-
3rd August 2014, 12:28 PM
#661
Senior Member
Seasoned Hubber
நண்பர்களே..
வசூல் ஒப்பீடு என்பது தேவையில்லை என்று நாம் பல முறை கூறி வந்திருக்கிறோம். தமிழ்த் திரைப்படம் என்பது வியாபார ரீதியாக வெற்றி பெறும் படங்களினால் தான் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து நிலைத்து வருகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரி 50 படங்களே என்று வைத்துக் கொண்டாலும் கூட இந்த 80 ஆண்டுகளில் குறைந்த பட்சம் 4000 திரைப்படங்கள் வெளிவந்திருக்கும். ஒவ்வொரு கால கட்டத்திற்கும் நட்சத்திரங்களின் புகழும் இந்த வெற்றியைத் தீர்மானிக்கும் அளவு கோலில் அடங்கி வந்திருந்தாலும் அவ்வப்போது இதையெல்லாம் தாண்டி அந்தந்தப் படங்களுடைய தகுதி, தரம் போன்றவற்றிற்காக பெற வேண்டிய வெற்றியைப் பெற்றும் உள்ளன. வியாபார ரீதியிலான உலகில் வசூல் என்பது காலத்திற்குக் காலம், விலைவாசி, போன்ற பல அம்சங்களின் பொருட்டு நுழைவுச்சீட்டு கட்டண உயர்வு, இருக்கைகளின் எண்ணிக்கை போன்றவற்றைப் பொறுத்து வேறு பட்டு வந்திருக்கின்றன. கடந்து போன பல ஆண்டுகளுக்கு முந்தைய வசூல் விவரங்கள் தற்போதைய கால கட்டத்தில் நிரூபிக்க முடியாத விஷயங்களாகத் தான் இருக்கும் என்பது என் கருத்து. இதற்கு பல காரணங்களைக் கூறலாம். எனவே இந்த வசூல் அதிகம், இந்த வசூல் குறைவு, என்பவையெல்லாம் ஆவணங்களால் நிரூபிக்க இந்த காலகட்டத்தில் சாத்தியமில்லாதவை. அவ்வப்போது சில திரைப்படங்களின் செய்தித்தாள் விளம்பரங்களில் வெளியிடப் பட்ட வசூல் விவரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்றாலும் அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இந்த அடிப்படையில் வசூல் ஒப்பீடு என்பது எவருக்குமே தேவையில்லாத ஒன்று என நான் எண்ணுகிறேன்.
ஒரு உதாரணத்திற்காக ஒப்பீடு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்காக கீழே தரப்படுகிறது.
இந்த மய்யம் திரியிலேயே நடிகர் திலகம் திரி எம்.ஜி.ஆர். அவர்களுக்கான திரி இவையிரண்டும் பார்வையாளர்கள் எண்ணிக்கை, பதிவுகளின் எண்ணிக்கை, இவற்றை 03.08.2014 இன்று நண்பகல் 12.00 மணி யளவில் வைத்து ஒப்பிடப் படுகிறது. இந்த எண்ணிக்கை இதைக் குறிப்பெடுத்த நேரத்துக்குத் தான் பொருந்துமே தவிர நிலையானதல்ல. இரண்டிலுமே இந்த விகிதங்கள் மாறுபடும் வாய்ப்புள்ளவை. இதை வைத்து இது தான் உயர்ந்தது, இது தான் அதிக வரவேற்பைப் பெற்றது என்று முடிவுக்கு வரமுடியாது.
நடிகர் திலகம் திரி பாகம் 14
துவக்கப் பட்ட நாள் 06.07.2014
பார்வையாளர் எண்ணிக்கை - 03.08.2014 பகல் 12.00 மணி வரை - 26885
மொத்தப் பதிவுகளின் எண்ணிக்கை - 03.08.2014 பகல் 12.00 மணி வரை - 659
ஒரு பதிவிற்கு சராசரி பார்வையாளர் எண்ணிக்கை - 26885 / 659 = 40.80
06.07.2014 முதல் 03.08.2014 வரை 29 நாட்களுக்கு ஒரு நாளைக்கு இத்திரியின் சராசரி பார்வையாளர் எண்ணிக்கை 927.07
எம்.ஜி.ஆர் அவர்களுக்கான திரி பாகம் 10
துவக்கப் பட்ட நாள் 10.07.2014
பார்வையாளர் எண்ணிக்கை - 03.08.2014 பகல் 12.00 மணி வரை - 24274
மொத்தப் பதிவுகளின் எண்ணிக்கை - 03.08.2014 பகல் 12.00 மணி வரை - 1392
ஒரு பதிவிற்கு சராசரி பார்வையாளர் எண்ணிக்கை - 24274 / 1392 = 17.44
06.07.2014 முதல் 03.08.2014 வரை 29 நாட்களுக்கு ஒரு நாளைக்கு இத்திரியின் சராசரி பார்வையாளர் எண்ணிக்கை 837.03
நம்மிடமுள்ள நம்பகத்தன்மை வாய்ந்த ஆவணங்கள், சரியான தகவல்கள், புள்ளி விவரங்கள் இவையே ஒப்பீடு செய்வதற்கு அளவு கோலாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உதாரணமே தவிர யார் சார்பாகவும் அல்லது யார் மனதையும் புண்படுத்த அல்ல.
Last edited by RAGHAVENDRA; 3rd August 2014 at 02:59 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
3rd August 2014 12:28 PM
# ADS
Circuit advertisement
-
3rd August 2014, 02:38 PM
#662
Junior Member
Diamond Hubber
WISH U HAPPY FRIENDSHIPDAY
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
3rd August 2014, 02:56 PM
#663
Senior Member
Seasoned Hubber
Thank You Yukesh Babu for the Friendship Day wishes
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd August 2014, 02:57 PM
#664
Junior Member
Veteran Hubber

Originally Posted by
yukesh babu
wish u happy friendshipday

my dear friend ......
Thank you so much for the friendship day wishes...!
We have argued so many things...debated on so many things...but those things are always there as a healthy trend !
Wishing you better than the best on this friendship day
regards
rks
-
3rd August 2014, 02:59 PM
#665
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RavikiranSurya
such strong anti society activities
Again , Calling 'Anti Hindi - Imposing campaign' as 'anti society activity' is uncalled for here .
I request you to refrain from sweeping political statements in NT thread.
-
3rd August 2014, 03:20 PM
#666
Junior Member
Veteran Hubber

Originally Posted by
joe
Again , Calling 'Anti Hindi - Imposing campaign' as 'anti society activity' is uncalled for here .
I request you to refrain from sweeping political statements in NT thread.
Joe Sir,
Let some fresh air come in...!
Regards
RKS
-
3rd August 2014, 03:44 PM
#667
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RavikiranSurya
Let some fresh air come in...!
I don't get it ,as if I am one stopping the fresh air 
நடிகர் திலகம் திரியில் அரசியல் பேசுவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை . ஆனால் 2 விஷயங்களை தவிர்த்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்
1. அரசியல் நிலைப்பாடுகளை பற்றி பேசும் போது குறைந்த பட்சம் இது என் கருத்து என சொல்வது நல்லது ..மாறாக அது உலக பொது உண்மை போன்று பேசினால் எல்லா நேரத்திலும் எல்லோரும் எல்லை மீறி பொறுத்துக்கொண்டிருப்பார்கள் என நினைப்பது சரியல்ல.
2. தங்கள் சொந்த கருத்துக்களை , அபிலாஷைகளை நடிகர் திலகத்தின் மேல் ஏற்றி வைப்பதை தவிர்ப்பது நல்லது ..இப்படி எடுப்பார் கைபிள்ளையாக அவரை அரசியலில் அலைக்கழித்துத் தான் பிறரின் ஏளனத்துக்கு ஆளாகும் வரை கொண்டு சென்றார்கள் ..அவர் கடைசி வரை போற்றியவ்ர்களை தூற்றுபவர்களும் இங்கு உண்டு ..அவர் மனம் நொந்தவர்களை போற்றுபவர்களும் இங்கு உண்டு .. எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கம் உண்டு .. எனவே யாரும் இங்கே சிவாஜியை முழுமையாக பின்பற்றுபவர்கள் அல்ல ..அப்படி இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை . எனவே தங்கள் அரசியல் நோக்குக்கு வலு சேர்க்க அதை சிவாஜி தலையில் ஏற்றி வைக்காமலிருப்பது நல்லது .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd August 2014, 03:47 PM
#668
Junior Member
Veteran Hubber
-
3rd August 2014, 04:02 PM
#669
Junior Member
Veteran Hubber
[

Originally Posted by
joe
i don't get it ,as if i am one stopping the fresh air

நடிகர் திலகம் திரியில் அரசியல் பேசுவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை . ஆனால் 2 விஷயங்களை தவிர்த்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்
1. அரசியல் நிலைப்பாடுகளை பற்றி பேசும் போது குறைந்த பட்சம் இது என் கருத்து என சொல்வது நல்லது ..மாறாக அது உலக பொது உண்மை போன்று பேசினால் எல்லா நேரத்திலும் எல்லோரும் எல்லை மீறி பொறுத்துக்கொண்டிருப்பார்கள் என நினைப்பது சரியல்ல.
2. தங்கள் சொந்த கருத்துக்களை , அபிலாஷைகளை நடிகர் திலகத்தின் மேல் ஏற்றி வைப்பதை தவிர்ப்பது நல்லது ..இப்படி எடுப்பார் கைபிள்ளையாக அவரை அரசியலில் அலைக்கழித்துத் தான் பிறரின் ஏளனத்துக்கு ஆளாகும் வரை கொண்டு சென்றார்கள் ..அவர் கடைசி வரை போற்றியவ்ர்களை தூற்றுபவர்களும் இங்கு உண்டு ..அவர் மனம் நொந்தவர்களை போற்றுபவர்களும் இங்கு உண்டு .. எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கம் உண்டு .. எனவே யாரும் இங்கே சிவாஜியை முழுமையாக பின்பற்றுபவர்கள் அல்ல ..அப்படி இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை . எனவே தங்கள் அரசியல் நோக்குக்கு வலு சேர்க்க அதை சிவாஜி தலையில் ஏற்றி வைக்காமலிருப்பது நல்லது .
ஜோ சார்
இப்போ உங்களுக்கு நான் பதில் உரைக்கவேண்டும் அவ்வளவுதானே ?
சரி
முதற்கண் ...இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..!
அரசியல் நிலைப்பாடு பற்றி கருத்து கூறுபவர்கள் எல்லோரும் அப்படிதான் சார் ! உலக பொது உண்மை என்பதுபோல தான் பேசுவார்கள் ! உங்களுக்கே தெரியுமே...கடவுள் இல்லை என்பவர்களும் இப்படிதான் பேசினார்கள்..பேசுவார்கள்...கடவுள் உண்டு என்பவர்களும் அப்படிதான் பேசுவார்கள்...அது..அவர்கள் கருத்தா அல்லது உலக பொது உண்மையா ?
இப்போது கூட பார்த்தால் ஒரு சுவரொட்டியில் " செத்த மொழி சமஸ்க்ரிதம் ஒழிப்பு மாநாடு " என்று பார்த்தேன்...இது அவர்கள் கருத்தா ..அல்லது உலக உண்மையா ? நான் பேசினால் அது எனது சொந்த கருத்து...அரசியல் கட்சிகாரர்கள் பேசினால் உலக உண்மை ..இது எந்தகாலத்திலும் ஏற்புடையது அல்ல சார் !
என்னுடைய அரசியல் நோக்கு ??? அது என்ன ? திரு சிவாஜி அவர்களை யார் எடுப்பார் கைபிள்ளையாக அலைக்கழித்தார் ? 1953இல் முடிவில் ஒரு துரோகி முதன் முதலாக செய்த வேலை அது ! துரோகத்தின் பலன் என்ன என்பதை துரோகம் செய்தவர்கள் இன்னும் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதை உலகம் காண்கிறது ! யாரும் சிவாஜியை பின்பற்றுபவர்கள் அல்ல என்று நீங்கள் கூட உங்களுடைய கருத்தை உலக உண்மை போல கூறியிருக்கும்பட்சத்தில் மற்றவர்களை குறை சொல்லும் நிலை ...உளதா இலையா ?
அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் பழக்கம் எனக்கு அறவே கிடையாது !
நான் என்ன திராவிட கட்சிகளை சேர்ந்தவனா ? அல்லது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவனா ?
அவரை வைத்து அரசியல் ஆதாயம் தேடி அவரை அலைகழித்து அவமரியாதை செய்ய அம்போ என்று விட்டுவிட ?
நடிகர் திலகம் எனக்கு குருஸ்தானம் ! இறைஸ்தானம் ! ஆகவே என்னுள் அவர் எப்படி என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை !
Regards
rks
Last edited by RavikiranSurya; 3rd August 2014 at 04:15 PM.
-
3rd August 2014, 04:23 PM
#670
Senior Member
Diamond Hubber
RKS,
மன்னிக்கவும் ..உங்கள் புரிதல் திறத்தின் மீது சற்று நம்பிக்கை வைத்ததால் வந்த விளைவு .
I said "நடிகர் திலகம் திரியில் அரசியல் பேசுவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை . ஆனால் 2 விஷயங்களை தவிர்த்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்"
மற்றபடி நீங்கள் தெருவில் மைக்செட் கட்டி முழங்கலாம் ..தனியாக வலைப்பதிவு செய்யலாம் ..இயக்கம் ஆரம்பித்து பெரியாரை திட்டலாம் ..திராவிட இயக்கத்தை திட்டலாம் .
ஆனால் இங்கு நடிகர் திலகம் திரியில் முடிந்தால் நான் சொன்னதை கவனத்தில் கொள்வது நல்லது என சொன்னேன் .
அதுவும் உங்களுக்கு மட்டும் சொன்னதல்ல ..எல்லோருக்கும் பொதுவாக சொன்னது தான் ,
அதற்கு உங்கள் பதில் .. ஹைய்யோ ஹைய்யோ ..
தொடருங்கள்
Last edited by joe; 3rd August 2014 at 04:32 PM.
Bookmarks