காதல் வேதனையில் தோன்றும் அவலம்
குடியும் – கூத்துமாக இருந்த ஜமீன்தார் வீட்டு பிள்ளையை நிமிரச் செய்கிறாள் ஒருத்தி. அவளுக்காக ஒரு வசந்த மாளிகை கட்டுகிறான். அவளோடு வாழும் நாளின் வரவுக்காகக் காத்திருக்கிறான். வந்ததோ பிரிவு. மாற்றான் ஒருவனுகு மாலையிட ஏற்பாடுகள் நடக்கின்றன. மனம் உடைது போனவன் மறுபடியும் ம்துவுக்கள்ர மங்கையின் மணநாள் வருகிறது. மறைந்து மறைந்து வந்து அவளை ஒரு முறை பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். வந்தவளும் அவன் வாழ்த்துக்காக காலில் விழுகிறாள். எல்லாம் முடிந்தது என்று எண்ணி இரும்பாகிறது அவன் இதயம். மாளிகைக்கு வருகிறான். மரண தேவதையை அழைக்கிறான்? இந்த மாளிகை இனி யாருக்காக? என்று கூறுகிறான். உயிரைவிட்டுப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.; உயிர் கொடுக்கிறார் காட்சிக்குக நடிகர் திலகம். காதலின் சோகம் அதன் கனமான வடிவம் கொண்டு வெளிவருகிறது.
“யாருக்காக… யாருக்காக?யாருக்காக…
இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக…..
காதலே! போ…..போ…..
சாதலே! வா…..வா…….
மரணம் என்னும் தூது வந்தது
அது
மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்க்கமாக நான் நினைத்தது
வெறும்
நரகமாக மாறிவிட்டது.(யாருக்காக)
……………………………………….
………………………………………..
எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கமில்லாதவளென்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரனென்று
ஹ்ஹ்ஹா……………………………”
‘தேவதாஸ்’ ஒரு மென்மையான உள்ளத்தின் காதலை, அதன் முடிவைச் சொல்லும் படம் என்றால், வசந்தமாளிகை (1972) முரட்டு உள்ளத்தின் காதலைச் சொல்லும் காவியம்.
காதலியின் வேதனை கண்டு வந்த அழுகை
Those who love each other love at first sight – ஒருவரையொருவன் விரும்பும் காதலில், காதல் என்பது அவர்கள் சந்திப்பின் முதல் பார்வையிலேயே உருவாகிறது – என்றான் ஆங்கில மகாகவியான ஷேக்ஸ்பியர் தனது ‘As you like it’ என்ற நாடகத்தில் .
இதையே…….
“அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்”
என்று அவருக்கும் முற்பட்ட காலத்திலேயே காதலைப் பற்றி, அதினினும் சுருக்கமாகச் சொன்னவன் தமிழ்க் கவிஞனான கவிச்சக்ரவர்த்தி கம்பன்.
அவ்வாறு…..
மதுரை அழகர் கோவிலில் முதன்முதலாகச் சந்திக்க நேர்ந்த போதே கலைஞர்களான் இருவரும் ஒருவரையொருவர் விரும்பினாலும் அவர்கள் காதல் மூடுமந்திரமாகவே இருந்து வருகிறது. அது சற்று வெளிப்படும்போது சந்தேகம் என்னும் பேய் வந்து சதிராட, கடல் கடந்து கண்காணாத தூரத்துக்குப் போய் விடலாம் எனக் காதலன் கருதும்போது, அவனைத் தடுத்து நிறத்த போட்டிக்கு அழைக்கிறாள் காதலி. போட்டி நடக்கிறது. வெற்றி தோல்வியின்றி சம்மாக முடியும் போது சதிகாரனொருவனால் கத்தியால் தாக்கப்பட்டு இடது கையை இழக்கும் நிலைக்கு வந்து, பன் காப்பாற்றப்படுகிறான். மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்றவன் நிலை என்ன என்று அறியமுடியாத பேதை உள்ளம் புலம்புகிறது.
இந்த நிலையில் அந்த இருகலைஞர்களும் இணைந்து வழங்கும் கலை நிகழ்ச்சிக்கு ஒருவர் மீண்டும் ஏற்பாடு செய்கிறார். தன் உள்ளம் நிறைந்தவனைக் காணப்போகிறோம் என்ற துடிப்பி அன்னை போட்ட அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதுபோல நடிக்கிறாள், அவனைக் கண்ணால் கண்டால் போதும், தன் கலக்கம் தீர்ந்துவிடும் என்ற ஒரே நம்பிக்கையில்.
அந்த நாளும்,,, நேரமும் வருகிறது. கலை நிகழ்ச்சி துவங்குகிறது. மேளங்கள் முழங்குகின்றன. மத்தளங்கள் கொட்டப்படுகின்றன. திரைச் சீலையைத் தள்ளிக்கொண்டு ஆடவரும் அந்த மயில், மேகத்தைப் பார்த்துச் சாடையில் ‘நலமா? என முத்திரை பிடித்துக் காட்டிக் கேட்கின்றது. மேகமோ கண்சிமிட்டி குறும்பு செய்து தன் நலத்தைத் தெரிவிக்கின்றது. நாட்டியப் பாடலிலே,
“நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா? (நலந்)
நலம்பெற வேண்டும் நீயென்று
நாளும் என்நெஞ்சில் நினைவுண்டு
இலைமறை காய்போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று(நலந்)கண்பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நான்றியேன்
புண்பட்ட சேதியைக் கேட்டவுடன் – இந்தப்
பெண்பட்ட பாட்டை யாரறிவார்……”
என அவள் கலங்க நாகசுரம் வாசிக்க வாசிக்க அவன் கண்களில் கண்ணீர் துளிர்க்க, பக்கவாத்தியக்கார்ரான தவில்கார்ர் அவன் தொடையை ஆறுதலாய் தடவிக்கொடுக்க, காதல் வேதனையை, அதன் வடிவத்தை வெளிப்படுத்தும் – காதல் வயப்பட்ட உள்ளங்களையெல்லாம் சுண்டி இழுத்து கண்களைக் குளமாக்கும் கவின்மிகு காட்சியல்லவா அக்காட்சி?! தில்லானாமோகனாம்பாள் (1968) திரைக்காவியத்தின் ஒருதுளி இது. தவில்கார்ராக, நண்பானாக, அண்ணனாகத் துணைநிற்பவர், தமிழகம் தந்த மாபெரும் கலைஞர்களில் ஒருவரான டி.எஸ். பாலையா, பி. சுசிலாவின் குரலுக்கு நாதசுரம் தந்தவர்கள் மதுரை பொன்னுசாமி சகோதர்ர்கள்.
நடிகம் திலகத்தின் வாயசைப்பு என்பது நாகசுரம் வாசிப்பது போன்ற நடிப்பு. அந்த இசைக் கருவியைப்பற்றுவதிலும், சரி செய்வதிலும், மூச்சையடக்கி வாசிப்பது போன்று நடிக்கும் அந்த்ப் பாங்கும், கலைஞனின் கர்வமும் அந்தக் கண்களில் பளிச்சிடுவதைக் கண்டால், உண்மையான நாகசுரக்கலைஞன் கூடத் தானும் அதுபோல எடுப்பாக இருக்க வேண்டுமென விரும்புவான்.
உண்மையில் கூறப்போனால், தமிழக காவல்துறையில் இளைஞர்களும் – ஏனையோரும் மிடுக்காக உடையணியத் துவங்கி, அதற்கென தங்கள் கவனத்தைத்திருப்பியது 1974ல்; நடிகர் திலகம் ‘சௌத்ரி’ என்ற உயர்காவலதிகாரியாக ‘தங்கப்பதக்கம்’ படத்தில் வேடமேற்று நடித்த பின்புதான் என்று கூறினால் மிகையாகாது.
3. இளிவரற்சுவை (இகழ்ச்சி)
‘இழிப்பாவது குற்றமுடையவற்றைக் காணுதல் முதலிய காரணங்களாலே மனதில் தோன்றும் அருவருப்பு’ – என்ற தண்டியலங்காரவுரையின் வழிநின்றே இங்கும் இகழ்ச்சியின் வடிவம் வழங்கப்படுகிறது.
‘அவளோ கன்னிப்பெண். கள்ளங்கபடம் அறியாதவள். பேதமின்றி ஆண்களுடன் பழகும் தன்மை உடையவர். ஆனால் இழி குணம் படைத்தோர், அவளை இழித்தும் பழித்தும் பேசுகின்றனர். இந்த இலைஇல் தன் நண்பனுக்கு இவளை மணம் முடிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஊரார் ஒரு வெள்ளைமனம் கொண்டவளை தவறாகப் பேசுவதைச் சகிக்காத தலைவன், அவள் கணம்பற்றி பாடும்போது, சமுதாயத்தின் அருவருக்கத்தக்க போக்கைச் சாடுகிறான். அது…….
“ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ
பார்வையிலே குமரியம்மா
பழக்கத்திலே குழந்தையம்மா(ஆயிரத்)
………………………………………….
ஆதாரம் நூறென்பது ஊர்சொல்ல்லாம்
ஆனாலும் பொய்யென்று நான் சொல்லுவேன்”
என்ற இடத்தில் வேட்டியை இருகைகளாலும் தன் முழங்காலுக்கு தூக்கியவாறு வாயசைத்து இகழ்ச்சியின் வடிவத்தைத் தருவது ‘கைகொடுத்த தெய்வம்’ (1964) படத்தில்; குரல் டி.எம்.எஸ்.
அவ்வாறே……
“தர்ம்மென்பார் நீதியென்பார் தரமென்பார்
சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச் சந்தயிலே எறிந்துவிட்டுத்
தன்மான விரமென்பார்
மர்ம்மய் சதிபுரிவார்வாய்பேச அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
கடவுள் மேல் குற்றமென்பார்.
எனவே
இந்தத் திண்ணைப்பேச்சு வீர்ரிடம்
ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
………………………………………………
(திண்ணை)
பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
போக்கினிலே அநேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம்
………………………………………………………..
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக்கு உதவாத வெறும் பேச்சு
கஞ்சிக்கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு”
என்று இந்தச் சமூகத்தின் பொய்களை இகழ்ந்து பாடும் இகழ்ச்சியின் வடிவம் ‘பதிபக்தி’ (1958) யில் கிடைக்கும்; குரல் எம்.எஸ்.