நன்றி சி கே. படித்தேன் .அருமையாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள்
Printable View
Ck - உங்கள் லிங்க் யை மீண்டும் படிக்கும் பாக்கியம் கிடைத்தது - அருமை என்ற ஒரு வார்த்தை போறாது .
கிருஷ்னாஜி - கண்ணன் உங்கள் காதலன் மட்டும் அல்ல - நம் எல்லோருடைய காதலனும் அவனே ! Treta Yuga வில் ஒரு கண்ணன் எல்லோரையும் ஆட்டிவைத்தான் - அவன் புல்லாங்குழலில் எழுந்தது மதுர கானங்கள் . இன்று அவனே சின்ன கண்ணனாக இங்கு வந்து எழுப்பும் மதுரகனாத்தில் நாமெல்லாம் மெய்மறந்து போகிறோம் - என்னமோ போங்க ! உங்கள் பதிவு எங்களை கட்டிப்போட்டு விட்டது - மீள பல நாட்கள் ஆகலாம் ....
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
6
அதே 'மாலதி' படத்தில் இன்னொரு உற்சாக வெள்ளம் கரை புரளும் பாடல்.
அதே பாலா சுசீலா குரல்களில்.
http://i1087.photobucket.com/albums/...31355/6-12.jpghttp://www.lambretta.org/img/x_LI125%20Series2.jpg
ஸ்கூட்டரில் சரோஜாதேவியை உட்கார வைத்து ஜெமினி ஓட்டிச் செல்வது போல ஆரம்பக் காட்சி. பேக் ப்ரொஜெக்ஷன் காட்சி சிறிது நேரம்.
அப்போதைய புகழ் பெற்ற லேம்பி அல்லது லேம்ப்ரேட்டா ஸ்கூட்டர் என்று நன்றாகத் தெரிகிறது. அப்போதைய ரிச் ஸ்கூட்டர். நிற்கும் ஸ்கூட்டரில் ஜெமினியும், சரோஜாவும் பயணம் போவது போல நன்றாக பிலிம் காட்டுவார்கள்.
தேளின் வால் போல சரோஜாவின் கன்னத்தில் விக் முடி சுருண்டு J போல இருக்க, பின்னால் பிகர் இருக்கும் குஷியில் காதல் மன்னன் நிற்கும் ஸ்கூட்டரின் ஹேண்டில் பாரை வளைத்து வளைத்து ஓட்டுகிறார்.
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கும் போவோம்.
பச்சைக் கிளி போல ஊரெங்கும் பறந்து
இச்சை மொழி பேசி எங்கெங்கும் திரிந்து
பார்த்தும் பாராமல் மகிழ்ந்தாலென்ன
பாடித் திரிந்தாலென்ன
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கும் போவோம்.
http://i.ytimg.com/vi/a2EKWRsXLoY/hqdefault.jpg
அப்புறம் நிஜ மகாபலிபுரத்தின் சாலையில் உண்மையாகவே ஜெமினி மிரண்டு மெதுவாக ஸ்கூட்டர் ஓட்ட, மகாபலிபுர ஒரிஜினல் சிற்பங்களைக் காட்டி, பின் மகாபலிபுர செட்டுக்கு வந்து விடுவார்கள். திக்கான கார்ட்போர்ட் அட்டையில் கடற்கரை கோவிலை வெட்டி தூரத்தில் வைத்து உண்மை என்று நம்ப சொல்வார்கள்.:)
சினிமாவில் இதெல்லாம் சாதரணமப்பா.
தென்றலும் கடலின் அலைகளும் கொஞ்சுமோ
உறவு தரும்படி கெஞ்சுமோ
பெண்ணைப் போல் வெட்கம் கொண்டு அஞ்சுமோ
மங்கையின் மனதில் இருப்பது கொஞ்சமோ
அலைகள் அடிப்பது நெஞ்சமோ
எண்ணினால் இன்பம் என்ன பஞ்சமோ
வலம்புரிச் சங்கு ஒன்று கரை வந்தது.
டக்கென்று பாடல் ஸ்பீட் எடுக்கும். பாலா திடீரென்று குத்துப் பாட்டு ரேஞ்சுக்கு இறங்க அதற்கேற்ற குத்தாட்டம் போட ஆரம்பிப்பார் ஜெமினி.
வாழ்த்துக்கள் பாடிட வருகின்றது
வலம்புரிச் சங்கு ஒன்று கரை வந்தது.
வாழ்த்துக்கள் பாடிட வருகின்றது
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கும் போவோம்.
பல்லவன் மலையில் எடுத்தது சிலைகளோ
------------------------------------------?
அங்கே மன்னன் கொண்ட காதலோ
மன்னவன் எனையும் உனையும் எண்ணியே
கலைஞர் சிலரிடம் சொல்லியே
கட்டினான் சிற்பம் தன்னை கல்லிலே
பாண்டவர்க்குத் தேரெடுத்த கடலோரம்
பார்ப்பவர்க்கு இன்பம் உண்டு வெகு நேரம்
'ம்ஹூம் ம்ஹூம்' என்ற இசையரசியின் ஹம்மிங் இப்போது வரும். சரோஜாதேவி உதடுகள் குவித்து கொவ்வைப் பழத்தைக் கொத்த வரும் கிளி போல் பாவம் காட்டுவது ராஜேஷ்ஜிக்கு மட்டுமல்ல.:) நமக்குக் கூட என்னவோ போல்தான் உள்ளது. அப்படியே அந்த சுசீலாவின் லா லா லா லா ஹம்மிங்கையும் மறந்து விடலாகாது.
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கும் போவோம்.
ஜாலிப் பாடல். அப்படியே மாமல்லன் புகழும் பாடப்படும் இந்தக் காதல் டூயட்டில்.
பாலாவும், சுசீலாவும் சும்மா ஊதித் தள்ளியிருப்பார்கள்.
https://youtu.be/a2EKWRsXLoY
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..
கொஞ்சம் பாகற்காய் ஜூஸ் சாப்பிட்டுக்கிட்டே பிஸியா இருந்தேனா (எதுக்குப் பாகற்காய் ஜூஸ்..அந்த சோகம் அப்புறம்) அதான் லைக் போட்டுட்டு லிங்க் கொடுத்துட்டு பேசாம இருந்தேனா.. இப்ப வந்துட்டேன் :)
கிருஷ்ணா ரவி நன்றிகள். வழக்கம் போல கண்ணா அண்ட் கருவின் கரு நைஸ்..
வாசுங்க்ணா..அந்த்ப் பாட் பார்த்துக் கேட்டேன் ஆர் கேட்டுப் பார்த்து இப்போ எழுதறேன்..
இந்த லேம்ப்ரட்டா ஸ்கூட்டர் அழகிய மிதிலை நகரினிலே சச்சு அந்த இன்னொரு ஆள்(வழக்கம்போல ஆம்பளை பேர் மற்ந்து போச்) கார் ஓட்டும் போது பின்னால் வருமில்லையா அல்லதுஅது பஜாஜ் சேட்டக்கா.. கல்லூரி காலத்தில் (இது உண்மை) ஒரு நண்பன் நடராஜன் என்று பெயர் .. அவர் அப்பா ஃபார்மசூட்டிகல்ஸ் ஹோல்சேல் ..எக்கச்சக்க பைஸா அப்பொழுது.. நாஙக்ளெல்லாம் பஸ்ஸில் வர அவன் வருவான் ஸ்கூட்டரில்..ஓரிரு முறை ஓட்டியிருக்கிறேன்.. நன்னா இருக்கும்
'//ம்ஹூம் ம்ஹூம்'என்ற இசையரசியின் ஹம்மிங் இப்போது வரும். சரோஜாதேவி உதடுகள் குவித்து கொவ்வைப் பழத்தை கொத்த வரும் கிளி போல் பாவம் காட்டுவது ராஜேஷ்ஜிக்கு மட்டுமல்ல. நமக்குக் கூட என்னவோ போல்தான் உள்ளது.// ஓய் ஆக்சுவலா அப்படியே லலாலா போடாமல் விட்டிருக்கலாம்.. ஜிஜிக்கு முத்தா கொடுப்பது போல அந்த உதடுக்குவிப்பு இருந்தது கொ.ப.கொ.வ கிளியாம்.. உம்மை நிஜக் கிளியை விட்டுக் கொத்தணும் :)
அந்த செட் நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது இல்லியோ.. நல்ல கூர்மையான பார்வை..
//சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்
சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கும் போவோம்.//
போய்ட்டோமே மகாபலிபுரம் உங்க தயவாலே ஜெ. சர்ரூ கூட :) புறம் திரும்புங்க நன்றி ஹி ஹி..
*
சாலமன் பாப்பையா குரலில் படிக்கவும்..
அய்யா..லீவு நாளும் அதுவுமா சின்னக் கண்ணா தேவிகா படம் பார்க்கறது தப்பாய்யா.. சீரியஸா பாக்கலையே தொடரும் தொடரும் புது உறவுப் படத்தை - அதான் தெய்வீக உற்வு
படத்தை சின்சியரா ஓட்டி ஓட்டி ப் பாத்துக்கிட்டிருந்ததும் தப்பாய்யா..
ஒரு தேவிகாக்கு ரெண்டு தேவிகான்னு சொன்னதும் தப்பாய்யா.. சரி லீவ் நாள் காஃபி தான் வீட்லருந்து வருதுன்னு டம்ளரை வாங்கி சூடில்லையேன்னு கூட நினைக்காம டபக்குன்னு வாய்ல வார்த்துக்கிட்டது தப்பாங்க.. அப்புறம் தான் தெரிஞ்சது அது பாகற்காய் ஜூஸ்னு.. குடிச்சுட்டேன்..என்ன செய்றது :)
படம் சுமார் தான் அந்தப் பாட்டும் கட் மத்த பாட்லாம் இருக்கு.. அந்த தொடரும் தொடரும் பாட்டில ஒல்லியா த் தெரிஞ்சவர் படம் முழுக்க குண்டா வர்றாரே எப்படி எப்படி..தெரியலையே..
ம்ம் பின்ன வாரேன் :)
//வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலிப் புறத்திலெனைக் காணமுடி யென்றான்;
கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ ,
கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே? .// பாரதியார் பாடலை மறுபடி படிக்கவும் அதுபற்றி எழுதியிருந்த விளக்கத்துக்கும் நன்றி க்ருஷ்ணா..
*
இந்தக் குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா - எனக்குத்தெரிந்து இரண்டு மூன்று உறவுகளின் அந்திம காலத்தில் அவர்கள் கேட்ட பாட்டு..எப்போது கேட்டாலும் நெஞ்சை அள்ளும்.. தாங்க்ஸ் ஃபார் த உ.ச ரைட் அப் அண்ட் நினைவூட்டல் ஆஃப் திஸ் ஸாங்க் ரவி..
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 7: தென்றலின் ஒலி வடிவமாய் ஒரு குரல்
பூந்தளிர்
தமிழ்த் திரையுலகில் இளையராஜாவின் பிரவேசம் நிகழ்ந்த ‘அன்னக்கிளி’ படத்தை இயக்கியவர்கள் தேவராஜ் மோகன் எனும் இரட்டை இயக்குநர்கள். திரையிசையின் எதிர்காலத்தையே மாற்றியமைத்த அந்தப் படத்துக்குப் பின்னர் அவர்கள் இயக்கிய பல படங்களுக்குத் தனது அற்புதமான இசையை அளித்தார் இளையராஜா. அந்த வரிசைப் படங்களில் ஒன்று ‘பூந்தளிர்’(1979). ‘அன்னக்கிளி’ படத்தில் நடித்த சிவகுமார், சுஜாதா ஜோடிதான் இந்தப் படத்திலும். நிஜ வாழ்வில் சிறந்த ஓவியரான சிவகுமார் இப்படத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞன் அஷோக்காக நடித்திருப்பார். மலையாளப் பெண்ணான மாயாவை (சுஜாதாவை) காதலித்துத் திருமணம் செய்துகொள்வான் அஷோக். காலமும் சூழலும் இருவரையும் பிரித்துவிடும். தனது காதல் கணவனைத் தேடிக் குழந்தையுடன் வரும் மாயாவும் இறந்துவிட அவர்களுக்குப் பிறந்த குழந்தை அநாதையாகத் திரியும். இறுதியில் அஷோக்கின் கலைதான் குழந்தையை அவனிடம் சேர்ப்பிக்கும்.
கிட்டத்தட்ட ‘அன்னக்கிளி’ படத்தின் அதே குழுதான் எனினும், அப்படத்தில் மூன்று அற்புதமான பாடல்களைப் பாடிய எஸ். ஜானகி இப்படத்தில் ஒரு பாடல்கூடப் பாடவில்லை என்பது விசித்திரம். ஆனால், படத்தில் ஒரேயொரு பாடலைப் பாடியிருக்கும் ஜென்ஸி அந்தக் குறையே தெரியாமல் பார்த்துக்கொண்டார். இளையராஜா இசையில் அவர் பாடிய மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் தீவிர இசை ரசிகர்களின் சேகரிப்பில் பொக்கிஷங்களாகப் போற்றப்படுபவை. வருடிச் செல்லும் தென்றலின் ஒலி வடிவமாக நிலைத்துவிட்ட குரல் ஜென்ஸியுடையது.
குரலுலகின் தேவதை
இப்படத்துக்கு முன்னர் ‘அடி பெண்ணே’, ‘ஆடச் சொன்னாரே’ என்று பிரபலமான பாடல்களை ஜென்ஸி பாடியிருந்தாலும் இப்படத்தில் அவர் பாடியிருக்கும் ‘ஞான் ஞான் பாடணும்’ பாடலின் விசேஷம், அது அவரது தாய்மொழியான மலையாளத்தில் எழுதப்பட்டது என்பதுதான். தபேலாவின் துள்ளலான தாள நடையுடன் தொடங்கும் அந்தப் பாடலில் இசைக் கருவிகள் ஒன்றையொன்று சீண்டிக்கொண்டே விளையாடிச் செல்லும். பரவசப்படுத்தும் கிட்டாரின் ஒலி, சோகம் இசைக்கும் வயலின், ரகசியத்தைக் கிசுகிசுக்கும் புல்லாங்குழல் என்று நான்கு நிமிடப் பாடலில் ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்திக் காட்டியிருப்பார் இளையராஜா. காதல் ஏக்கம் என்பதையும் தாண்டி, தனக்கு நேரப்போகும் துயரத்தை முன்பே அறிந்துகொண்ட மனதின் மென்சோகத்தின் வெளிப்பாடாக ஆத்மார்த்தமாகப் பாடியிருப்பார் ஜென்ஸி. ‘மாங்குயில் ஜோடிகள் மெல்லக் கூவும் ரகசியம்’ என்று தொடரும் சரணத்தின் வார்த்தைகளைத் தொடர்ந்து, அதை ஆமோதிக்கும் விதமாக வயலினும் புல்லாங்குழலும் மென்மையாக ஒலிக்கும். எங்கோ ஒரு மலையடிவார கேரள கிராமத்துக்குக் காற்றின் வழியே பயணம் செய்யும் அனுபவத்தைத் தரும் பாடல் இது.
தாம்பத்ய சங்கீதம்
‘அன்பே…’ எனும் வார்த்தையைக் காதலுடன் வயலினில் வாசித்துக் காட்ட முடியுமா? ‘வா… பொன்மயிலே’ என்று தொடங்கும் பாடலின் முகப்பு இசையைக் கேளுங்கள்! காதலில் திளைக்கும் கணவன், தன் மனைவியின் அழகை இயற்கையின் வனப்புடன் ஒப்பிட்டு வர்ணிக்கும் பாடல் இது. முதல் சரணத்துக்கு முன்னர் பல்லவியின் கடைசி வார்த்தையைப் பிடித்துக்கொண்டே விரிந்து செல்லும் இசைக்கோவையில் இளையராஜாவின் மேதமை மிளிரும். எஸ்.பி.பி.யின் குரல் தாம்பத்யத்தின் அழகைத் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கும். ‘உயிரிலே கலந்து மகிழ வா..பொன்மயிலே’ என்று பல்லவியுடன் சங்கமிக்கும் சரணத்தின் முடிவில் எஸ்.பி.பி.யின் குரலில் கம்பீரத்தின் பேரமைதியை உணர முடியும்.
பகலின் குரல்
காதல், சோகம் எனும் பட்டியல் வகைப் பாடல்களைத் தாண்டி, சூழலின் தன்மையை மென்மையாகப் பதிவுசெய்யும் பல பாடல்களை இளையராஜா தந்திருக்கிறார். ‘மனதில்… என்ன நினைவுகளோ’ எனும் பாடல் அந்த வகையைச் சேர்ந்தது. எஸ்.பி.பி. ஷைலஜா பாடியிருக்கும் இப்பாடல் முழுவதும் டிரம்ஸ், எலெக்ட்ரிக் கிட்டார், சாக்ஸபோன் என்று மேற்கத்திய இசைக் கருவிகளின் துள்ளல் இருந்தாலும் அவற்றைத் தாண்டிப் புல்லாங்குழலின் இசை ஒரு யோகியின் பரிவுடன் பாடல் முழுதும் வருடிச் செல்லும். ‘பா..பாபா..’ என்று உற்சாகம் பொங்கும் குரலுடன் பாந்தமாகப் பாடியிருப்பார் எஸ்.பி.பி. பரபரப்பாக இயங்கும் நகரின் பகல் நேரத்து அமைதி, அதன் இயல்பில் பதிவான பாடல் இது.
ஆதரிக்க யாருமின்றித் தனியே திரிந்துசெல்லும் தன் மகனை வாரியெடுத்து அணைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் தாயின் ஆன்மா பாடும் ‘ராஜா சின்ன ராஜா… பூந்தளிரே’ எனும் பாடலை பி. சுசிலா பாடியிருப்பார். எஸ்.பி. ஷைலஜா பாடிய ‘கண்ணின் மணி என்னைக் கண்டுபிடி’ எனும் பாடலும் இப்படத்தில் உண்டு.
Courtesy: Tamil Hindu
சினிமா ரசனை 1: அந்த மூவரில்... நீங்கள் யார்?
மிக மிக உயர்ந்த ரசனை கொண்டவர்கள் நமது தமிழ்நாட்டு சினிமா பார்வையாளர்கள் என்பது உண்மை. இவர்கள், எந்த மொழிப்படமாக இருந்தாலும் சரி, அவை உன்னதமான படங்களாக இருந்தால், அந்தப் படங்களை மொழி தெரியாமலேயே மீண்டும் மீண்டும் பார்த்துப் பாராட்டி மகிழ்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட நல்ல படங்கள் வெளியாகத் தாமதமாகும்போது, பொழுதுபோக்க வேண்டும் என்பதற்காக மிக மிக மோசமான படத்தைக்கூட ஒருதடவை அல்ல; பல தடவை பார்ப்பார்கள். முறையான சினிமா பற்றித் தெரிந்த எவரும் பார்த்துச் சிரிப்பார்களே என்ற வெட்க உணர்வு துளியும் இல்லாமல், நாகரிகத்தின் உச்சாணிக்கு நாம் போய்விட்டதாகச் சொல்லிக்கொள்ளும் இன்றைய காலகட்டத்திலும் நம் சினிமாக்களில் காதலன், காதலி டூயட் பாடியாடும் அலங்கோலம் அரங்கேறுகிறது. இந்த அலங்கோலத்தை இந்திய நாட்டைத் தவிர வேறு எந்தவொரு நாட்டின் சினிமாவிலும் பார்க்க முடியாது’.
‘சினிமாவும் நானும்’ என்ற நூலில் இயக்குநர் மகேந்திரன்.
தமிழ்நாட்டில் நிலவும் சினிமா ரசனையை இதைவிடத் துல்லியமாகக் கணித்துவிட முடியாது. ஒரு ‘சராசரி’ (இந்த வார்த்தையே கண்டிக்கத்தக்கது. ஏன் என்று சற்றுப் பின்னால் கவனிப்போம்) திரைப்பட ரசிகனாக இன்றைய தேதியில் நமக்குத் தேவையானது என்ன என்று யோசித்தால், ‘நல்ல திரைப்படம் பார்க்க வேண்டும்’ என்ற ஆசை எல்லாருக்குமே இருப்பதை மறுக்க முடியாது. இதில் ‘நல்ல’ என்பதுதான் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது.
இருவகை ரசிகர்கள்
ஒரு சாரார், ‘உலகின் சிறந்த திரைப்படங்களைப் போலவே தமிழில் திரைப்படங்கள் எடுக்கப்படும் காலகட்டம் வர வேண்டும்; அப்படங்களே எங்களைப் பொறுத்தவரையில் நல்ல படங்கள்’ என்கிறார்கள். இவர்கள் யார் என்று கவனித்தால், செர்கய் ஐஸன்ஸ்டைனில் தொடங்கி சமீபத்தில் வெளியாகியிருக்கும் இயக்குநர் டாட் ஹெய்ன்ஸ் இயக்கியிருக்கும் ‘கரோல் ’(Carol - 2015) திரைப்படம் வரையில் தேர்ந்தெடுத்தே பார்ப்பவர்கள். எல்லா உலக சினிமா விழாக்களுக்கும் தவறாமல் ஆஜராகிவிடும் தீவிரமான சினிமா நேசிப்பாளர்கள். இவர்களைப்பொறுத்தவரை சினிமா என்பது வணிகம் என்ற அம்சத்தைத் தாண்டி, கலை என்பதன் முழுமையான வெளிப்பாடு. ரித்விக் கட்டக், சத்யஜித் ராய், ஜான் ஆப்ரஹாம், ராமு காரியத், அடூர் கோபாலகிருஷ்ணன், எம்.டி.வாசுதேவன் நாயர், கிரீஷ் காஸரவள்ளி, கிரீஷ் கர்னாட், மிருணாள் சென், தபன் சின்ஹா போன்ற பல இயக்குநர்களின் படங்களைக் கரைத்துக் குடித்திருக்கும் தீவிர ரசிகர்கள் இவர்கள்.
இன்னொரு சாராரோ இவர்களுக்கு நேர் எதிரானவர்கள். ‘திரையரங்கு சென்றால் எங்களுக்குப் பொழுது போக வேண்டும். எங்களை சுவாரஸ்யப்படுத்தும் காட்சிகள் வர வேண்டும். அலுப்பே ஏற்படக் கூடாது’ என்பவர்கள். இவர்களுக்குத் தேவை வணிகப் படங்கள். இவர்களால் சென்ற பத்தியில் சொல்லியிருக்கும் இயக்குநர்களின் படங்களில் ஒன்றைக்கூட முழுமையாகப் பார்க்க இயலாது.
முக்கியமான மூன்றாம் குழு
இந்த இரண்டு நேர் எதிரான குழுக்களுக்கு இடையே அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத இன்னொரு கும்பலும் உள்ளது. இவர்கள்தான் திரைப்பட ரசிகர்களில் அதிகமான சதவிகிதம். இவர்களைத்தான் இயக்குநர் மகேந்திரன் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் உள்ள மேற்கோள் மூலம் அடையாளப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் பெரும்பாலான திரை ரசிகர்களாகிய இவர்களுக்கு எப்படிப்பட்ட படங்கள் வேண்டும் இப்போதைய காலகட்டத்தில் கணினி, இணையம் ஆகியவற்றை அதிகமாக உபயோகப்படுத்தும் மக்கள் இவர்கள். இதன்மூலம் விரும்பியோ விரும்பாமலேயோ நல்ல படங்களின் தாக்கம் இவர்களைச் சென்று அடைந்திருக்கிறது. உடன் வேலை செய்யும் நண்பர்கள் சொல்லியோ, இணையத்தில் தேடியோ, தொலைக்காட்சியைப் பார்த்தோ, வலைப்பூக்கள், சினிமா பற்றிய புத்தகங்கள் ஆகியவற்றின் மூலமோ இவர்களுக்கு உலகின் சிறந்த திரைப்படங்கள் பற்றிய ஞானம் ஓரளவு உள்ளது. இவர்களால் அப்படிப்பட்ட படங்களை அவசியம் ரசிக்க இயலும். அதே சமயம், எப்போதுமே அப்படி இருக்காமல், அவ்வப்போது வணிகப் படங்களும் பார்த்து ரசிக்கக்கூடியவர்கள் இவர்கள்.
ஓராண்டுக்கு முன்னர் சென்னையில் உலகத் திரைப்பட விழாவின்போது லூஸியா திரையிடப்பட்டது. அந்தத் திரையரங்குகளில் நிரம்பிய கூட்டத்தால் பலரும் நின்றுகொண்டே அப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. அந்தப் படம் திரையிடப்பட்ட எல்லாச் சமயங்களிலும் இதேதான் நடந்தது. இது மட்டுமல்லாமல், இன்னும் உலகத் திரைப்பட விழாக்களில் விருது வாங்கிய புகழ்பெற்ற படங்கள் எல்லாவற்றுக்குமே நிரம்பும் பெரும்பாலான கூட்டம் இவர்களால்தான்.
இந்த வகையைச் சேர்ந்த ரசிகர்கள்தான் இப்போது இணையத்திலும் எந்தப் படம் வெளிவந்தாலும் உடனடியாக அதைப் பற்றிய விமர்சனத்தை முன்வைக்கின்றனர். எந்த நடிகருக்கும் ரசிகராக இல்லாமல், நடுநிலையாக ஒரு திரைப்படத்தைப் பார்க்க இவர்களால் முடிகிறது. ஃபேஸ்புக்கில் இருக்கும் பல திரைப்படக் குழுமங்களில் இவர்கள்தான் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றனர். தினந்தோறும் பல படங்களை இணையத்தின் மூலம் பார்த்துவிட்டு இக்குழுக்களில் இவர்கள்தான் அவற்றைப் பரிந்துரைக்கின்றனர். இந்தத் திரைப்பட ரசிகர்கள் நாள்தோறும் வளர்ந்தும் வருகின்றனர்.
அனுபவமாக மாறுமா?
இந்த வகைத் திரை ரசிகர்கள் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். “ஒரு திரைப்படம் என்பது கொடுக்கும் ஆழமான அனுபவத்தைத் தேடிச் செல்கிறோம்” என்பதே அது. அப்படம் எந்த மொழியில் இருந்தாலும் சரி; எந்த வகையாக இருந்தாலும் சரி; அது ‘லைஃப் இஸ் ஃப்யூட்டிஃபுல்’(Life is Beautiful) படமாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான்; அதுவே ‘எ செர்பியன் பிலிம்’ (A Serbian Film) படமாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான். அப்படங்களின் வாயிலாகச் சொல்லப்படும் கருத்துகளில் எங்களின் திரை ரசனையை நாங்கள் மேம்படுத்திக்கொள்கிறோம் என்பதே இவர்களின் நோக்கம்.
உங்களுக்காகவே
இந்த வகையைச் சேர்ந்த, தமிழகத்தின் பெரும்பாலான நடுநிலையான திரை ரசிகர்களுக்குத் தேவையான படங்கள் என்னென்ன? அவற்றின் மூலம் சொல்லப்படும் செய்திகள் என்னென்ன? அவற்றின் இயக்குநர்களும் திரைக்கதையாசிரியர்களும் அப்படங்களில் சொல்ல முயன்றவை என்ன? அந்த நோக்கம் நிறைவேறியதா? இதுபோன்ற இன்னும் பல விஷயங்களை ஒவ்வொன்றாக, தெளிவாக இத்தொடரில் கவனிக்க இருக்கிறோம். நீங்கள் தரமான திரைப்படங்களை விரும்புபவராக இருந்தால் உங்களுக்காகத்தான் இத்தொடர் எழுதப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளலாம். இப்படங்கள் எப்படி உலக அளவில் பேசப்படுகின்றனவோ, அப்படிப்பட்ட படங்கள் தமிழகத்திலும் எடுக்கப்பட வேண்டும்; அவை மூலம் பல்வேறுபட்ட கருத்துகள் பேசப்பட வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம். இடையிடையே சினிமா பற்றிய பல விஷயங்களும் உள்ளே வரும்.
ஆரம்பிக்கலாமா?
//அந்த செட் நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது இல்லியோ.. நல்ல கூர்மையான பார்வை..//
போட்டுகிட்டு இருக்கிற கண்ணாடி 12000 ரூவா சின்னா.:)
கல்நாயக் சார் , CK , கிருஷ்னாஜி , கலை சார் , ராஜேஷ்
உங்கள் எல்லோருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள் . உடனே நமக்கு -இந்த திரிக்கு தேவை disaster management plan . ஒவ்வொரு தடவையும் "பாலா " என்ற காட்டு வெள்ளம் அணையை உடைத்துக்கொண்டு நம்மையெல்லாம் அடித்துச்செல்கின்றது - நம்மால் ஒன்றுமே செய்ய முடியாமல் திணறுகிறோம் . மீண்டும் இந்த" பாலா" வெள்ளம் சீக்கிரமே மீண்டும் வரக்கூடும் . வருவதற்குள் எப்படியாவது நாம் அடித்துச்செல்லாமல் நம்மை பார்த்துக்கொள்ளவேண்டும் . உங்கள் யோசனை வரவேற்க்கப்படுகின்றன .
இதுவரை பாலாவின் பாடல்கள்.
1.மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் (பால் குடம்)
http://www.mayyam.com/talk/showthrea...53#post1223953
2.ஆயிரம் நிலவே வா.. ஓராயிரம் நிலவே வா. (அடிமைப் பெண்)
http://www.mayyam.com/talk/showthrea...67#post1224467
3. இயற்கை என்னும் இளைய கன்னி (சாந்தி நிலையம்)
http://www.mayyam.com/talk/showthrea...59#post1226259
4.ஆரம்பம் யாரிடம் (மிஸ்டர் சம்பத்)
http://www.mayyam.com/talk/showthrea...AF%8D-4/page35
5. கற்பனையோ கைவந்ததோ (மாலதி)
http://www.mayyam.com/talk/showthrea...AF%8D-4/page62
6. சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம் (மாலதி)
http://www.mayyam.com/talk/showthrea...AF%8D-4/page69
7. 'உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது' (நவக்கிரகம்)
http://www.mayyam.com/talk/showthrea...52#post1230352
//(வழக்கம்போல ஆம்பளை பேர் மற்ந்து போச்//
உண்மையை ஒத்துக்கிறதில உம்மை மிஞ்ச ஆள் கிடையாது சின்னா.:)
//அந்த இன்னொரு ஆள்(வழக்கம்போல ஆம்பளை பேர் மற்ந்து போச்) கார் ஓட்டும்//
சின்னா!
ஹரநாத் கதா:)
http://3.bp.blogspot.com/-ZUnlDVEGQY...aju%2BRare.jpg
அவர் பெயர் ராஜா. 'அன்னை' படம் பார்த்திருப்பீர்களே! அதில் பானுமதியின் மகனாக படத்தில் (ஒரிஜினல் மகன் அல்ல) வருவார். பானுமதியின் அன்புக் குடைச்சலுக்கு ஆளாகும் பரிதாபமான முத்தையா, சௌகாரின் மகன். குமாரி சரஸ்வதி (சச்சு) அவருக்கு ஜோடி.
http://padamhosting.me/out.php/t5488...0822171107.jpg
ஸ்ரீதரின் 'சுமைதாங்கி' படத்திலும் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம். 'மாம்பழம்' எல்.விஜயலஷ்மியை சுற்றும் 'ஆந்திரத்து வண்டு' இவர்தான்.
அடுத்து முக்கியமான படம் இவர் நடித்து 'எங்கிருந்தோ வந்தாள்' வில்லன் ரோல். நடிகர் திலகத்திற்கே வில்லன். நடிகர் திலகம் காதலிக்கும் ஜெயகுமாரி கிளியை அவரிடமிருந்து கொத்திப் பறித்து அனைவரயும் கொதிக்க வைத்த கழுகு. 'ஒரே பாடல் உன்னை அழைக்கும்' பாடலில் ஜெயகுமாரியுடன் திருமணக் கோலம் பூண்டு, சோகம் கவ்வப் பாடும் நடிகர் திலகத்தைச் சுற்றி வந்து வெறுப்பேத்தி ஆடுவார்.
அதுமட்டுமல்ல...
நடிகர் திலகம் பைத்தியம் பிடித்து அவரே கழுகாய் மாறி கொத்திய கிளி ஜெயலலிதா. அந்தக் கிளியை மேலும் கொத்த நினைக்கும் கழுகுதான் இந்த வில்லன் ராஜா.
இவர் தெலுங்குக்காரர். தெலுங்கில் இவர் பெயர் ஹரநாத் ராஜு. கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர். நல்ல அழகர். தெலுங்கில் கொடி கட்டிப் பறந்தவர்.
நீங்கள் மேலே பார்க்கும் புகைப்படத்திலேயே அவர் எவ்வளவு கவர்ச்சிகரமானவர் என்று தெரியும்.
ஜமுனாவுடன் 'மா இன்ட்டி மகாலஷ்மி' படத்தில் நடித்தவர். 'மதன காமராஜு' படத்தில் காந்தாராவுடன் இணைந்து நடித்தார். விட்டாலாச்சார்யா இப்படத்திற்கு இயக்கம்.
கிருஷ்ணா! ஞாபகம் இருந்தால் சொல்லுங்கள். இப்படம் தமிழில் வெளி டப் செய்யப்பட்டு வெளிவந்து 'ஓஹோ' என்று கீற்றுக் கொட்டகைகளில் ஓடியது.:) பெயர் தெரியுமா?:)
http://i1.ytimg.com/vi/PSeqEmNkWrQ/0.jpg
இவர் நடித்த சில முக்கிய திரைப்படங்கள்.
ஸ்ரீ சீதாராம கல்யாணம்
குண்டம்மா கதா
பீஷ்மா
பாலண்டி யுத்தம்
பாலபாரதம்.
பெம்புடு கூத்ரு (தேவிகாவுடன்)
http://i.ytimg.com/vi/9cMHzNa8AbQ/maxresdefault.jpg
சௌகாருடன் (சௌகார் என்ன ஒரு அழகு!)
http://i.ytimg.com/vi/Wqk0LgUfzyQ/maxresdefault.jpg
தமிழில் கொஞ்ச படங்கள்தான். தெலுங்கில் அதிகம். நிறைய ஹிட்ஸ். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'வல்லவனுக்கு வல்லவன்' தெலுங்கில் தயாரிக்கப்பட்ட போது இவர் ஒரு ஹீரோ. இன்னொருத்தர் ரங்காராவ். இதில் இவருக்கு ஜோடி சௌகாரின் தங்கை கிருஷ்ணகுமாரி.
தமிழில் மனோகரும், அசோகனும் சாவித்திரியுடன் காவாலி பாடி நம்மை சித்ரவதை செய்வார்களே:) ('பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்') அந்தப் பாடலை இவர் தெலுங்கில் (Monagallaku Monagadu) ரங்காராவுடன் சேர்ந்து பாடுவார் அதே சாவித்திரியுடன்.
https://youtu.be/_OpBoV2gEGU
இவருக்கு தமிழில் குரல் கொடுப்பவர் பி.டி ரட்சகன் என்பவர்.
மது அரக்கனுக்கு அடிமையாகி 1986-ல் காலமானார். 1984-இல் வெளி வந்த 'நாகு' தான் இவரது இறுதிப் படம்.
ஜமுனாவுடன் இவர் நடித்த தெலுங்குப் பாடல் ஒன்றை தருகிறேன். (ஜமுனாவுடன் இவர் ஜோடி சேர்ந்தால் சக்சஸ்தான் ) பாருங்கள். டக்கென்று பிடித்துக் கொள்வீர்கள். உங்களுக்குத் தெரிந்த தமிழ்ப் பாடல்தான். அதுவே தெலுங்கில்.
https://youtu.be/XSXSe7M2l-o
'ஒரே பாடல் உன்னை அழைக்கும்'
https://youtu.be/xDtX1AgMsoU
'அழகிய மிதிலை நகரினிலே'...
https://youtu.be/xMLizOh0evg
'சுமைதாங்கி' படத்தில் இவரது ஜோடி எல்.விஜயலஷ்மி.
https://youtu.be/-h1qvzKYBLg
சி.க,
ஒரே ஒரு வரி போட்டு இப்படி முதுகில் வரி உண்டாக்கிட்டீரே! நியாயமா? உம்மை... நற நற.:) ஆசிரியருக்கே டெஸ்ட் வைக்கிற மொத மாணவரை இப்பத்தான் இந்த உலகம் பார்க்குது.
ஹச்சோ..இது தான் நம்ம வாசுங்ணாங்கறது..
அட ஒரே ஒரு வரி கொடுத்தா இப்படி த் தேடிக் கண்டுபிடிச்சுக் கொடுக்கறீங்களே
அவர் பெயர் ராஜான்னுல்லாம் தெரியவே தெரியாது நீங்கள் சொல்லியிருக்காவிட்டால்.. நீங்கள் சொன்ன பிறகு தான் மற்ற படங்களும் நினைவுக்கு வருகின்றன..
இந்த அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் தெலுகு வெர்ஷனில் ஜமுனாவும் அவரோட கண்மையும் நன்னா இருக்குதில்லையோ..( ரொம்ப நாளா டாடி எனக்கொரு டவுட்டு.. பக்கத்திலோ காரிகை மேலே நிலவு கீழே வைக்கோல் போர் இந்தாள் என்னடானா கடிதம் லாம் எழ்தறறார்.. (தமிழ் ஜெய்யும் தெலுகு ராஜாவும்)
மாம்பழத்து வண்டு ஒரு செகண்ட்ல சித்தியோன்னு கன்ஃப்யூஸ் ஆகிட்ட்டேன் அப்புறம் நினைவு வந்தது..
//நடிகர் திலகம் பைத்தியம் பிடித்து அவரே கழுகாய் மாறி கொத்திய கிளி ஜெயலலிதா. // ந.தியும் ஜெயும் போட்டி போட்டுக்கிட்டு நடிச்சதாலேயோ என்னவோ அந்த சீன்ல நடிச்ச டார்ச்சும் உணர்ச்சி வசப்பட்டு நல்லா நடிச்சிருக்கும் ( முன்னாலேயே எழுதியிருக்கேன் நினைவிருக்கா)
காதல் கிளிகள்
பறந்த காலம்
கண்ணில் தெரியும்
நெஞ்சம் உருகும்
கண்ணீர் கலங்கி
கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால்
சொந்தம் புரியும்
ரொம்பப் பிடிச்ச வரிகள். ரொம்பப் பிடிச்ச பாட் அண்ட் ந.தி.. ம்ம்
அந்த பெம்புடு கூத்ரு தேவிகா ஸ்டில் வெரி நைஸ்..
என்.டி ஆர் படம் விட்டலாச்சாரியா டைரக்*ஷன்னா அந்தப் படம் மாய மோதிரமா.. ஹீரோயின் ராஜஸ்ரீ..
எல்லா ப் பாட்டுக்கும் ஸ்டில்களுக்கும் தகவல்களுக்கும் தனியா ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் வாசு
..
//ஆசிரியருக்கே டெஸ்ட் வைக்கிற மொத மாணவரை இப்பத்தான் இந்த உலகம் பார்க்குது// ஆசிரியர்னா இப்படித் தான் இருக்கணும்..கிட்டக்க வாங்க திருஷ்டி சுத்திப் போடறேன்..அண்ட் மிக்க தாங்க்ஸ்:)
இந்தாங்க குருதட்சணையா உங்களுக்கு.. இந்தப் பொண்ணு ஏதோ சொல்லுது
https://youtu.be/tppLDgyTvXk
(ஹைய்யா.. கருவின் கருவில குழந்தைப்பாட்டுக்குஇந்தப் பாட்டு ரவி போடறதுக்கு முன்னால நான் போட்டுட்டேனே!)
ஆமா அவன் பித்தனால விஜயகுமாரி தானே.. சச்சுக்கு என்ன ரோல் படம் பார்த்ததிலலை நன்னா இருக்குமா என்ன (ஹை அடுத்த தூண்டில்)
//(ஹை அடுத்த தூண்டில்)//
தூண்டில்ல மீன் மாட்டாது நைனா:lol2:
இப்பிடில்லாம் பண்ணா அப்புறம் இன்னொரு தெலுகுப் பாட்டைக் கொடுத்து லிரிக்ஸ் எழுத வச்சுடுவேன். ஓஹோன்னானாம் வெள்ளைக்காரன்.
//மாம்பழத்து வண்டு ஒரு செகண்ட்ல சித்தியோன்னு கன்ஃப்யூஸ் ஆகிட்ட்டேன் அப்புறம் நினைவு வந்தது..//
அதானே பார்த்தேன்.:slurp: எது முதல்ல நினைவுக்கு உமக்கு வருமோ அது கரெக்ட்டா வந்துடுதே!
மாய மோதிரத்துல காந்தாராவ் மட்டும்தான். ரெண்டு ஹீரோ கிடையாது. இப்ப கண்டு பிடிங்க.
இப்படி ச் சொல்ல லாகுமோ ஐயா..
ஏதோ ஒரு உதவி நானும் என்னான்னு கேக்குறது
ஒரு மயக்கம் அந்தி மயக்கம் என்னை ஒண்ணாக வாட்டுறது
(வெகு அழகான எ.பி. பாட்டு உமக்கு..சமர்ந்த்தோன்னோ)
https://youtu.be/e37l-bZ6OhM
Krishna said he liked Ashtapathi. Here is one from Tenali Raman (Telugu)
Chandana charchita.......
http://www.youtube.com/watch?v=aSKkJw46Pn0
I posted more Ashtapathi in movies in Sanskrit Classical Compositions in movies thread ! :)
கருவின் கரு - பதிவு 48
ஜனணியின் தொடர்ச்சி :
உண்மை சம்பவம் -6
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன
அன்று "பிரதோஷம் " . காலையில் இருந்தே அம்மா என்னிடம் application போட்டு விட்டாள் , கபாலீஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச்செல்ல . இன்று ஆபீஸ் இல் ஏகப்பட்டவேலை - புதியதாக ஒரு MD சேருகிறார் - கொஞ்சம் முசுடாம் -- கோபம் வேறு அடிக்கடி வருமாம் - UP யை சேர்ந்தவர் . ஜானா விற்கு உடம்பு சரியில்லை - இன்று கண்டிப்பாக ஆஸ்பத்திரி கூட்டி செல்ல வேண்டும் - ஸ்கூட்டர் வேறு ஸ்டார்ட் ஆகவே இல்லை . குட்டிகளை ஸ்கூல்களுக்கு தயாராக்கவேண்டும் - இன்று அவர்களுடைய ஸ்கூல் பஸ் வராதாம் .
ஜானாவிடம் செல்கிறேன் -- " என்னங்க உங்கள் லீவு application என்னவாயிற்று ? குழந்தைகளுக்கு summer லீவ் ஆரம்பித்து விடும் - இந்த தடவையாவது அவர்களை ஏமாற்றாமல் ஊட்டிக்கு கூட்டிக்கொண்டு போகவேண்டும் "
"ஜானா , அம்மாவை ------"
" ஏன் உங்கள் தம்பி , தங்க கம்பி இருக்கிறாரே அவரிடம் இருக்கட்டும் - மூன்று நாட்கள் தானே !"
" ஜானா தம்பியின் நிலைமையை தெரிந்துமா இப்படி சொல்கிறாய் ? - மூன்று மாதங்களாக அவனுக்கு வேலை இல்லை . பாவம் - இதில் அம்மாவை எப்படி சமாளிப்பான் "
சண்டை வலுவானது . பீரங்கிகள் வெடித்தன ...... அடுத்த நிமிடம் நான் ஆபீஸ் இல் .
அம்மா என்றுமே தனக்கு என்று எதையுமே கேட்டதில்லை - தம்பிக்கு வேலை போன விஷயத்தை நான் சொல்ல வில்லை - ஒடிந்தே போய் விடுவாள் .. அம்மா எனக்கு அடிக்கடி சொல்லும் அறிவுரை
" பணம் சம்பாதிப்பது --- குண்டூசியால் பள்ளம் தோண்டுவதுபோல ; செலவழிப்பது குண்டூசியால் பலூன் உடைப்பது போல "
புதிய MD வந்துவிட்டார் - மாலை மரியாதைகள் முடிந்தவுடன் ஒருவர் ஒருவராக அறிமுகம் .என் முறை வந்தது .
MD என்னிடம் மட்டும் எதையோ கேட்க்க விரும்பினார் - மீண்டும் தன் cabin க்கு அழைத்தார் - எல்லோருடைய கண்களும் இப்பொழுது என் மீது - வந்த முதல் நாளிலேயே MD இவனை கூப்பிடுகிறாரே - என்ன வசியம் செய்தான் இவன் ----
" ராஜு நீங்கள் இதற்க்கு முன் UP யில் இருந்தவரா ? உங்கள் அப்பா எங்கு வேலை செய்தார் ? எல்லாமே பர்சனல் கேள்விகள் - பொறுமையாக விடை அளித்தேன் . என்னுடைய வீட்டு விலாசத்தையும் வாங்கிக்கொண்டார் .
ஒரு மணி நேரம் permision எடுத்துக்கொண்டு அம்மாவை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து சென்றேன் - ஜானவே தனியாக ஆஸ்பத்திரி சென்று வந்தாள் . 7மணி - வீடு வந்தடைந்த என்னை ஒரு BMW கார் வரவேற்றது . ஜானா ஓடிவந்தாள் " என்னங்க - உங்கள் MD உங்களை பார்க்க வந்திருக்கிறார் . 5நிமிடமாக காத்துகொண்டிருக்கிறார் .
" MD யா !! இவர் ஏன் என் வீட்டிற்க்கு ?????"
" ராஜு இவர்கள் தான் உன் அன்னையா ...... ?" MD பதிலுக்கு தாமதிக்காமல் அவள் காலில் விழுந்தார் -- " அம்மா என்னை தெரிகிறதா ? நான்தான் விசு - விஸ்வநாதன் - வாரணாசியில் உங்கள் வீட்டிற்க்கு அருகில் இருந்தேன் . மேலே படிக்க முடியாமல் சங்கர மடத்தில் சேர நினைத்த என்னை உங்கள் கணவர் கண்டுபிடித்து அழைத்துவர , நீங்கள் என்னை உங்கள் மகனாக நினைத்து உங்கள் வீட்டிலேயே தங்க வைத்து என்னை படிக்க வைக்க உங்கள் நகைகளை வேறு வித்து --- அம்மா உங்களை மீண்டும் பார்க்க முடிந்ததே , நான் செய்த பெரிய பாக்கியம் "
எனக்கு ஒன்றும் புரியவில்லை , ஜானா சிலையாகி 10 நிமிடங்கள் ஆகிவிட்டன - அம்மா இதுவரை என்னிடம் ஒரு வார்த்தை இதைப்பற்றி சொன்னேதே இல்லை ...
அம்மா குனிந்து MD யை தூக்கினாள் --- விசு உன்னை எவ்வளவு நாட்களுக்கு பிறகு சந்திக்கிறேன் - ராஜுவை அப்பொழுது சுமந்து கொண்டிருந்தேன் உள்ளே - உன்னை வெளியே !!
"அம்மா என்னுடன் வந்துவிடுங்கள் , ராஜுவையும் அவன் family யையும் நான் பார்த்துக்கொள்கிறேன் . " MDயின் குரலில் கண்ணீரின் ஓட்டத்தின் சத்தத்தை உணர்ந்தேன் .
" விசு நீ இப்படி சொன்னதே போதும் - நன்றாக நீ இருக்க வேண்டும் "
MD எப்பொழுது கிளம்பினார் என்றே தெரியவில்லை - ஜானா மெதுவாக குரல் கொடுத்தவுடன் கண்களை திறந்தேன் . " என்னங்க அம்மாவையும் ஊட்டிக்கு அழைத்து செல்ல வேண்டும் - அம்மா வராவிட்டால் , எங்களுக்கு ஊட்டி தேவை இல்லை ---- குழந்தைகள் பாட்டியின் மடியில் கதைகளை பிடுங்கிக்கொண்டிருந்தன -- டிவி யை போட்டேன் -- பிரதோஷம் - இறைவன் தன் தேவியுடன் ரிஷபத்தில் வந்துகொண்டிருக்கும் காட்சி - கண்கள் டிவி யின் பக்கம் - கைகள் சேவித்தது அம்மாவின் பக்கம் -----------
https://youtu.be/gZLrOhpwbnA
கருவின் கரு - பதிவு 49
ஜனணியின் தொடர்ச்சி :
https://youtu.be/c2ZwdkMaaLU
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ
வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோஓஓஓஓஓஓ
பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ
வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோ
முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ
நித்தம் கத்துக் குயிலோ அது கண்ணன் குரலோஓஓஓஓஓஓஓஓஓஓ
முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ
நித்தம் கத்துக் குயிலோ அது கண்ணன் குரலோ
என்னை மறந்தேன் நான் உன்னை மறந்தேன்
இன்று தன்னை இழந்தேன்
சுகம் தன்னில் விழுந்தேன்
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ
என்ன நினைப்போ அது இன்பத்தவிப்போஓஓஓஓஓஓஓஓஓஓ
கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ
என்ன நினைப்போ அது இன்பத் தவிப்போ
தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ
அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ
தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ
அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ
கண்ணை அளந்தேன் அதில் பொன்னை அளந்தேன்
பிள்ளை நெஞ்சை அளந்தேன் புதுப் பூவை அளந்தேன்
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
கண்ணில் எடுத்தேன் நெஞ்சைக் கையில் கொடுத்தேன்
சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன்
சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன்
ராதை நினைப்பாள் அங்கு கண்ணன் இருப்பான்
அந்த கோதை சிரிப்பாள்அதைக் கண்டு ரசிப்பான்
அதைக் கண்டு ரசிப்பாள்
ஒன்றை நினைத்தேன் அந்த ஒன்றை அடைந்தேன்
என் அன்பைத் தருவேன்அந்த அன்பைப் பெறுவேன்
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
கருவின் கரு - பதிவு 50:):smile2:
ஜனணியின் தொடர்ச்சி :
https://youtu.be/gGis1r5R2nc
மல்லிகைப் பூ போட்டு
கண்ணனுக்கு மங்கள நீராட்டு...
செண்பகப் பூ போட்டு
பாடு ஒரு செந்தமிழ் தாலாட்டு...
படம்: தாலாட்டு
கருவின் கரு - பதிவு 51
ஜனணியின் தொடர்ச்சி :
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்ல கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
நிலவே மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே
—
எட்டி நிற்கும் வானம்
உன்னை கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்
எட்டி நிற்கும் வானம்
உன்னை கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்
விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம்
கண்ணே நீ காட்டு
விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு
பாடல் நீ கேட்டு
—
நிலவே மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
—
புன்னை இலை போலும்
சின்ன மணி பாதம்
மண்ணில் பட கூடாது
பொன்னழகு மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் பட கூடாது
புன்னை இலை போலும்
சின்ன மணி பாதம்
மண்ணில் பட கூடாது
பொன்னழகு மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் பட கூடாது
மயில்களின் இறகினில் அழகிய விழிகளை
நீ தான் தந்தாயோ
மணி குயில் படித்திடும் கவிதையின் இசையென
நீ தான் வந்தாயோ
—
நிலவே மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்ல கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
நிலவே மலரே
https://youtu.be/UmCcv-4uv7k?list=PL...sUy2Dpg3Sax_8F
ஜனணி இன்னும் வருவாள்
( ரொம்ப நாளா டாடி எனக்கொரு டவுட்டு.. பக்கத்திலோ காரிகை மேலே நிலவு கீழே வைக்கோல் போர் இந்தாள் என்னடானா கடிதம் லாம் எழ்தறறார்.. (தமிழ் ஜெய்யும் தெலுகு ராஜாவும்)
ரொம்ப அக்கப்போர்தான்:)
மாய மோதிரம் என்றவுடன் பல விட்டலாச்சார்யாவின் படங்கள் நினைவுக்கு வரும்
folklore அதாவது தெலுங்கில் ஜானபத கதைகளை அழகாக படமாக்கி நம்மை வியப்பில் ஆழ்த்தியவர்.
ராமாராவ், காந்தாராவ் என இருவரும் இவரது பல படங்களில் தூள் கிளப்பியவர்கள்
அப்படி ஒரு படம் பந்திபொட்டு .. அதிலும் கண்டசாலாவின் இசையில் இந்த பாடல் நம்மை எங்கோ கொண்டு செல்லும்
இந்த பாடல் படத்தில் இடம்பெற முதலில் விட்டலாச்சார்ய அனுமதிக்கவில்லை. பின் கண்டசாலா மற்றும் ராமாராவ் அவர்களின் வேண்டுகோளுக்காக
சேர்க்கப்பட்டு படத்தின் பிரபலமான பாடலானது
https://www.youtube.com/watch?v=q8Qi0Ua3ZXI
அதே படம் எல்லாம் அதே .. ஆனால் கன்னடம்.. ராஜ்குமார் லீலாவதி ..
இசையரசி மற்றும் கண்டசாலா கன்னடத்திலும்
வாசு ஜி உமக்காக உமக்காக இந்த பாடலும் இனிமையும் உமக்காக
https://www.youtube.com/watch?v=-Ry8xeDKnRY
அருமை ஜி!
என்ன ஒரு சாங்! உத்தமபுத்திரன் நடிகர் திலகம் ஸ்டைல் டிரெஸ் போட்டு இருக்கிறார் ராஜ்குமார். 'அவர்கள்' ரஜினி அம்மா (லீலாவதி) ரொம்ப யங்காகத்தான் இருக்கிறார். ஆனால் கிருஷ்ணகுமாரியுடன் நெருங்கவே முடியாது.
தெலுங்கு ஒரு படி டாப். இது இந்த நாட்டாமையின் தீர்ப்பு. நல்ல பாடல்களுக்கு நன்றிஜி!
ஜி! இதே ராகத்தில் இதே பாடலை தமிழில் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் யோசித்து சொல்கிறேன்.
ஜி! நீங்களே கொடுத்துக் கொண்டிருந்தால் எப்படி?
இப்போது நான் ஒன்று கொடுக்கிறேன். செம ஜாலி பாடல்.
விட்டாலாச்சார்யா இயக்கிய 'வீர குமார்' படத்தில் ஒரு இனிய பாடல். சற்றே பர்மா பின்னணி மியூசிக். காமெடியன்ஸ் சாங் தான். ஆனால் வெகு ஜோர்.
சி.க, கிருஷ்ணா நீங்களும் கேளுங்கள்.
https://youtu.be/OT1dpMv54u8
படம் 'வீரகுமார்'தான்
அழகு கிருஷ்ணகுமாரி ராணி (போர்) உடை கம்பீரமாகத் தரித்து சாரட் வண்டியில் தோழிகளுடன் பாடும் பாடல். கிருஷ்ணவேணி குரல் தந்திருப்பார்.
'ஆளும் தமிழ்நாட்டைப் பார்
அம்மலை மேல் கண் கொண்டு பார்'
பாடலாசிரியர் கில்லாடி. ஆந்திராப் பெண்ணை 'ஆளும் தமிழ் நாட்டைப் பார்' என்று பாட வைத்து விட்டாரே! அதே போல இன்னொரு மாங்காயும் அடிக்கிறார். ஒரிஜினல் தமிழ்ப்ப் படம் போல பார்ப்பவர்களை ஏமாற்ற 'தமிழ் நாட்டை' சேர்த்து விட்டார். ஏமாற நாங்கள் என்ன சின்னக் கண்ணனா?:)
சின்னக் கண்ணனுக்கு கிருஷ்ணகுமாரி இருந்தால் போதும்.:) ஆனால் இந்த விஷயத்தில் நான் விட்டுக் கொடுப்பதாய் இல்லை.:)
https://youtu.be/s1efYrnKaJg
இதோ ஒரு கிண்டல் கேலி பாடல்
இசையரசியுடன் ஜானகி
யாராரு என்னன்னு தான் சொல்றேண்டா கண்ணா
https://www.youtube.com/watch?v=xsanDUchQnE
எல்லோருக்கும் காலை வணக்கம்..
வாசு, ராஜேஷ்,
நீங்கள் இருவரும் பகிர்ந்து கொண்ட பாடலின் ஒரிஜினல் இதுவா கேளுங்கள்..
https://www.youtube.com/watch?v=U5sqT8gEk7o
பல்லவியின் முதல் வரி மெட்டு எடுத்துக் கொள்ளப் பட்டு அவரவர் மொழிக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளப்பட்டிருக்கலாம்.
ஆனால் தாங்கள் குறிப்பிட்டிருந்த கன்னடம், தெலுங்கு இரு பாடல்களின் முதல் வரி மெட்டுக்களும் கவலை இல்லாத மனிதன் பாட்டைத் தான் நினைவூட்டுகின்றன.
நான் உருப்படியான பெரிய பதிவுகள் எதுவும் எழுதுவதில்லை (தெரியாது என்பதால்). இருந்தாலும் மற்றவர் பதிவுகளை பாராட்டுவதுண்டு. கணினி அடிக்கடி மக்கர் பண்ணுவதாலும், தமிழ் கன்வெர்ட்டர் அப்பப்ப ஸ்ட்ரைக் பண்ணுவதாலும் அனைத்து பதிவுகளுக்கும் பாராட்டு தெரிவிக்க முடிவதில்லை. பெரும்பாலும் 'தேங்க்ஸ்', 'லைக்ஸ்' மட்டும் போடுவதுண்டு.
இருப்பினும் நானும் அந்த 'மரமண்டைகள்' பட்டியலில் இருக்கிறேன்தானே?.
நெட்வொர்க் கோளாறால் ஒருவாரத்துக்குப் பின் நேற்றுதான் நடிகர்திலகம் திரிக்கு சென்றேன். புயலடித்து ஓய்ந்திருந்தது தெரிந்தது. ஆனால் 'காற்றழுத்த தாழ்வுநிலை' உருவாக காரணமான பதிவுகளை காணோம். திரி அமைதியடைந்தது கண்டு மகிழ்ச்சி. தங்கள் புறக்கணிப்பு கண்டு வருத்தம்.
ராஜேஷ் - இந்த பதிவு உங்களுக்காக
கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான்.
“இறைவா… இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா??” என்று பிரார்த்திக்கிறேன்.
ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடுகின்றன. தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்..
இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை தேற்றிக்கொண்டான். ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.
பட்ட காலிலே படும் என்பது போல… எது நடக்ககூடாதோ அது நடந்துவிட்டது. இவன் தங்குவதுகென்று இருந்த ஒரே குடிசையும் வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன. அதை பார்த்த இவன் அலறித் துடித்தான். எல்லாம் போய்விட்டது. இவனிடமிருந்த மிச்ச சொச்ச பொருட்களும் போய்விட்டது.
“இறைவா… என்னை காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன். நீ என்னவென்றால் இருப்பவற்றையும் பறித்துக் கொண்டாயே… இது தான் உன் நீதியோ…?” என்று கதறி அழுகிறான்.
மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. இவன் தீவை நோக்கி அது வந்துகொண்டிருந்தது.
“அப்பாடா… நல்ல வேளை… ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம். யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்.” என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான். கப்பல் சிப்பந்திகள் இவனை, லைஃப் போட்டில் வந்து அழைத்து சென்றார்கள். தான் இங்கே தீவில் மாட்டிக்கொண்டிருப்பது எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்…. யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்தோம்” என்கிறார்கள் அவர்கள்.
அப்போது இறைவன் குடிசையை எரித்த காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான்.
அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான்.
வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டுவிடுகிறோம்.
நம்மை காக்கவே அவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான். அவன் தரும் சோதனைகள் அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே என்று நாம் புரிந்துகொண்டால், எதைப் பற்றியும் அலட்டிகொள்ளவேண்டியதில்லை.
ஆகவே, சோதனை என்றால்… இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்துவிட்டது விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புங்கள்.
https://youtu.be/l0oSwaMH9x0
வாசு - இந்த பதிவு மதுர கானத்திரிக்கு தேவை இல்லாத ஒன்றுதான் - இருந்தாலும் சில விஷயங்களை நினைத்துப்பார்க்கும் நெஞ்சு பொறுக்கவில்லை - மனதை திறந்து பேச இந்த திரியை விட்டால் வேறு எங்கு சொல்ல முடியும் என்பதால் , இங்கு கொட்டித்தீர்க்கிறேன் - deviation க்கு மன்னிக்கவும் .
விளம்பரத்தில் நடித்தவர்கள் மட்டுமா குற்றவாளி?
மேகி நூடல்ஸ் உடலுக்கு ஆபத்தானது எனவே அமிதாப், மாதுரி , ப்ரீத்தி உள்ளிட்ட நடிகர் நடிகையருக்கு நோட்டிஸ் அனுப்பப் பட்டு கைது வாரண்ட் பிறக்கும் நிலை உள்ளதாக அனைத்து ஊடகங்களீலும் செய்தி வருகிறது! முகனூலிலும் கூட அமிர்தா காலேஜ் குறித்த விளம்பரத்தில் ராதிகாவை விமர்சித்து வருகின்றனர்!
நடிகர் நடிகைகளூக்கு சமூகப் பொறுப்பு உள்ளது ! அவர்களை நேசிக்கும் மக்கள் அவர்களின் விளம்பரத்தால் வீழ்ந்து விடுவது உண்மை ! அவர்கள் தவறான பரிந்துரை செய்வது தவறு என்றாலும் அவர்களுக்கு மட்டும் தான் சமூகப் பொறுப்பு உள்ளதா? மற்றவர்களுக்கு இல்லையா?
இதை ஊடகங்களில் விளம்பரம் செய்து பல கோடி மக்களீடம் சேர்க்கும் ஊடகங்களுக்கு பொறுப்பு இல்லையா? அதில் பிரச்சனை வந்தால் அதையும் விவாதாமாக்கி காசு பார்க்கும் அவங்களை கைது செய்ய வேண்டமா?
மேலும் இதற்கு அனுமதி வழங்கிய இந்திய உணவுத் தரக் கட்டுப்பாடு கழக அதிகாரிகள் தண்டிக்கப் பட வேண்டாமா?
இதை விட மோசமான ஆபத்தை விளைவிக்கும், புகையிலை, போதைப்பாக்கு, மது உள்ளிட்ட பொருட்களை அனுமதிக்கும் அரசுக்கும் , அதை ஆளுகின்ற வர்கத்துக்கும் தண்டனை இல்லையா?
தயாரிக்கும் இடத்தில் தடுப்பதை விட்டு விட்டு தயாரித்தவனுக்கு தண்டனை வழங்குவதை விட்டு, அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகளை விட்டு விட்டு நடித்தவன், விற்றவன், வாங்கியவன் , பயன் படுத்துதுபவனை தண்டிக்கும் கேடுகெட்ட சட்டங்களை வைத்து எந்தத் தீமையையும் தடுக்க முடியாது!
பான் பராக் தயாரிப்பவனை விட்டுவாங்களாம்!
விற்கிறவனைப் பிடிப்பாங்களாம்!
சிகரெட் தயாரிப்பவன் விற்பவனை விட்டுடுவாங்களாம்!
பொது இடத்தில் புகைப் பிடிப்பவனை பிடிப்பாங்களாம்!
பிளாஸ்டிக் பை தாயாரிக்கிறவனை விட்டுடுவாங்களாம்!
கடையில் வைத்து சில்லறையில் விற்பவனை பிடிப்பாங்களாம்!
மதுவை அரசாங்கமே தயாரித்து விற்பாங்களாம்!
அதைக் குடிச்சிட்டு வண்டி ஓட்டினா பிடிப்பாங்களாம்!
கட்டிடம் இடிந்தால் கட்டினவனை பிடிப்பங்களாம்!
ஆனால் காசு வாங்கிக் கொண்டு அனுமதித்த அதிகாரிகளை விட்டுவாங்களாம்!
செம்மரத்தை கடத்துறவனை விட்டுடுவாங்களாம்!
கூலிக்கு மரம் வெட்டுறவனை சுட்டுருவாங்களாம்!
போங்கடா நீங்களும் உங்க சட்டமும்!
https://youtu.be/JgUOyi2TWyo
ஆதி,
கூப்பிட்லாமில்லே?:)
உங்களைப் போய் அப்படிச் சொல்வேனா? நீங்கள் மரமண்டை அல்ல. மகா மண்டை.
எவ்வளவு விஷயங்களை தாங்கள் உன்னிப்பாகக் கவனித்து பல சிறு சிறு தவறுகளை மற்றவர் மனம் கோணாமல்... நன்கு கவனிக்கவும்... மற்றவர் மனம் கோணாமல் திருத்தி உள்ளீர்கள்!. அவ்வளவு விஷய ஞானம் உள்ளவர் தாங்கள்.
நீங்கள் அடிக்கடி இங்கு வராததுதான் மிகப் பெரிய குறை எங்களுக்கு. அதே போல பாராட்டைப் பற்றி குறிப்பிட்டு நான் அதை எழுதவில்லை.
//இங்கு எழுதுபவர்கள் ஏதாவது பைசா வருகிறது என்றா எழுதுகிறார்கள்.. முகம்,வயது, பதவி - எதையும் அறியாத அன்பு நெஞ்சங்கள், தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே//
மேற்கண்ட வரிக்கு மட்டுமே அந்த மரமண்டை பதில்.:)
நாம் கலந்து கட்டி 'அங்கு' விளையாடிய நாட்கள் பசுமையானவை. முக்கியமாக வைர நெஞ்சம், பாரத விலாஸ்.
உங்களுக்குத் தெரியாத தமிழ்த் திரைப்பட ரகசியமே இருக்க முடியாது.
அதை நீங்களும் பயன்படுத்திக் கொண்டு எங்களையும் பயனடையச் செய்ய வேண்டுகிறேன். தினம் ஒரு பதிவாவது தாங்கள் இங்கு இட வேண்டும். இது என் அன்பு வேண்டுகோள்.
நன்றி!
சபாஷ் ரவி!
உங்கள் கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன். இதே கேள்விகள்தான் என் நெஞ்சிலும் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இருந்து என்ன பயன்? நாம் இருப்பது இந்தியா ஆயிற்றே!
அருமையான ஆக்ரோஷ பதிவு. ஒவ்வொரு அரசியல்வாதியும் உணர வேண்டிய கருத்துக்கள்.
நீங்கள் சொல்வது போல் மீடியாக்கள் எல்லாத் தவறையும் செய்து விட்டு ஜம்மென்று தப்பிக் கொள்கின்றன. முக்கியமாக பத்திரிக்கைகள்.
உள்ளக் குமுறலை நடிகர் திலகத்தின் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' பாடல் மூலம் தணிக்க வைத்ததற்கும் நன்றி! பொருத்தமான பாடல்.