https://scontent-a-nrt.xx.fbcdn.net/...a3&oe=54C321B2
மஹாராஜா மார்த்தாண்ட பூபதி...Simply superb performance in Sarithira Nayakan... A different diction in pronouncing the word "Bhuvaneshwari". One scene is a classic example. தன்மேல் கோபமும் ஆத்திரமும் பழிவாங்கும் உணர்ச்சியும் கொண்டு வாழும் தங்கையின் கணவர் கொலை செய்யப்பட்ட செய்தி கிடைத்தவுடன் பாண்டியராஜாவின் பரிதவிப்பு .... நடிகர் திலகம் என்ற உலகமகா கலைஞனின் புதிய பரிமாணம் இந்த இடத்தில் வெளிப்படும். வார்த்தைகளை முழுங்கி முழுங்கி பாதியிலேயே நிறுத்தி நிறுத்தி அதன் மூலம் தங்கையின் மேல் பாசத்தையும் பிரதிபலித்து, அவளுடைய அறியாமையை எண்ணி வருத்தமும் கொண்டு, தன் தங்கையின் வாழ்க்கையில் இத்தகைய அவலநிலையைக் கொண்டு வந்தவர்கள் மேல் கோபமும் கண்டு, இவற்றிற்கெல்லாம் மேலாக தன்னுடைய சுயகௌரவத்தையும் விட்டுக்கொடுக்காமல் அந்த சூழ்நிலையிலும் தலைநிமிர்ந்து நிற்கும் புதியதொரு காட்சிச்சூழல்.. இவ்வளவு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வேண்டுமானால் அதற்கு உலகில் இருக்கும் ஒரே கலைஞன் நடிகர் திலகம் மட்டுமே.. சும்மாவா சொன்னார்கள் சரித்திர நாயகன் என்று...
Two saving graces for this movie
நடிகர் திலகத்தின் மாறுபட்ட உச்சரிப்பு... குறிப்பாக புவனேஸ்வரி என்ற வார்த்தையை அவர் இந்தப் படத்தில் பிரயோகித்திருக்கும் விதம்...பல்வேறு காட்சிகளில் பல்வேறு உணர்ச்சிகளில் தன் தங்கையை புவனேஸ்வரி என அழைக்கும் போது, ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஏற்ப அதனை வேறுபடுத்தியிருப்பது... பிரமிக்க வைக்கும் பரிமாணம்...
படத்தின் துவக்கத்தில் பிரபுவிற்குக் கிடைத்த ஒரு அருமையான கராத்தே சண்டைக் காட்சி.
படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்...
வேண்டாம் ... விட்டு விடுவோம்...சொல்வதற்கு வேறொன்றுமில்லை.