Page 160 of 197 FirstFirst ... 60110150158159160161162170 ... LastLast
Results 1,591 to 1,600 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #1591
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like
    காதல் வேதனையில் தோன்றும் அவலம்

    குடியும் – கூத்துமாக இருந்த ஜமீன்தார் வீட்டு பிள்ளையை நிமிரச் செய்கிறாள் ஒருத்தி. அவளுக்காக ஒரு வசந்த மாளிகை கட்டுகிறான். அவளோடு வாழும் நாளின் வரவுக்காகக் காத்திருக்கிறான். வந்ததோ பிரிவு. மாற்றான் ஒருவனுகு மாலையிட ஏற்பாடுகள் நடக்கின்றன. மனம் உடைது போனவன் மறுபடியும் ம்துவுக்கள்ர மங்கையின் மணநாள் வருகிறது. மறைந்து மறைந்து வந்து அவளை ஒரு முறை பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். வந்தவளும் அவன் வாழ்த்துக்காக காலில் விழுகிறாள். எல்லாம் முடிந்தது என்று எண்ணி இரும்பாகிறது அவன் இதயம். மாளிகைக்கு வருகிறான். மரண தேவதையை அழைக்கிறான்? இந்த மாளிகை இனி யாருக்காக? என்று கூறுகிறான். உயிரைவிட்டுப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.; உயிர் கொடுக்கிறார் காட்சிக்குக நடிகர் திலகம். காதலின் சோகம் அதன் கனமான வடிவம் கொண்டு வெளிவருகிறது.

    “யாருக்காக… யாருக்காக?யாருக்காக…
    இது யாருக்காக
    இந்த மாளிகை வசந்த மாளிகை
    காதல் ஓவியம் கலைந்த மாளிகை
    யாருக்காக…..

    காதலே! போ…..போ…..
    சாதலே! வா…..வா…….
    மரணம் என்னும் தூது வந்தது
    அது
    மங்கை என்னும் வடிவில் வந்தது
    சொர்க்கமாக நான் நினைத்தது
    வெறும்
    நரகமாக மாறிவிட்டது.(யாருக்காக)
    ……………………………………….
    ………………………………………..
    எழுதுங்கள் என் கல்லறையில்
    அவள் இரக்கமில்லாதவளென்று
    பாடுங்கள் என் கல்லறையில்
    இவன் பைத்தியக்காரனென்று
    ஹ்ஹ்ஹா……………………………”

    ‘தேவதாஸ்’ ஒரு மென்மையான உள்ளத்தின் காதலை, அதன் முடிவைச் சொல்லும் படம் என்றால், வசந்தமாளிகை (1972) முரட்டு உள்ளத்தின் காதலைச் சொல்லும் காவியம்.

    காதலியின் வேதனை கண்டு வந்த அழுகை

    Those who love each other love at first sight – ஒருவரையொருவன் விரும்பும் காதலில், காதல் என்பது அவர்கள் சந்திப்பின் முதல் பார்வையிலேயே உருவாகிறது – என்றான் ஆங்கில மகாகவியான ஷேக்ஸ்பியர் தனது ‘As you like it’ என்ற நாடகத்தில் .

    இதையே…….

    “அண்ணலும் நோக்கினான்
    அவளும் நோக்கினாள்”

    என்று அவருக்கும் முற்பட்ட காலத்திலேயே காதலைப் பற்றி, அதினினும் சுருக்கமாகச் சொன்னவன் தமிழ்க் கவிஞனான கவிச்சக்ரவர்த்தி கம்பன்.

    அவ்வாறு…..

    மதுரை அழகர் கோவிலில் முதன்முதலாகச் சந்திக்க நேர்ந்த போதே கலைஞர்களான் இருவரும் ஒருவரையொருவர் விரும்பினாலும் அவர்கள் காதல் மூடுமந்திரமாகவே இருந்து வருகிறது. அது சற்று வெளிப்படும்போது சந்தேகம் என்னும் பேய் வந்து சதிராட, கடல் கடந்து கண்காணாத தூரத்துக்குப் போய் விடலாம் எனக் காதலன் கருதும்போது, அவனைத் தடுத்து நிறத்த போட்டிக்கு அழைக்கிறாள் காதலி. போட்டி நடக்கிறது. வெற்றி தோல்வியின்றி சம்மாக முடியும் போது சதிகாரனொருவனால் கத்தியால் தாக்கப்பட்டு இடது கையை இழக்கும் நிலைக்கு வந்து, பன் காப்பாற்றப்படுகிறான். மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்றவன் நிலை என்ன என்று அறியமுடியாத பேதை உள்ளம் புலம்புகிறது.

    இந்த நிலையில் அந்த இருகலைஞர்களும் இணைந்து வழங்கும் கலை நிகழ்ச்சிக்கு ஒருவர் மீண்டும் ஏற்பாடு செய்கிறார். தன் உள்ளம் நிறைந்தவனைக் காணப்போகிறோம் என்ற துடிப்பி அன்னை போட்ட அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதுபோல நடிக்கிறாள், அவனைக் கண்ணால் கண்டால் போதும், தன் கலக்கம் தீர்ந்துவிடும் என்ற ஒரே நம்பிக்கையில்.

    அந்த நாளும்,,, நேரமும் வருகிறது. கலை நிகழ்ச்சி துவங்குகிறது. மேளங்கள் முழங்குகின்றன. மத்தளங்கள் கொட்டப்படுகின்றன. திரைச் சீலையைத் தள்ளிக்கொண்டு ஆடவரும் அந்த மயில், மேகத்தைப் பார்த்துச் சாடையில் ‘நலமா? என முத்திரை பிடித்துக் காட்டிக் கேட்கின்றது. மேகமோ கண்சிமிட்டி குறும்பு செய்து தன் நலத்தைத் தெரிவிக்கின்றது. நாட்டியப் பாடலிலே,

    “நலந்தானா நலந்தானா
    உடலும் உள்ளமும் நலந்தானா? (நலந்)
    நலம்பெற வேண்டும் நீயென்று
    நாளும் என்நெஞ்சில் நினைவுண்டு
    இலைமறை காய்போல் பொருள் கொண்டு
    எவரும் அறியாமல் சொல் இன்று(நலந்)கண்பட்டதால் உந்தன் மேனியிலே
    புண்பட்டதோ அதை நான்றியேன்
    புண்பட்ட சேதியைக் கேட்டவுடன் – இந்தப்
    பெண்பட்ட பாட்டை யாரறிவார்……”

    என அவள் கலங்க நாகசுரம் வாசிக்க வாசிக்க அவன் கண்களில் கண்ணீர் துளிர்க்க, பக்கவாத்தியக்கார்ரான தவில்கார்ர் அவன் தொடையை ஆறுதலாய் தடவிக்கொடுக்க, காதல் வேதனையை, அதன் வடிவத்தை வெளிப்படுத்தும் – காதல் வயப்பட்ட உள்ளங்களையெல்லாம் சுண்டி இழுத்து கண்களைக் குளமாக்கும் கவின்மிகு காட்சியல்லவா அக்காட்சி?! தில்லானாமோகனாம்பாள் (1968) திரைக்காவியத்தின் ஒருதுளி இது. தவில்கார்ராக, நண்பானாக, அண்ணனாகத் துணைநிற்பவர், தமிழகம் தந்த மாபெரும் கலைஞர்களில் ஒருவரான டி.எஸ். பாலையா, பி. சுசிலாவின் குரலுக்கு நாதசுரம் தந்தவர்கள் மதுரை பொன்னுசாமி சகோதர்ர்கள்.

    நடிகம் திலகத்தின் வாயசைப்பு என்பது நாகசுரம் வாசிப்பது போன்ற நடிப்பு. அந்த இசைக் கருவியைப்பற்றுவதிலும், சரி செய்வதிலும், மூச்சையடக்கி வாசிப்பது போன்று நடிக்கும் அந்த்ப் பாங்கும், கலைஞனின் கர்வமும் அந்தக் கண்களில் பளிச்சிடுவதைக் கண்டால், உண்மையான நாகசுரக்கலைஞன் கூடத் தானும் அதுபோல எடுப்பாக இருக்க வேண்டுமென விரும்புவான்.

    உண்மையில் கூறப்போனால், தமிழக காவல்துறையில் இளைஞர்களும் – ஏனையோரும் மிடுக்காக உடையணியத் துவங்கி, அதற்கென தங்கள் கவனத்தைத்திருப்பியது 1974ல்; நடிகர் திலகம் ‘சௌத்ரி’ என்ற உயர்காவலதிகாரியாக ‘தங்கப்பதக்கம்’ படத்தில் வேடமேற்று நடித்த பின்புதான் என்று கூறினால் மிகையாகாது.

    3. இளிவரற்சுவை (இகழ்ச்சி)

    ‘இழிப்பாவது குற்றமுடையவற்றைக் காணுதல் முதலிய காரணங்களாலே மனதில் தோன்றும் அருவருப்பு’ – என்ற தண்டியலங்காரவுரையின் வழிநின்றே இங்கும் இகழ்ச்சியின் வடிவம் வழங்கப்படுகிறது.

    ‘அவளோ கன்னிப்பெண். கள்ளங்கபடம் அறியாதவள். பேதமின்றி ஆண்களுடன் பழகும் தன்மை உடையவர். ஆனால் இழி குணம் படைத்தோர், அவளை இழித்தும் பழித்தும் பேசுகின்றனர். இந்த இலைஇல் தன் நண்பனுக்கு இவளை மணம் முடிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஊரார் ஒரு வெள்ளைமனம் கொண்டவளை தவறாகப் பேசுவதைச் சகிக்காத தலைவன், அவள் கணம்பற்றி பாடும்போது, சமுதாயத்தின் அருவருக்கத்தக்க போக்கைச் சாடுகிறான். அது…….

    “ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
    உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ
    பார்வையிலே குமரியம்மா
    பழக்கத்திலே குழந்தையம்மா(ஆயிரத்)
    ………………………………………….
    ஆதாரம் நூறென்பது ஊர்சொல்ல்லாம்
    ஆனாலும் பொய்யென்று நான் சொல்லுவேன்”

    என்ற இடத்தில் வேட்டியை இருகைகளாலும் தன் முழங்காலுக்கு தூக்கியவாறு வாயசைத்து இகழ்ச்சியின் வடிவத்தைத் தருவது ‘கைகொடுத்த தெய்வம்’ (1964) படத்தில்; குரல் டி.எம்.எஸ்.

    அவ்வாறே……

    “தர்ம்மென்பார் நீதியென்பார் தரமென்பார்
    சரித்திரத்துச் சான்று சொல்வார்
    தாயன்புப் பெட்டகத்தைச் சந்தயிலே எறிந்துவிட்டுத்
    தன்மான விரமென்பார்
    மர்ம்மய் சதிபுரிவார்வாய்பேச அபலைகளின்
    வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
    கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
    கடவுள் மேல் குற்றமென்பார்.

    எனவே

    இந்தத் திண்ணைப்பேச்சு வீர்ரிடம்
    ஒரு
    கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
    நாம
    ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
    ………………………………………………
    (திண்ணை)
    பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
    போக்கினிலே அநேக வித்தியாசம்
    புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
    புவியை மயக்கும் வெளிவேஷம்
    ………………………………………………………..

    கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
    கவைக்கு உதவாத வெறும் பேச்சு
    கஞ்சிக்கில்லாதார் கவலை நீங்கவே
    கருத வேண்டியதை மறந்தாச்சு”

    என்று இந்தச் சமூகத்தின் பொய்களை இகழ்ந்து பாடும் இகழ்ச்சியின் வடிவம் ‘பதிபக்தி’ (1958) யில் கிடைக்கும்; குரல் எம்.எஸ்.
    Yours truly

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1592
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like
    4. மருட்கை (வியப்பு)

    வியப்பு என்பது புதுமைகண்டும், மிகப்பெரியது கண்டும், மிகச்சிறியது கண்டும், மனித செயல்களினால் விளையும் அரும் பொருள்கள் கண்டும் பிறக்கும் என்ற தொல்காப்பிய உரையையும், ‘முன்னர் காணப்படாத ஒன்றைக் கொண்டு உண்டாகும் மனவிரிவு’ என்ற தண்டியலங்கார உரையையும் அறிவால் விளையாத்தே வியப்பு என்றும் கண்டோம்.

    ஆனால் பாடல் வடிவங்களை தண்டியலங்கார உரையைவிட பேராசிரியரன் வழிநின்றே வழங்க வாய்ப்புகள் அதிகம்.

    அ. புதுமை

    இயற்கையின் படைப்பில் என்றும் புதமையானதும் – வியக்கத் தக்கதுமான பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுவே பெண்மையின் அழகு. எது அழகு என்பதில்மனிதனுக்கு கருத்து வேறுபாடு வரலாம். ஆனாலும் ஒரு பெண்ணின் அழகு என்பது புதுமைதான். அதனால்தான் பெண்ணின் அழகை ஆராய்ந்து பார்க்க இயலாது.

    “அம்மா………..டி…………….
    பொண்ணுக்குத் தங்க மனசு
    பொங்குது சின்ன வயசு
    கண்ணுக்கு நூறு வயசு – அவள்
    சொல்லுக்கு நாலுவயசு….”

    என்று பாடி தன் வியப்பை வெளிப்படுத்துகிறான். வியப்பின் வடிவம் வெளிப்படும் இப்பாடல் ‘ராமன் எத்தனை ராமனடி’ (1970)யில், டி.எம்.எஸ். குரலில் கிடைக்கும்.

    ஆ.பெருமை

    இயற்கையின் படைப்பில் செயற்றை அழகும் சேர்ந்து மயக்கம் தந்து, மதிமயங்கி வியந்து நிற்கும் மனிதன்,இயற்கையின் பேலெல்லையான காடு, மலை, அருவி இவற்றைக் கண்டு வியப்படையாடு இருக்க முடியுமா? இவையெல்லாம் எப்படி உண்டாயிற்று, யார் உண்டாக்கினார்கள் என்ற கேள்விக்கு விடைதெரியாது, முடிவில்,

    “ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே
    குற்றால
    அழகை நாம் காண்பதற்க வண்ணக்கிளியே”

    என வியந்து பாடுகிறான் மனிதன், வியப்பின் வடிவம் கிடைகக்உம் படம் பாவை விளக்கு (1960); குரல் சி.எஸ். ஜெயராமன். இதுவே பெருமை’ கண்டு தோன்றும் வியப்பின் வடிவம்.

    இ. ஆக்கம் (செயலால் விளைவது)

    தெய்வத்தின் கால் பட்டதும் கல் பெண்ணானதோ இல்லையோ, ஆனால் மனிதனின் கை பட்டும் கல் பெண்ணாவதென்னவோ கண்கூடான உணைம். கரடுமுரடான வடிவமுடைய கருங்கல்லானது, சிற்பக்கலைஞனின் கை வண்ணத்தால் அழகிய வடிவமுடைய பெண்ணாகி, அவனையே மயக்கி, வியப்புக்குள்ளாக்கும். அப்படி வியந்த கலைஞன்தான்-

    “மலையே உன் நிலையை நீ பாராய்
    கலைஞன் கை உளியாலே
    காவியச் சிலையான
    மலையே உன் நிலையை நீ பாராய்”

    - என வியந்து பாடும் வடிம் வணங்காமுடி (1957) யில் கிடைக்கும்; குரல் சீர்காழி கோவிந்த ராஜன்.

    5. அச்சம்

    அச்சம் என்பது பேய், விலங்கு, கள்வர், தாய், தந்தை, ஆசிரியன், அரசன், வழிபடும் தெய்வம், தன்தவறு ஆகியவற்றால் விளையும் என்பது தொல்காப்பிய விளக்கம்.

    இவ்விளக்கங்கள் அனைத்திற்கும் வடிவம் காணுதல் கடினம் என்பதின் காரணம் என்னவென்று இச்சுவையின் காட்சிகளில் வடுவம் தேடும் பகுதிய்ல கூற்ப்பட்டுள்ளது. அதே அடிப்படையில் பெண் பேய் (பைத்தியக்காரப் பெண்) மற்றும் தன் தவறுக்கான நிலைக்களத்திலிருந்து பிறக்கும் அச்சத்தின் வடிவங்களைக்காணலாம்.

    அ. பேய் கண்டு

    தன் காதலன் தன்னை ஏமாற்றிவிட்டானென்றும் அவனைப் பழிவாங்காது விடமாட்டேன் என்றும் விரைந்து போனவள் விபத்தில் மாட்டிக்கொண்டு, சுயநினைவை இழந்து பைத்திய்ம கிறாள். அப் பைத்தியக்காரப் பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படும்போது அங்கிருந்த கத்தியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு மருத்துவரை ஆடவும் – பாடவும் சொல்லி அச்சுறுத்துகிறது. பயந்துபோன மருத்துவர்….

    “Ok..Ok……
    I wll sing for you
    I will dance for you
    ஆட்டமென்ன சொல்லு நீ – தோழி நான்
    ஆடிடுவேன் கொஞ்ச நாழி! (I wll)”

    - என்று பாட ஆரம்பித்து அச்சத்தில் கை, கால்கள் அபிநயக்க வராது ஆடும் இடத்தில் ‘பேய்’ கண்டது போன்ற அச்சத்தின் வடிவத்தைக் காணலாம். இது ‘மனிதரில் மாணிக்கம்(1973) திரைப்படத்தி, டி.எம்.எஸ். குரலில் கிடைக்கும்.

    ஆ. தன் தவறுக்காக

    ஆத்திரத்தில் மனைவியை ஒரேயொரு அடி அடிக்க சற்றும் எதிர்பாராது இறந்துவிடுகிறாள். அந்த மரணத்தை மறைத்து விடுகிறார். ஆனாலும் அந்தத் தவறு – அந்தக் கொலை அவன் நினைவைவிட்டு அகலாது சுற்றிச்சுற்றி வருகிறது. அச்சத்தால் அவன் நெஞ்சம் தவிக்கிறது. நிம்மதியின்றிப் புலம்புகிறான்.

    “எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி!
    அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
    எங்கே மனிதன் யாருமில்லையோ
    அங்கே எனக்கோர் இடம்வேண்டும்(எங்கே)
    ………………………………………
    எனது கைகள் மீட்டும்போது
    வீணை அழுகின்றது
    எனது கைகள் தழுவும்போது
    மலரும் சுடுகின்றது”

    என அச்சத்தால் புலம்பும் வடிவம் ‘புதியபறவை’ (1964) யிலும்,

    அதேபோன்று தன் மகளின் வாழ்வைக் கெடுத்தவனை ஒரேயொரு அடி அடிக்க, அவன் இறந்துபோக, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி ஓடி, தன் நடை, உடை, பாவனைகளையெல்லாம் மாற்றிக் கொண்டு மீண்டும் அதே ஊருக்கே வந்து தன்னை வளர்த்தவரின் ஆசையை நிறைவேற்றும் செயல்கள் புரியும்போது, தன்னைச் சந்தேகிக்கும் நண்பனிடமிருந்து தப்ப முடியாது என்ற எண்ணமும், தன் மகளைத் தானும், தன்னை அவளும் அறிந்தும் ஒன்று சேர முடியாது சட்டத்தின் நெருப்புப் பார்வை தன்மீது பட்டுக்கொண்டேயிருக்க…. நிம்மதியிழந்தவன்,

    “தேவனே! என்னைப் பாருங்கள்
    என் பாவங்கள் தன்னை வாங்கிக்கொள்ளுங்கள்
    ஆயிரம் நன்மை தீமைகள்
    நாங்கள் செய்கிறோம் நீங்கள் அறிவீர்
    Oh! My Lord! Please Pardon me
    தாய்மடியிலே மழலைகள் ஊமையோ
    நான் அழுவதா சிரிப்பதா தேவனே
    நின் கருணையே திறக்குமா சந்நிதி
    ஏன் கர்த்தரே பிறக்குமா நிம்மதி
    Oh! My Lord! Please answer my Prayer
    மான்களும் சொந்தம் தேடுதே
    இம்
    மானிடம் செய்த பாவம் என்னவோ!”

    என அச்சத்தால் புலம்பும் நவீன நடிப்பு முறைக்கார்ர்க்களான மேற்கு நாட்டினர் குறிப்பிடும் Gestures எனப்படம் அங்க அசைவுகளை எவ்வாறு இந்த இரண்டு பாடல்களிலும் செய்துள்ளார் என்பதை இனிவரும் இயலில் தனியாகக் காணலாம்.

    6. பெருமிதம்

    இதனை வீரமென்று பொருள் கூறுகிறார் பேராசிரியர். ‘வீர’மாவது மேலான காரியங்களில் உண்டாகும் மனத்துணிவு என்பது தண்டியலங்காரவுரை. கல்வி, வீரம், இசைமை என்ற பழியொடு வருவன செய்யாது, எத்தனை இன்பம் வந்தாலும் புகழொடு வருவன செய்தல், கொடை, ஆகியவற்றால்’பெருமிதம் தோன்றும்.

    ‘சொல்லப்பட்ட பெருமிதம்’ என்றதனாற் காம்ம் பற்றியும் பெருமிதம் பிறக
    Yours truly

  4. #1593
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Mr. DHANUSU,

    What you are posting here are already tooooo much 'அரைத்த மாவு'.

    Please try to give something new and attractive.

  5. #1594
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like
    மறைந்த திரையுலக சாதனையாளர்களுள் ஒருவரான சிவாஜிகணேசனைப் பற்றி நெகிழ்ந்த பாலுமகேந்திரா!

    Balu Mahendra and K. Bhagyaraj எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் சிவாஜியைப் பற்றி நினைவு கூர்ந்த இயக்குநர் பாலு மகேந்திரா கண்ணீர் விட்டு அழுதார்.

    சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்த இந்த விழாவில் ஏவி எம் சரவணன், இயக்குநர் கே. பாக்யராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சிவாஜி கணேசனை பற்றிய புத்தகத்தை பட அதிபர் ஏவி.எம்.சரவணன் வெளியிட, டைரக்டர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

    மற்ற சாதனையாளர்கள் ஷம்மிகபூர், பி.சி.பரூவா, குருதத், மெகபூப்கான், சோராப் மோடி 5 பேர்களை பற்றிய புத்தகங்களை ஏவி.எம்.சரவணன் வெளியிட, டைரக்டர் பாலு மகேந்திரா பெற்றுக்கொண்டார்.

    விழாவில், டைரக்டர் பாலு மகேந்திரா பேசியதாவது:

    சின்ன வயதில் நான் தீவிர சிவாஜி ரசிகன். சிவாஜி நடித்த படங்களை முதல்நாள், முதல் காட்சி பார்த்து விடும் தீவிர ரசிகன். சிவாஜி நடித்த படங்களைப் பார்த்துவிட்டு வந்து, அந்த படத்தின் கதைகளை என் நண்பர்களிடம் சொல்வேன்.

    எனக்கு 14 வயது இருக்கும். சிவாஜி கொழும்பு வந்திருந்தார். என் குடும்பம் கிழக்கு இலங்கையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்தது. சிவாஜியைப் பார்க்கப் போகவேண்டும் என்று என் பெற்றோர்களிடம் அடம் பிடித்தேன். அனுமதி கிடைக்கவில்லை. வீட்டைவிட்டு ஓடிவந்து விட்டேன். எங்க கிராமத்தில் இருந்து கொழும்பு 250 மைல் தூரம்!

    கொழும்பு நகரில், மாலையில் நிகழ்ச்சி நடந்தது. அதில் சிவாஜி கலந்துகொண்டார். ஸ்டைலாக மேடை ஏறினார். அந்த மேடையில் இருந்து 2 கிலோமீட்டர் தள்ளி நான் உட்கார்ந்திருந்தேன். சிவாஜி, சிம்மக் குரலில் பேச ஆரம்பித்தார். அவர் பேசி முடிக்கும் வரை நான் இரண்டு கைகளையும் மேலே தூக்கி கும்பிட்டபடி அமர்ந்திருந்தேன் (உடனே உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்...).

    இன்றைய நடிகர்களுக்கெல்லாம் நடிப்பில் வழிகாட்டி சிவாஜிதான். அவர் சாகவில்லை. நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். சிவாஜி போன்ற மேதைகள் வாழ்ந்த சினிமாவை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைக்க வேண்டும்.

    ஒருமுறை நான் பிரபுவை பார்ப்பதற்காக, அவர்கள் வீட்டுக்கு சென்றேன். அப்போது சிவாஜி மாடியில் இருந்து இறங்கி வந்தார். நான், பிரபுவைப் பார்க்க வந்ததாக அவரிடம் கூறினேன். ஏனப்பா, என்னைப் பார்த்தால் நடிகராக தெரியவில்லையா? என்றார் அவருக்கே உரிய தோரணையில்.

    சிவாஜியை வைத்து படம் டைரக்டு செய்ய முடியவில்லை என்பதுதான் என் வாழ்க்கையில் எனக்கு மிச்சமிருக்கும் ஒரே வருத்தம் என்றார் பாலுமகேந்திரா.
    Yours truly

  6. #1595
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like
    Print | E-mail
    திங்கட்கிழமை, 5, அக்டோபர் 2009 (8:19 IST)



    சிவாஜியுடன் நடிக்க ஆசைப்பட்டேன்: நெப்போலியன்

    மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் 81/2 அடி உயர முழு உருவ வெண்கல சிலை மதுரை ராஜாமுத்தையா மன்றம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா அக்டோபர் 4ஆம் தேதி மாலை நடந்தது.

    விழாவுக்கு நடிகர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி முன்னிலை வகித்தார். சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் வரவேற்று பேசினார்.

    சிலையை மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நெப்போலியன்,

    சிவாஜியுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் என்னால் அது முடியாமல் போய் விட்டது. ஆனால் அவருடைய கலை வாரிசு கமலுடன் சேர்ந்து விருமாண்டி, தசாவதாரம் படத்தில் நடித்து இருக்கிறேன். தசாவதாரம் படத்தில் நான் யானை மீது அமர்ந்து நடித்துக் கொண்டு இருந்தேன். அந்த யானை அங்கு, இங்கும் ஆடியது. இதனால் நான் கீழே விழும் சூழ்நிலை அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டு இருந்தது. இது குறித்து நான் யானை பாகனிடம் கேட்டேன். அதற்கு யானை பாகன், இந்த யானை கேரளாவை சேர்ந்தது, இங்கு வெப்பம் அதிகமாக இருப்பதால், யானையால் தாங்க முடியவில்லை. யானைக்கு மதம் பிடித்தாலும் பிடிக்கலாம் என்று கூறினார். இதனால் எனக்கு பயம் அதிகமாகியது. அதனால் யானைக்கு தினமும், வாழைத்தார்களை கொடுத்து, அதை நண்பனாக்கி கொண்டு படத்தில் நடித்தேன்.

    இதே போல் சிவாஜி கணேசன் சரஸ்வதி சபதம் படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். அதில் ஒரு காட்சியில் யானை சிவாஜியின் மேல் கால் வைப்பது போல் உள்ளது. இந்த காட்சியில் சிவாஜி நடிப்பதற்கு முன், இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அந்த யானையை கொண்டு ஒத்திகை பார்த்தார். அப்போது, அந்த சிவாஜிகணேசனுக்குப் பதில் போடப்பட்டிருந்த மேஜையை யானை மிதித்து விட்டது. அதனால் நீங்கள் இந்த காட்சியில் நடிக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் சிவாஜி மிகுந்த தைரியத்துடன் அந்த காட்சியில் நடித்தார் என்றார்.
    தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields
    Name * :
    Email Id * :

    Left: Press Ctrl+g to toggle between English and Tamil
    Comment * (500) :
    Yours truly

  7. #1596
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like
    உள்ளதைச் சொல்கிறேன் மகா கலைஞன்!
    1974-ஆம் ஆண்டு சிவாஜி நடித்து வெளிவந்த படங்களில் சினிமா ரசிகர்கள் எளிதில் மறக்க முடியாத படம் "தங்கப் பதக்கம்'. "வீரபாண்டிய கட்டபொம்மன்', "கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி. ஆகியோருடைய பெயரைச் சொன்னவுடன் எப்படி எல்லோர் மனதிலும் அந்த வேடங்களை ஏற்ற நடிகர் திலகத்தின் தோற்றம் நிழலாடுகிறதோ, அதைப் போன்று கண்ணியமிக்க காவல்துறை அதிகாரி என்றவுடன் எல்லோர் மனதிலும் தோன்றக் கூடிய பெயர் எஸ்.பி.செüத்ரிதான். நடை, உடை, தோற்றம், பார்வை என்று எல்லா வகையிலும் "தங்கப் பதக்கம்' செüத்ரிக்கு உயிர் கொடுத்தவர் சிவாஜி.

    "தங்கப் பதக்கம்' நாடகம் முதலில் நாடகமாக நடிக்கப்பட்டு பின்னர் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. முதலில் "தங்கப் பதக்கம்' நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர் செந்தாமரை.

    அப்போது அந்த நாடகத்தின் பெயர் "தங்கப் பதக்கம்' அல்ல; "இரண்டில் ஒன்று'. செந்தாமரையின் 42-வது நாடக நிகழ்ச்சியின்போது நாடகம் பார்க்க நடிகர் திலகம் வந்தார். நாடகத்தைப் பாராட்டி ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்துவதை உன்னிப்பாக பார்த்தார்.

    நாடகம் முடிந்ததும் மேடைக்கு வந்த சிவாஜி அந்நாடகத்தின் இயக்குனரான எஸ்.ஏ.கண்ணனையும், செந்தாமரையையும் அழைத்து, ""நாளைக்கு எங்கே நாடகம்?'' என்று கேட்டார். அவர்கள் கூறினார்கள். நாடகத்தை நாளையோட நிறுத்திக்கங்க. இந்த நாடகத்தை நம்ம சிவாஜி நாடக மன்றம் போடட்டும். எஸ்.பி.செüத்ரியாக நானே நடிக்கிறேன்'' என்றார். எஸ்.ஏ.கண்ணன், செந்தாமரை ஆகிய இருவருமே சிவாஜி நடத்தி வந்த சிவாஜி நாடக மன்றத்தில் பணியாற்றியவர்கள்.

    அந்த நாடக மன்றம் கலைக்கப்பட்டதால்தான் தனியாக நாடகக் குழு ஆரம்பிக்கும் எண்ணமே அவர்களுக்கு ஏற்பட்டது. ஆகவே சிவாஜியே தனது நாடகக் குழுவின் சார்பில் அந்த நாடகத்தை நடத்துவதாகச் சொன்னதும் இருவருமே மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டனர். "இரண்டில் ஒன்று' "தங்கப் பதக்கம்' என்று பெயர் மாறியது.

    அடுத்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு முடிந்து வந்த பிறகு நாடக வசனங்களை படிக்கச் சொல்லி கண்மூடி கேட்டார் சிவாஜி. நான்காம் நாள் மேடையில் பிரதான ஒத்திகை. ஐந்தாம் நாள் "தங்கப் பதக்கம்' நாடகம் தலைவர் காமராஜர் தலைமையில் மியூசிக் அகாடமியில் அரங்கேற்றம் கண்டது. அந்த தினத்தை "சினிமாவும் நானும்' என்ற தனது நூலில் கதாசிரியர் மகேந்திரன் மிகவும் ரசனையோடு வர்ணித்துள்ளார்.

    ""அரங்கேற்ற தினத்தன்று ஒப்பனை அறையில் சிவாஜியை எட்டிப் பார்த்தேன். ஒப்பனை நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடம்பு "எஃகு' போல் நிமிருகிறது. மூன்று நாள்தானே வசனம் படிக்கச் சொல்லி கேட்டார். எதையும் மறக்காமல் எப்படி வசனம் பேசுவார்? என்ற மாதிரியான கேள்விகள் எனக்குள் இருந்தது. மணி அடித்துவிட்டது. நாடகம் தொடங்கியது. நான் எழுதிய ஒரு வசனத்தைக் கூட அவர் மறக்கவில்லை. எனக்குள் பிரமிப்பு! எப்படி இது சாத்தியம்? நாடகம் முடியும்வரை கைத்தட்டல் ஓயவில்லை.

    நாடகம் முடிந்து ஒப்பனை அறைக்குள் போனேன். ஒப்பனை கலைத்து விட்டு களைப்போடு உட்கார்ந்திருந்தார் நடிகர் திலகம். நாடகம் முழுக்க அவர் காட்டிய கம்பீரத்திற்கும், ஓப்பற்ற நடிப்பிற்கும் அவர் தனது உடல் சக்தி அத்தனையையும் தந்து விட்டு இப்போது ஒப்பனை கலைந்ததும் செüத்ரியாக வாழ்ந்து நடித்தவர் தனது இயல்பு நிலைக்குத் திரும்பி அவர் அவராகி விட்டார் என்று தெரிந்தது. என்னைப் பார்த்ததும், ""என்னப்பா உன் டயலாக்கை எல்லாம் ஒழுங்காக பேசினேனா?'' என்று ஒரு மாணவனைப் போல கேட்டார் அந்த மாபெரும் நடிகர். என் கண்கள் கலங்கின.

    தமிழ் சினிமா உலக அளவில் தன் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள அவதரித்த அற்புதக் கலைஞனே நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

    வாழ்வில் எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஒன்று இருக்குமென்றால் அது தனது கதையின் கதாபாத்திரமேற்று நான் எழுதிய வசனத்தை அந்த மகா கலைஞன் பேசியதுதான். அதுவே எனக்குக் கிட்டிய மிகப் பெரும் பாக்கியம் என்று சொல்வேன்.

    ஒரு திருவள்ளுவர்

    ஒரு ஷேக்ஸ்பியர்

    ஒரு மைக்கேல் ஏஞ்சலோ

    ஒரு பீத்தோவன்

    ஒரு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

    இப்படித்தான் உலக வரலாறு சொல்லப்பட முடியும்'' என்று பெருமிதத்துடன் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார் கதாசிரியர் மகேந்திரன்.

    1975-ல் சிவாஜி நடித்து வெளிவந்த ஏழு படங்களில் "அவன்தான் மனிதன்', "அன்பே ஆருயிரே', "டாக்டர் சிவா' ஆகிய மூன்றும் ஏ.சி. திருலோகசந்தர் இயக்கத்தில் வெளிவந்தன. இதில் "அவன்தான் மனிதன்' படத்திற்கு அமைந்த கூடுதல் சிறப்பு என்னவென்றால் அது சிவாஜியின் 175-வது படம்.

    1976 முதல் 1978 வரை வெளிவந்த 19 சிவாஜி படங்களில் வெற்றிப் படங்களும் கலந்திருந்தது. அவர் மலையாளத்தில் நடித்த முதல் படமான "தச்சொள்ளி அம்பு' 1978-ல்தான் வெளியாகியது.

    1979-ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியான சிவாஜி கணேசனின் 200-வது படமான "திரிசூலம்' 200 நாட்கள் ஓடியது மட்டுமின்றி அவரது திரையுலக வரலாற்றில் மறக்க முடியாத வசூல் சாதனையை செய்தது.

    சிவாஜியின் கலைப் பயணத்தில் அவர் நடித்த 287 திரைப்படங்களில் சிறந்த பத்து படங்களைப் பட்டியலிட வேண்டுமென்றால் பாராதிராஜா இயக்கிய "முதல் மரியாதை' படத்தை நீக்கி விட்டு எவராலும் பட்டியல் போட முடியாது. மிகவும் யதார்த்தமான நடிப்பை அப்படத்தில் வழங்கியிருந்தார் சிவாஜி.

    இப்போதெல்லாம் ஒரு படத்தின் படப்பிடிப்பு 200 முதல் 300 நாட்கள் நடைபெறுகிறது. "முதல் மரியாதை' என்ற திரைக் காவியத்தை உருவாக்க பாரதிராஜா எடுத்துக்கொண்ட நாட்கள் எவ்வளவு தெரியுமா? 84 நாட்கள்! அப்படத்தின் பாடல் பதிவு ஆரம்பமானதிலிருந்து 84-வது நாள் படம் வெளியாகி விட்டது. மொத்த நாட்களே 84 தான் என்னும்போது படப்பிடிப்பு நடைபெற்ற நாட்கள் என்றால் அதிகபட்சமாக 50 நாட்கள் இருந்திருக்கும்.

    அவ்வளவுதான். 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற அப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை படைத்தது மட்டுமின்றி மிகச் சிறந்த படைப்பு என்ற கலைத்துறை விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. "முதல் மரியாதை'யைத் தொடர்ந்து வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிய படம் "படிக்காதவன்'. இத்திரைப் படத்தில் ரஜினிகாந்த்தோடு நடித்திருந்தார் சிவாஜி.

    1986-87 ஆகிய இரு ஆண்டுகளில் சிவாஜி நடித்த "சாதனை', "மருமகள்', "விஸ்வநாத நாயுக்குடு' என்ற தெலுங்கு படம், "ஜல்லிக்கட்டு' ஆகிய நான்கும் 100 நாள் படங்களாக அமைந்தன. இதில் "ஜல்லிக்கட்டு' படத்திற்கு கிடைத்த தனிச்சிறப்பு என்னவென்றால் வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் 100-வது நாள் விழாவிற்கு தலைமை தாங்கி பரிசுக் கேடயங்களை வழங்கியவர் அன்றைய முதல்வரான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் நடித்த திரைப்படத்தின் 100-வது நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட ஒரே திரைப்பட விழா "ஜல்லிக்கட்டு' விழாதான். எம்.ஜி.ஆர். இறுதியாக கலந்துகொண்ட திரைப்பட விழாவும் அதுதான்.

    1952 முதல் 1999 வரை 287 படங்களில் நடித்த சிவாஜி ஏற்ற வித்தியாசமான பாத்திரங்கள் 200-க்கும் மேலிருந்தது. ""அவர் நடிக்காமல் எங்களுக்கு விட்டுச் சென்ற பாத்திரப் படைப்புகளே இல்லை'' என்றுதான் ரஜினி, கமல் முதற்கொண்டு இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை எல்லோரும் கூறுகின்றனர்.

    ஆனால் அப்படிப்பட்ட மாபெரும் கலைஞனுக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது வழங்கப்படவே இல்லை என்பது நமது நாட்டில் விருதுகள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்பதற்கு ஒரு சான்றாக இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை.

    ""ஒரு கலைஞனை சிறந்த நடிகராக மக்கள் ஏற்றுக் கொள்ளும்போதுதான் அந்த கலைஞன் முழுமையடைகிறான். அதுதான் அங்கீகாரம். தான் ஏற்ற பாத்திரத்தை உணரும்போது தான் அதில் முழுமையாக ஒரு நடிகன் வெளிப்பட முடியும். அதுதான் அவனுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். எத்தனையோ பேர் நடிக்க வருகிறார்கள். எல்லோரையுமா சிறந்த நடிகன் என்று மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்?

    அங்கீகாரம் கிடைப்பதற்கும், விருது கிடைப்பதற்கும் சம்பந்தமில்லை. யாரோ ஒருவர் கஷ்டப்பட்டு கொடுத்தாத்தான் விருது. அர்ஜுனா விருது, பாரத் விருது போன்றவற்றை பலருக்குக் கொடுத்திருக்கிறார்கள். அந்த விருதுகள் பெற்ற எல்லோருமா அதற்குத் தகுதியானவர்கள்?

    ஒரு கலைஞனுக்கு விருது என்பது அவன் வேகமாக வளரும் இளம் வயதில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அதை அவன் கொண்டாட முடியும். விருது தந்த ஊக்கத்தில் அவன் கூடுதலாகப் பரிமளிப்பான். கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் போன்ற சின்னப் பிள்ளைகளுக்கு விருது கொடுத்தால் அவர்கள் கொண்டாடுவார்கள். நான் இதையெல்லாம் கடந்தவன்.

    ஆனாலும் ஒன்றை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். உரிய காலத்தில் விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும், வருத்தமும் என மனதின் ஓரத்தில் "விண் விண்' என்று இருக்கதான் செய்கிறது. நானும் மனுஷன்தானே! இதை மறைத்தால் என்னைவிட "அயோக்கியன்' இருக்க முடியாது'' என்று 1997-ஆம் ஆண்டு ஒரு பத்திரிகைப் பேட்டியில் தேசிய விருது குறித்து தனது எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார் சிவாஜி.

    இந்தியத் திரைவானின் நட்சத்திரங்கள் அனைவரும் பார்த்து பிரமித்த நடிப்புச் சக்ரவர்த்தியான சிவாஜியைக் கவர்ந்த நட்சத்திரங்கள் யார் யார் தெரியுமா? ஆங்கிலப் பட நடிகர்களில் சார்லஸ் போயர், ரோனால்ட் கோல்மென் ஹிந்தி நடிகர்களில் தீலிப் குமார், சஞ்சீவ் குமார், நர்கீஸ் தமிழில் ராதா அண்ணன், டி.எஸ்.பாலையா. இவர்கள் இரண்டு பேருக்கும் ஈடான நடிகர்களே இல்லை என்பதுதான் சிவாஜியின் கருத்தாக இருந்திருக்கிறது.

    நடிப்பில் தனது வாரிசாக யாரை சிவாஜி அடையாளம் காட்டுகிறார்?

    ""அதெல்லாம் சும்மா ஸôர். அதென்ன சொத்தா வைத்திருக்கிறோம்... வாரிசு என்று சொல்வதற்கு? வாரிசு என்று சொல்ல முடியாது. வித்தியாசமாக மேக்-அப் போட்டுக்கொண்டு, அதன் மூலம் ரசிகர்களை ஈர்க்கும் நடிப்பைத் தருவது கமல்தான்'' என்று ஆணித்தரமாக தன் அபிப்ராயத்தைப் பதிவு செய்துள்ளார் சிவாஜி.

    ""கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், டாக்டர், செவாலியே, தாதா சாகேப் பால்கே'' போன்ற பல விருதுகளைப் பெற்ற சிவாஜி அவர்களின் சாதனைகளில் தலையாயதாக நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிய சாதனையைக் கூறலாம்.

    அப்படிப்பட்ட அரும்பெரும் சாதனையைச் செய்த சிவாஜி பின்னர் வேதனையுடன் நடிகர் சங்கத்தை விட்டு வெளியேறினார். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அவர் வெளியே செல்வதற்கான சூழ்நிலை வலிந்து உருவாக்கப்பட்டது. அது குறித்து "எனது கலைப் பயணம்' என்ற தனது வாழ்க்கை வரலாற்று நூலில் விவரித்துள்ளார். வி.கே.ராமசாமி.
    Yours truly

  8. #1597
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Dear Mr. DHANUSU,

    Welcome back ! Thanks for your informative posts !

    As a senior hubber, your contribution to this thread is very much wanted in the present as well as in the future.

    As usual, enrich us with your esteemed posts !

    Warm Wishes & Regards,
    Pammalar.
    pammalar

  9. #1598
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Dear rajeshkrv,

    Thank you very much for "THIRUMBIPPAAR" movie video !

    டியர் ராகவேந்திரன் சார்,

    திராவிட முன்னேற்றக் கழக மேடைப் பேச்சாளரான நடிகர் நாகராஜன் பற்றிய மேலதிக தகவலுக்கு நன்றி !

    நடிகர் திலகத்தின் 83வது ஜெயந்தி நிறைவு மற்றும் 84வது ஜெயந்தியின் தொடக்க விழா நிகழச்சிகள் குறித்த பட்டியல் அருமை. எல்லா விழாக்களும் இனிதே நடைபெற இதயபூர்வமான வாழ்த்துக்கள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #1599
    Senior Member Regular Hubber kumareshanprabhu's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    Dear Harish

    my mail id is kumareshan.s @ retail.adityabirla.com

    prabhukumar234@gmail.com

    regards
    kumareshanprabhu

  11. #1600
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by pammalar View Post
    Dear Mr. DHANUSU,

    Welcome back ! Thanks for your informative posts !
    But all are very very old, which we read somany times in this thread.

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •