான முகவரியாயிற்று.
http://i58.tinypic.com/11kxldt.jpghttp://i58.tinypic.com/29bmyq1.jpg
தென் சென்னை எம் ஜி ஆர் ரசிகர் மன்ற செயலாளர் எஸ்.கல்யாண சுந்தரம்,வடசென்னை, குமரப்ப முதலி தெரு,ஏழு கிணறு எம்ஜிஆர் ரசிகர் மன்றம், மதுரை புதுக்குயவர் பாளையம், சீத்தாரமன், சுந்தர ராஜன், வேலூர் ஆர். எஸ் மாறன்,பீப்பிள்ஸ் ஸ்டார் எம்ஜி ஆர் ஃபேன்ஸ் அசோஷியேஷன் தூத்துக்குடி, பாலகிருஷ்ணன்,திருச்சி. தா வரதராஜன். (தினத்தந்தி, டெலி பிரிண்டர் ஆபரேட்டர், பறவை சாலை, திருச்சி.)இன்னும் சேலம் , கரூர், என்று எத்தனையோ மன்றங்கள்.தினமும் தபால் வரும் , வசூல் நோட்டீஸ் வரும். நானும் இங்கே அடிக்கிற நோட்டீஸ்களை அனுப்புவேன். இரண்டு வருடத்தில் அவை நூற்றுக் கணக்கில் சேர்ந்து விட்டது. சிலர் அற்புதமான பேனா நண்பர்களாகி விட்டனர்.எல்லவற்றையும் ஒரு பெரிய கைப் பையில் எடுத்துக் கொண்டு சென்னைக்கு கணபதியண்ணனுடன் ரயிலேறினோம்.
1964 –ல் தனுஷ் கோடி புயல் வீசிய போது அங்கு போய் விட்டு திருநெல் வேலியில் ஒரு மாபெரும் கூட்டத்திற்கு வந்திருந்தார்.அப்புறம் எங்க வீட்டுப் பிள்ளை வெற்றி விழாவிற்கு வந்திருந்தார்.67-ல் தி மு க ஆட்சிக்கு வந்த போது, எம்ஜியார் சிறு சேமிப்பு திட்ட துணைத்தலைவர் ஆக இருந்தார்.அப்போது சந்திரகாந்தா நாட்டியத்திற்கு தலைமை தாங்கி சிறு சேமிப்பு விழா நடத்த திருநெல்வேலி வந்திருந்தார்.அப்போது கலெக்டர் வீட்டில் மதிய விருந்து.அந்த சமயத்தில், தினமலரில் நிருபராய் இருந்த என் ஒன்று விட்ட அண்ணன் ஒருவர் அங்கே அழைத்துப் போயிருந்தார்.அப்போதுதான் முதன் முதலாக நெருக்கமாக பார்த்தது. அது பழைய ப்ரிட்டிஷ் காலத்து வீடு.அங்கே மீட்டிங் நடந்து கொண்டிருந்த அறையின் சுவர் பச்சை வண்ணமாயிருந்தது.தரையிலும் அடர் பச்சை நிறத்தில் காயர் விரிப்பு, அந்த பின்னணியில், கம்பிகளற்ற ஜன்னல் வழியாகரோஸ் நிறத்தில் எம் ஜி ஆரைப் பார்த்ததும் எனக்கும் சபாபதிக்கும் மூச்சே நின்று விட்டது. அவனும் என் அண்ணனிடம் கெஞ்சிக் கூத்தாடி உள்ளே வந்து விட்டான்.எனக்கும் அவன் வந்தது குறித்து ரொம்ப சந்தோஷம்,ஏனென்றால் நான் எம் ஜி ஆரை நேரில், அருகில் பார்த்ததுக்கு,சாட்சி வேண்டாமா?.மீட்டிங் முடிந்ததும் சாப்பிடுவதற்கு முன், அவர் சாலையில் கூடியிருந்த கொஞ்சம் ரசிகர்களின் ஆரவாரம் கேட்டு காம்பவுண்ட் வாசல் வரை வந்து கை அசைத்தார், இருங்க வாரேன் என்கிற மாதிரி.சபாபதி `ச்சேய்’ என்று உற்சாக மிகுதியில் சத்தம் போட்டான்.அவருடைய பாடி கார்ட் எங்கள் அருகே வந்து யார் என்ன என்று விசாரிக்கவும், தள்ளவும் ஆரம்பித்து விட்டார்.என் கையை லேசாக தட்டி விட்டார்.எலும்பில் வலி விண்ணென்று தெறித்தது.தர்மலிங்க அண்ணன் என்றேன், அந்த ஆள் சிரித்து விட்டார். அவர்தான் எங்க வீட்டுப் பிள்ளையில் ஒரு சண்டைக் காட்சியில் சரோஜா தேவியிடம் கைப்பையை திருடிக் கொண்டு ஓடுவார்.
எப்படியாவது சென்னை செல்ல வேண்டும், எம் ஜி ஆருடன் புகைப் படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை கிடந்து அடித்தது.தின மலர் நிருபர், சங்கரின் அண்ணன், ஆவுடையப்பன்,என்னிடம் ரொம்ப பிரியமாக இருப்பார்.சங்கரண்ணனுக்கு வேலை வாங்க உதவியது அப்பா தான்.இருவரும் எனக்கு பெரியப்பாவின் மகன்கள்.அவரது பெயரும் ஆவுடையப்ப பிள்ளை தான்.தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் பெரிய ஆர்வலர். மு.வ. வெல்லாம் நல்ல பழக்கம்.அந்தக் குடும்பத்திலும் ஏதோ கஷ்டம்.திருநெல்வேலிக்கு பிழைக்க வந்து விட்டார்கள்.ஆவுடையப்ப அண்ணான் ஜேயார் மூவிசில் ப்ரொடக்*ஷன் மேனேஜராக வேலை பார்த்தார்.புதிய பூமி படம் படப் பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.தென்காசியில் அவனுக்குப் பழக்கமானவர்கள் எடுக்கிற படம். நம்பிக்கையான ஆள் தேவை என்பதால் அங்கே வேலை பார்த்து வந்தான்.எம் ஜி ஆர் குண்டடி பட்டு, படப் பிடிப்பெல்லாம் நின்று போயிருந்த சமயம், திருநெல்வேலியில்தான் அவர் இருந்தார்.அப்போது அவரிடம் என் சென்னை வரும் ஆசை பற்றிப் பேசினேன். அட கிறுக்கா இதுக்கா யோசிக்கெ, அங்க கடல் மாதிரி ஆபீஸ் எடுத்துப் போட்டுருக்கோம்.நீ எப்ப வேண்ணாலும் வா, என்றார். இப்ப ரகசிய போலீஸ் ஷீட்ட்ங்க்ல பிஸியா இருக்காரு.அது முடிஞ்சதும் நம்ம படம் தான்னுருக்காரு, என்று சொல்லி ரகசிய போலீஸ் ஸ்டில் ஒன்றைக் கொடுத்தார்.
நன்றி .அந்தி மழை - இணையத்தளம்
http://i58.tinypic.com/11kxldt.jpghttp://i58.tinypic.com/29bmyq1.jpg
1968 ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ரசிக மன்ற செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் பதிவு அபூர்வ ஆவணம் .அந்தி மழை- இனைய தளத்தில் இருந்து எடுத்து பதிவிட்ட திரு குமார் அவர்களுக்கு நன்றி .
****TODAY 2.00PM WATCH VASANTH TV
http://i59.tinypic.com/ejezvq.jpg
இனிய நண்பர் திரு ரவி அவர்கள் பதிவிட்ட நல்ல நேரம் விமர்சனம் நன்றாக இருந்தது .
நேபாளில் ஏற்பட்ட துயர சம்பவம் மனதை மிகவும் பாதித்தது .
http://i61.tinypic.com/20h7jo1.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் தொடர்ந்து பதிவிட்ட இனிய நண்பர்கள்
திரு செல்வகுமார்
திரு ரவிசந்திரன்
திரு லோகநாதன்
திரு ரூப்குமார்
திரு ஜெய்சங்கர்
திரு கலிய பெருமாள்
திரு வினோத்
திரு தெனாலி ராஜன்
திரு கலைவேந்தன்
திரு யுகேஷ் பாபு
திரு சைலேஷ்
திரு சத்யா
திரு ராமமூர்த்தி
திரு கலைவேந்தன்
திரு முத்தையன்
உங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்
1.5.2015 அன்று மக்கள் திலகத்தின் ''அடிமைப்பெண் '' 47வது ஆண்டு துவங்குகிறது . நண்பர்கள் அனைவரும் தங்களுடையஅடிமைப்பெண் விமர்சனங்களையும் , படம் பார்த்த அனுபவங்களையும் , பிடித்த காட்சிகளையும் பாடல்களையும் திரியில் பதிவிடவும் .
இனிய நண்பர்கள் திரு ரவிக்குமார் , திரு சிவாஜி செந்தில் , திரு ரவிகிரண் சூர்யா மற்றும் நண்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது .
Dhina Ithazh 28/04/15
http://i59.tinypic.com/241rxpy.jpg
அது ஒரு நிலாக் காலம் கனவுகளின் உலாக் கோலம் :குறுந்தொடர் :
நிலவிலும் கொடி நாட்டிய மூவேந்தர்கள்!!
பகுதி 1 : வா வெண்ணிலா.....மூவேந்தர்கள் காதல் நினைவில் நிலை கொள்ளாமல் திளைக்கும்போது!!
குட்டீஸ்களுக்கு சீராட்டி சோறூட்டுவதிலிருந்து குமரீசுக்கு பாராட்டில் குளிப்பாட்டுவது வரை நமது திரைக்கவிஞர்களின் உயிரூட்டலுக்கு நிலவுதான் ஊறுகாய்!!
மூவேந்தராயினும் மங்கையர் மனதில் காதல் கொடி நாட்டிட எப்படியெல்லாம் திண்டாட்டம் காட்ட வேண்டியிருக்கிறது ?!
-------------
அன்பார்ந்த நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு,
தங்களின் நிலாக்காலம் குறுந்தொடரும் தேர்ந்தெடுக்கும் பாடல்களும் அட்டகாசம். ‘ராமு’ திரைப்படத்தில் காதல் மன்னரின் சோகமும் விரக்தியும் இழைத்தெடுத்த நடிப்பில், திரு.பி.பி.எஸ்.சின் தேன்குரலில் ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மலேசியாவில் தலைவர் பெயரில் காய்கறிக் கடை. படத்தை பதிவிட்ட திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.
திரு.யுகேஷ் ,
வர்ஷாவுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களுக்கு பொறுப்புகள் அதிகரித்திருக்கிறது. செல்வமகள் சேமிப்புத்திட்டம் என்ற பெயரில் அஞ்சல் அலுவலகங்களில் பெண் குழந்தைகளுக்கென சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளனர். வர்ஷாவின் பெயரில் கணக்கு தொடங்குங்கள். தங்களின் ‘செல்வமகளுக்கு’ மீண்டும் என் வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அன்புசால் திரு. ரவி அவர்களுக்கு,
தாமதத்துக்கு மன்னிக்கவும். 3 நாட்களாக கொஞ்சம் வேலை அதிகம். அதனால் திரிக்கு வரமுடியவில்லை.
தாங்கள் உணர்வுபூர்வமாக, மனதைத் தொடும் வகையில் எழுதக் கூடியவர் என்று தெரியும். நகைச்சுவையாகவும் நன்கு எழுதக்கூடியவர் என்று தெரிந்து கொண்டேன். நகைச்சுவை உங்களுக்கு இயல்பாக வருகிறது. நானும் அரைத்தூக்கத்தில் ‘அதற்குள் விடிந்து விட்டதா?’ என்று நொந்து கொண்டு போர்வைக்குள் சுருண்ட அனுபவங்கள் உண்டு.
நகைச்சுவையுடன் கூடிய நல்ல நேரம் விமர்சனம் பிரமாதம். ஆனால், உங்களின் ஒரு கருத்தை மட்டும் ஏற்க முடியவில்லை. ‘இரு திலகங்களின் நடிப்பை பார்க்கும் எனக்கு கொஞ்சம் கூட நடிப்பு வராதா என்ன?’... என்று கூறியிருக்கிறீர்களே. நடிக்கத் தெரியாத நல்ல உள்ளம் கொண்டவர் நீங்கள் என்பதை உங்கள் எழுத்துக்களே காட்டுகின்றன.
உங்களின் ‘அந்தக் காலம்’ கட்டுரையும் அருமை. பாராட்டுக்கள். இதுபோன்ற பதிவுகளைப் பார்த்தால் எனக்கும் எழுத ஆசை வருகிறது. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கிரிக்கெட் போட்டியைப் பார்க்கச் சென்ற தலைவர் தனக்கென்று ரிசர்வ் செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தவர்களை எழுந்திருக்கச் சொல்லியிருக்கலாம். அது அவரது உரிமையும் கூட. அமர்ந்திருந்தவர்கள் முக்கிய பிரமுகர்களும் அல்ல. ஆனால், அவர்களை எழுந்திருக்கச் சொல்லாமல் பின்னால் இருந்த இருக்கையில் தலைவர் அமர்ந்திருக்கிறார்.
அதுவும் 1974ம் ஆண்டில் தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னராக மட்டுமல்ல, திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று, வருங்காலத்தில் தமிழகத்தின் முடிசூடப் போகும் மன்னர் என்பதும் உறுதியாகிவிட்ட நிலையில், தனது இருக்கையை விட்டுக் கொடுத்து பின்னே இருக்கும் இருக்கையில் போய் அமர்கிறார் என்றால் தலைவரின் தன்னடக்கத்தையும் பெருந்தன்மையையும் வர்ணிக்க வார்த்தைகள் ஏது?
தினஇதழ் நாளிதழில் வரும் பதிவுகளை தினமும் பதிவிட்டு வரும் திரு.லோகநாதன், திரு.சைலேஷ் பாசு ஆகியோருக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்