'தரிசனம்' படத்தில் ஆச்சி 'சோ'வை சினிமாப் பாடல்களாகப் பாடி சித்ரவதை செய்வார் 'பாப்பா' என்ற பெயரில்.
போகாதே அய்யா போகாதே
நீ போனாலே என் பாட்டு வாழாதே
நான் பாடும் சங்கீதம் பிடிக்கலியா
என் ராகங்கள் உன்னை வந்து பிடிக்கலியா
https://youtu.be/tVXf_D5_XRc
Printable View
'தரிசனம்' படத்தில் ஆச்சி 'சோ'வை சினிமாப் பாடல்களாகப் பாடி சித்ரவதை செய்வார் 'பாப்பா' என்ற பெயரில்.
போகாதே அய்யா போகாதே
நீ போனாலே என் பாட்டு வாழாதே
நான் பாடும் சங்கீதம் பிடிக்கலியா
என் ராகங்கள் உன்னை வந்து பிடிக்கலியா
https://youtu.be/tVXf_D5_XRc
முயலுக்கு மூணே காலு நான் பார்த்தேன் புடிக்கையிலே
காள மாட்டுக்கு ரெண்டே வாலு நான் பார்த்தேன் கறக்கயிலே
ஆச்சி அந்த வயதில் தாவணி அணிந்து சிறுவர்களுடன் என்ன சுறுசுறு!
ஆச்சிக்கு ஜானகி குரல் தந்திருப்பார்.
https://youtu.be/qxjCfGyv07I
https://www.youtube.com/watch?v=M_hhcnKQvlc
தமிழ்ப் படப்பாடல்களில் சில காலத்தை வென்று நிற்பதோடு சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையோடு இணைந்து விடுவதுண்டு.
இந்தப்பாடல் அந்த வகையில் சேர்ந்து விட்டதோ..
1978 -ல் தீபாவளிக்கு முத்துராமன் நடித்து 'வாழ்த்துங்கள்' என்றொரு படம் வந்தது. கடலூர் ஓ.டி கமர் திரையரங்கில் அந்தப் படத்தைப் பார்த்தேன். ஒரு காட்சி கூட நினைவுக்கு வரவில்லை. ஆனால் அப்போதே ஜேசுதாஸ் பாடிய பாடல் ஒன்று அழியாமல் நெஞ்சில் நிலைத்து விட்டது.
'அருள்வடிவே! பரம்பொருள் வடிவே!
ஆனந்தமே! அருளே! பொருளே! புகழே!'
எப்போது கேட்டாலும் மனம் மயங்கும் பாடல். இந்தப் படத்தில் வேறு என்ன பாடல்கள் இருக்கின்றன?
https://www.youtube.com/watch?v=LlqQiHHul98
மக்கள் தலைவரைவாழ்த்திப் பாடும் மனோரமா... படம் நீதி
வாசுஜி...
வாழ்த்துங்கள் படம் கூட நான் பார்க்கவில்லை. அந்தப் பாட்டு மட்டுமே எனக்கும் தெரிந்த ஒரே விஷயம்.. வேறு விவரம் இருக்கா ?
மனோரமா அவர்களைப் பொருத்தவரை 'ஈடு செய்ய முடியாத இழப்பு' என்பது வெறும் சம்பிரதாய வார்த்தைகள் இல்லை. நிஜமாகவே ஈடு செய்ய முடியாத இழப்புதான். இவரைப்போல இன்னொருவர் தமிழ் திரையுலகுக்கு கிடைக்கவே இல்லை.
வெளிநாடுகளில் தமிழர்களுக்கு பெருமை தேடித் தந்த நடிகர்திலகத்தைப்போல ஒரு தமிழ் நடிகையான இவரும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்து விட்டார்.
என்னென்ன விதமான கதாபாத்திரங்களையும் ரொம்ப அசாட்டாக செய்து அசத்தியவர்.
பட்டிக்காடா பட்டணமாபடத்தில் கோழியடித்து குழம்பு வைத்து எம். ஆர். ஆர். வாசுவை ஒரு வழியாக்கும் வெள்ளையம்மாளை மறக்க முடியுமா?.
தீபத்தில் சுருளியிடம் 'இன்னுமா ஆகலை?" , 'இன்னும்தான் ஆகலை?' கொஞ்சலை மறக்க முடியுமா?
அண்ணன் ஒரு கோயிலில் அப்பாவியாக வந்து வீட்டையே கொள்ளையடித்து கம்பி நீட்டும் கைகாரியை மறக்க முடியுமா?
நடிகனில் நடுத்தர வயதை கடந்த பின்பும் பாட்டுவாத்தியார் சத்யராஜுடன் காதல் அரும்பும் நளினத்தை மறக்க முடியுமா?.
தமிழ் திரையில் இன்னொரு மனோரமா சாத்தியமே இல்லாமல் போய்விட்டதே.
//நடிகர் திலகத்தின் மறைவுக்கு சொந்த சகோதரியாய் இருந்து கதறியவர். எங்களைக் கதற வைத்தவர். இன்று பதறவே வைத்து விட்டார்.
இனி விண்ணுலக தேவர்களுக்கு சோகமில்லை. ஆச்சியின் நகைச்சுவையால் ஆண்டவர்கள் அனைவரும் ஆனந்த சிரிப்பிலே இனி மிதப்பார்கள். நமக்குத்தான் இனி ஆச்சி இல்லை. ஆனால் அவரின் திரையுலக ஆட்சி என்றும் நிலையானது.//
வெகு உண்மை வாசு..
எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை..விரல்கள் வெகு நேரம் ஸ்தம்பித்தபடி தட்டச்சுச் சுவடியின் மேல் நிற்கின்றன.. மனதில் அவரது திரைப்படங்கள்.. பிடித்த வசனங்கள் எனக் கோர்வையாக வந்தாலும் கூட,
அட, நானும் ஒருமுறை அவரை பார்த்திருக்கிறேன் நேரில்.. ஆனால் பேச எல்லாம் இல்லை..எங்கே..
கல்லூரிப் பருவம் எண்பதுகள் என நினைக்கிறேன்.. மதுரையில் காதம்பரி என ஒரு நாடக சபா ..அதில் ஒரு உறுப்பினர் என் சகோதரியின் கணவரின் நண்பர்.. எனில் ஒரு வருட சந்தா என் ச.க. தலையில் கட்ட வைத்துவிட ,சகோதரியின் கணவர் அந்தப் பாஸை என்னிடம் கொடுத்து விட்டதால் எனக்கு அடித்தது லக்கி ப்ரைஸ் எனலாம்..
மாதமிரு நாடகங்கள் போடுவார்கள்..அதுவும் தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில்.. நிறைய நாடகங்கள் பார்த்திருக்கிறேன்..எஸ்வி.சேகரின் ஒன் மோர் எக்ஸார்ஸிஸ்ட், க்ரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம், மெளலி – அவன் அவள் அது. ஆர்.எஸ் மனோகர் துரோணர்,
.விசுவின் அவள் சுமங்கலி தான், குடும்பம் ஒரு கதம்பம்…அப்புறம் தான் ஆச்சியின் நாடகம்..இதுவும் கதை வசனம் டைரக்ஷன் விசு தான்.
ஆண்டாள் அவள் ஆண்டாள் என்பது நாடகத் தலைப்பு..விறுவிறுவென இருந்த நினைவு..கதைப்படி மனோரமாவாகிய ஆண்டாள் ஒரு அமைச்சர்.. அவர் குடும்பத்திலும், அமைச்சராகவும் எப்படி இருக்கிறார் என்பது கதை.. நன்றாகவே இருந்தது..
ஏன் அவுக தான் ஆடுவாகளா.. அவக அப்படி ஆடினா நான் ஓரமா இருந்து பாத்துக்கறேன்..என்ற நடிப்புக்கும், அந்த அமைச்சராக நடித்த கம்பீரத்துக்கும் வெகு தொலைவு..இரண்டுமே வெகு சுவையானவை..தமிழில் சொல்வதென்றால் சூப்பர் தான்..
கடைசி சீனோ முந்தையதோ சிஎம்மின் வாய்ஸ் மட்டும் வைத்து ஆச்சி சேரில் அமர்ந்த வண்ணம் பதில் கூறுவது பின் நடப்பது என உணர்ச்சிகரமான கட்டம்.. ஸம் திங்க் ஹேப்பண்ட்.. உணர்ச்சிகரமாய் வசனம் பேசி நடந்த போது ஐ திங்க் காதின் தோடு கீழே விழுந்துவிட்டது என நினைக்கிறேன் – ஆனால் கொஞ்சமும் சளைக்காமல் வசனம் பேசி முடித்தபிறகு கைதட்டல்கள் அள்ளியதாய் நினைவு.. நாடகம் முழுக்கச் சுமந்தது ஆச்சி தான்..
பலவருடங்களுக்கு முந்தைய குமுதத்தில் – விவாகரத்து கிட்டு பட்டு ஸ்டைல் என நாடகத்தின் கதை வந்தது..அதில் செளக்கு ப் பதிலாக மனோரமா ஆச்சி.. என நினைவு.. ஸ்டில்களும் வெகு அழகாக இருக்கும்..
ஆச்சியிடம் கவர்ந்தது என்னவென்றால் – ஒவ்வொருவருக்கும் – இது நம்ம அம்மா – இது நம்ம பாட்டி – என ஒவ்வொருவரும் நினைவு கூறும் வண்ணம் வாத்ஸல்யமான தோற்றம். – சிரிக்கும் கண்கள்..தெள்ளிய நடிப்பு.
அவர் நடிப்பில் எதெது பிடிக்குமென எதைச் சொல்ல எதை விட…. குறிப்பாய்ச் சொல்ல..
ஜில் ஜில் ரமாமணி, நடிகன் பேரிளம் பெண் ரோல் தொடர்ந்தால்...
சர்வர் சுந்தரம் – போங்க சார்.. நான் இப்படிச் செஞ்சாத் தான் எல்லோருக்கும் பிடிக்க்கும் என டைரக்டர் எஸ்வி ரங்காராவை மண்டைகாயவைக்கும் நடிகையின் வேடம்
இந்தியன் – இதோ இந்த க்ளார்க்குக்கு இரு நூறு, இவருக்கு முன்னூறு..இவனுக்கு ஐநூறு இந்தப்யூனுக்கு பத்துகொடுத்துட்டேனா இன்னிக்குப் பெரிய ஆஃபீஸர ப் பார்த்து பணம் வாங்கப் போறேன் எனச் சொல்லும் வெள்ளந்தி குணங்கொண்ட பெண்மணி
போலீஸ் காரன் மகள் – ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே ஐயா உன்னை நினைச்சேனே..அர்ச்சுனன் போல முகமிருக்க அனுமார் சாதியைப் பிடிச்சேனே என சந்திரபாபுவை கலாய்க்கும் காதலி
மணல் கயிறு – அன்பே நான் அங்கே நீ இங்கே வாழ்ந்தால் என கிஷ்மூவுடனான நடுத்தரவயது அக்கா வேஷத்தின் கொஞ்சல் அதே படத்தில் ஒரே வார்த்தை சொல்லிட்டானே நீயாருன்னு – என எஸ்வி சேகர் கேட்ட கேள்வியால் நோகும் ஒர்ரே ஒரு கண நொந்த முகத் தோற்றம்..
சிங்கார வேலன் தாயம்மா வாழ்வே மாயம் ஏர்ஹோஸ்டஸ், சின்னத்தம்பி,சின்னக் கவுண்டர் – அம்மாவேஷம், பொன் வண்டு யாருக்காக, ஞானப்பறவையில் ந.தியுடனான பக்குவ நடிப்பு
பட்டிக்காடா பட்டணமா ரோலும் காசே தான் கடவுளடா ரோலும் இரண்டுமே இரு துருவங்கள்.. வெகு அழகாகக் கையாண்டிருப்பார்
சூர்ய காந்தியில் வம்பு மாமி பாடும் தெரியாதோ நோக்கு, முகமதுபின் துக்ளக்கில் பாக்கலாமான்னு பாக்கறேன்னு சொன்னா – என பி.ஏவைத் திணறடிக்கும் லாகவமான பேச்சு…
ம்ம் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..
ஒன்று மட்டும் உறுதி.. அவர் மறைந்திருக்கலாம்..ஆனால் மனித வாழ்க்கையில் நகைச்சுவை உள்ள வரையில் – தமிழ் சினிமாவில் அவரது நடிப்பை யாராலும் மறக்கவே முடியாது.. எல்லாமனங்களிலும் சிரஞ்சீவியாய்த் தான் இருப்பார் மனோரமா..
சென்று வாருங்கள் ஆச்சி.. ( இது நடக்காது எனத்தெரிந்தும் சொல்லாமல் இருக்க முடியவில்லை)
saravanan writes like this about
Vaazthungal
Saravanan writes:
�aruL vadivE paramporuL vadivE� from vaazhthungaL. Sung by K.J.Yesudas. Lyrics by Thelloor
Dharmarasan. Music by L.Vaidyanathan.
Senthamarai Combines� Vaazhthungal- 1978 starred Muthuraman and Chandrakala. It was directed by
C.V.Rajendran. Thelloor Dharmarasan, who also wrote the lyrics and the dialogues, produced the
film. I have not seen the film, but have heard that it was an unusual story beginning with a
girl�s birthday, and the three bizarre calls that the birthday brings with it: an anonymous caller
who threatens to kill her if her father doesn�t part with a specified sum of money, her father�s
friend who calls up hinting at ominous consequences if the money borrowed by her father is not
returned, and a third call from a persistent suitor, who warns of dire imprecations if she wasn�t
given in marriage to him!
There were 4 songs in the film:
poontherE chinna chinna kaaleduthu vaa- SPB
paadattuma aadattuma mOgathin vEgathil- VJ
pudhumugam tharum navarasam- SJ
aruL vadivE paramporuL vadivE- KJY
மதுண்ணா!
இந்தப் படத்திற்கு இசை எல்.வைத்தியநாதன் அவர்களாம். பாடல்களைக் கேட்கும் போதே வித்யாசம் உணர முடிகிறதே. அருமையோ அருமை.
'சுக்ரா'வில் இந்தப் படத்தின் பாடல்களுக்கு விண்ணப்பித்திருந்தேன். அருமை நண்பர் கனி சிரமம் பாராமல் இப்படத்தின் பாடல்களை தேடக் கண்டு பிடித்து அளித்து மகிழ்ச்சிக் கடலில் நம்மைத் தள்ளி விட்டு விட்டார். கிடைக்காது என்றே நினைத்திருந்தேன். கனி பால் வார்த்தார். ஆனால் பாடல்கள் 'வாழ்த்துங்கள்' படப் பாடல்கள் தானா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். உங்களுக்கு ஏதாவது பிடிபடுகிறதா என்று பாருங்கள்.
பாடல்கள்.
1.வாணி ஜெயராம் பாடும் 'ஆடட்டுமா....ஆடட்டுமா' பாடல் அட்டகாசம் அண்ணா! அப்படியே வருடுகிறது நெஞ்சை. முதலில் வரும் ஹம்மிங், இசை எல்லாமே ஆஹா!
'பாடட்டுமா ஆடட்டுமா
மோகத்தின் வேகத்தில் நான் உங்கள் நெஞ்சத்தில்
பாடட்டுமா ஆடட்டுமா'
'ராரராரரராராரரி' என்று வாணி பாடுவது 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'மாங்குடி மைனர்' இரண்டையும் கொஞ்சம் ஞாபகப்படுத்துகிறது.
http://www.mediafire.com/download/9k...aadaddumaa.mp3
2. 'பூந்தேரே சின்னச் சின்னக் காலெடுத்து வா...
பூலோக ரம்பை என்று பேரெடுத்து வா'
ஐயோ! செம ரகளை மதுண்ணா! பாலா கலக்கி விட்டார் கலக்கி. இப்போது கேட்டவுடன் பாடல் நினைவுக்கு வந்து விட்டது. நூறு சதவீதம் அப்படியே டி ராஜேந்தர் அப்போது போட்ட பாடல் போல சும்மா 'ஜிவ்'வுன்னு இருக்கு. வானத்தில் பறப்பது போல 'ஜம்'
http://www.mediafire.com/download/a6...nna+chinna.mp3
3. அடுத்து ஜானகி ஜமாய்க்கிறார்.
'புதுமுகம் தரும் மதுரசம் பெற வா'
http://www.mediafire.com/download/bg...ukamtharum.mp3
அரேபியன் மியூஸிக்குடன் 'யூ நாட்டி பாய்' என்று கொஞ்சுகிறார் ஜானகி வழக்கமான முக்கல் முனல்கலோடு.:) படம்தான் கொஞ்சம் சந்தேகமாய் இருக்கிறது.
4. அப்புறம் இருக்கவே இருக்கு நம்ம தாஸேட்டன் பாடும் 'அருள் வடிவே!' என்ன மாதிரிப் பாடல்! மனசு பஞ்சாய் லேசாகிறது இப்பாடலை ஜேசுதாஸ் குரலில் கேட்கும் போது. ஹேட்ஸ் ஆப் தாஸேட்டன்
http://www.mediafire.com/download/5x...iveparam...mp3
வாழ்த்துங்கள் படத்தைப் பற்றி ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் நூலில் உள்ள தகவல்கள்
நீளம் 3844 மீ.
தயாரிப்பு செந்தாமரை கம்பைன்ஸ்
தணிக்கை 11.01.1978
வெளியீடு 14.01.1978
தயாரிப்பாளர் - போளூர் சி.எம். காசிராஜன்
இயக்கம் சி.வி.ராஜேந்திரன்
வசனம் தெள்ளூர் தர்மராஜன்
இசை எல் வைத்தியநாதன்
நடிப்பு முத்துராமன், சந்திரகலா.
நான் படம் பார்க்கவில்லை. ஒரு நண்பர் சொன்ன கதைப்படி, மூன்று அநாமதேய தொலைபேசிகளே படத்தின் கரு. கடைசியில் தமிழ் சினிமாவின் வழக்கப்படி படம் சுபமாக முடிய வேண்டும் என்பதற்காக அந்த மூன்றுமே அவர்கள் குடும்பத்தில் ஒருவர் ஒரு த்ரில்லுக்காக செய்ததாக சொல்வதாகவும் ஆடியன்ஸைப் பார்த்து எல்லோரும் வாழ்த்துங்கள் என்று சொல்வது போல முடித்திருந்ததாகவும் சொன்னார்.
வாசு சார்
பாலுவின் பூந்தேரே பாட்டு சிலோன் ரேடியோவில் தினமும் 8.15 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில் அடிக்கடி இடம் பெறும். சிலோனில் சூப்பர் ஹிட்.
நம்ம ரேடியோவில் அருள் வடிவே பாட்டைத் தவிர வேறெந்தப்பாட்டையும் ஒரு முறை கூட ஒலிபரப்பியதாக நினைவில்லை.
ஜி!
நான் பாடல்கள் போஸ்ட் செய்துவிட்டு பார்த்தால் உங்கள் பதிவும் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.:) வாழ்த்துங்கள்.:) என்னப் பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம். ஜி ஜிதான். கலக்குறீங்க ஜி!:)
ராகவேந்திரன் சார்,
அடி தூள். மதுர கானங்கள் அன்பர்களா கொக்கா! பாடல்களை கேட்டால் பரம சுகம். நன்றி சார்.
இசையரசி இசைத்த கீதங்கள் – 6
ஆச்சி நம்மைவிட்டு சென்றுவிட்டார். இதைவிட ஒரு இழப்பு இருக்க முடியுமா ..
இதோ ஆச்சிக்கு இசையரசியின் குரலில் சோகமான பாடல்
குந்தி புத்ருடு என்ற தெலுங்கு படத்திற்காக இளையராஜாவின் இசையில் அருமையான பாடல்
https://www.youtube.com/watch?v=YNsp02nNy8s
https://www.youtube.com/watch?v=pXk5bBPU6bw
https://www.youtube.com/watch?v=RwpIUc2FFnM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
42
'நடப்பது சுகமென நடத்து'
https://i.ytimg.com/vi/svRAEAfMiwk/hqdefault.jpg
'மூன்று தெய்வங்கள்'
இன்றைய பாலா தொடரில் படுகுஷியான ஒரு பாடல். மூவர் கூட்டணி. அதுவும் நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் என்று. புவனேஸ்வரி மூவிஸ் 'மூன்று தெய்வங்கள்' (1971) படத்தில் நடிப்பின் தெய்வத்தோடு நவரசத்திலகம், நகைச்சுவைத் திலகம் இருவரும் இணைந்து அட்டகாசம்.
கோபுவின் கதை வசனத்தில் படமும் செம காமடி. அம்சமான ஒளிப்பதிவை பதித்தவர் கே.எஸ்.பிரசாத். தாதாமிராசியின் இயக்கத்தில் மூன்று ஜாலி புதிய பறவைகள் நம் கண்களுக்கு புதுமையாக.
மூவருக்கும் மூன்று பாடகர்கள் முறையே டி.எம்.எஸ், பாலா, சாய்பாபா என்று. மூவரும் அவரவர்கள் பாணியில் குரல் தந்து குதூகலப்படுத்தியிருப்பார்கள்.
நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் மூவருக்குமே வித்தியாசான கெட் -அப். வாக்கிங் ஸ்டிக், தொப்பி, கண்ணாடி, கோட், சூட், டை சகிதம் மூவரும் ஜாலியோ ஜாலி.
'நெஞ்சிருக்கும் வரை'யில் நடிகர் திலகம், முத்துராமன், கோபாலகிருஷ்ணன் மூவரும் சாலையில் வேகாத வெயிலில் ஆடிப் பாடும் நெஞ்சில் நிறைந்த பாடல் 'நெஞ்சிருக்கும் எங்களுக்கும் நாளை என்ற வாழ்விருக்கும்' பாடல்.
அது போல இந்தப் பாடலும் ஒரு பிரமாதமான பாடலே. கோபாலகிருஷ்ணனுக்கு பதில் இதில் நாகேஷ்.
அது வறுமையை பின்னணியாகக் கொண்ட, தன்னம்பிக்கையை தங்களுக்கே ஊட்டிக் கொண்ட வேலையில்லா தரித்திர இளைஞர்களின் தி(கொ) ண்டாட்டப் பாடல்.
இதுவோ ஜெயிலில் இருந்து தப்பி வந்து, முன்பின் தெரியாத ஒரு குடும்பத்தில் ஐக்கியமாகி, அந்தக் குடும்பத்து இளம் பெண்ணின் காதலை மட்டுமல்ல...அந்தக் குடும்பத்தையே வாழ வைக்கும் மூன்று திருடர்களின் கதை.
சந்திரகலாவின் காதலன் சிவக்குமாரின் மாமா வி.கே.ஆரை சரிகட்ட மூவரும் இளைஞர் நாடக மன்ற உடுப்புகளை மாட்டிக் கொண்டு மாறுவேடத்தில் பாடும் உல்லாச கீதம்.
இளம் சிறார்கள் இன்னிசை வாத்தியங்கள் வாசிக்க, மூவரும் மலை, கோவில் என்று வெளி இடங்களில் ஆடிப் பாடி மகிழும் பாடல். பாடல் முழுவதும் வெளிப்புறப் படப்பிப்பு.
http://i.ytimg.com/vi/9YiNDzAL3P4/hqdefault.jpg
காதில் கடுக்கணுடன், அனைத்து விரல்களிலும் வட்ட மோதிரங்கள் ஜொலிக்க, நடிகர் திலகம் செம ரிலாக்ஸாக, காமெடி பொங்க, அலட்சிய மூவ்ஸ் கொடுத்து வழக்கம் போல முதல் இடம். குழந்தைகளுடன் குழந்தையாக சின்ன சாக்ஸ் வாசித்து பாடகர் திலகத்தின் குரலில் பின்னி எடுப்பார். ஆட்டத்தில் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இந்தப் பாடலில் டி.எம்.எஸ் அவர்களின் வாய்ஸ் வழக்கத்தைவிடவும் நடிகர் திலகத்திற்கு இன்னும் பொருத்தமாக இருப்பது போல் தோன்றும்.
குறிப்பாக அந்த குறுகலான கருங்கல் தடுப்பு சுவர் பாலத்தில் 'டேப்' டான்ஸ் எனப்படும் ஆட்டத்தை நடிகர் திலகம் பின்னணி ஒலிகளுக்கு ஏற்ப சரவ சாதராணமாக ஆடி வருவது பலே பல் பல். கால்கள் அப்படியே அவர் சொன்ன பேச்சைக் கேட்கும். கால்களை மாற்றி மாற்றி வைத்து ஆடியபடியே கைகளை மார்புக்குக் குறுக்கே மடக்கியும் நீட்டியும் அவர் செய்யும் நடன அசைவுகள் அசாதாரணமானவை. அது மட்டுமல்லாமல் ஒரு கால் முழங்காலை மட்டும் உயர்த்தி முன்னும் பின்னும் ஆட்டியபடி அவர் கொஞ்சம் கூட பேலன்ஸ் தவறாமல் அந்த குறுகலான கற்பாலத்தின் மேல் ஆடி வரும்போது இந்த மனிதருக்கு தெரியாதது ஒன்றுமே இல்லையோ என்று வழக்கம் போல எல்லோர் மனமும் நினைக்காமல் இருக்காது. நன்றாக கவனியுங்கள். அவர் பின்னால் வரும் முத்துவும், ஏன் நாகேஷும் கூட இந்த இடத்தின் நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடுவார்கள்.
பின் ஒலிக்கும் விசில் சப்தத்திற்கு ஆடியவாறே ஷேக் நடை ஒன்று போட்டு வருவது படா ஷோக். தொடர்ந்து வரும் டிரம்பெட் ஒலிக்கு இடுப்பொடித்து இவர் ஆடுவது எவருமே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
ஸ்டிக் பிடித்து குனிந்து பின்பக்கம் உடலைத் தள்ளுவதைக் கூட மிகுந்த சிரத்தையுடன், பெர்பெக்ஷனுடன் செய்வார். மற்ற இருவரும் இந்த மூவ்மென்ட்டிலும் மூத்தவருக்குப் பின்னால்தான்.
கோவில் படிக்கட்டுகளில் கோயில் காளை போல துள்ளிக் குதித்து இறங்கி நண்பர்களுடன் கை கோர்த்து நடிகர் திலகம் கொண்டாட்டம் போடுவது கொள்ளை போக வைக்கும் மனதை.
முத்துராமனும் ஜாலியாக சாப்ளின் ஸ்டைலை பின்பற்றி ஆட்டம் போடுவார். நாகேஷ் பற்றி ஆட்டத்தில் சொல்லவும் வேண்டுமோ!
பாடலும், காட்சி அமைப்பும் என்னவோ காமெடி ஜாலிதான். ஆனால் நடன ஸ்டெப்கள் மிகுந்த சிரமமானவை. அதை கொஞ்சமும் சிரமம் பாராமல் மூவருமே சிரத்தை எடுத்து சிறப்பாக பாடலை முடித்துக் கொடுத்திருப்பார்கள். இதில் நடிகர் திலகத்தின் பங்கு ஜாஸ்தி. அதில் அள்ளும் வெற்றியும் ஜாஸ்தி.
நடனக்காட்சியை மிகச் சிறப்பாக அமைத்துக் கொடுத்த பி.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும், பசுமரத்தி கிருஷ்ணமூர்த்தியும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
'மெல்லிசை மன்னர்' மிரட்டியிருப்பார். ஆரம்ப உற்சாக இசையின் ஊடே டி.எம்.எஸ் 'ஓஹோஹோ லா லா லா லலா ' என்று ஹம்மிங் எடுக்கும் அழகே அழகு. அவர் பின்னாடியே தொடரும் தொடரின் நாயகரும் தன் பங்குக்கு சளைக்காமல் பிரமாதமாக 'ஹம்'முவார்.
சின்ன சின்னதாய் அவ்வப்போது ஒலிக்கும் ஹார்மோனிய ஒலிகளும், ஆர்கன்களின் இனிமையும், 'ஜிகுஜிகு'வென புகுந்து புறப்படும் புல்லாங்குழல்களின் சப்தங்களும் 'மெல்லிசை மன்னரி'ன் இசையறிவுக்குச்
சான்றுகள்.
ச்சும்மா ஜாலிப் பாட்டுதானே என்று அலட்சியம் காட்டினீர்கள் ஆனால் பல இசைச் சித்து வேலைகளை கவனித்து ருசிக்காமல் கோட்டை விட்டு விட்டவர்கள் ஆவீர்கள். அவ்வளவு சங்கதிகள் இந்தப் பாடலில் கொட்டிக் கிடக்கின்றன. பாடலின் டியூனோ அதியற்புதமானது.
நாகேஷுக்குத்தான் சாய்பாபா குரல் எவ்வளவு பொருத்தம்! இந்த காமெடி மன்னனுக்கு ஏ எல்.ராகவன், சீர்காழி, டி.எம்.எஸ் என்று அனைத்துக் குரல்களும் பாங்காகப் பொருந்தி விடுகின்றன. இத்தனைக்கும் கொஞ்சம் 'கீச்' குரல் கொண்டவர் இவர்.
முத்துவுக்கு பாலாவின் குரல் ஓகே. பாலா பாடகர் திலகத்திற்கு இனிமையாகப் பாட முயற்சித்து அதில் வெற்றியும் கண்டிருப்பார். குரல் வழக்கம் போல பனிக்கட்டி பாதாம்கீர் இனிமை. தனித் தன்மையோடு இழைந்து, குழைந்து ஒலிக்கும்.
ஒரு இடத்தில் நாகேஷுக்கு சாய்பாபா குரல் இல்லாமல் பாலா குரல் பின்னணி ஆகி விடும். இது தவிர்க்கப்பட்டிருக்கலாம். கன்டின்யூட்டியில் விடும் கோட்டை. இது போல 'கலாட்டா கல்யாணம்' படத்தின் 'எங்கள் கல்யாணம்' பாடலிலும் குரல்கள் நடிகர்களுக்கு ஒரு சில இடத்தில் மாறும்.
அடைக்கலம் கொடுத்த குடும்பத்தின் பெண்ணை காதலனுடன் சேர்த்து வைக்க மூவரும் பாடும் பாடுவது அவர்கள் பாடும் பாடல் வரிகளிலும் பிரதிபலிப்பதை உணரலாம். ('கல்யாணம் பொய் சொல்லிக் கல்யாணம், சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே) கண்ணதாசனின் மகத்தான பங்கு அது. ஒரு கல்யாணம் பண்ணி வைக்க, அது சுகமாய் முடிய, பொய் பித்தலாட்டம் பண்ணிக் கூட செய்யும் வழிகள் சரியே என்று கதையோடு ஒத்து வரும் கருத்துக்கள் சபாஷ் போட வைக்கின்றன இப்பாடலில்.
http://i57.tinypic.com/23ickex.jpg
ஓஹோஹோ லாலாலலா
லலலா லலலா ஹாஹஹா ஹோஹஹோ
டி.எம்.எஸ்
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
பாலா
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
லல்லல்லல் லலலல்லல்லல் லலலல்லல் லலலல்லல்லா
போதாது நீ கண்ட ராஜாங்கம்
பாலா
பேசாதே போலி வேதாந்தம்
சாய்பாபா
பாராதே வெறும் பஞ்சாங்கம்
டி.எம்.எஸ்
உனக்கொரு உலகத்தை அமைத்து
வளர்த்து எடுத்து நடத்து
பாலா
சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே
டி.எம்.எஸ்
சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே
மூவரும்
நானென்று பேர் சொல்லி நடை போடு
ஏனென்று கேட்போரை எடை போடு
டி.எம்.எஸ்
நடப்பது சுகமென நடத்து
பாலா
வரும் நாளை உனதென நினைத்து
டி.எம்.எஸ்
வாழ்வே பெரிதென மதித்து
பாலா
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
டி.எம்.எஸ்
கல்யாணம் பொய் சொல்லிக் கல்யாணம்
பாலா
பெண் வேணும் வீட்டுக்குப் பொன் வேண்டும்
சாய்பாபா
கண் போடு மெல்லக் கை போடு
டி.எம்.எஸ்
சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே
பாலா
அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையைச் சேர்க்க வேண்டும் பெண்ணோடு
டி..எம்.எஸ்
அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையைச் சேர்க்க வேண்டும் பெண்ணோடு
மூவரும்
செல்வங்கள் கை மாறி உருண்டோடும்
உள்ளங்கள் இடம் மாறி விளையாடும்
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
https://youtu.be/ZQABO4Dk7hQ
வாசுஜி...
ம.க.ம.கா ஒரு அட்சய பாத்திரம் அல்லது அமுத சுரபி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு விட்டதால் எல்லோரும் "வாழ்த்துங்கள்" என்று கேட்டுக் கொள்கிறேன்.
அட கடவுளே... இந்த மூன்று பாடல்களுமே நான் கேட்டவைதான். ராகவ்ஜி சொல்லியிருக்கிறது போல இலங்கை வானொலியில் கேட்டிருக்கலாம். நினைவில் இல்லை. ஆனால் ஒவ்வொரு பாடலையும் கேட்க ஆரம்பித்ததுமே மெல்ல மெல்ல சரிந்தோடும் அருவி போல வரிகள் நினைவுக்கு வந்து விட்டன. ம்ம்.. இது போல எத்தனை எத்தனை முத்துக்கள் எந்தெந்த சிப்பிகளுக்குள் மறைந்து கிடக்குதோ ?
முத்துக் குளிக்க வாரீயளா ?
( ஆச்சியின் மறைவு அஞ்சலிகளில் பலரும் தில்லானா மோகனாம்பாளின் பாண்டியன் நானிருக்க பாடலும் அனுபவி ராஜா அனுபவி படத்தின் முத்துக் குளிக்க வாரீகளா பாட்டும் மனோரமா சொந்தக் குரலில் பாடியதாக வரிந்து கட்டிக் கொண்டு எழுதி இருக்காங்க..அவை எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலால் பிரபலமானவை அல்லவோ... திரை இசைப் பாடல்களை மிகவும் அறிந்து திறனாய்வு எழுதும் ஒருவர் தன் பதிவில் இவ்வாறு தவறுதலாக குறிப்பிட்டு எழுதி இருந்தார். இதை பதிவில் குறிப்பிட்டால் அவருக்கு கஷ்டமாக இருக்கும் என்று தனிமடல் அனுப்பினேன்... ஹிஹி.. என்னை குரூப்பிலிருந்து தள்ளிட்டாங்க )
ரவி சார்,
//நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !! //
மகாபாரதத்தில் ராதை சீதை ஆன கதை படித்து பரவசப்பட்டேன். அருமையாக இருந்தது.
சின்னா!
எங்கிருந்தோ வந்தாளின் நாடகப் பாடலை அளித்து ஆனந்தப் பட வைத்து விட்டீர்கள்.
//( எப்போ கேட்டாலும் பார்த்தாலும் அலுக்காத கானம்)//
உண்மை... உண்மை... முக்காலும் உண்மை. துஷ்யந்தன் தூள்.
சினிமாவுக்குள் நாடகம்.
'உனக்காக நான்' படத்தில் மில் தொழிலாளிகள் நடத்தும் டிராமா.
https://i.ytimg.com/vi/nwrqwmVBIEE/mqdefault.jpg
காடு கண்டா வெறகு வெட்டுறது... ஆமா ஆமா
அதைக் கட்டுக் கட்டா வெலைக்கு விக்கிறது... ஆமா ஆமா
நாங்க தலையில் வைக்கிறது
நல்லா தளுக்கி விக்கிறது
யாரும் வடிக்க வந்தா வெறகுமில்லே
புலியைக் கண்டா உயிருமில்லே
அந்தரத்தில பொழைப்பு நிக்கிறது
அந்த ஆண்டவன்தான் துணைக்கு நிக்குறது
வி.கே.ஆர். புலியாக வந்து (அப்பா! எம்மாம் பெரிய தொப்பைப் புலி!:) பாவம் வி.கே.ஆர்.) நிர்மலா உள்ளிட்ட விறகு பொறுக்கும் பெண்களை செட்டில் விரட்டுவார்.
பெண்டுகள் நடுங்கி ஆறுமுக சாமியை வேண்ட, ஒய்.ஜி.மகேந்திரனின் ஹார்மோனியம் ஒலிக்க, ஆச்சி புலித்தோல் அணிந்து வேல் பிடித்து முருகனாக அவதாரம். பாகவதர் ரேஞ்சுக்கு பாடல். அலட்சிய நடை
'பாடுபடும் ஏழை நிலையே
பார்க்கவே சகிக்கலயே'
தொல்லை கொடுத்த புலி வி.கே ஆருடன் ஆச்சி முருகன் சண்டையிட்டு சூரசம்ஹாரம் பண்ணுவார்.
அப்படியே மேடையிலேயே யூனியன் லீடரை தேர்ந்தெடுக்க நாடகம் பார்க்கும் ஜனங்களிடம் ஓட்டு வேட்டை வேறு.
'சங்கரனை (ஜெமினி) தேர்ந்தெடுத்தா சங்கடமில்ல
தர்மலிங்கத் தாத்தா (எஸ்.வி.சுப்பையா) மேல நம்பிகையில்ல'
எஸ்.சி.கிருஷ்ணன், ஈஸ்வரி, ஆச்சி பாடியது.
சுவையான ஜாலி சாங்.
http://s2.dmcdn.net/C50ro.jpg
http://www.dailymotion.com/video/x17...agu_shortfilms
'உணர்ச்சிகள்' படத்தில்
பொன்னாசையா
பெண்ணாசையா
மண்ணாசையா
மனிதன் ஆசைகள்
பாடல். சுமார்தான். ஆனால் வித்தியாசமான குரலில். சின்னா! குரல் யாரென்று தெரிகிறதா?
https://youtu.be/5YeCyVOwN7Q
vanakkam ji
வணக்கம்ஜி! வணக்கம் வாங்கோ! வாங்கோ!
மதுண்ணா!
'சக்கரம்' படத்தில்
'ஒருநாள் இரவு ஒரு மணியளவு விழித்துக் கொண்டாள் ஒரு மாது'
என்று ராட்சஸி பாடும் ஒரு பாடல் உண்டே! படத்தில் யார் பாடுவது போல வரும்? நினைவில்லையே!
//பாடல். சுமார்தான். ஆனால் வித்தியாசமான குரலில். சின்னா! குரல் யாரென்று தெரிகிறதா? // கோபு சார் வந்து எதுவும் சொல்லிவிடும் முன் நாம் நம்ம கெஸ்ஸ சொல்லிடலாம் ..என்ன மன்ச்சு.. சொல்லு எப்படியும் தப்பாத்தான் இருக்கப் போகுது..ஆனா நீ ஒரு கேள்வி கேக்கலையே.. ஹிஹி..அது ஷீலுவா இருக்கும்னு ஒரு சம்சயம்..ஆண்குரல் நாகூர் ஹனிபா சாயல்ல இருக்கு கரெக்டா..
ம்ம் வாழ்த்துங்கள் படப் பாட்டு தேடிக் கெடைக்கல..பட் நேத்துக்கு சிச்சுவேஷன்ல ஒரு எழுத்து மாறியபடபாட்டு கொடுக்க முடியலை..இப்பக் கொடுக்கறேன்..
பட் என்னா பாட்டு அது தெரியுமா.. சரிதாண்டி போடி என் தங்க வானம் பாடி..
https://youtu.be/i77xCHFRi-0
வாழ்த்துங்களில் அருள்வடிவே பரம்பொருள் வடிவே தவிர வேறு எதையும் கேட்டதில்லை.. எனக்கு வாணி பாட் பிடித்திருந்தது.. எஸ்பிபி..ரேடியோவிலும் நான் கேட்டதிலலியே ..ஜானகி சோ சோ தான்..விவரங்கள் விளக்கங்கள் அளித்த ராஜேஷ் ஜி, ராகவேந்த்ர் சார் மதுண்ணா வாஸ்ஸூ அனைவருக்கும் ஒரு க்ரூப் தாங்க்ஸ்.. தப்போ..சரி ஒரு டோட்டல் தாங்க்ஸ் :)
கிச்சு கிச்சு தாம்பாளம் 1
In fond memory of Manorama!
Gap filler / Monotony breaker! Just for a change!!
தமிழ்த்திரை தந்தி மகாத்மியம் ! / Telegram Thrills in Tamil Cinema !
https://www.youtube.com/watch?v=9Lz80YybGFUQuote:
தந்தி சேவை என்பது தற்காலத்தில் செல்போன் தொழில்நுட்பங்கள் போட்ட போட்டில் நிரந்தர நினைவுச் சின்னமே ஆகி விட்டது !
தமிழ்த் திரையில் தந்தி என்பது பெரும்பாலும் கெட்ட சேதி தாங்கி வரும் ஊடகமாகவே பய(ன்)ப்படுத்திக் கொண்டிருந்தது திரைக் கதையோட்டத்தில் ஒரு சுவாரஸ்யம் திடுக் திடுக் திரில் வேண்டியே !!
//ஒரு இடத்தில் நாகேஷுக்கு சாய்பாபா குரல் இல்லாமல் பாலா குரல் பின்னணி ஆகி விடும். இது தவிர்க்கப்பட்டிருக்கலாம். கன்டின்யூட்டியில் விடும் கோட்டை. இது போல 'கலாட்டா கல்யாணம்' படத்தின் 'எங்கள் கல்யாணம்' பாடலிலும் குரல்கள் நடிகர்களுக்கு ஒரு சில இடத்தில் மாறும்.
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து//
நெசம்மாவே மறந்து போன பாடல் வாஸ்ஸு..அவ்வளவாக நெஞ்சில் நிற்கவில்லை எனலாம் படம் தியேட்ட்ரில் பார்த்த போதும் சரி.. பின்னர் வீடியோ டிவிடி எனப் பார்த்த போதும்சரி.. நின்றவை.. முதல் பாடல் மீன்ஸ் வெங்கடேசன்பாடல் அப்புறம் தாயெனும் செல்வங்கள்..ஆனால் அதில் எஸ்.பி.பி பாடியிருக்கிறார் எனத் தெரியாது.. வழக்கம்போல கலர்ஃபுல் நேர்ரேஷன்.
கன் டின்யூட்டி நீங்கள் குரலில் சொல்கிறீர்கள்.. நான் திரையிலேயே சொல்வேனாக்கும்..அதற்கு முன் (வேறு வழியில்லை..கதை கேட்டுத்தான் ஆகணும் :) )
கதை என்றவுடன் ரா.கி.ரங்கராஜன் எழுதிய கன் டின் யூட்டி என்ற கதை நினைவில்..
*
அவர் ஒரு ஆகச் சிறந்த டைரக்டர்..சிம்மன் என வைத்துக் கொள்ளலாம்.. அவருக்கு எல்லாமே பெர்பெக்டாக இருக்கவேண்டும்.. ப்ளஸ் கன் டின்யூட்டி அவருக்கு ரொம்ப முக்கியம்..பார்த்துப் பார்த்துத் திரையில் செதுக்குவார் அவர்..
ஒரு தடவை ஷூட்டிங்கில் ஏதோ தகராறு வர ஷூட்டிங் எடுத்த இடத்துக்குப் பக்கத்து வீட்டில் இருந்த ராம சுப்பிரமணியன் என்பவர் அந்தப் ப்ராப்ளத்தை சால்வ் செய்கிறார்..
ஏற்கெனவே சிம்மனுக்கு எடுக்கும் படக்கதை சரியில்லையோ என ஒரு சின்னக் குழப்பம் .. அந்தக் குழப்பத்துடன் ராம சுப்பிர மணியனுடன் பேசுகையில் எதிர் வீட்டில் ஒரு ஐந்து வயது சிறுவனைப் பார்க்கிறார்..
மனதுக்குள் ஃப்ளாஷ்.. கதையின் க்ளைமாக்ஸில் நாயகிக்கு மணமாகி குழந்தையாய் இந்த ச் சிறுவன் இருப்பது போலக் காட்டலாம்..முன்னாள் காதலனான கதா நாயகன் ஹெல்ப் பண்ணுவது போலவும் செய்யலாம்..ஒக்கார்ந்துயோசித்தால் நன்றாகவே வருமே..
ராமசுப்பு..அந்தப் பையன் நடிப்பானா..
ஓ.. நீங்க யாரைப் பத்திக் கேக்கறீங்க தெரியுமா
யாரு
திரிலோக சுந்தரி தெரியுமா அந்தக்காலக் கனவுக்கன்னி
யா..
அவங்களோட பேரன் தான் இவன்.. பாட்டியும் பேரனும் இப்ப இருக்கறது அமெரிக்கால.. இங்க ஹாலிடேக்காக வந்திருக்காங்க..
ஓய் கேட்டுப் பாருமேன் - சிம்மனுக்குமகிழ்ச்சி மனதில்..ஆகா நடிப்புக் குடும்பம்.. ஸோ நடிப்பு ஜீன் ல இருக்கும் எடுத்துடலாம்..
கேட்டால் இரண்டு மாத லீவ் என்பதாகவும் அதற்குள் முடித்து விட வேண்டும் என்றும் சரி இன்ன தொகை என தி.சு சொல்லி அதற்கு சிம்மனும் ஒத்துக்கொள்ள மடமடவென ஷூட்டிங்க் பத்து நாட்கள் தொடர்ந்தன
தி.சு பேரனும் சூப்பராகவே நடித்தான்.. ரொம்ப அழகு..
பதினோராவது நாள் ஷூட்டிங்க்கிற்கு பையன் வரலை..
வீட்டிற்கு ப் போய்ப்பார்த்தால் வீடு பூட்டி...
ராம சுப்பு..
ஓ.. தெரியலீங்களே..
சோர்வாய் ஸ்டூடியோ வந்தால் அமெரிக்காவிலிருந்து ஃபோன் தி.சு தான்.. பேரனின் அம்மாவிற்கு - அவள் மாட்டுப்பெண்ணிற்கு திடீரென உடம்பு சரியில்லாததால் உடனே புறப்பட வேண்டிவிட்டதாம்.. சாரிங்க.. பேரனை இப்பதைக்கு அனுப்ப முடியாது.. நீங்க வேற ஏற்பாடு பண்ணிக்கோங்க..
சிம்மன் மனதில் பிரளயம்.. க்ளைமாக்ஸ் மாத்தலாமா.. ச்சே ச்சே வேணாம்.. நல்ல கதை முக்காலே மூணுவீசம் முடிஞ்சாச்சு..இப்ப இப்படியா ஆகணும்..
ஒரு உ.டைரக்டர் உதவிக்கு வந்தான்..சார்.. என்னோட ரில்லேடிவ்க்கு ஒரு பையன் அவனுக்கும் அஞ்சு வயசு..கொஞ்சம் பாருங்க..
பார்த்தால் அசந்துபோனார் சிம்மன்..
அப்படியே தி.சுவின் பேரன்.. கொஞ்சூண்டு தான் வித்யாசம்..அதுவும் தெரியவில்லை..
தாங்க்ஸ் உதவி.. எனச் சொல்லி படத்தின் சில பல ஷாட்களை மடமடவென் எடுத்து படத்தை முடித்து... ரிலீஸ் செய்தால்...
படம் எக்கச்சக்க ஹிட்..
ஒரே புகழ் மழை தான்.. அதுவும் க்ளைமேக்ஸ் சூப்பர் .. முன்னாள் காதலனை பையனோட அம்மா கண்கலங்க கண்மை கரையப்பார்க்க, பையன் சிரித்தபடி டாட்டா அங்க்கிள் என்பது வெகு அழுத்தம், எதார்த்தம் என தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் உயரத் தூக்கிக் கொண்டாடினார்கள்..படத்தையும்..சிம்மனையும்..
படம் ரிலீஸான மறு நாள் எதேச்சையாக ராம சுப்புவைப் பார்த்தார் சிம்மன்..
ஹலோசார் செளக்கியமா
செளக்கியம் ராம சுப்பு.. நீங்க எப்படி இருக்கீங்க.. கண்ணிலே நின்றவள் பார்த்தீங்களா
ஓ.. பார்க்காம ரொம்ப ஜோர் சிம்மம் சார்.. கடைசியில வேற பையனை எடுத்துப்படத்தை முடிச்சுட்டீங்க போல இருக்கே
சிம்மம் அதிர்ந்தார்.. யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் மூச்சே விடாமல் படத்தின் டைட்டிலில் கூட முன்னாள் திரிலோக சுந்தரியின் பேரன் என்று மட்டும் போட்டு எடுத்த படம்..எப்படி இவருக்குத் தெரிந்தது.. யார் சொல்லியிருப்பார்கள்..
அவர் முகமாற்றத்தைப் பார்க்காமலேயே பேசிக்கொண்டு போனார் ராம சுப்பு..
ரொம்ப அழகாத்தான் பிடிச்சுருக்கீங்க.. கூர்ந்துபார்த்தா தான் ரெண்டு பசங்களுக்கும் டிஃபரன்ஸ் தெரியும்..ஆனா ஒரே ஒரு விஷயத்துல நீங்க கோட்டை விட்டுட்டீங்க.. நல்லவேளை யாரும் அதைப் பத்திப் பேசலை..ஆனா நான் கவனிச்சேன் சிம்மம் சார்
என்னய்யா கவனிச்ச.. வாய்வரை வந்த கத்தல் அடங்கி சிரித்து...என்ன கவனிச்சீங்க ராம சுப்பு சார்..
பட ஆர்மபக் காட்சியில ஹீரோவோட ஒரு பாட்டு அந்தப் பையன் பாடறான் இல்லியா அப்புறம் எண்ட்ல டாட்டா காட்டறான் இல்லியா..
ஆமா..
பாட்டில அந்தப் பையனுக்கு ஆறு விரல்.. டாட்டா காட்டறச்சே அஞ்சு விரல்..எப்படி கன் டின்யூட்டிய மிஸ் பண்ணீங்க..சிம்மம் சார்..
வாழ்க்கையே வெறுத்து விட்டது சிம்மத்திற்கு....எனக் கதையைமுடித்திருப்பார் ரா.கி. ரங்கராஜன்..
*
ம.தி. தேவிகா பாடும் வெகு அழகான பனியில்லாத மார்கழியா பாடல்
லாங்க்*ஷாட்டில் எல்லாம் தேவிகாவிற்கு பொட்டு இருக்காது. க்ளோஸப் ஷாட்டில் அவர் முகம் மாதிரியே கோபிப் பொட்டு இருக்கும்.. தென் ஆ ஆ அ அ..என்ற ஹம்மிங்கில் நோ பொட்டு, அடுத்த ஷாட் பொட்டு..
நிலையில்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும் - நோ பொட்டு
பருவம் செய்யும் கதையல்லவா? - பொட்டு இஸ் தேர் வித் சேஞ்ச் ஆஃப் ஹேர் ஸ்டைல் ஹி..ஹி..
https://youtu.be/WYNNiDOAgFY
மனோரமா நினைவாக ( நிஜமாத் தாங்க..சொன்னா நம்பணும்..:) )
அடடா மன்னன் கண்ணனடி
ஆயிரம் கலையில் மன்னனடி
பருவம் கவரும் கள்ளனடி
பள்ளியில் பாடும் கவிஞனடி
அறியாத பெண்ணிடம் அவன்
சொன்ன வார்த்தை
விரிவாகச் சொல்லவோ அறியேனே தோழி
ஹோ என்னை அவன் மெல்ல
தன் கையிரண்டில் அள்ள
நான் மெல்ல மெல்லத் துள்ள
ஓ என்னவென்று சொல்ல
அவனைக் கண்டால் வரச் சொல்லடி
அன்றைக்குத் தந்ததை தரச் சொல்லடி
தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி
தனியே நிற்பேன் எனச் சொல்லடி
இரு வல்லவர்கள் மனோரமா, எல்விஜயலஷ்மி மற்றும் பலர்..
https://youtu.be/72-uy3b4kqY
என்னமோ போங்க – 27
அக்னி நட்சத்திர வெயிலடித்த இரவில் ஆடியோடி வீடு வந்து சேர்ந்து – அதாவது மதுரையில் இருந்த பொழுது - கண்ணை மூடிப் படுக்கையில் தூங்குவதற்கு முயற்சிக்கும் போதே பொசுக்கென கரெண்ட் போய்விடும்..தடுமாறி எழுந்து கொஞ்சம் அந்தப்பக்க ப் பலகையில் வைத்திருக்கும் மெழுகுவர்த்தி அதன் பக்கத் தீப்பட்டி எடுத்து மெல்ல உரசி சின்னதாய் வைத்து,பின் இங்கிட்டு தானே பார்த்தோம் எங்குபோச்சு எனவிசிறியைத் தேடி எடுத்து படுத்தவாக்கிலேயே இரண்டு ஆட்டு ஆட்டினால் விசிறிவழி வரும் காற்று இருக்கிறதே பரம சுகம்.. காற்று தழுவத் தழுவ கண்ணுறக்கம் எப்போது வந்தது என்றே தெரியாது..
விசிறி – கரெண்ட் இல்லாமல்காற்று தரும்
விசிறி ( நடிக, நடிகையரின்) - சொந்தம் இல்லாமலே புகழ் பரப்புவர்
விசிறி – தூண்டி விடக் கைகள் வேண்டும்
விசிறி – ( ந, ந) – துண்டிவிட நடிப்பு வேண்டும்
வேறென்னவெல்லாம் சொல்லலாம்.. ஆமா இதை எதற்குச் சொல்றேன்.. அட.. ஏன் இப்படிப் பார்க்கறீங்க :)
அங்கே ஏனிந்தப் பார்வை அய்யய் அய்யய்ய..
ஆசைக்கென்ன காசா பணமா ஆடிப் பார்ப்போம் வாங்க
ஆடும் போதே துள்ளித் துள்ளிப் பாடிப் பார்ப்போம் வாங்க மாட்டீங்களா.. ம்ம் என்னமோ போங்க :)
https://youtu.be/AB7WmDS81ZM
From anubhavi raja anubhavi (1967)
muthu kuLikka vaareegaLaa......
http://www.youtube.com/watch?v=BiD6xmKQcwg
From the Hindi remake, Do Phool (1973)
muthu kodi kawari hada.....
http://www.youtube.com/watch?v=VWt9njK6u-o
Cika
here is another fatafat song ..
https://www.youtube.com/watch?v=RZqTtTiECt8
Hi good morning all..
Thanks rajesh.
நேற்றெழுதிய பாடல் கேசவ்வின் படத்திற்கு
மாலன் மடிதனில் மாறாத புன்னகையில்
ஆழ உறங்கும் அழகியலே – காலமும்
கண்ணன் மடியினில் கண் துஞ்ச நீயுந்தான்
என்னதவம் செய்தாய் இயம்பு..
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...b795465ed21395
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்..
https://youtu.be/P-p0zdfAUXg
சரி மக்கள் பிஸியாக இருக்காங்க போல..ஸோ...
ஜூலி அறிமுகமான முதல் படம் பருவ ராகம் ..கன்னட நடிகர் ரவிச்சந்திரனின் ஜோடியாய் வந்து பின்னர் ஹிந்தியில் ஜூஹி சாவ்லா என பெயர் மாற்றி பல படங்களில் நடித்தவர்..
முதல் படத்தின் அழகே தனி.. நிறைய நல்ல பாடல்கள்.. ஒரு மின்னல் போல் என் முன்னால் போவதுயாரு.. அப்புறம் பூவே உன்னை நேசித்தேன்..
பூ.உ. நே திடீர்னு நினைவுக்கு வந்து தலைக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது
பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூஜித்தேன்
கண்ணில் பாட்ம வாசித்தேன்
காதல் வேண்டும் யாசித்தேன்
சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே
உள்ளத்தில் ஓசை இல்லை
ஊமைக்கு பாஷை இல்லை
கண்மணியே மெளனம் தானே தொல்லை..
நீயா என்னை நேசித்தாய் பூக்கள் கொண்டு பூசித்தாய்
உண்மை சொல்ல யோசித்தாய் கோழை போல யாசித்தா
ஏன் கண்ணா மீசை மேலே ஆசை
ஆணென்றால் வீரம்வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்
நல்ல பாட்..ஈவ்னிங்க் போய் பாக்கணும்.. :) பக்கெட்ல பழைய போட்டோ கொடுத்தா தேவலை :)
https://youtu.be/QxNz4rLPx9g
ஹம்ஸ லேகா எஸ்பிபி.. எஸ் ஜானகி..
//சரி மக்கள் பிஸியாக இருக்காங்க போல//
ஆமா! காலையில இருந்து நடிகர் திலகம் திரியில் நடுவில் நின்னு போய் இருந்த சண்டைக் காட்சி தொடரை மறுபடி எழுதி தொடங்கியாச்சு. அதான் வர முடியல.