It ran for 250 days. What else do you need? It's not kuppai.
Printable View
It ran for 250 days. What else do you need? It's not kuppai.
Avtaar was made with a North Indian flavor to the fans with Rajesh Khanna. The same was remade in malayalam as Jeevitham with Madhu and Vaaazhkkai with NT. All movie versions were good to watch. Probably in the presence of NT other stars get obscured, but each contributed their support the way they can do. Though NT's body was a bit bulky at that time he was able to manage well with his definitive acting, particularly the close-up ones where nobody even Kakaji could not match his histrionics.Let us not use unnecessary words to describe other actors for no fault of theirs.
திரு ராகவேந்திரா சார்,வாசு சார்,பம்மல் சார்,கார்த்திக் சார்,
நீங்களெல்லாம் இல்லாமல் இந்த திரியில் ஒரு வெறுமையும் இனம் புரியாத ஒரு சோகமும் இழையோடுவதை பார்க்க மனம் தாங்கவில்லை .இங்கு வராமல் உங்களாலும் இருக்க முடியாது ,உங்கள் மனம் இந்த திரியைதான் சுற்றி சுற்றி வரும் என்பது எங்களுக்கு தெரியும்.பெருந்தலைவரின் பிறந்த நாள் மற்றும் நம்மவரின் நினைவுநாள் நெருங்கும்நேரத்தில் நீங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது தயவு செய்து கூடிய சீக்கிரம் இங்கு வரவும்[/QUOTE]
திரு பிரபுராம் மற்றும் jeo அவர்களே,
நமது திரியின் நிலையை பார்த்தீர்களா? நாளை தலைவரின் நினைவு நாள்! திரு பம்மலார், திரு வாசுதேவன் மற்றும் திரு ராகவேந்திரன் ஆகியோரின் பங்களிப்பு இல்லாமல் நமது திரி களை இழந்து காணப்படுகிறது.
இந்த நிலை மாறி மீண்டும் அவர்கள் திரியில் பங்களிப்பு செய்வது என்பது உங்கள் இருவர் கையில் தான் உள்ளது.
கலையுலகின் தலைமகனே! உன் நினைவலைகள் என்றும் ஓயாது .. வாழ்க நின் புகழ்!
Attachment 1599
....
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - நினைவு தெரிந்த நாள் முதல் இந்தப் பெயரை கேட்டவுடன்தான் என்ன ஒரு சிலிர்ப்பு! திரையில் ஆகட்டும், நாளிதழ்களில் ஆகட்டும், பருவ இதழ்களில் ஆகட்டும் இந்த பெயரைப் பார்த்தவுடன் அல்லது அவர் சம்மந்தப்பட்ட செய்திகளைப் படித்தவுடன் எத்துனை பரவசப்பட்டிருப்பேன்! ஓரளவிற்கு விவரம் புரிய ஆரமபித்ததும் நாம் மட்டுமல்ல என்னைப் போன்ற லட்சக்கணக்கான மனிதர்களை இந்த மனிதன் வசீகரித்திருக்கிறார் என்று தெரிந்தவுடன்தான் எத்துனை மகிழ்ச்சி அடைந்திருப்பேன்!
ஒரு மனிதன் தன் குணாதிசயங்களால், சில பல செயல்களால், சமூகத்தில் தான் வகிக்கக்கூடிய பொறுப்புகளால் மற்றவர்களை கவர்வது அவர்கள் மனதில் இடம் பிடிப்பது என்பது உலகின் பல நாடுகளிலும் காணக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகும். ஆனால் அப்படிப்பட்ட சூழல்கள் இல்லாமல் தான் செய்யக் கூடிய ஒரு தொழிலின் மூலமாக மக்களின் மனதில் இடம் பெறுவது என்பது வெகு சில இடங்களில் வெகு சிலருக்கு மட்டும் வாய்த்திருக்கிறது.
பொழுதுபோக்கு என்ற விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் திரைப்படம் எனும் ஊடகத்தில் பணியாற்றியவாறே அந்த அம்சங்களையும் தாண்டி ஒரு இயல்பான உலக வாழ்க்கையின் யதார்த்தங்களோடு மக்களின் வாழ்க்கைக்கு அருகாமையில் நிலைக்கொண்ட கதையம்சம் கொண்ட படங்களை அளித்ததன் மூலம் மக்கள் மனதில் என்றும் மாறா இடம் கொண்ட ஒரு மகா கலைஞன் நமது நடிகர் திலகம்!
அவர் திரைஉலகில் ஆக்டிவாக செயல்பட்ட இறுதிக்கட்டம் முடிந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் கடைசியாக நடித்து வெளிவந்த படம் ரிலீசாகி 13 வருடங்கள் கடந்துவிட்டன. அவர் பூத உடல் நம்மை விட்டு பிரிந்து சென்று 11 வருடங்கள் முடிந்து விட்டன. இருப்பினும் அவர் மேல் நமது மக்கள் வைத்துள்ள அன்பு சிறிதளவும் குறையவில்லை. மாறாக இன்னும் அதிகமாகவே வளர்ந்திருக்கிறது. அப்படி என்ன செய்தார் அவர்? நிர்வாக சார்பான அல்லது ஒரு இயக்கத்தின் தலைமை பொறுப்புகளோ அவரிடம் இருந்ததில்லை! ஒரு கலைஞனாகவே அவர் மக்கள் மனதில் வாழ்ந்தார்.
ஒருவர் வாழும் காலத்தில் புகழ் பெறுவது என்பது அதிசயமான விஷயம் அல்ல. ஆனால் ஒருவர் தொழிலையே நிறுத்தி விட்ட பிறகும் அவர் நேசிக்கப்படுவது என்பது உண்மையிலே அதிசயதக்கதுதான்.
நேற்று மதிய காட்சி சத்யம் அரங்கில் கர்ணன் திரைப்படம் காண நமது அருமை நண்பர் ஒருவர் சென்றிருந்தார். படம் முடிவடைந்த பிறகு பார்வையாளர்கள் அனைவரும் வெளியேறி செல்லட்டும் என நினைத்து நின்று கொண்டிருக்கும் போது சுமார் ஒரு 75 வயதுடைய வயதான அம்மையார் அவருடன் இரண்டு இளைஞர்கள் இறுதியாக வெளியேறுவதற்கு வருகிறார்கள். அம்மையார் கையில் பிடித்துக் கொண்டு நடப்பதற்கு ஒரு ஸ்டிக். அதில் ஒரு இளைஞன் சொல்கிறான். எப்படியோ கர்ணன் பார்க்கணும் சிவாஜியைப் பார்க்கணும் எனு சொன்னியே இனிமேல் உன் ஜெனமம் சாபல்யம் அடைந்து விடும் என உரிமை கலந்த கிண்டல் தொனியில் அந்த அம்மையாரிடம் சொல்லியிருக்கிறார்கள். முகம் கொள்ளா சிரிப்புடன் அவரும் அதை ஆமோதித்திருக்கிறார். ஆக இப்போதும் இப்படிப்பட்டவர்கள் ஒரு பக்கம் என்றால் படம் காண சென்ற இளைய தலைமுறையை சேர்ந்த நமது நண்பர் போன்றவர்கள் மற்றொரு பக்கம்.
அப்படி என்ன இருக்கிறது இந்த மனிதனிடம் என்றால் எல்லாம் இருக்கிறது என்பதே ஒரு சுருக்கமான பதிலாக இருக்கக் கூடும்! இன்றைக்கும் அவர் பெயர் சொன்னால் பல பேர் முகத்தில் தோன்றும் அந்த மகிழ்ச்சி நெகிழ்ச்சி அளவிட முடியாதவை! அவர் மற்றும் அவரது படங்கள் ஸ்பர்சிக்காத மனிதர்களே குறைவு என்று தோன்றுகிறது சமூகத்தின் பலதரப்பட்ட மனிதர்களுடன் கலந்து உரையாடும் வாய்ப்பு இப்போது எனக்கு அதிகமாகவே கிடைக்கிறது. பெரும் செல்வாக்கான குடும்பங்களில் பிறந்தவர்கள், தன் உழைப்பினால் உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் இப்படி அனைவரையும் அவர் இப்போதும் கவர்ந்துக் கொண்டே இருக்கிறார் என்பதுதான் எனக்கு கிடைக்கும் செய்தியாக இருக்கிறது.
நாம் விரும்புவது போல் நடிகர் திலகத்தின் படங்கள் மீண்டும் பரவலாக வெளியிடப்படும் சூழல் கனிந்து வரும் இவ்வேளையில் அது எதார்த்தமாகும் நாள் நெருங்கி வர வர, அவரின் புகழ் மேலும் வளரும் தழைக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
இன்று அவரின் நினைவு நாள் அவர் பூத உடல் நம்மை விட்டு பிரிந்திருந்தாலும் முன்பு ஒரு முறை நண்பர் சுவாமி குறிப்பிட்டது போல அவருக்கு ஜனனம் மட்டுமே மரணம் இல்லை என்று கூறி அவர் புகழ் மேலும் வளர வேண்டும். அதற்கான முயற்சிகளில் நாம் தோள் கொடுப்போம் என உறுதி கூறுவோம்.
அன்புடன்
Dear Murali Srinivas,
You have opined what is in all NT's Fans minds and a Great salute for writing the reality!!!!!!
ANM
http://www.sangam.org/2008/11/images...frontcover.jpg
துரோகங்களையும் நயவஞ்சகங்களையும் சந்தித்தவன் நீ –
முகத்துக்கு நேரே சிரிப்பவர்கள், முதுகின் பின்னே வஞ்சிப்பவர்கள் என
அனைவரையும் பார்த்தவன் நீ –
உன் தொண்டர்களாகிய நாங்கள் மட்டும் விதி விலக்கா –
உண்மையையும் அன்பையும்
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலையாதவர்கள் நாங்கள் -
உன்னுடைய நினைவு மட்டுமே எங்களுக்கு ஆறுதல்...
நீ இறந்தாலும் உன் வாழ்க்கை எங்களுக்கு வழிகாட்டி..
என்றென்றும் உன் வழி நடப்போம்
என்றும் உந்தன் நினைவுடன்
ராகவேந்திரா சார் ,
உங்கள் மீள்வரவு மகிழ்ச்சியளிக்கிறது .
Today, needless to remind or say, is the dark day for the entertainment industry.The entertainment industry had lost the physical presence of a 5 feet 7 inched professional, who mesmerized the genuine movie lovers across the globe with his unmatched capability, professionalism, talent, versatility etc., NADIGAR THILAGAM SIVAJI GANESAN
Naangal enna Baagiyam Seidhomo ungal nadippai kaanbadharkku, Urangiya Uyarndha Manidharae, Neengal Uyirthezhundhaal, Thamizh Thirai Ulagamum uyirthezhum..!!
Aandavan mattum yenakku parakkum sakthiyai koduthirundhaal, vaanathilae parandhu sendru, vinnulagil, yamanudan vaadhaadi ungalai ingae kondu vandhu sayrthiruppaen..!! enna Seivadhu, enakandha Sakthi illayae...illayae..!!
Engal Iraivaa....Unnai thirayil alladhu ini eppodhu kaanboamoe !!
Attachment 1602
நடிகர் திலகம் மறைந்து இன்றோடு 11 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆயினும், அவரது நினைவுகள் மறையவில்லை. மாறாக, வளர்ந்து கொண்டே இருக்கிறது என்று கூறலாம். எனக்கு நினைவுக்குத் தெரிந்து, இன்று வரை, நடிகர் திலகத்தைப் பற்றி ஏதோ ஒரு வகையில் நினைத்துப் பார்க்காமல் ஒரு நாள் கூட இன்று வரை கடந்ததில்லை.
திரு. முரளி அவர்கள் குறிப்பிட்டது போல், அவருடைய பலம் அவருடைய அளப்பரிய திறமை மட்டுமே. அவரை நன்கு அறிந்தவர்கள், களங்கமில்லா அந்த மனிதரைப் பார்த்து வியந்தார்கள். அந்த அளவிற்கு குழந்தை உள்ளம் கொண்ட ஒரு எளிய மனிதர்.
அதிகார பலமோ, பண பலமோ இல்லாமல், இருந்த போதும், மறைந்த போதும், தன் திறமை ஒன்றினால், அதன் மூலம் அவர் படைத்த அழியாக் காவியங்களால் அத்தனை பேரையும் பரவசப்படுத்திக்கொண்டே இருக்கிறார்... இந்தப் பூவுலகு உள்ளவரை இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்... அவர் மேல் உள்ள மலைப்பும், உயிர்ப்பும், ஈர்ப்பும்!
வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Long live Sivaji's fame. We have his movies to cherish
https://fbcdn-sphotos-a.akamaihd.net...34453834_n.jpg
இன்று (21 ஜூலை 2001) நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மறைந்த நாள். 1999ல் விகடனில் வெளியான நடிகர் திலகத்தைப் பற்றிய இசைஞானியின் நினைவலைகள்:
”சில வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் ஒரு இசை நிகழ்ச்சியும் அதில் விசேஷமாக அண்ணன் சிவாஜி அவர்களுக்குப் பாராட்டு நிகழ்ச்சியும் ஏற்பாடானது. நானும், தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தோம். சிவாஜியின் உடல்நிலை சிறிது சரியில்லாமல் இருந்தும் பிடிவாதமாக அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
‘அண்ணே, உடம்பு சரியில்லையென்றால், நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் கூட்டத்தை சமாளித்துக் கொள்கிறோம்’ என்றேன்.
உடனே ‘ஊஹூம், சிவாஜி வாக்குக் கொடுத்துட்டான்டா! வாக்குத் தவறிட்டான் இந்த சிவாஜின்னு பேர் வாங்கணுமா? உயிரே போனாலும் மேடையில் போகட்டுண்டா!” என்றார். மேடையில் நட்சத்திரங்களின் தோற்றமும் பாட்டுகளும் சூடுபிடித்துக்கொண்டிருந்தன. நான் பாடி முடித்த சிறிது நேரம் கழித்து அண்ணன் சிவாஜி, என்னை அவசரமாக அழைத்தார். ‘ராஜா.. எனக்கு ஏதோ அன்ஈஸியா இருக்குடா..’ என்றார். உடனே அருகில் இருந்த டாக்டர்களை அழைக்க எழுந்தேன். என்னைப் பிடித்து நிறுத்தி, ‘வேண்டாம்…’ என்றார்.
மேடைக்கு மேலே இருந்த ஸ்க்ரீனில் சிவாஜி நடித்த காட்சிகளைத் தொகுத்துப் போட்டுக்கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் அண்ணன் சிவாஜி, என் தோள்மீது சாய்ந்து, உணர்விழந்து அப்படியே முழுவதுமாக என் மேலேயே விழுந்துவிட்டார். நிகழ்ச்சி நடத்துபவரை உடனே அழைத்து, “அண்ணனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்..” என்று பரபரத்தேன். ஆனால் நிகழ்ச்சி நடத்தியவர் நடந்துகொண்ட முறை எனக்குக் கோபத்தை ஊட்டியது. என்னுடைய பரபரப்புக்கு நேரெதிராக சாவகாசமாகப் பேசினார். “இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்களில் மேடையில் அவருக்குச் செய்யவேண்டிய மரியாதையைச் செய்துவிடலாம். குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும்..” என்று பொறுப்பில்லாமல் பேசினார்.
“இதுபோல ஆயிரம் நிகழ்ச்சிகள் நடத்தலாம். ஆனால், சிவாஜியின் முக்கியத்துவம் தெரியாத மூடனாக இருக்கிறானே இவன்..?!” என்று ஆத்திரமாக வந்தது.
ஏதும் அறியாத ரசிகர்கள், ஸ்க்ரீனில் சிவாஜி நடித்த படக்காட்சியில் லயித்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று, ‘கிஸ்தி.. திரை.. வரி.. வட்டி’ என்ற கட்டபொம்மனின் வசனம் கேட்க, அண்ணனின் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வந்தது. அப்படியே எழுந்து மிகவும் தெம்பாக உட்கார்ந்துகொண்டார். “எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா….?”, திரையில் கட்டபொம்மன் முழங்க, அதை முதன்முதலாகக் காணும் ரசிகன் எப்படி அதனுடன் கலந்து அதே உணர்வெய்தினானோ, அதேபோல கட்டபொம்மன், சிவாஜியின் உடம்புக்குள் புகுந்து, அவரைக் கட்டபொம்மனாக மாற்றி, சிவாஜியாக எழுப்பி உட்காரவைத்துவிட்டு, வெளியே வந்துவிட்டான். கூட்டம் ஓவென்று கத்திக் கரகோஷம் எழுப்ப, என் கண்களில் நீர் வழிந்தது!
வழிந்த கண்ணீர் சிவாஜிக்கா..? சிவாஜியைத் திருப்பித் தந்த கட்டபொம்மனுக்கா..??”
***********************************************
இசைஞானி நடிகர் திலகத்துக்கு மெட்டமைத்துக் காண்பிக்கும், ‘சாதனை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ வானம்பாடி’ பாடலின் காணொளி:
http://www.youtube.com/watch?v=Cnk2hFswbXw
நன்றி: ஆனந்த விகடன் 25.7.1999
தகவல்: திரு. ஜெகதீஷ் ஜெயராமன்
புகைப்படம் நன்றி: மாலினி ஷ்ரவன்.
எங்கள் இதய தெய்வத்திற்கு 11 ம் ஆண்டு நினைவு அஞ்சலி
நடிகர்த்திலகமே,
என்றென்றும் உன்னை நினைத்திருப்பேன்
என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன்
அன்று நான்
இறந்திருப்பேன்
திரு ராகவேந்திரா சார்,
நடிகர்திலகத்தின் நினைவு நாளான இன்று தங்களின் பதிவை மீண்டும் பார்த்தபோது என் கண்களிலிருந்து நீர் வழிந்தது.தங்களின் பதிவுகளை தொடரவேண்டும் என்று உங்களையும் உங்களோடு சேர்த்து திரு பம்மல் சார்,திரு வாசு சார் மற்றும் திரு கார்த்திக் சார் அனைவரையும் நமது தலைவரின் நினைவுநாளான இன்று மன்றாடி கேட்டுகொள்கிறேன்
till the globe spindles NT's fame and name will be there all over the universe. With your thoughts, NT fans
To the man who lived and died for acting....
http://farm1.staticflickr.com/74/195...fab0a409_z.jpg
The world will remember you as long as art lives!
நடிகர்திலகம் அவர்களின் 11 -வது நினைவுநாள் - 21 -07 -2012
என்றென்றும் கலையின்மூலம் நம் மனதிலும் மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ள நடிகர்திலகத்தின் புகழ் என்றென்றும் வாழும்.
கண்ணுக்கு தெரிந்த ஒரே கடவுளே, உன்னை நாங்கள் நினைக்காத நாளில்லை. நீ எங்களில் ஊனோடு உயிரோடு கலந்தவன். உனக்கு என்றுமே நினைவு நாள். கோயிலுக்கு போகலாமா என்று யோசித்து, அதை தவிர்த்து உனது மூன்று படங்களை தரிசித்தேன்.
என் வாழ்வின் அத்தனை மகிழ்ச்சி தருணங்களும் நீ எனக்களித்த பெரும் பேரு.
can someone please post some anecdotes abt the great actor ?
சென்ற வாரம் ஒருவரை சந்தித்தோம். அப்போது அவர் படித்தால் மட்டும் போதுமா படத்தில் வரும் நான் கவிஞனுமில்லை பாடலை குறிப்பிட்டு அதை கவனித்து பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார். கவனித்து பார்க்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது.
பாடல் இடம் பெறும் சூழல் கதையின் பின்புலம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். படித்த பட்டதாரி பெண்ணான தன்னை ஏமாற்றி படிக்காத ஒருவனுக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள் என்ற தவறான புரிதலில் தாய் வீடு சென்று விடும் நாயகி பின் ஒரு கட்டத்தில் பெற்றோர்களின் நிர்பந்தம் காரணமாக மீண்டும் கணவன் வீடு வருகிறாள். தன்னை படிக்காதவன் முரடன் நாகரீகம் தெரியாதவன் என நினைத்துக் கொண்டிருக்கும் மனைவியிடம் தான் அப்படிப்பட்டவன் இல்லை அவளை அளவு கடந்து நேசிக்கிறவன் என்பதை சொல்ல விரும்பும் கணவன். ஆனால் எப்படி இதை அவளிடம் சொல்வது என்பதில் அவனுக்கு தயக்கம் இருக்கிறது. அந்த நேரத்தில் வரும் பாடல்.
நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை என்பது பல்லவியின் முதல் இரண்டு வரிகள். இந்த இரண்டு வரிகள் பாடலில் பல முறை வரும். பாடலில் நான்கு சரணங்கள். இரண்டு இசையமைப்புடனும் இரண்டு இசையமைப்பு இல்லாத தொகையறா போல வரும்.
இதில் கவனித்தோம் என்றால் முதலில் ஆரம்பிக்கும் போது ஒரு தன்னிலை விளக்கம் போல பாவம் அதற்கேற்ற உடல் மொழி. காதலென்னும் ஆசையில்லா பொம்மையுமில்லை என்று அதற்கு அடுத்த வரியை பாடி விட்டு ஆனால் அதை வெளிப்படுத்துவதற்கு எனக்கு தெரியவில்லை என்ற பாவத்தில் மீண்டும் நான் கவிஞனுமில்லை என்ற வரியை பாடுவார்.
முதல் சரணத்தில் வருவது விரக தாபம், இரவு நேரம் பிறரை போல என்னையும் கொல்லும் என்ற வரிகளில் துவங்கி துணை இருந்தும் இல்லை என்ற நிலை வந்தால் ஊர் என்ன சொல்லும் என்பதை ஒரு ஹம்மிங்கோடு வெளிப்படுத்திவிட்டு மீண்டும் அந்த விரக தாப உணர்வு வெளிப்படும் நான் கவிஞனுமில்லை வரிகள். கட்டிலில் உட்கார்ந்தவாறே விரகம் காட்டும் உடல் மொழி.
அடுத்த சரணத்தில் மனைவி மீது கொண்ட அன்பை காதலை அவளது அழகை வர்ணிக்க நடத்தும் முயற்சி அன்பே ஆருயிரே என்று தொடங்கி ஆனால் அன்பை பண்பை எல்லாம் சொல்ல தெரியவில்லையே என்ற ஏக்கத்தின் தொனியில் நான் கவிஞனுமில்லை வரிகள்,
மூன்றாவது சரணம் ஒரு வருத்தமான மனநிலையை வெளிப்படுத்தும், வேட்டைக்கு சென்று பழகிய தனக்கு காட்டும் மானை பற்றி தெரிந்து அதை கிழ்ப்படிய செய்த தனக்கு வீட்டில் இருக்கும் மானை அடக்க முடியவில்லையே என்ற இயலாமை, குடும்ப வாழ்க்கையின் அர்த்தம் புரியாமல் அதுநாள் வரை வாழ்ந்த தனக்கு மனைவியாக வந்த பெண்ணின் மனதில் பெண்மை குணம் இல்லையே என்ற வருத்தத்தில் நான் கவிஞனுமில்லை வரிகளும் உடல் மொழியும்.
பின்னர் வருவது கடைசி சரணம். குழப்பம், என்ன செய்வது என்று தெரியாமல் வரும் திகைப்பு என்ன செய்தாலும் அதற்கு எதிர்மாறாக நடந்து கொள்ளும் மனைவியின் குணத்தை பார்த்து தனக்கு தானே தோன்றும் கழிவிரக்கம் இவை எல்லாம் கலந்த ஒரு உணர்வு, அழுவதா சிரிப்பதா என்று கூட தெரியாமல் தன் நிலை இப்படி ஆகி விட்டதே என்று பச்சாதாபத்தில் நான் கவிஞனுமில்லை என்று அதுவும் அந்த நான் என்ற வார்த்தையை கொஞ்சம் அதிகப்படியாகவே இழுத்து பாடும் அந்த உடல்மொழி இருக்கிறதே, அற்புதமாக திரையில் வெளிப்படுத்தி இருப்பார் நமது நடிகர் திலகம் அவர்கள்.
அந்த பல்லவியை மீண்டும் இறுதியாக பாடும் போது அவ்வளவுதான் இத்தனை நாள் மனதில் வைத்திருந்ததை, நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விட்டேன் என்று தன் உள்ளத்தை முற்றிலுமாக ஒப்படைக்க துடிக்கும் ஒரு பரிதாபமான உடல் மொழியில் கலக்கியிருப்பார் நடிகர் திலகம். ஒரே பாடலின் ஒரே வரியை பல முறை பாட நேரும் தருணத்தில் கூட இத்துணை வித்தியாசம் காட்ட நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும். அவருக்கென்ன! எட்டு முறை அல்ல 80 முறை பாட சொன்னாலும் அதை 80 வித்யாசமான பாவங்களில் வெளிப்படுத்த நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும் என்பதை நாம் கண்கூடாய் கண்டிருக்கிறோம்.
இந்த பாடலை கவனிக்க சொல்லியதன் மூலம் நடிகர் திலகத்தின் நடிப்பில் ஒளிந்திருக்கும் அந்த nuances -ஐ பார்த்து ரசிக்கவும் அதை இங்கே பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பளித்த திரு மோகன் அவர்களுக்கு நன்றிகள் பல!
அன்புடன்
சாரதி,
உங்கள் domain -ல் உள்ளே நுழைந்து உங்கள் விருப்பமான பாடல் ஆராய்ச்சியை நான் எடுத்துக் கொண்டதற்கு sorry!
:clap: :clap: reminds me of Sathiya Keerthi :bow:
http://video.google.com/videoplay?do...33358973744469
http://info.puducherry.gov.in/DSivaj...vaji2012/1.jpg
Do the TN Govt observed the anniversay of NT ? i don't think so. Very pity
முரளி சார்,
உங்களின் அருமையான நான் கவிஞனுமில்லை தொடர்பான ஒரு சங்கிலி தொடர் பதிவு.
நடிகர் திலகம் சார் பாடல்களை ரசிக்க ,அவர் நடித்த படம்,கதாபாத்திரம் தொடர்பான புரிதல் அவசியம். அவர் அப்பாவி வேடங்களை ஏற்கும் பொது முகபாவங்களை விட கை கால்கள் அசைவுகளால் (எங்களுக்கும் காலம் வரும்,உள்ளதை சொல்வேன், அம்மாடி,) action முறையில் நடிப்பார்.
அந்த விதத்தில் வாழ நினைத்தால் வாழலாம் பாடல். மூன்று சரணங்கள் மூன்று கால நேரங்கள். மூன்று மனநிலைகள். முதல் சரணம் தோல்வி மனப்பான்மையில் தற்கொலை முயற்சியில் வாழ வேண்டிய அவசியம் உணர்த்துவது. இரண்டாவது காதலை வேண்டி ,வாழும் ஆசையை வெளிப்படுத்தும் ஒன்று. மூன்றாவது காதலில் ஒன்றி உறவாடும் இரு உள்ளங்கள். முடிவு அழகான வழியனுப்பல்.
NT அவ்வளவு அழகாக அப்பாவி தனம் மாறாமல் மூன்று மனநிலைகளை காட்டும் நல்ல பாடல்.-பலே பாண்டியா படத்தில்.
இன்று வெளியிடப்படும் விக்ரம் பிரபுவின் 'கும்கி' திரைப்பட பாடல்கள் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
விழாவில் கலந்துகொள்ள திரு குமரேசன் பிரபு மற்றும் நண்பர்கள் சுமார் 100 பேர் பெங்களுரிலிருந்து சென்றிருக்கிறார்கள் .
Small write up on Yaradi Nee mohini song
http://yokibu.com/communityspeak/?p=18817
I wrote this elsewhere but this belongs here
Joe - this is particularly for your attenion. You must acknowledge that there is something that sets NT apart as a human being although I am wary of excessive hagiography like you
Quote:
Originally Posted by Plum
Plum,
Point Taken.
பொதுவா எம்.ஜி.ஆரை பொன்மனச்செம்மல் என்றெல்லாம் புகழும் போது கூட எல்லோரும் அவரின் தனி வாழ்க்கை , அரசியல் வாழ்க்கை குறித்தே சொல்வார்களே தவிர , ஒரு சினிமா நடிகராக திரைப்பட வட்டாரத்தில் அவரின் பெருந்தன்மை பற்றி பெரிதாக யாரும் புகழ மாட்டார்கள் ..ஏனென்றால் திரைப்பட உருவாக்கம் என வரும் போது எம்.ஜி.ஆரின் எண்ணம் , அணுகுமுறை , பிறரை எங்கே எதுவரை எப்படி அனுமதிப்பது என்பது குறித்த திட்டமிட்ட நடவடிக்கைகள் , தனது ஆளுமைக்கு பங்கம் வராதபடி எங்கும் எதிலும் கண்காணிப்பு போன்றவற்றை பலரும் பரவலாக அறிந்தே இருக்கிறார்கள் .
சிவாஜியை பொறுத்தவரை தனக்கு கொடுக்கப்பட்ட பணியை முடிப்பதை தவிர முழு திரைப்பட உருவாக்கத்தில் அவரின் பங்கு அல்லது தலையீடு குறைந்த அளவே இருந்திருக்கிறது . தன் திறமை மீதும் தன் வெளிப்பாட்டு வீச்சின் மீதும் அவருக்கு உள்ள நம்பிக்கை , மற்றவர்கள் திறமை , தாக்கம் குறித்த அச்சமற்றவராக அவரை இருக்க செய்திருக்கிறது .
சிங்கையில் கர்ணன்
Attachment 1613
Nice speech by Kamal on NT during audio launch of Kumki.
http://tamil.oneindia.in/movies/hero...al-158482.html
Managed to watch digital Karnan at last. vaazhvin palan adaindha oru niraivu :lol:
now coming to discussions. my grouses on the digital re-release:
The first 15 mins was bad, but the rest of the movie was great quality.
I hated the addition of new electronic music to the original songs. What they had done is to add on the new music to the original song to overpower the original music. But they forgot one thing: the original songs were composed with live music.
In this digital effort, only tabla was real and it was a real pain to hear all the flute sounds replaced by mechanical sounds. Also the grand veenai and violins sounds were extinguished and replaced with fake sounds.
And the new music really overpowered the original song, murdering the original. :(
Also, in some places they have added loud BGM where none was necessary.
I would like to suggest that for the next digital re-release, to leave the songs as they are. If we can accept old-fashioned costumes and settings, why not old-fashioned music?
I also look forward to the day when technology can digitalise the sound-track without altering the original.
Other than the above, Karnan is just perfect!
recently the statue for actaress savitri was also made it in andraperadesh
சிக்கல் சண்முகசுந்தரம்.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல கலைகளஞ்சியமும் தஞ்சை மாவட்டம் என்றே சொல்லலாம். தமிழகத்திற்கே உரித்தான பரதமும் நாதமும் கருக்கொண்டதும் உருப்பெற்றதும் தஞ்சை மாவட்டத்தில்தான். நாத பிரம்மம் என்றழைக்கப்படுகின்ற மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பெருமை பாடும் திருவையாறு முதல் பரத நாட்டியத்தின் இரு பெரும் முறைகளாக சொல்லப்படுகின்ற பந்தநல்லூர் மற்றும் வழுவூர் ஆகியவை அமைந்திருப்பதும் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில்தான். அதனால்தான் என்னவோ நாயகி மோகனா திருவாரூரை சேர்ந்தவளாக சித்தரிக்கப்படுகிறாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள சிக்கல் எனும் ஊரை சொந்தமாக கொண்டவர் சண்முகசுந்தரம்.
பொதுவாகவே திறமை வாய்ந்த கலைஞர்கள் சற்று முன் கோவம் கொண்டவர்களாகவும் தங்கள் திறமையின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர்களாகவும் அதன் காரணமாகவே வித்யா கர்வம் [சாதாரண வார்த்தைகளில் சொன்னால் திமிர்] மிகுந்தவர்களாகவும் விளங்குவார்கள் என்பது பரவலான ஒரு நம்பிக்கை/கருத்து. அந்த கருத்துக்கு வலு சேர்பவர்கள்தான் சண்முகமும் மோகனாவும்.
அதிலும் சண்முகம் உண்மையிலே மனதளவில் சிக்கலார்தான். தன் தொழிலின் மேல் அபார பக்தி, தன் திறமை மேல் அசாத்திய நம்பிக்கை, தன் தன்மானத்திற்கு ஊறு நேரும்போது யாராக இருந்தாலும் அவர்களுடன் மோத தயங்காத குணம், தான் காதலிக்கும் பெண் மீது வைக்கும் அதீத அன்பு, அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற வெறி, பெரிய கலைஞனாக இருந்தாலும் ஒரு சாராசரி மனிதனுக்கு உள்ளது போன்ற பயம், சந்தேகம் இத்யாதிகள். மொத்தத்தில் ரத்தமும் சதையுமான ஒரு பச்சை மனிதன்.
முதன் முதலாக கோவிலில் கச்சேரி செய்துக் கொண்டிருக்கும் போது வண்டியில் வந்து இறங்கும் மோகனாவை பார்த்தவுடன் பாலையாவிடம் அதை சுட்டிக் காட்டும் கண் அசைவு, தொடர்ந்து வேட்டு சத்தம் கேட்டவுடன் வரும் கோவத்தில் கச்சேரியை நிறுத்திவிட்டு வெளியேறுவது, வெளியில் நிற்கும் தன் மனம் கவர்ந்த பெண்ணிடம் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நாத பரத கலைகளைப் பற்றி வாதம் புரிவது என்று அந்த முதல் காட்சியிலே கேரக்டர்-ஐ establish பண்ணி விடுவார்கள். காதல் கோவம் கர்வம் எல்லாம் அப்படியே அந்த முகபாவங்களில் ஜொலிக்கும்.
முதலில் சொன்னது போல் சண்முகசுந்தரம் ஒரு அசாதாரணமான ஹீரோ இல்லை. சராசரி மனிதன். வெளியே வீம்புக்கு நாட்டியம் பார்க்க வரமாட்டேன் என்று சொல்லி விட்டாலும் தன் வாத்திய குழுவினரை போக கூடாது என விரட்டினாலும் மனதின் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கச்சேரிக்கு போய் மறைந்திருந்து பார்க்கும் ஒரு காதல் வயப்பட்ட மனிதனை எப்படி வெளிக் கொண்டு வருகிறார். அடுத்து தற்செயலாக ஒரே ரயிலில் சண்முகமும் மோகனாவும் பயணம் செய்யும் வாய்ப்பு. அத்தனை பேர் சூழ்ந்து இருந்தும் காதல் எப்படி பொங்கி பெருகிறது? பாலையா துணையுடன் விளக்கு அணைக்கப்பட்டு இருவருமே கண்களால் பேசிக் கொள்ளும் காட்சி. தமிழ் சினிமாவில் இதுவரை இடம் பெற்றுள்ள காதல் காட்சிகளுக்குள் தலையாய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
தஞ்சாவூரில் இறங்குகிறார்கள். சிங்கபுரம் மைனர் வீட்டு நிகழ்ச்சிக்கு கூட்டிப் போக வந்திருக்கும் வைத்தி, படியில் நிற்கும் மோகனாவைப் பார்த்துவிட்டு யாரு மோகனாவா என்று கேட்டுவிட்டு அங்கே போக முற்படும்போது அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற possessiveness மீண்டும் சண்முகத்திடம் தலை தூக்க எங்களை பார்க்க வந்தியா இல்லை அவங்களை பார்க்க வந்தியா என்று முறுக்கும் சண்முகம், அங்கே மீண்டும் அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை அழகுற காட்சி வைக்கிறார் நடிகர் திலகம்.
சிங்கபுரம் அரண்மனையில் சுய கெளரவம் மிக்க அந்த கலைஞ்னுக்கு ஏற்படும் அவமானம், கோவித்துக் கொண்டு வெளியேற உங்கள் கச்சேரியை கேட்கத்தான் வந்தோம் என்று திரண்டிருக்கும் பொது மக்கள் சொல்ல அந்த பெருமிதம் முகத்தில் ஒரு கனம் மின்னி மறைவதை என்னவென்று சொல்லுவது? வாசிப்பை கேட்டு வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் வந்துவிட அவர்கள் இங்கிலீஷ் நோட்ஸ் வாசிக்க முடியுமா என்று கேட்க முதலில் அந்த ஆங்கிலம் புரியாமல் ஒரு கனம் குழப்பமாய் பார்க்க வைத்தி அது என்னவென்று விளக்க உடனே பாலையாவைப் பார்த்து கண் அசைவிலே ஓகே என்று சொல்லி அவர் வாசிக்கும் காட்சி அற்புதமான ஒன்று.
திருவாரூர் சென்று மோகனாவைப் பார்க்க வேண்டும் என்ற அந்த ஆசையை வெளியில் தெரியாமல் மறைக்க முற்பட்டு ஆனால் பாலையாவிற்கு புரிந்து விட அந்த தர்மசங்கடத்தை கோவப்படுவது போல் வெளியில் காண்பிப்பது, சிங்கபுரம் மைனரின் கோச் வண்டியை பார்த்ததும் வரும் அதிர்ச்சி, ஆத்திரம். இவற்றிக்கு காரணமில்லாமல் இல்லை. அந்தக் காலத்தில் [அதாவது கதை நடப்பது சுதந்திரத்திற்கு முன் உள்ள காலகட்டம். அது படத்தில் சொல்லப்படவில்லை என்றாலும் கூட தொடர் கதையாக வந்த போது அப்படித்தான் சொல்லப்பட்டது] பொதுவாக நாட்டிய பெண்மணிகளைப் பற்றிய சமூகத்தின் பார்வை, பொதுமக்களின் கருத்து எல்லாம் தவறான கண்ணோட்டத்திலேயே அமைந்திருந்தன. அந்த சூழலில் வளர்ந்த சண்முகத்திற்கும் சந்தேகம் வந்ததில் ஆச்சரியமில்லை.
படம் முழுவதும் வரக்கூடிய சண்முகத்திற்கும் ஜில் ஜில்லின் நாடகக் கொட்டகையில் இருக்கும் போது திரையில் தோன்றும் சண்முகத்திற்கும் வித்தியாசம் இருக்கும். அங்கே மட்டும்தான் அந்த கோபதாபம் இல்லாமல் சற்றே சிரிக்கும் சண்முகத்தைப் பார்க்கலாம்.
நாடகம் பார்க்க வரும் மோகனா சண்முகத்தை சீண்டும் காட்சியெல்லாம் யாரும் எடுத்து சொல்லாமலே அற்புதமான காட்சி என்று அனைவருக்கும் தெரியும். ஒரு மனிதனுக்கு அதுவும் இயல்பிலே முன்கோபியான ஒருவனின் தன்மானம் சீண்டப்பட்டால் அந்த கோபத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை இதில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணுடன் அப்படி ஒரு வாக்கு வாதம் ஏற்படுகிறது என்றால் அங்கே கைகலப்பு ஏற்பட்டு விடும் ஆனால் சீண்டியவள் ஒரு பெண் என்பதனால் அதுவும் பத்து பேருக்கு முன்னால் தன்னை கேலி பேசி விட்டாள் என்று வரும் போது அது எப்படி அந்த உடல் மொழியில் வெளிப்படுகிறது. அடிவயிற்றிலிருந்து வரும் கோவத்தோடு அவள் சவாலை ஏற்று தில்லானா வாசித்து உன் காலை உடைக்கிறேன் என்று சவால் விட்ட பிறகும் கூட அந்த ஆத்திரம் தணியாமல் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கோவத்தில் உதடுகள் துடிக்க வார்த்தை வராமல் அந்த துண்டை உதறியவாறே போகும் அந்த காட்சியெல்லாம் அது போல செய்வதற்கு மீண்டும் நடிகர் திலகமே பிறந்து வந்தால்தான் உண்டு.
தில்லானா பட்டம் கொடுக்கும் காட்சியெல்லாம் பற்றி ஏற்கனவே பிரபு அருமையாக எழுதியிருக்கிறார் [சண்முகத்திற்கு மேடை புதியதல்ல ஆனால் மேடை பேச்சு புதிது]. ஆகவே அடுத்த கட்டம் என்றால் அவர் மருத்துவமனையில் நர்சின் பணிவிடையைப் பார்த்து தவறாக நினைத்து அதை தவிர்க்க நினைப்பதை சொல்ல வேண்டும். அடிப்படையில் பெண்களிடமிருந்து ஒதுங்கி இருக்கும் ஒரு கூச்ச சுபாவி. நர்ஸ் உரிமை எடுத்துக் கொண்டு தனக்கு பணவிடை செய்யும் போது தர்மசங்கடத்தில் தவிக்கும் அந்த உடல் மொழி ஒரு பரிமாணம் என்றால், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சத்தம் போட்டு விட, அந்த நர்ஸ் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ததாக சொன்னவ்டன் அவசரப்பட்டு தவறாக பேசி விட்டோமே என்ற வேறொரு தர்மசங்கடத்தில் தவிக்கும் போது காட்டும் உடல் மொழி அவரின் இன்னொரு பரிமாணம்.
நலந்தானா பாடல் காட்சி எல்லாம் சொல்லவே தேவையில்லை. நான் பலரிடமும் சொல்வது எல்லா வரிகளையும் விட்டு விடுவோம் அந்த கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன் என்ற வரிகளின் போது விழி சிவந்து கண்ணில் நீர் பெருக்கி ஒரு சின்ன தலையாட்டலில் உன் உள்ளத்தையும் அதில் என் மேல் உள்ள காதலையும் எனக்கு ஒன்று என்றால் நீ துடித்துப் போவதையும் நான் உணர்ந்திருக்கிறேன் என்ற புரிதலையும் அவர் வெளிப்படுத்தும் அந்த பாங்கு இருக்கிறதே அப்போது அவர் கன்னங்களில் மட்டுமா கண்ணீர் வழியும், காட்சியை காண்பவர் எல்லோர் கண்களிலும்மல்லவா கண்ணீர் வடியும்.
மதன்பூர் செல்லும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் போது, படித்து பார்த்து விட்டு போடுங்கள் என்று ராஜன் சொல்ல அதிலே என்னடா இருக்கப் போகுது என்று சமாதானம் சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு பின்னர் தன்மானத்திற்கு ஊறு வரும் என்ற நிலையில் வாசிக்க மாட்டேன் என்று சொல்ல ஒப்பந்ததை காட்டி கேஸ் போடுவேன் என்று வைத்தி சொல்லும் போது அன்று கூட இருந்தவர்கள் சொன்னபோது கேட்காமல் போனோமே என்ற குற்ற உணர்வை கூட எவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.
இறுதியாக மதன்பூர் மகராஜாவின் அறையிலிருந்து வெளியே வரும் மோகனாவை தாறுமாறாக பேச அதற்கு அறிவு கெட்டதனமாக பேசாதீர்கள் என்று மோகனா சொல்ல கண் மண் தெரியாத கோவத்தில் பளாரென்று அறையும் சண்முகம் செத்து போ என்று சொல்லிவிட்டு போகும் அந்த உடல் மொழி, மறக்கவே முடியாது.
கொஞ்சம் யோசித்துப் பார்தோமென்றால் தில்லானா அடிப்படையில் ஒரு காதல் கதைதான். காதலிக்கும் இருவர் அந்த காதல் வெற்றி பெற எதிர்கொள்ள வேண்டிய போராட்டங்கள்தான் கதை. ஆனால் கதையின் பின்புலம் இசையும் இசை சார்ந்த சூழலுமாக அமைக்கப்பட்டிருந்ததுதான் அந்தப் படத்தின் சிறப்பு.
தில்லானா என்று எடுத்துக் கொண்டால் ஒருவரை கூட விட்டு விடாமல் பாராட்ட வேண்டும். ஆனால் இங்கே பாட்டுடை தலைவன் நடிகர் திலகம் பற்றிய அலசல் மட்டுமே இப்போது என்னால் எழுத முடிந்திருக்கிறது. பின்னொரு நாளில் மற்றவர்களைப் பற்றியும் எழுதலாம்.
அன்புடன்
July 27th [1968] happens to be the release date of Thillana. Last year when Swami published photos and Ads of Thillana it initiated a round of discussions about the film and the exchanges between Rakesh and Plum were lively. When I commended it, Plum asked me to write about the film. I promised him that I will do it but I could not keep my word. One year has gone and so I thought "lemme try something". I have talked about only Shanmugasundaram. While there had been great write ups about the film by the likes of Prabhu and Rakesh, i am not sure how much justice I have done. Still dedicating this to Plum.
Regards