Not sure whether true!
http://tamil.oneindia.in/movies/specials/2011/11/24-vijay-murugadass-film-titled-thuppakki-aid0136.html
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு 'துப்பாக்கி' என பெயர் சூட்டியுள்ளனர்.
இந்தப் படத்தில் ஏ ஆர் முருகதாஸுக்கு சம்பளமாக ரூ 12 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை ஆரம்பத்தில் எஸ்ஏ சந்திரசேகரனும் ஜெமினி பிலிம்ஸும் தயாரிக்கவிருந்தனர். அப்போதே ஏ ஆர் முருகதாஸ் சம்பளம் ரூ 12 கோடி என முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் பின்னர் இந்த சம்பளம் அதிகம் என்று தயாரிப்பு தரப்பில் யோசித்ததால், இழுபறி நீடித்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு கலைப்புலி தாணுவுக்கு கைமாறியதால், முருகதாஸ் சம்பளத்துக்கு பிரச்சினை இல்லாமல் போனது. விஜய்க்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரம் வெளியாகவில்லை.
படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 65 கோடி என்கிறார்கள். விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை.
காஜல் அகர்வால் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். விரைவில் துப்பாக்கி படப்பிடிப்பு தொடங்குகிறது.