http://i1170.photobucket.com/albums/...psbbe9x6rc.jpg
Printable View
சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,
கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பது உண்மைதான். இதில் மறைக்க எதுவும் இல்லை. இதுபற்றி தனது சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்?’ தொடரில் தலைவரே கூறியிருக்கிறார்.மேலும், அப்போது சென்னை அயனாவரத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஒரே நாளில் 60க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதுபற்றி கடந்த வாரம் கூட தினமலர் நாளிதழில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மணி என்பவர் தெரிவித்திருந்தார்.
மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தபோதும் தமிழகத்துக்கு கைவிரித்து விட்டது. புதிதாக அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்படும் என்று அறிவித்தது. கள்ளச்சாராய சாவு ஒருபுறம். நிதி நெருக்கடி வேறு. எனவே, வேறு வழியில்லாத நிலையில் மதுவிலக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தலைவர் முதல்வராக இருந்தபோதும் இதே நிலை. எனவேதான், அப்போதும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. ‘எம்ஜிஆர் எவ்வளவோ பாடுபட்டபோதும் அவராலும் மதுவை ஒழிக்க முடியவில்லை.’’ என்று நேற்று (6-ம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. (அறிக்கையின் இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்) தலைவர் உடலால் மறைந்த பிறகு 1989ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் மலிவு விலையில் பாக்கெட் சாராயத்தை அறிமுகப்படுத்தினார்.
தமிழகத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்படுவதற்கு முன்பே காங்கிரஸ் ஆண்ட பல மாநிலங்களிலும் மதுவிலக்கு இல்லை. (இதையும் கலைஞர் கருணாநிதி அவர்கள் 1971-ல் சட்டப் பேரவையில் பேசிய பேச்சில் குறிப்பிட்டுள்ளார். இணைப்பு கடைசியில் கொடுத்துள்ளேன்).
1948-ம் ஆண்டு வரை தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமலில் இல்லை. சொல்லப்போனால், மிகவும் பழமையான நாகரிகமாக குறிப்பிடப்படும் வேதகாலத்தில் இருந்தே மது வேறு பெயர்களில் அதாவது சோம பானம், சுரா பானம் என்ற பெயர்களில் குடிக்கப்பட்டது. அவை பற்றிய தகவலுக்கான இணைப்புகளை கொடுத்துள்ளேன்.
சோம பானம்
https://ta.wikipedia.org/wiki/%E0%AE...AE%AE%E0%AF%8D
சுரா பானம்
https://ta.wikipedia.org/wiki/%E0%AE...AE%AE%E0%AF%8D
இந்த 2 பானங்களையும் யார், யார் குடிப்பார்கள் என்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் யாரும் யாரையும் குறை கூற முடியாது. இப்போது, மதுவிலக்கு வேண்டும் என்று குரல் கொடுக்கும் கட்சிகள் கூட, தேர்தல் நேரத்தில் தங்களுக்கு எத்தனை ‘சீட்’ என்றுதான் திமுக, அதிமுக கட்சிகளோடு பேரம் பேசினார்களே தவிர, ‘மதுவிலக்கு கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்தால்தான் உங்களோடு கூட்டணி சேருவோம்’ என்று நிபந்தனை விதிக்கவில்லை.
தமிழகத்தில் மட்டுமல்ல, எல்லாரின் ஒத்துழைப்போடு, தேசிய அளவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் மகிழ்ச்சிதான்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, ‘திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..’ என்று திருடாதே படத்தில் தலைவர் பாடியதைப் போல, குடிப்பவர்கள் திருந்த வேண்டும். அப்போதுதான் மது ஒழியும். அதற்கு அரசுகளும் உதவ வேண்டும்.
நான் மேலே குறிப்பிட்டபடி, ‘நெஞ்சில் ஓர் வஞ்சமிலா நீட்டோலை’ என்ற பெயரில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’யில் நேற்று வெளியான கலைஞர் கருணாநிதி அவர்களின் கடிதத்துக்கான இணைப்பு :
http://www.murasoli.in/Kaditham.aspx
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
thank u kalai sir for immediate response for my doubt post
கருணாநிதியின் ஆழத்தை எம் ஜி ஆர் அறிந்து வைத்திருந்தார்,ஆனால் எம் ஜி ஆரின் ஆழத்தை கருணாநிதியால் அறியமுடியாமல் போய்விட்டது அதுதான் எம் ஜி ஆரின் வெற்றியின் ரகசியம்,திரைவசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்களின் தொகுப்பிலிருந்து.
தமிழ் சினிமா கண்ட முதல் சூப்பர் ஸ்டாரும் இவரே இம்மண்ணை விட்டு மறைந்து முப்பது வருடங்களாக போகிறது இன்றும் பல நல்ல உள்ளங்களில் நிரந்தரமாக குடிகொண்டுள்ள சூப்பர் ஸ்டாரும் இவரே...
இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்
சென்னை ஓட்டேரி சரவணாவில் 07/08/15 முதல் குடும்பத்தலைவன் தினசரி 3 காட்சிகள் திரையிடப்படுகிறது
http://i60.tinypic.com/et5d05.jpg
http://i62.tinypic.com/2chlvuu.jpg
இனிய நண்பர் திரு ரவிகிரண் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு வருகை புரிந்தமைக்கு நன்றி .
இந்த நாளில் 8.8.2015 அந்த நாள் 8..8.1972 நினைவலைகள் . சற்று 43 ஆண்டுகள் பின்னோக்கி ....
சினிமா நிலவரங்கள் .சிறு கண்ணோட்டம்
.
மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மன்றங்கள் இரு துருவங்களாக வும் , அரசியலில் முறையே திமுக , ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்தில் தீவிர பங்களிப்பிலும் செயலாற்றி கொண்டு வந்தார்கள் .
மக்கள் திலகத்தின் திரைப்பட செய்திகள் தினத்தந்தி , முரசொலி , தென்னகம் நவமணி , மாலைமுரசு , அலைஓசை, தினமணி பத்திரிகைகளிலும் , நடிகர் திலகத்தின் திரைப்பட செய்திகள் நவசக்தி , சுதேசமித்திரன் , நவமணி , தினமணி தினத்தந்தி , மாலைமுரசு , அலைஓசை பத்திரிகைகளிலும் வந்து கொண்டிருந்தது .
மக்கள் திலகத்தின் '' நான் ஏன் பிறந்தேன் '' 9 வது வாரமாக நடைபெற்று கொண்டு இருந்தது . சிவாஜியின் ''தர்மம் எங்கே '' 4 வது வாரமாக நடைபெற்று கொண்டு இருந்தது . மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரும் 10க்கும் மேலான புதுப்படங்களில் நடித்து கொண்டு வந்தனர் .ஆகஸ்ட் 26ல் தவப்புதல்வனும் , செப்டம்பர் 15ல் அன்னமிட்டகை படமும் வெளிவருவதாக விளம்பரங்கள் வந்தன.
மக்கள் திலகத்தின் இதயவீணை , உலகம் சுற்றும் வாலிபன் , நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்கள காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள் . . வசந்த மாளிகை , நீதி , ராஜா ராஜ சோழன் போன்ற படங்களை காண சிவாஜி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள் .
1972 துவக்கத்தில் வெளிவந்த ''நல்ல நேரம் '' சென்னை நகரில் சித்ரா - மகாராணி -மேகாலா -ராம் 4 அரங்கில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது .சிவாஜியின் ராஜா சென்னையில் தேவிபாரடைஸ் , ராக்ஸி 2 அரங்கிலும் , ஞான ஒளி பிளாசா அரங்கிலும் 100 நாட்கள் ஓடியது . சித்ரா - மகாராணி அரங்கில் நல்ல நேரம் தொடர்ந்து 100 காட்சிகள் நிறைந்தது . ராஜா தேவி பாரடைஸில் 100 காட்சிகளும் ஞான ஒளி பிளாசா வில் 100 காட்சிகளும் chf ஆனது .
தமிழ் திரையுலகில் புதிய வரவாக மு.க .முத்து நடித்த பிள்ளையோ பிள்ளை ஜூன் 1972ல் வெளிவந்த நேரத்தில் அன்றைய தமிழக முதல்வரின் விபரீத பேராசையின் காரணமாக எம்ஜிஆருக்கு இணையாக ஒரே படத்தில் நடித்த முக முத்து விற்கு ரசிகர் மன்றங்களை திறக்க பல் வேறு குறுக்கு வழிகளை தன்னுடைய அதிகாரத்தின் மூலம் கையாண்டார் . எம்ஜிஆர் படங்களை தயாரிக்கும் தயாரிப்பளர்களை அழைத்து முக முத்துவை வைத்து படம் எடுக்க முயற்சித்தார் .
1971ல் இந்தியாவின் சிறந்த நடிகராக மக்கள் திலகம் எம்ஜிஆர் தேர்ந்தடுக்கப்பட்டு பாரத் பட்டம் பெற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் திரு சிவாஜிகணேசன் தலைமையில் நடந்த பாராட்டு விழாவில் நடிகர் எஸ்.எஸ். ஆர் அவர்கள் உணர்ச்சி வேகத்தில் தினத்தந்தி பத்திரிகையை நேரிடையாக தாக்கி பேசியது பரபரப்பை உண்டாக்கியது . அதன் விளைவு ?........பாரத் பட்டம் விழா செய்திகள் தினத்தந்தியில் இருட்ட்டடிப்பு செய்யப்பட்டது
தொடரும்..........
எம் ஜி ஆர்
அடிமைப் பெண்
எம் ஜி ஆர் சொந்தமாகஂதயாரித்தஂ
இந்த படத்தின் கதை காட்சி அமைப்பு
இடங்கள் நடிப்பு சண்டை பாடல் உடை எடிட்டிங் போன்றவை இது வரை மிஞ்சபடாதவை
முதல் காட்சியிலே வலைமீது வாள் வீச்சு ஒற்றை காலில் நின்று
அசோகன் கால் கட்டபட்டு இருக்கும்
எம் ஜி ஆர் காலை மடக்கி கொண்டு
சண்டை செய்வார் வலை சும்மா நடப்பதே முடியாதஂவிஷயம்
கூனனாகஂநடிப்பில் ஒரு பரிமாணத்தை காட்டினார்
அம்மா என்றஂபாடலில் பால் அருந்தும் காட்சியில் ஒரு குழந்தை
போல் தோன்றுவார் இந்தஂகாட்சியை
எம் ஜி ஆர் ரை தவிரஂஎவராலும் நடித்திருக்கமுடியாது
பால் அருந்தி மடியில் இளைப்பாறும் போது ப்ரேம் திரையில் ஊஞ்சல் ஆடஂஅப்போது கே வி மகாதேவன் ஒரு இசை கொடுப்பார் அப்பப்பா
வார்த்தைகள் இல்லை
உடை இந்த படத்தில் ஒரு நீளஂமார்போடு மறைக்கபட்டஂசிறு உடை ,இது பொன்னின் நிறம் கட்டுடல் கருணை கொண்டகண்கள்
பெற்றஂஎவர் அணிந்தாலும் விரசமாகதான் இருக்கும்
முதலாகஂஅம்மாவை சந்திக்கஂசெல்லும் காட்சி யில் எம் ஜி ஆர் அம்மா என்று உரக்கக் அழைக்கும் போது அப்போது கேட்கும் இசை அருவில் பாய்ந்து செல்லும் காட்சி எவரையும் புல்லரிக்கஂசெய்யும் காட்சி
தண்டனை விதிக்கப்பட்டது தண்டிக்க
இருகைகள் கட்டபட்டு உடல் சிதறம்
போது .கடைசி முயற்ச்சிபோல் தன் பலம் முழுவதும் உடலில் பாச்சி தம்
பிடிக்கும் போது எம் ஜி ஆர் ரின் உடல் பலம் விரிந்தஂமார்பு இரும்பு கவசம் போல் மின்னும் கைகளில் நரம்புகள் படைத்து மஸில்ஸ் விம்மி
முகம் ரத்தமாகஂசிவக்கஂஅது கண்களில் ஓரத்தில் தெரியஂஇப்படி ஒரு காட்சி தமிழ் திரையில்கண்டது இல்லை
சிங்கத்தோடு மோதஂசிங்கம் வாங்கபட்டு பலமாதங்கள் அதனோடு பழகி மிகஂபிரம்மாண்டமாகஂபடமாக்கபட்டது கடைசியாகஂஅசோகன் ஈட்டி எறியும் போது அதை பிடித்து திருப்பி
வீசம் அழகு தேர்ந்தஂஈட்டி வீசும் வீரர்களின் அழகை காட்டினார் எம் ஜி ஆர்
ஒவ்வொரு காட்சியிலும் எம் ஜி ஆர்
ரின் நடிப்புக்கு எத்தனை ஆஸ்கார்
விருது கொடுத்தாலும் ஈடு ஆகாது
courtesy net