Welcome Mr Ragulram after a long gap. Do continue to enthrall us
with your writeup on NT's unknown movies.
Regards
Printable View
Welcome Mr Ragulram after a long gap. Do continue to enthrall us
with your writeup on NT's unknown movies.
Regards
எனக்கு மிக பிடித்த ,என்றுமே என்னை அதிசயிக்க வைக்கும் நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை. நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும் ,மறைந்த எழுத்தாளரும் ஆன சுஜாதா ,ஒரு திருமணத்தில் நடிகர்திலகத்தை பார்த்த போது தனக்கு பிடித்த படமாக இதை குறிப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு unique &surprise package .நடிகர்திலகம் தன் நடிப்பின் பாணியை சற்றே மேற்கு நோக்கி மாற்ற ஆரம்பித்த படம்.
கச்சிதமான திரைக்கதை ,கூர்மையான இயக்கம் (C .H .நாராயண மூர்த்தி),முரசொலி மாறனின் அளவான, sophistication மிகுந்த (அன்றைய trend லி ருந்து விலகாத)வசனங்கள் என்று அருமையான கூட்டு முயற்சி.
எனக்கு தெரிந்து ஒரு சண்டை காட்சி கூட வைக்காமல் குரூரமான வில்லனை மேலும் குரூரமாக பழி வாங்குதல்,தியாகம் என்ற கூட்டுக்குள் அடையாமல் பழி வாங்கவே மகனை பாடு பட்டு வளர்க்கும் அன்னை, மனசாட்சியை அழுத்தி அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டு சிறிது கொடூரம் காட்டும் நாயகன் என்று தமிழ் பட cliche க்களை உடைத்தது. இது அந்த பதிபக்தி காலங்களில் பெரிய சாதனை.உள்ளத்தை தொடும் காட்சிகள் உண்டு.ஆனால் அனாவசிய sentiment கிடையாது.
சாம்ராட் அசோகன் நாடகம் எல்லோரும் அறிந்தது. ஆனால் அது ஒன்று மட்டுமே படத்தில் இயக்குனரின் compromise .மற்ற படி எடுத்து கொண்ட subject இல் rocket வேக laser பயணம்.comedy உறுத்தல் கிடையாது. ஒரு Holly wood படத்துக்கு நிகராக தயாரானது.தமிழ் பட ரசிகர்களின் ரசனை அடி மட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு அந்த நாள்,ஒரு அன்னையின் ஆணை, ஒரு புதிய பறவை, ஒரு தில்லானா மோகனாம்பாள் கொடுக்கும் துணிவு நடிகர்திலகத்தை தவிர யாருக்கும் வராது. படித்த தமிழர்களில் இவ்வளவு கணிப்பொறி மூடர்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில்,படிக்காத தமிழ் நாட்டில் 1958 இல் நடிகர்திலகத்தின் guts பற்றி என்ன சொல்ல?
ஆரம்ப கால சிவாஜி-சாவித்திரி ஜோடி (வணங்காமுடி,அன்னையின் ஆணை,காத்தவராயன்) எனக்கு மிக பிடிக்கும்.(1961 க்கு பிறகுதான் தங்கையாகி விட்டாரே!!!)கனவின் மாயா லோகத்திலே எனக்கு மிக பிடித்த duet .மேதை நடனத்தில் ஒரு cue தவறி விட்டு ,அதை re -take வாங்காமல் நடனத்தின் பகுதி போலவே மாற்றி சமாளிப்பார்.பத்து மாதம் சுமந்திருந்து பாடல் படமாக்க பட்ட விதம் ,நடிகர்திலகத்தின் ஆழமான சோகம்!!!அப்பப்பா!!!
இதில் Y .G .M முதல் அனைவராலும் பேச பட்ட அற்புத காட்சியொன்று.(ஒரு ஆங்கில பட inspiration ).தன தந்தையை கணேஷ் தான் (படத்திலும்) ஏதோ செய்து விட்டார் என சந்தேகிக்கும் பிரேமா கோப பட்டு கீறி பனியனை கிழித்து விட, நிதானமாய் wash basin சென்று ரத்த காயங்களை towel ஆல் துடைத்து ,திரும்பி வந்து அந்த towel ஆலேயே சாவித்திரியை அடித்து தன் ஆத்திரத்தை நடிகர்திலகம் வெளிக்காட்டும் விதம்.
பார்த்து முப்பது வருடம் ஆயிற்று. ஆனாலும் பசுமையாக உள்ளத்தில் என்றென்றும்.
அன்னையின் ஆணை பார்க்காதவர்கள் சிவாஜி ரசிகர்கள் என்றே சொல்லி கொள்ள கூடாது. முக்கியமாக சினிமா வித்தகர்களால் சிலாகிக்க பட்ட பகுதி-9 இல் 8 ஆவது நிமிடம் முதல் இறுதி வரை ,பகுதி-10 இன் முதலிரண்டு நிமிடங்கள். இதற்கே 10 ஆஸ்கார் வழங்கலாம்.
பகுதி-9
https://www.youtube.com/watch?v=genQWqEnXsI
பகுதி-10
https://www.youtube.com/watch?v=0AHw2rmB8N4
அன்னையின் ஆணை -சிவாஜி கோடீஸ்வரன், மணமகன் தேவை படங்களில் கோடி காட்டி இருந்தாலும் ,தன்னுடைய நடிப்பின் பாணியை முற்றிலும் வேறு திசையில் மேற்கு நோக்கி திருப்பிய ஆரம்ப படம் அன்னையின் ஆணை.
அதே போல சிவாஜி-சாவித்திரி இணை ஆரம்ப படங்களான (இறுதி 50 களின்) அமர தீபம்,வணங்காமுடி,அன்னையின் ஆணை ,காத்தவராயன் படங்களில் அவ்வளவு அழகாக வந்திருக்கும். என்ன ஒரு கெமிஸ்ட்ரி இந்த திலகங்களிடையே. அவ்வளவு அழகு ஜோடி.
பாச மலர் வந்து புரட்டி போட்டு விட்டது.
இந்த பாடல் கதாநாயகனின் கனவு. fantasy கலந்த செட்,உடைகள் எனினும் மிக மிக அழகுணர்ச்சியுடன் வடிவமைக்க பட்டிருக்கும். ஆண் -பெண் உடையமைப்பில் ஒத்திசைவு அபாரம். திராவிட மன்மதன் இளமையுடன் ஆணழகின் இலக்கணமாக ,துறு துறு வென்று மனதை அள்ளி விடுவார்.
நடன ஒத்திசைவு (rhythm ),அமைப்பு (choreography ),நளினம் (Grace ),ஸ்டைல் (style )வெளியீடு (execution ) எல்லாவற்றிலும் அப்படி ஒரு முழுமை. நடிகர்திலகம் முற்றிலும் புது பாணி கையாண்ட ஆரம்ப படம்.
கனியே உன்னாசை போலே, மலர்ந்தாடும் இன்ப சோலை மனம் மகிழும் பொன்னான வேளை ,அழகாய் நின்றாடும் மானே ,ஓஹோஹோ அமுதே எந்தன் வாழ்வுதனிலே வரிகளில் தலைவரை கண் கொட்டாமல் கவனியுங்கள்.இந்த இடத்தில் ஒரு ஸ்டெப் எடுப்பது போல நிறுத்தி பிறகு வருவதை பாருங்கள். ஸ்டைல்
ஆனாலும் சரி ,cue மிஸ் பண்ணி சமாளித்தாலும் (படசுருள்
வீணாகாமல்)இரண்டுமே ஒரு சாதனை நாயகனை பிரித்து காட்டும் அதிசயம்.
https://www.youtube.com/watch?v=Mtslsb4wJkY
வாசுவின் ஸ்பெஷல் ஆன காத்தவராயனில் சிவாஜி-சாவித்திரி அழகு இணையின் நிறைவேறுமோ எண்ணம்.ஜி.ராமநாதன் இசையில் டி.எம்.எஸ்-ஜிக்கி இணையில் .
கிளி ,நிலவொளியில் நடிகர்திலகமாகும் அந்த எனதாசை வனிதாமணி
கணத்தை தவற விடாமல், அந்த சைடு போஸில் ஜொலிப்பை ,கண் கொட்டாமல் பாருங்கள். இந்த ஸ்டில் மிகவும் பிரபலம்.சுவை கண்டால் மீறி இங்கே ஓடுவார் வரிகளிலும் அவ்வளவு அழகு. பாருங்க,பாருங்க,பார்த்து கிட்டே இருங்க.
https://www.youtube.com/watch?v=uAPRrWJDHMs
எனதருமை பாடகர் பீ.பீ.ஸ்ரீநிவாஸ் ,நடிகர்திலகத்திற்கு பாடிய ஒரே டூயட்.குறிஞ்சி மலர் போல ,நினைவில் தங்கும். நான் சொல்லும் ரகசியம் படத்தில்.வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அடுத்து வந்ததாலோ என்னவோ,ஜி.ராமநாதனின் இன்பம் பொங்கும் சாயலில் வந்த பாடல் கண்டேனே உன்னை கண்ணாலே.
இந்த படத்தில் ஹீரோ ரிக்ஷாகாரன் கனவு காணுவதாய் வருவதால் fantacy & realism சரிபாதியாய் கலந்த உடைகள்,அரங்க அமைப்பு.
பீ.பீ.ஸ்ரீநிவாஸ் தன்னுடைய வழக்கமான பிட்ச் இல் இருந்து சிவாஜிக்காக ஒரு படி மேலேற ,சிவாஜி ஏ.எம்.ராஜா,எஸ்.பீ.பீ.,ஜேசுதாஸ் இவர்களுக்கு ,இவர்கள் குரலுக்காக மாற்றி அட்ஜஸ்ட் செய்து ,body language ,வாயசைப்பு,முகபாவம் எல்லாவற்றிலும் தத்ரூபமாய் குரலின் பிரதிபலிப்பை கொண்டு வருவார். அஞ்சலி இந்த காட்சியில் அழகு ,சிவாஜியுடன் மிக இசைவாக இருக்கும்.(சிவாஜி ,நடிகைகளுக்கும் அவர்கள் இயல்பு படி விட்டு,தான் வித்யாசபடுத்தி இணைவார்,இசைவார்)
அந்த பாக்கெட் இல் கை விட்டு ,அடக்கி வாசிக்கும் வாயசைப்பு.ஹா ஹா என்று தொப்பி கழட்டும் ஸ்டைல்,நிலவென்று நீயே உனதல்லி நானே என்ற வரிகளில் ஆ ஆ ஆ என்று ஆமோதிக்கும் ஸ்டைல்,எனதாசை மானே என்று துள்ளி அருகில் விழும் துரு துரு ஸ்டைல் ,என் பிரியமான டூயட்.
பீ.பீ.எஸ் இதை பற்றி பத்து நிமிடம் சிலாகித்தார்.
https://www.youtube.com/watch?v=WEHpektZFc0
கனவின் மாயா லோகத்திலே....நடிகர் திலகம் அவ்வளவு அழகு ! அழகு என்றால் ஆண்மை கலந்த அழகு ! Manly smartness !
அவருடைய original hairstyle தமிழகம் இதுவரையில் வேறு ஒருவரிடம் கண்டதில்லை என்பதே எனது கருத்து..!
கரு கரு என்ற சுத்தமான தேங்காய் எண்ணிக்கொண்டு வாரப்பட்ட சுருண்ட அடர்த்தியான கேசம்....! கூர்மையான பிரகாசம் அதைவிட கூர்மையாக பாய்ச்சும் கண்கள்...! மொத்த உடலையும் சிறிது தேர் போல குலுக்கி நடக்கும் style நடை !
இவர் அன்றோ ஆண்மகன் !
Thanks gopal sir for reminding about this song !!
Today, 01:21 PM #2793
mr_karthik
தமிழ்த்திரையுலகின் பொற்காலம் (1960 - 1969)
தமிழ்த்திரைப்படங்கள் மகத்தான் சாதனைகள் புரிந்த இந்த காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் சாதனை பொக்கிஷங்கள்.
-------------------------------------------------------------
வெள்ளிவிழா காவியங்கள்
1) பாவ மன்னிப்பு
2) பாசமலர்
3) திருவிளையாடல்
20 வாரங்களைக் கடந்த படங்கள்
1) படிக்காத மேதை
2) பாலும் பழமும்
3) சரஸ்வதி சபதம்
4) தில்லானா மோகனாம்பாள்
5) சிவந்த மண்
100 நாட்களுக்கு மேல் ஓடியவை...
மருத நாட்டு வீரன்
பார்த்தால் பசிதீரும்
ஆலயமணி
இருவர் உள்ளம்
அன்னை இல்லம்
கர்ணன்
பச்சை விளக்கு
கைகொடுத்த தெய்வம்
புதிய பறவை
நவராத்திரி
சாந்தி
மோட்டார் சுந்தரம் பிள்ளை
கந்தன் கருணை
இருமலர்கள்
ஊட்டிவரை உறவு
கலாட்டா கல்யாணம்
உயர்ந்த மனிதன்
தெய்வமகன்
(திருவருசெல்வர், என்தம்பி, திருடன் ஆகிய படங்கள் 100 நாட்கள் ஓடியதாக சொல்லப்பட்ட போதும் தெளிவான ஆதாரங்கள் இல்லாததால் சேர்க்கப்படவில்லை).
சென்னையில் நான்கு அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்...
ஆலயமணி
கைகொடுத்த தெய்வம்
நவராத்திரி
சிவந்த மண்
------------------------------------------------------------
விருதுகளும் பரிசுகளும்
1966-ல் மத்திய அரசின் 'பத்மஸ்ரீ' விருது
1961 மத்திய அரசின் சிறந்த பிராந்திய மொழிப்படம் பாவமன்னிப்பு
1961 மத்திய அரசின் சிறப்பு சான்றிதழ் கப்பலோட்டிய தமிழன்
1968 மத்திய அரசின் சிறந்த பிராந்திய மொழிப்படம் தில்லானா மோகனாம்பாள்
1968 மாநில அரசின் சிறந்த படம் உயர்ந்த மனிதன்
1968 மாநில அரசின் இரண்டாவது சிறந்த படம் தில்லானா
1969 மாநில அரசின் சிறந்த நடிகர் விருது தெய்வமகன்
1963 சிறந்த ஒருமைப்பாட்டுப் படம் ரத்தத்திலகம் (துப்பாக்கி பரிசு)
இவைபோக சினிமா ரசிகர்சங்க விருதுகள், பிலிம்பேர் விருதுகள்.
ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் சிவந்த மண்.
இந்த காலகட்டத்தில் (60-69) வெளியான 'லேண்ட்மார்க்' படங்கள்
75-வது படம் பார்த்தால் பசிதீரும்
100-வது படம் நவராத்திரி
125-வது படம் உயர்ந்த மனிதன்
(அனைத்தும் வெற்றி)
1962-ல் இந்திய கலாசார தூதுவராக அமெரிக்க பயணம். நயாகரா நகரின் கௌரவ மேயராக தங்கச்சாவி பரிசு என்பதோடு அன்றைய மேயர் என்ற முறையில் இரண்டு தீர்மானங்களில் நடிகர்திலகத்தின் கையெழுத்து.
பொற்கால தமிழ் சினிமாவின் பொற்கால சிற்பி நடிகர்திலகம்...
தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று கருதபடுவதாவாக கூறப்படும் 1960 - 1969
************************************************** ************
பல தமிழ் படங்கள் - சாதனைகள் புரிந்த வரலாற்றில் நடிகர் திலகத்தின் படங்கள் பற்றிய தொகுப்பு
நடிகர் திலகம் நடித்த மொத்த படங்கள் 76. அதாவது வருடத்திற்கு சராசரி 8.40 திரைப்படங்கள்.
இதுவே உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர், ஒரே மாதிரி கதைகள் அல்லாமல் ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமானதாக இருந்தமுறையில் செய்து காட்டிய ஒரு தனிப்பட்ட இமாலய சாதனை.
சாதாரண social subject அல்லாமல் சரித்திர, இதிகாச, வரலாற்று விஷயங்களை மக்கள் முன் ஒரே நடிகர் ஒரே வருடத்தில் கொண்டுவந்து கண் முன் நிறுத்தியது தமிழ் திரை உலக வரலாற்றில் நடிகர் திலகம் மட்டும் தான் !
அவற்றில் 100 நாட்கள் படங்கள்
1) இரும்புத்திரை
2) தெய்வபிறவி
3) படிக்காத மேதை
4) விடிவெள்ளி
5) பாவமன்னிப்பு
6) பாசமலர்
7) மருத நாட்டு வீரன்
8) பாலும் பழமும்
9) பார்த்தல் பசி தீரும்
10) படித்தால் மட்டும் போதுமா
11) ஆலயமணி
12) இருவர் உள்ளம்
13) அன்னை இல்லம்
14) கர்ணன்
15) பச்சை விளக்கு
16) கை கொடுத்த தெய்வம்
17) புதிய பறவை
18) நவராத்திரி
19) சாந்தி
20) திருவிளையாடல்
21) மோட்டார் சுந்தரம் பிள்ளை
22) சரஸ்வதி சபதம்
23) கந்தன் கருணை
24) இரு மலர்கள்
25) ஊட்டி வரை உறவு
26) கலாட்ட கல்யாணம்
27) தில்லான மோகனம்பாள்
28) உயர்ந்த மனிதன்
29) தெய்வ மகன்
30) திருடன்
31) சிவந்த மண்
SILVER JUBILEE அதாவது வெள்ளிவிழா ( 175 DAYS & MORE ) கொண்டாடிய படங்கள் -
1) இரும்புத்திரை
2) பாவமன்னிப்பு
3) பாசமலர்
4) திருவிளையாடல்
திராவிட கட்சிகள் ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் நாத்திக கொள்கைகளை கடுமையாக தமிழகத்தில் விதைத்து கொண்ட காலகட்டம் - குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீதும் இறை வழிபாட்டை முடிந்தவரையில் கட்டுபடுத்தியிருந்த நேரம் - இது போதாதென்று INDO PAK போர் காலம் என்பதால் இரவு BLACK OUT முறை செயல்படுத்தப்பட்ட நேரம் !
இதனை எதிர் மறை சூழ்நிலையும் மீறி நடிப்பு கடவுளின் திருவிளையாடல் மதோன்னத வெற்றி பவனி !
தமிழ் திரை உலகில் அதுவரை வந்த அத்துணை படங்களின் வசூல்களை நொடிபொழுதில் முக்கிய நகரங்களில் எல்லாம் முறியடித்து எங்கும் இறை அருள் என்பது போல தமிழகம் முழுதும் உள்ள அனைவரையும் தனது பக்கம் இழுத்த " திருவிளையாடல்" காவியம் !
23 வாரங்கள் ஓடிய படம்
*******************
படிக்காத மேதை - 1960
21 வாரங்கள் ஓடிய படம்
*******************
சிவந்த மண் - 1969
ஒரே ஆண்டில் இரண்டு வெள்ளி விழா காவியம் கொடுத்த நடிகர் திலகம் - 1961 - பாவமன்னிப்பு & பாசமலர்
ஒரே ஆண்டில் மூன்று BLOCK BUSTER வெற்றிகள் கொடுத்தவரும் நடிகர் திலகம் - 1961 - 1) பாவமன்னிப்பு 2) பாசமலர் 3) பாலும் பழமும்
பொற்கால சாதனை துளிகள்
**********************
1960 - 1969- இந்த பொற்காலத்தில் பொக்கிஷமாக நடிகர் திலகத்தின் பல திரைப்படங்கள் தேசிய அளவில் பல நற்சான்றிதழ்களையும், சிறந்த திரைப்பட விருதுகளையும் அதிக அளவில் பெற்றது.
1961- பாசமலர் - அண்ணன் தங்கை பாசம் - இது போல ஒரு காவியம் தமிழகம் இதுவரை கண்டதில்லை.
இந்த பொற்காலத்தில் நடிகர் திலகம் உலக தமிழர்களின் முகவரியாக வலம் வந்து உலக திரை அரங்கில் மூன்று கண்டங்களில் அதாவது ஆசிய ஆப்ரிக்க , அமெரிக்க (ASIA AFRO & AMERICA )ஆகிய நாடுகளில் பெற்ற "உலக விருதுகள்" - தமிழ் திரை உலகின் "உலக நாயகன்" !
1) 1960 - உலக திரைப்பட அரங்கில் ஆசியா ஆப்ரிக்க கண்டங்களிலேயே சிறந்த நடிகர் என்ற விருதை நடிகர் திலகம் பெற்று தமிழ் திரை உலகை முதன் முதலாக உலக திரை உலகின் முன் கௌரவபடுத்தினார் !
2) 1962 - அமெரிக்க அதிபர் JOHN F KENNEDY அவர்களின் சிறப்பு அழைப்பிதழின் பேரில் நடிகர் திலகம் இந்திய அமெரிக்க கலாசார தூதுவராக அழைக்கப்பட்டார். இன்று வரை இந்த பெருமையை எந்த ஒரு இந்திய நடிகரும் பெற்றதில்லை.
3) நயாகரா நகரின் ஒரு நாள் மேயர் பதவியும் அதன் அடையாளமாக தங்க சாவியும் நடிகர் திலகத்திற்கு கொடுக்கப்பட்டது. இதை பெற்ற முதல் இந்திய நடிகர் நடிகர் திலகம் !
இந்த உலக பெருமை வேறு எந்த இந்திய நடிகருக்கும் இன்று வரை வழங்கப்படவில்லை !
இந்த பெருமையை பெற்ற மற்றொரு இந்தியர் நம் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் !
4) தமிழ் திரை உலக நடிகர் ஒருவரை, அவர் புகழ் கேட்டு அதன் எதிரொலியாக உலகபுகழ் பெற்ற HOLLYWOOD எனப்படும் ஆங்கில திரை உலகில் - உலகளவில் கோலோச்சிய மர்லான் பிராண்டோ மற்றும் இதர HOLLYWOOD SUPERSTARS நம் நடிகர் திலகத்தை சந்திக்க விரும்பி அங்கு நடிகர் திலகம் சென்றபோது சிறப்பு விருந்தளித்து கௌரவித்தனர் ! இந்த கெளரவம் வேறு எந்த நடிகருக்கும் HOLLYWOOD கொடுத்ததில்லை என்பது இன்றளவும் ஒரு பெருமை !
1964 - நடிகர் திலகம் அவர்கள் குறுகிய காலத்தில் 100 படங்கள் நிறைவு செய்தார். 1952 அக்டோபர் முதல் 1964 டிசம்பர் வரை நடித்து வெளியான படங்களின் எண்ணிக்கை 100. -
1964 - ஒரு நடிகரின் 100வது திரைப்படம் மிகபெரிய வெற்றி பெற்றது அதுவே முதல் முறை - 100 வது படம் மிக வித்தியாசமாக கொண்டதும் அதுவே முதல் முறை - 9 வேடங்கள் நவரசம் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் ! - வித்தியாச முயற்சி - மிகபெரிய வெற்றி !
1952 தீபாவளி, நடிகர் திலகம் நடிக்க வந்த ஆண்டு முதல் தமிழ் திரை உலக பொற்காலமாக கருதப்பட்ட 1960 -1969 முடிய நடித்து முடித்து வெளியான படங்கள் எண்ணிக்கை 134.
AVERAGE FILM PER YEAR FROM 1952 OCTOBER to 1969 December - 11.14
1960 - 1969 - பொற்கால தமிழ் சினிமா - 9 ஆண்டுகளில் 76 படங்கள் -
AVERAGE FILM PER YEAR FROM 1960 to 1969 December - 8.40
1960 - 1969 - 100 முதல் 163 நாட்கள் வரை ஓடிய படங்களின் எண்ணிக்கை - 31
1960 - 1969 - 175 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களின் எண்ணிக்கை - 4
இந்திய அரசாங்கத்தின் பரிசு, விருது பெற்ற படங்கள் - 8
சினிமா ரசிகர்சங்க விருதுகள், பிலிம்பேர் விருதுகள் - பல படங்கள்
நடிகர் திலகம் பெற்ற உலக விருதுகள் மற்றும் கெளரவம் : மொத்தம் - 3
1) BEST ACTOR - ASIA AFRO CONTINENT - 1960
2) ONE DAY MAYOR OF NIAGARA - USA - 1962
3) CULTURAL AMBASSADOR INVITED BY JOHN F KENNEDY - USA - 1962
தமிழ் திரை உலகின் பொற்காலத்தை உருவாகிய, உலக அரங்கில் தமிழனை தலை நிமிரச்செய்த பொற்கால கடவுள் " நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !!
Artical in today's tamil.The hindu
பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளியான ‘பலே பாண்டியா’ (1962) படத்தில் பாண்டியன்,மருது, சங்கர் என மூன்று மாறுபட்ட வேடங்களில் முதல்முறையாக சிவாஜி நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இடம்பெற்ற ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாடலில் நீண்ட ஆலாபனையாக சுர வரிசையைப் பாடிக்கொண்டே ‘மாமா… மாப்ளே’ என்று பாடலின் முடிவில் நடக்கும் சங்கீதப் போட்டி, மிகவும் ரசிக்கப்பட்டது.
அப்போது கிண்டியில் அமைந்திருந்த ‘நியூட்டன்’ ஸ்டூடியோவில் பாடலைப் படமாக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடலில் எம்.ஆர். ராதாவுக்காக எம். ராஜு என்பவரைப் பாட வைத்திருக்கிறார்கள். இவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி குழுவில் இடம்பெற்றிருந்த கம்பெனிப் பாடகர்.
அச்சு அசலாகத் தனது குரலில் பாடியதைப் போலவே ராஜு பாடியிருப்பதைக் கேட்டு அவரை செட்டுக்கே வரவழைத்து நடிகவேள் பாராட்டினார். பிறகு அவரிடமே அந்தப் பாடலில் இடம்பெற்ற சுர வரிசையையும் கற்றுக்கொண்டார். ஆனால் அவை அத்தனை சீக்கிரம் வாயில் நுழையவில்லை. அவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததை ரசிக்க செட்டில் இருந்தவர்கள் கூடியதால், “ஏன்டா இங்க என்ன யானை வித்த காட்டவா வந்திருக்கு?” என்று எல்லோரையும் துரத்தினாராம்.
ஓரளவு கற்றுக்கொண்டாலும் சுர வரிசைகளால் பெரிய குழப்பம் ஏற்பட, இயக்குநர் பந்துலுவிடம் “எனக்கு குளோஸ் அப் வைக்காமல் கேமராவை நிறுத்தாமல் ஓடவிடு, முக்கியமாக நாகராவில் பாடலை ஒலிக்கவிட்டு ‘ரிகர்சல்’ பார்க்க வேண்டாம் என்று உத்தரவு போட்டுவிட்டாராம் ராதா.
படப்பிடிப்பில் பாலாஜி கடம் வாசிப்பதுபோல நடிக்க, சிவாஜி தரையில் அமர்ந்து பாட, சோபாவில் அமர்ந்து எம்.ஆர். ராதா ரசித்துக் கொண்டிருப்பதுபோல இரண்டு கேமராகளை வைத்துப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். பாதி பாடல் எடுத்து முடிக்கப்பட்டதும், இரண்டு நிமிடம் இடம்பெறும் சுர ஆலாபனைக்கான படப்பிடிப்பு தொடங்கியது.
பாடகர் ராஜு சொல்லிக்கொடுத்த சுரங்கள் எல்லாம் மறந்துபோனாலும் ரொம்பவே சூப்பராகச் சமாளித்திருக்கிறார் நடிகவேள். சுர ஆலாபனையைச் சரியான உதட்டசைவுடன் சொல்ல முடியாது என்று தெரிந்ததும், தனது அங்க சேஷ்டைகளால் சமாளிக்க ஆரம்பித்தார். முக்கியமாக அவர் அமர்ந்திருந்த சோபா அதிரும்படி உடலையும் கைகளையும் அசைக்க ஆரம்பித்தார். நடிகவேளின் உடல் மொழியைக் கண்டு செட்டில் இருந்த அத்தனை பேரும் சிரித்துக்கொண்டே இருக்க அப்போதே இந்தப் பாடல், படத்துக்குப் பெரிய சர்ப்பிரைஸ் என்பது தெரிந்துவிட்டது.
பாடலின் க்ளைமேக்ஸ் நெருங்கிய நேரத்தில் பெரிய கர்நாடக சங்கீதப் பாடகரைப் போல் இடது கையைத் தனது காதருகே வைத்துக் கொண்டு வலது கையை நீட்டி வாயை அசைத்து நடித்திருக்கிறார் நடிகவேள். இது கொஞ்சம் ஓவராக இருக்கிறதே என்று இயக்குநர் நினைத்தாலும் கடைசி ஷாட் என்பதால் ஓடிக்கொண்டிருக்கும் கேமராவை நிறுத்த இயக்குநர் விரும்பவில்லை.
படப்பிடிப்பு முடிந்ததும்.. “அண்ணே ஆலாபனை பாடுறதுக்கே காதுகிட்ட கையைக் கொண்டு போயிட்டீங்களே!? என்னாலயே சிரிப்பை அடக்க முடியல” என்றார் பந்துலு. அதற்கு எம்.ஆர்.ராதா... “அடப் போய்யா... நான் குதிச்ச குதியில விக் கழன்றுகிட்டு வந்திருச்சு... அது கீழ விழுந்துட்டா.. எல்லார் உழைப்பும் தீர்ந்துருமே… விக் கீழே விழாம பிடிச்சுக்கத்தான்.. அப்புடி காதுக்கிட்ட கை வெச்சேன். என்னோட மானமும் மிச்சம், உன்னோட பிலிம் ரோலும் மிச்சம்” என்றாராம்.
தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் 1960 முதல் 1969 வரை வெளியான படங்கள், அவற்றில், முன்னணி நடிகர்கள் நடித்த படங்களைப் பற்றிய ஒரு கணக்கு இதோ:
இந்த காலக்கட்டத்தில் ஏழு முன்னணி நடிகர்கள் கோலோச்சினார்கள் (எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்).
இந்த 10 வருடங்களில், சிவாஜி 75 படங்களிலும், எம்.ஜி.ஆர் 59 படங்களிலும் நடித்துள்ளார்கள். ஜெமினி கணேசன் 44, 1965-ல் அறிமுகமான ஜெய்சங்கர் 5 வருடங்களில் 41. இரு வாரங்களுக்கு ஒரு முன்னணி நடிகரின் படம் வெளியானது.
ஜோவுடன் உடன் படுகிறேன். 8 வயது சிறுவனாக ஹிந்தி திணிப்பு எதிர்ப்பில் பங்கு பெற்றேன். இன்றும் அதே மனநிலை. இன்னொருத்தன் வீட்டில் சென்று அவன் தாயை பழிப்பது வேறு. நம் வீட்டில் நுழைந்து ஒருவன் என் தாயை உன் தாயாக ஏற்றே ஆக வேண்டும்,என் தாய்தான் உசத்தி என்று சொன்னால் ,விடுவோமா?
நாமெல்லாம் ,ஹிந்து மதமல்ல,தமிழ்தான் நமது மதம். தமிழர்கள் ஓரினம்.திருக்குறள் நம் புனித நூல். நடிகர்திலகம் நம் தமிழ் ஆசான்.
Dear Gopal sir and Joe sir,
I am not here to start a debate a fresh on this. I have mentioned what was prevailing at that time and the success of Thiruvilayadal amidst such strong anti society activities , where the general public could not move freely with those thoughts ...!
BUT, am ready to battle it out on a different arena, i mean a separate new thread on the same topic that you are bringing in here, if you wish !
Carefully coined phrases can bypass any eye BUT not an eagle's !
Not against Hindi But against Hindism ...Similarly, Not against Brahmins..BUT against Brahminism are such carefully coined phrases...!
Similarly, am not against Tamizh ....But am against Tamizhism ! :-)
Let me know once you create a thread on the same ...till then i shall wait to discuss and debate !
Regards
RKS
Ravi kiran,
let us not argue on that point. I am not in agreement with todays dravidian Politics. What happened in the past (abt 48 years back) were the needs of the hour. DMK in power was altogether different .The spread of convent schools and not insisting on compulsory Tamil education (atleast as a subject)were the shameful things. But I was in agreement with E.V.R &Anna's stance on Social issues and safe-guarding our mother-tongue.(the oldest surviving language on the earth).I am also against using caste card today as it has no relevance after the corrective steps implemented and in vogue.
As you put it tellingly,this is not the right Forum and hope you refrain from caustic comments too.
http://i.ytimg.com/vi/cWiJwr0gKAw/mqdefault.jpg
மிக மிக விரைவில்...
நம் நீண்ட நாள் கனவு நிறைவேற...
தடை பட்ட பயணம் தொடர ....
உள்ளதைச் சொல்லி
சொன்னதைச் செய்வதன்றி
வேறொன்றும் தெரியாத
படிக்காத மேதையின்
புகழைப் பரப்பும்
பொக்கிஷத்திலிருந்து...
....
....
அது என்ன...
இந்த ஆடிப் பெருக்கில் உங்கள்
ஆவல் பெருக்கெடுக்கிறதா...
தொடர்பு கொள்ளுங்களேன்
9566028230 இந்த எண்ணை..
அறிந்து கொள்ளுங்களேன் முன்னே...
Watch NT's Super Hit Movie Sangili in Sun Life Channel at 7.00 pm.
Don't miss it.
நன்றி எஸ்வி.மன்னவன் வந்தானடி வித்யாசமான,கலகலப்பான ,ஜனரஞ்சக படம்.நினைவு படுத்தியதற்கு நன்றி. எஸ்வீ நினைவு படுத்தி விட்டதால் ,இந்த படத்தை பற்றி எழுதலாமே?
நாகேஷ் : அண்ணே.....அண்ணே........ஹய்யோ...ஹய்யோ....நான் தான் டாப்பு....நாந்தான் டாப்பு...!
MR ராதா : யார்ராவன்...சூர்யன் WEST லேர்ந்து EAST உக்கு PROPER ஆ வர்றதுக்குள்ள ALARM அடிக்கறான்...?
ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ...யேநம்பாளா....என்ன MAN ...எப்பவும் போல காலங்காத்தாலயே ஆரம்பிச்சிட்டியா..?
டாப்பு...டாப்பு நு..TOP VOICE ல எப்பவும் சவுண்ட்வுடுறியே ...நல்லாவா இருக்கு ?
ஏண்...இப்படி..TOP ...TOP நு DOOP அடிக்கிரீங்கோ...! அசிங்கமா இல்லே ! மூட்டையிலே இன்னிக்கி என்ன STOCK கொண்டுவந்திருக்கே ? கொண்டுவந்த STOCK எ டக்குண்ணு டைம் பாத்து அவுத்துவிடவேண்டியது தானே ? அதுசரி...எல்லாம் தயார PLATE ல போட்டு SERVE பண்ண ரெடியா தான் இருக்கே..! யோசிக்காதே...
COME on PROCEED !
நாகேஷ் : அண்ணே..உங்களுக்கு தெரியாது...அந்த அவங்க ல...அவங்க...அவங்க சொன்னங்க நாம தான் எப்போவும் டாபுன்னு...போன 1965ல கூட நம்ம சமாசாரம் தான்னே டாப்பு...உங்களுக்கு தெரியாதுண்ணே ...அப்போ நீங்க இங்க இல்லவே இல்ல...! அப்போ அவங்க சொல்றது சும்மாவன்னே ...என்னமோ தெரிஞ்ச மாதிரி பேசறீங்களே ! போங்கண்ணே !
MR ராதா : ஹலோ ...ஜென்டில் மேன் ....எதுக்கு இப்படி தேள் கொட்டினவன் மாதிரி துடிக்கற...பதறாம நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு முதல்ல.? உனக்கு யாரு சொன்னாங்கோ டாபுன்னு கொஞ்சம் சொல்றியா ?
நாகேஷ் : அண்ணே...அண்ணே...எல்லாரும் சொல்றாங்கன்னே...பக்கத்து தெருல கூட சொன்னாங்கன்னே..!
MR ராதா : அட ...எவளோ சுளுவா...பதில் சொல்ராண்டா..யப்பா...! இங்க வா....மொதல்ல இங்க வா...!
நாகேஷ் : வந்துட்டேன்..சொல்லுங்கண்ணே !
MR ராதா : இல்ல....தெரியாமதான் கேக்கறேன்...உனக்கு..COMMON (நிறுத்தி ) SENSE அப்புடின்னு ஒரு சமாசாரம் இருக்கு..கேள்விபட்டிருக்கியா ? அதபத்தி தெரியுமா ?
நாகேஷ் : அமாண்ணே...தெரியும்னே .....லாலா கடைல புதுசா வந்துருக்குன்னு சொன்னாங்களே அந்த SWEET தானே ? எதுல செஞ்சதுன்னே அந்த COMMON SENSE அப்டீங்கற அந்த பலகாரம் ? ..என்னமோ புது ஸ்ஸ்ஸ்ஸா இருக்கு இந்த பேரு ?
MR ராதா : சருதான்...ஆமா இப்போ .COMMON SENSE எ லாலா கட மிட்டாயின்னு எதவேச்சு சொன்னே...?
நாகேஷ் : இல்லானே இப்போ SWEET பேரு எல்லாம் இங்கிலிஷ்ல வர ஆரம்பிச்சதால நானே கண்டுபுடிச்சதுன்னே !
MR ராதா : இன்னதூஊஉ...நீயேயேயேயே...கண்டுபுடிசியாயாயாயாயா ....?
இது உனுக்கே நல்லா இருக்காஆஆஆஆஆ....நீயே கண்டுபுடிசென்னு சொல்லி ஏதாவது டூபடிப்பே...
அப்புறம் அத உன்ன மாதிரி திரியரானுவளே...அவனுங்க கிட்ட உன் கண்டுபுடிப்பே...சொல்லுவா...
அவன் அவன் பங்குக்கு உன்ன மாதிரி நாலு கண்டுபுடிப்ப உணடதோட சேத்து 40 பேர் கிட்ட சொல்லுவா !
அந்த 40 பேரு 400 பேருகிட்ட சொல்லுவாங்கோ...கேட்டா..என்கிட்டே...அந்த காலத்துல சொன்னாங்கோ...ஆதிகாலதுல இருந்துவர உண்மை...அப்புடின்னு கப்சா விடுவ....இத ஒருத்தன்.. டூபுன்னு சொன்ன..உடனே,.. நீங்க அப்போ இல்ல....நாங்கதான் இருந்தோம்னு சொல்லவேண்டியது...நல்லா...இருக்கு..உங்க ஞாயம்..!
நாகேஷ் : அண்ணே...என்னனே இப்படி சொல்லிடீங்கோ...! நான் எவ்வளவு நம்பிக்க வச்சிருந்தேன்...!
MR ராதா : ..நீயா ஒன்னு சொல்லுவ....
அத ஊரு சொல்லுச்சுன்னு, உலகம் சொல்லுச்சுன்னு டூப்பு அடிப்பே...
சரி...ஊரும் உலகமும் சொல்லுச்சே..அப்போ பத்திரிகையில வந்திச்சான்னு கேட்டா...தேதியே போடாத ஒரு பத்திரிகைய காமிச்சு இதோ பாருங்கண்ணே நு சொல்லுவே.....இதோ பாருங்கண்ணே ஊரு சொன்னத அப்புடின்னு சொல்லுவே ...
அத எல்லா ஊரு ஜனமும் நம்பனும்...இதுக்கு தாண் வெள்ளக்காரன் கரெக்டா பேரு வெச்சிருக்கான் அந்த காலத்துலயே ...
நாகேஷ் : என்னதுன்னே அது ..அண்ணே..அண்ணே..சொல்லுங்கண்ணே...! கேக்க ரொம்ப ஆவலா இருக்கு !
MR ராதா : தெரியும்.... தெரியும்....உங்களபத்தி......நான் சொன்னா...இதையும் நீங்கதான் கண்டுபுடிசேன்ன்னு TEN DAYS கழிச்சு வந்து காலங்காத்தால இங்க வந்து திரும்பவும் TORTURE பண்றதுக்க...!
24 hours இப்படி தான் நீங்க எல்லாரும் PUBLIC எ தகவல் தகவலனு சொல்லி டூப் அடிச்சு torture பண்றீங்க...!
அடங்கப்பா,,,,,ஒரு விஷயம் நல்ல தெரிஞ்சுபோச்சு.......20 போயி...21...22..நு century வந்தாலும் டூப்பு அடிக்கற வழக்கம் மட்டும் உங்கள விட்டு போகாது...!
கடவுளே இல்லன்னு சொல்ற குரூப் இந்த நாட்ல இருக்கு ....காந்திய கூட கேவலமா பேசற பெரும நம்ம ஊர்ல தான் பாக்க முடியும்...
அந்த மாதிரி..நீங்க டூப்பு அடிக்கறத நிருத்தபோரதில்ல...!
நாகேஷ் : (சிறிது விரக்தியுடன்) அண்ணே...போங்கண்ணே..! நீங்க திருந்தவே மாடீங்கன்னே ! நாங்க ஏதோ என் ஆசைக்கு சொன்ன ...நீங்க ரொம்ப மோசம் அண்ணே ...!
MR ராதா : ஆமா..... உண்மைய பேசினா நான் மோசம்..!
இருந்தாலும் சொன்ன பாரு ஒரு வார்த்த நான் திருந்தமாட்டேன்னு ...எவ்ளோ சுளுவா சொன்ன ங்கப்பா..!
அப்பரம்.... என்னமோ சொன்னியே "ஆசைப்பட்டு சொன்னீங்களா" ?
உன் சொத்துக்கு ஆசைபடு அது ஞாயம் ..நான் கூட SUPPORT பண்றேன்.,..
அத விட்டு எதுக்கு அடுத்தவன் சொ..த்..து..கே...ல்...லா...ம் ஆசைப்பட்டு ...ஆசபடரதோட மட்டும் இல்லாம அதெல்லாம் என் சொத்து..என் சொத்து..ன்னு ஊரு பூரா டமாரம் அ..டி..கி..ரீ..ங்..கோ !
இந்த உண்மையா சொன்ன...நான் திருந்தமாடெனாஆன்ன்னு ஒரு கேள்வி வே..றே....!
(தலையில் அடித்துக்கொண்டு ...)எத்தன பெரியார் வந்தாலும் உங்கள எல்லாம் திருத்த முடியாது...!
PAVA MANNIPPU Today in Kalignar TV at 3.30 pm . Don't miss it.
நண்பர்களே..
வசூல் ஒப்பீடு என்பது தேவையில்லை என்று நாம் பல முறை கூறி வந்திருக்கிறோம். தமிழ்த் திரைப்படம் என்பது வியாபார ரீதியாக வெற்றி பெறும் படங்களினால் தான் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து நிலைத்து வருகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரி 50 படங்களே என்று வைத்துக் கொண்டாலும் கூட இந்த 80 ஆண்டுகளில் குறைந்த பட்சம் 4000 திரைப்படங்கள் வெளிவந்திருக்கும். ஒவ்வொரு கால கட்டத்திற்கும் நட்சத்திரங்களின் புகழும் இந்த வெற்றியைத் தீர்மானிக்கும் அளவு கோலில் அடங்கி வந்திருந்தாலும் அவ்வப்போது இதையெல்லாம் தாண்டி அந்தந்தப் படங்களுடைய தகுதி, தரம் போன்றவற்றிற்காக பெற வேண்டிய வெற்றியைப் பெற்றும் உள்ளன. வியாபார ரீதியிலான உலகில் வசூல் என்பது காலத்திற்குக் காலம், விலைவாசி, போன்ற பல அம்சங்களின் பொருட்டு நுழைவுச்சீட்டு கட்டண உயர்வு, இருக்கைகளின் எண்ணிக்கை போன்றவற்றைப் பொறுத்து வேறு பட்டு வந்திருக்கின்றன. கடந்து போன பல ஆண்டுகளுக்கு முந்தைய வசூல் விவரங்கள் தற்போதைய கால கட்டத்தில் நிரூபிக்க முடியாத விஷயங்களாகத் தான் இருக்கும் என்பது என் கருத்து. இதற்கு பல காரணங்களைக் கூறலாம். எனவே இந்த வசூல் அதிகம், இந்த வசூல் குறைவு, என்பவையெல்லாம் ஆவணங்களால் நிரூபிக்க இந்த காலகட்டத்தில் சாத்தியமில்லாதவை. அவ்வப்போது சில திரைப்படங்களின் செய்தித்தாள் விளம்பரங்களில் வெளியிடப் பட்ட வசூல் விவரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்றாலும் அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இந்த அடிப்படையில் வசூல் ஒப்பீடு என்பது எவருக்குமே தேவையில்லாத ஒன்று என நான் எண்ணுகிறேன்.
ஒரு உதாரணத்திற்காக ஒப்பீடு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்காக கீழே தரப்படுகிறது.
இந்த மய்யம் திரியிலேயே நடிகர் திலகம் திரி எம்.ஜி.ஆர். அவர்களுக்கான திரி இவையிரண்டும் பார்வையாளர்கள் எண்ணிக்கை, பதிவுகளின் எண்ணிக்கை, இவற்றை 03.08.2014 இன்று நண்பகல் 12.00 மணி யளவில் வைத்து ஒப்பிடப் படுகிறது. இந்த எண்ணிக்கை இதைக் குறிப்பெடுத்த நேரத்துக்குத் தான் பொருந்துமே தவிர நிலையானதல்ல. இரண்டிலுமே இந்த விகிதங்கள் மாறுபடும் வாய்ப்புள்ளவை. இதை வைத்து இது தான் உயர்ந்தது, இது தான் அதிக வரவேற்பைப் பெற்றது என்று முடிவுக்கு வரமுடியாது.
நடிகர் திலகம் திரி பாகம் 14
துவக்கப் பட்ட நாள் 06.07.2014
பார்வையாளர் எண்ணிக்கை - 03.08.2014 பகல் 12.00 மணி வரை - 26885
மொத்தப் பதிவுகளின் எண்ணிக்கை - 03.08.2014 பகல் 12.00 மணி வரை - 659
ஒரு பதிவிற்கு சராசரி பார்வையாளர் எண்ணிக்கை - 26885 / 659 = 40.80
06.07.2014 முதல் 03.08.2014 வரை 29 நாட்களுக்கு ஒரு நாளைக்கு இத்திரியின் சராசரி பார்வையாளர் எண்ணிக்கை 927.07
எம்.ஜி.ஆர் அவர்களுக்கான திரி பாகம் 10
துவக்கப் பட்ட நாள் 10.07.2014
பார்வையாளர் எண்ணிக்கை - 03.08.2014 பகல் 12.00 மணி வரை - 24274
மொத்தப் பதிவுகளின் எண்ணிக்கை - 03.08.2014 பகல் 12.00 மணி வரை - 1392
ஒரு பதிவிற்கு சராசரி பார்வையாளர் எண்ணிக்கை - 24274 / 1392 = 17.44
06.07.2014 முதல் 03.08.2014 வரை 29 நாட்களுக்கு ஒரு நாளைக்கு இத்திரியின் சராசரி பார்வையாளர் எண்ணிக்கை 837.03
நம்மிடமுள்ள நம்பகத்தன்மை வாய்ந்த ஆவணங்கள், சரியான தகவல்கள், புள்ளி விவரங்கள் இவையே ஒப்பீடு செய்வதற்கு அளவு கோலாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உதாரணமே தவிர யார் சார்பாகவும் அல்லது யார் மனதையும் புண்படுத்த அல்ல.
WISH U HAPPY FRIENDSHIPDAY
http://i1170.photobucket.com/albums/...ps6fa1e3c8.jpg
Thank You Yukesh Babu for the Friendship Day wishes
I don't get it ,as if I am one stopping the fresh air :)
நடிகர் திலகம் திரியில் அரசியல் பேசுவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை . ஆனால் 2 விஷயங்களை தவிர்த்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்
1. அரசியல் நிலைப்பாடுகளை பற்றி பேசும் போது குறைந்த பட்சம் இது என் கருத்து என சொல்வது நல்லது ..மாறாக அது உலக பொது உண்மை போன்று பேசினால் எல்லா நேரத்திலும் எல்லோரும் எல்லை மீறி பொறுத்துக்கொண்டிருப்பார்கள் என நினைப்பது சரியல்ல.
2. தங்கள் சொந்த கருத்துக்களை , அபிலாஷைகளை நடிகர் திலகத்தின் மேல் ஏற்றி வைப்பதை தவிர்ப்பது நல்லது ..இப்படி எடுப்பார் கைபிள்ளையாக அவரை அரசியலில் அலைக்கழித்துத் தான் பிறரின் ஏளனத்துக்கு ஆளாகும் வரை கொண்டு சென்றார்கள் ..அவர் கடைசி வரை போற்றியவ்ர்களை தூற்றுபவர்களும் இங்கு உண்டு ..அவர் மனம் நொந்தவர்களை போற்றுபவர்களும் இங்கு உண்டு .. எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கம் உண்டு .. எனவே யாரும் இங்கே சிவாஜியை முழுமையாக பின்பற்றுபவர்கள் அல்ல ..அப்படி இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை . எனவே தங்கள் அரசியல் நோக்குக்கு வலு சேர்க்க அதை சிவாஜி தலையில் ஏற்றி வைக்காமலிருப்பது நல்லது .
[ஜோ சார்
இப்போ உங்களுக்கு நான் பதில் உரைக்கவேண்டும் அவ்வளவுதானே ?
சரி
முதற்கண் ...இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..!
அரசியல் நிலைப்பாடு பற்றி கருத்து கூறுபவர்கள் எல்லோரும் அப்படிதான் சார் ! உலக பொது உண்மை என்பதுபோல தான் பேசுவார்கள் ! உங்களுக்கே தெரியுமே...கடவுள் இல்லை என்பவர்களும் இப்படிதான் பேசினார்கள்..பேசுவார்கள்...கடவுள் உண்டு என்பவர்களும் அப்படிதான் பேசுவார்கள்...அது..அவர்கள் கருத்தா அல்லது உலக பொது உண்மையா ?
இப்போது கூட பார்த்தால் ஒரு சுவரொட்டியில் " செத்த மொழி சமஸ்க்ரிதம் ஒழிப்பு மாநாடு " என்று பார்த்தேன்...இது அவர்கள் கருத்தா ..அல்லது உலக உண்மையா ? நான் பேசினால் அது எனது சொந்த கருத்து...அரசியல் கட்சிகாரர்கள் பேசினால் உலக உண்மை ..இது எந்தகாலத்திலும் ஏற்புடையது அல்ல சார் !
என்னுடைய அரசியல் நோக்கு ??? அது என்ன ? திரு சிவாஜி அவர்களை யார் எடுப்பார் கைபிள்ளையாக அலைக்கழித்தார் ? 1953இல் முடிவில் ஒரு துரோகி முதன் முதலாக செய்த வேலை அது ! துரோகத்தின் பலன் என்ன என்பதை துரோகம் செய்தவர்கள் இன்னும் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதை உலகம் காண்கிறது ! யாரும் சிவாஜியை பின்பற்றுபவர்கள் அல்ல என்று நீங்கள் கூட உங்களுடைய கருத்தை உலக உண்மை போல கூறியிருக்கும்பட்சத்தில் மற்றவர்களை குறை சொல்லும் நிலை ...உளதா இலையா ?
அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் பழக்கம் எனக்கு அறவே கிடையாது !
நான் என்ன திராவிட கட்சிகளை சேர்ந்தவனா ? அல்லது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவனா ?
அவரை வைத்து அரசியல் ஆதாயம் தேடி அவரை அலைகழித்து அவமரியாதை செய்ய அம்போ என்று விட்டுவிட ?
நடிகர் திலகம் எனக்கு குருஸ்தானம் ! இறைஸ்தானம் ! ஆகவே என்னுள் அவர் எப்படி என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை !
Regards
rks
RKS,
மன்னிக்கவும் ..உங்கள் புரிதல் திறத்தின் மீது சற்று நம்பிக்கை வைத்ததால் வந்த விளைவு .
I said "நடிகர் திலகம் திரியில் அரசியல் பேசுவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை . ஆனால் 2 விஷயங்களை தவிர்த்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்"
மற்றபடி நீங்கள் தெருவில் மைக்செட் கட்டி முழங்கலாம் ..தனியாக வலைப்பதிவு செய்யலாம் ..இயக்கம் ஆரம்பித்து பெரியாரை திட்டலாம் ..திராவிட இயக்கத்தை திட்டலாம் .
ஆனால் இங்கு நடிகர் திலகம் திரியில் முடிந்தால் நான் சொன்னதை கவனத்தில் கொள்வது நல்லது என சொன்னேன் .
அதுவும் உங்களுக்கு மட்டும் சொன்னதல்ல ..எல்லோருக்கும் பொதுவாக சொன்னது தான் ,
அதற்கு உங்கள் பதில் .. ஹைய்யோ ஹைய்யோ ..
தொடருங்கள் :)
நண்பர்கள் தினத்தில் ,திரி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
பாவ மன்னிப்பு 16.03.1961
தேவிகா சம்பத்த பட்ட அனைத்து காதல் காட்சிகள். ரஹீமாக சிவாஜி உள்ளூர ஆசையிருந்தாலும் , சந்தர்ப்ப-சூழ்நிலை கருதி restraint ஆக வெளியிடும் முறை.
பாடாமல் பாடி விடும் பாலிருக்கும் பாட்டில் எவ்வளவு அழகு இந்த திராவிட மன்மதன்.!!!!
எல்லோரும் கொண்டாடுவோம், வந்த நாள் முதல், சிலர் சிரிப்பார் பாடல் காட்சிகள்.
சிவாஜியும்- beemsingh உம் சிலர் சிரிப்பார் பாட்டில் உச்சம் தொட்டனர். நமக்கு இடப்புறத்தில் பழுதாகாத முக பகுதியுடன் சிரிக்கும் சிவாஜி. வலப்புறத்தில் பழுதான முக பகுதியுடன் அழும் சிவாஜி. நடுவில் சிரித்து கொண்டே அழும் சிவாஜி.
அன்னையுடன் அவர் அன்னை என்று தெரிந்து வீட்டில் சந்திக்கும் காட்சி ,பின்னால் வர போகும் தெய்வ மகனுக்கு அடிக்கல் நாட்டி விடுகிறது.
Acid வீச்சு பட்டு அவர் புழுவென துடிப்பது.
அட்டகாசமாக antics செய்யும் m .r .ராதாவை மிக மிக பொறுமை, பொறுமை, சிறிது நிதானம் தவறி, பதில் கடுமை என்ற வெவ்வேறு நிலைகளில் அவர் deal செய்யும் காட்சிகள்.
படம் துவக்கத்திலிருந்தே method acting முறையில் அந்த மேதை, ரஹீம் பாத்திரத்தை கையாளும் முறை . Subbudu , நடிகர்திலகம் அவர்களின் நடிப்புக்காக, பதின்மூன்று முறை தொடர்ந்து பார்த்தேன் என்ற விமர்சனம் எழுதினர்..உயர்ந்த எண்ணங்கள்,நோக்கம் கொண்ட இறை முறையில் வாழும் ரஹீம் எப்படி நடந்து கொள்ள , பேச வேண்டுமோ ,அப்படி நடித்து எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்தார்.
http://i501.photobucket.com/albums/e...psf656e7d6.jpg
Courtesy - Facebook
இரு மேதைகள்
அந்த பிரபல மேடை நாடக நடிகரின் நாடகத்தை பார்க்க மாக் சென்னேட் என்பவரும் பாபேல் நோர்மாந்து என்பவரும் வந்தனர்.நாடகத்தில் அவரின் நடிப்பை பார்த்து அசந்து போய்,தங்கள் படமான மேகிங் எ லிவிங் என்ற படத்துக்கு ஒப்பந்தம் செய்தனர்.அதுவரை கீஸ்டோன் கம்பெனியில் நடித்த போர்ட் ஸ்டேர்லிங் என்பவரை தூக்கி விட்டு ,அந்த புது நடிகரை போட்டனர்.
அந்த படத்தில் அவரது வேடம் நகரத்தில் காசில்லாத ஒருவன்,மற்றவர்களை ஏமாற்றி வேடமிட்டு வாழ்கையை நடத்துவான்.
சிறிது படபிடிப்பு நடந்த பிறகு , பட தயாரிப்பாளர் சென்னேட் ,புது நடிகரின் நடிப்பில் திருப்தியில்லாமல் ,பழைய நடிகரை போட்டு படப்பிடிப்பை மீண்டும் தொடர விரும்பினர்.ஆனால் நோர்மாந்து பிடிவாதமாய் அதே நடிகரை வைத்து மீண்டும் பழைய ரீ ல்களை திரும்பி எடுத்தார்.இப்போது சென்னேட்டுக்கு திருப்தி.படம் ரிலீஸ் ஆனது.பிய்த்து கொண்டு ஓடி ,ஒரே இரவில் அந்த நடிகரை பிரபலம் ஆக்கியது.
என்ன,எங்கோ கேட்ட கதையை திரும்பவும் ஆங்கில பெயர்களை போட்டு கதை விடுகிறான் என்கிறீர்களா?உண்மை.உண்மை.சத்தியம்.அந்த நடிகரின் பெயர் சார்லி சாப்ளின்.
நான் பிறவி மேதைகளாய் வணங்கும் நமது நடிகர் திலகத்துக்கும் ,சார்லி சாப்ளினுக்கும் உள்ள ஒற்றுமை வியக்க வைக்கிறதல்லவா?படக்கதை,பாத்திரம் எல்லாமே பராசக்தி மாதிரியே.
Making a Living is the first film starring Charlie Chaplin. It premiered on February 2, 1914. Chaplin plays Edgar English, a lady-charming swindler who runs afoul of the Keystone Kops.
Chaplin wore a large moustache and a top hat in this film, he also carries a walking cane. Whilst not "the tramp" the character is somewhat reminiscent of the tramp, having hat, cane, moustache and baggy trousers; his famed screen persona of "The Little Tramp" did not appear until his next film, Kid Auto Races at Venice.
It was written and directed by Henry Lehrman.
Cast
Charlie Chaplin - Swindler
Virginia Kirtley - Daughter
Alice Davenport - Mother
Henry Lehrman - Reporter
Minta Durfee - Woman
Chester Conklin - Policeman / Bum
Plot
Edgar English cons a journalist out of some money. He applies for a job at his newspaper. Whilst the journalist is helping a trapped motorist Edgar steals the camera with the picture of the accident and rushes back to the paper with it. He steals the headlines. A short pursuit with the police ensues.
PAAVAMANNIPPU!..got absorbed and submerged in the true to the type multistarrer with an ensemble of gems of acting lead by NT! The climax is a riveting firework of actions and reactions! Unable to move eyes out of NT like my shadow following me wherever I go! What a generosity.... NT allows MR Raadha to 'act' and just 'reacts'!! While MRR just reprises his Raththakkanneer climax acting wine in a new bottle, NT just reacts without even uttering a word and steals the show!
Happy friends' day!
http://www.youtube.com/watch?v=GQvBncn1aq4
http://www.youtube.com/watch?v=VtrnHY21zZw
https://www.youtube.com/watch?v=Jicjjb8Co7k
https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU
https://www.youtube.com/watch?v=q--oOSZlz-g
https://www.youtube.com/watch?v=LJtmL7XusaA
NT rocks everywhere in TV.
3.30 pm = Pava Mannippu - Kalaignar TV
7.00 pm = Sangili - Sun Life TV
7.00 pm = Thyagam - Murasu TV
Nadigar Thilagam's Day in TV.
Regards
Ryan's Daughter by david Lean.(NT Fan)
Ryan's Daughter is a 1970 film directed by David Lean.[4][5] The film, set in 1916, tells the story of a married Irish woman who has an affair with a British officer during World War I, despite opposition from her nationalist neighbours. The film is a very loose adaptation of Gustave Flaubert's novel Madame Bovary.
The film stars Robert Mitchum, Sarah Miles, John Mills, Christopher Jones, Trevor Howard and Leo McKern, with a score by Maurice Jarre. It was photographed in Super Panavision 70 by Freddie Young.
Sir David Lean, CBE (25 March 1908 – 16 April 1991) was an English film director, producer, screenwriter and editor, best remembered for big-screen epics[1] such as The Bridge on the River Kwai (1957), Lawrence of Arabia (1962), and Doctor Zhivago (1965); Ryan's Daughter1970.
டேவிட் லீன் ,நம் நடிகர்திலகத்தின் ரசிகர். இந்தியா வந்த போது நடிகர்திலகம் வீடு தேடி சென்று பார் மகளே பார் படம் பார்த்து விட்டு ,அசந்து போய் ,தான் இயக்கி வந்த Doctor Zhivago வில் நடிக்க வைக்க முயன்றார். தான் native English speaker இல்லாததால் ,நடிகர்திலகம் தயங்கி மறுத்து விட்டார்.டேவிட் லீன் பல அகாடமி விருதுகளின் சொந்தக் காரர்.(ஆஸ்கார் ).
எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால் ,நமது நடிகர்திலகத்தின் inspiration இல் பட உலகில் புகுந்த பாரதிராஜா டேவிட்லீன் ரசிகர். படமாக்கும் முறை,காமிரா கோணங்கள்,பாத்திர வார்ப்புகள்,திரைக் கதை அமைப்பு, அழகுணர்வு மிகுந்த காட்சிகள்,காதல் காட்சிகள்,மௌனம் பேசும் இசை மட்டும் நம்பிய காட்சிகள் என்று Ryan 's Daughter ஒரு படத்தை மட்டும் வைத்து, 16 வயதினிலே,புதிய வார்ப்புகள்,அலைகள் ஓய்வதில்லை,கடலோர கவிதைகள் ,நாடோடி தென்றல் என்று எல்லா படத்திலும் பாரதி ராஜா ஒரு பட inspiration எடுத்து அசத்தி உள்ளதை அறிய நாம் Ryan's Daughter பார்த்தே ஆக வேண்டிய படம்.
இந்த படம் என் நண்பர் மகேந்திரன் அவர்களையும் பாதித்துள்ளதை பூட்டாத பூட்டுக்கள் (என் பார்வையில் அவருடைய மிக சிறந்த படைப்பு) பார்த்தால் விளங்கும் .
சூரியன் காலையில் உதித்தது மாலையில் மறைந்தது என்று சொன்னால் என்ன தோன்றும்? அது போன்றுதான் வசந்த மாளிகை படத்திற்கு மாபெரும் வரவேற்பு, பிரமாதமான வசூல் என்று சொல்வதும். இன்றல்ல நேற்றல்ல என்றென்றும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இதுதான் நிலைமை. அதற்கு மீண்டும் கோவை மாநகரம் சாட்சியாக மாறியிருக்கிறது.
சென்ற வருடம் கோவையில் நான்கு திரையரங்குகளில் வெளியாகி பெரு வெற்றி பெற்று வசூல் சாதனை கண்ட அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்த் 1-ந் தேதி வெள்ளி முதல் கோவை ராயலில் தன் ஆட்சியை மீண்டும் ஆரம்பித்தார். ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு மற்றும் தென் மேற்கு பருவகாலம் காரணமாக கேரளத்தில் கொட்டும் பேய் மழை அதன் எல்லைகளை விரித்து அண்டையில் அமைந்துள்ள கோவை மாநகரையும் வெகுவாக நனைத்துக் கொண்டிருக்க அத்தனையும் தாண்டி முதல் இரண்டு நாட்களில் ரூபாய் இருப்பத்தையாயிரத்திற்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது[above Rs 25,000/-].
இன்றும் சரியான கூட்டம். மாலைக்காட்சிக்கு பெரிய வரவேற்பு. மொத்த டிக்கெட்டுகளில் 40 டிக்கெட்டுகள் மட்டுமே நின்று போயினவாம். அரங்கினுள்ளே அமர்க்களமாக இருந்தது என்று செய்தி. அரங்க வாசலிலே எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.
தகவல்களை பகிர்ந்து கொண்ட கோவை நண்பர் சக்திவேல், வடிவேல் மற்றும் புகைப்படங்களை அனுப்பிய நண்பர் Dr. ரமேஷ் ஆகியோருக்கு நன்றி.
https://mail.google.com/mail/u/0/?ui...w&sz=w997-h544
https://mail.google.com/mail/u/0/?ui...w&sz=w997-h544
அன்புடன்