-
27th September 2014, 12:10 AM
#11
கடந்த சில வாரங்களாக குமுதம் இதழில் சொல்வது நிஜம் என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் மணா அவர்கள் எழுதி வரும் அனுபவ தொடர் இடம் பெறுகிறது. அதில் இந்த வாரம் நடிகர் திலகத்துடனான தன அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் உண்மைகளை எழுதி இருக்கிறார். இன்றைய சூழலில் நடிகர் திலகத்தைப் பற்றிய உண்மைகளை எழுதுவதனால் எந்த வித லாபங்களும் கிடைக்காது என்று தெரிந்தும் உண்மைகளை சரியான முறையில் பதிவு செய்ததற்கு அவருக்கு மனங்கனிந்த நன்றி.
இன்றைக்கு நம்மை சுற்றிலும் காணும் வரலாறு தெரியாத [அரசியல், சினிமா, விளையாட்டு என்று எந்த அரங்கை எடுத்துக் கொண்டாலும்] பத்திரிக்கையாளர்கள் மத்தியில், தெரியாதவற்றை தெரிந்தது போல் அள்ளி விடும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில், பொய் செய்திகளை பொய்யான வரலாறு தகவல்களை உண்மை போல் எழுதி மக்களை ஏமாற்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில், தாங்கள் சார்ந்த இயக்கத்தைப் பற்றி அல்லது தங்களுக்கு பிடித்தவரை, அபிமானத்துக்குரியவரை வரலாற்று பொய்களின் மூலம் அவர்களின் பிம்பங்களை உயர்த்திப் பிடிப்பதற்கு மக்களின் நம்பகதன்மையைப் பெற்ற பாரமபரியமிக்க பத்திரிக்கைகளை பின்புலமாகவும் ஆடுகளமாகவும் பயன்படுத்தும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இன்றும் உண்மை பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்பதே மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தானே!
மீண்டும் நன்றி மணா அவர்களே! Let your tribe grow!
அன்புடன்
-
27th September 2014 12:10 AM
# ADS
Circuit advertisement
Bookmarks