-
6th June 2015, 08:54 AM
#701
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 48
ஜனணியின் தொடர்ச்சி :
உண்மை சம்பவம் -6
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன
அன்று "பிரதோஷம் " . காலையில் இருந்தே அம்மா என்னிடம் application போட்டு விட்டாள் , கபாலீஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச்செல்ல . இன்று ஆபீஸ் இல் ஏகப்பட்டவேலை - புதியதாக ஒரு MD சேருகிறார் - கொஞ்சம் முசுடாம் -- கோபம் வேறு அடிக்கடி வருமாம் - UP யை சேர்ந்தவர் . ஜானா விற்கு உடம்பு சரியில்லை - இன்று கண்டிப்பாக ஆஸ்பத்திரி கூட்டி செல்ல வேண்டும் - ஸ்கூட்டர் வேறு ஸ்டார்ட் ஆகவே இல்லை . குட்டிகளை ஸ்கூல்களுக்கு தயாராக்கவேண்டும் - இன்று அவர்களுடைய ஸ்கூல் பஸ் வராதாம் .
ஜானாவிடம் செல்கிறேன் -- " என்னங்க உங்கள் லீவு application என்னவாயிற்று ? குழந்தைகளுக்கு summer லீவ் ஆரம்பித்து விடும் - இந்த தடவையாவது அவர்களை ஏமாற்றாமல் ஊட்டிக்கு கூட்டிக்கொண்டு போகவேண்டும் "
"ஜானா , அம்மாவை ------"
" ஏன் உங்கள் தம்பி , தங்க கம்பி இருக்கிறாரே அவரிடம் இருக்கட்டும் - மூன்று நாட்கள் தானே !"
" ஜானா தம்பியின் நிலைமையை தெரிந்துமா இப்படி சொல்கிறாய் ? - மூன்று மாதங்களாக அவனுக்கு வேலை இல்லை . பாவம் - இதில் அம்மாவை எப்படி சமாளிப்பான் "
சண்டை வலுவானது . பீரங்கிகள் வெடித்தன ...... அடுத்த நிமிடம் நான் ஆபீஸ் இல் .
அம்மா என்றுமே தனக்கு என்று எதையுமே கேட்டதில்லை - தம்பிக்கு வேலை போன விஷயத்தை நான் சொல்ல வில்லை - ஒடிந்தே போய் விடுவாள் .. அம்மா எனக்கு அடிக்கடி சொல்லும் அறிவுரை
" பணம் சம்பாதிப்பது --- குண்டூசியால் பள்ளம் தோண்டுவதுபோல ; செலவழிப்பது குண்டூசியால் பலூன் உடைப்பது போல "
புதிய MD வந்துவிட்டார் - மாலை மரியாதைகள் முடிந்தவுடன் ஒருவர் ஒருவராக அறிமுகம் .என் முறை வந்தது .
MD என்னிடம் மட்டும் எதையோ கேட்க்க விரும்பினார் - மீண்டும் தன் cabin க்கு அழைத்தார் - எல்லோருடைய கண்களும் இப்பொழுது என் மீது - வந்த முதல் நாளிலேயே MD இவனை கூப்பிடுகிறாரே - என்ன வசியம் செய்தான் இவன் ----
" ராஜு நீங்கள் இதற்க்கு முன் UP யில் இருந்தவரா ? உங்கள் அப்பா எங்கு வேலை செய்தார் ? எல்லாமே பர்சனல் கேள்விகள் - பொறுமையாக விடை அளித்தேன் . என்னுடைய வீட்டு விலாசத்தையும் வாங்கிக்கொண்டார் .
ஒரு மணி நேரம் permision எடுத்துக்கொண்டு அம்மாவை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து சென்றேன் - ஜானவே தனியாக ஆஸ்பத்திரி சென்று வந்தாள் . 7மணி - வீடு வந்தடைந்த என்னை ஒரு BMW கார் வரவேற்றது . ஜானா ஓடிவந்தாள் " என்னங்க - உங்கள் MD உங்களை பார்க்க வந்திருக்கிறார் . 5நிமிடமாக காத்துகொண்டிருக்கிறார் .
" MD யா !! இவர் ஏன் என் வீட்டிற்க்கு ?????"
" ராஜு இவர்கள் தான் உன் அன்னையா ...... ?" MD பதிலுக்கு தாமதிக்காமல் அவள் காலில் விழுந்தார் -- " அம்மா என்னை தெரிகிறதா ? நான்தான் விசு - விஸ்வநாதன் - வாரணாசியில் உங்கள் வீட்டிற்க்கு அருகில் இருந்தேன் . மேலே படிக்க முடியாமல் சங்கர மடத்தில் சேர நினைத்த என்னை உங்கள் கணவர் கண்டுபிடித்து அழைத்துவர , நீங்கள் என்னை உங்கள் மகனாக நினைத்து உங்கள் வீட்டிலேயே தங்க வைத்து என்னை படிக்க வைக்க உங்கள் நகைகளை வேறு வித்து --- அம்மா உங்களை மீண்டும் பார்க்க முடிந்ததே , நான் செய்த பெரிய பாக்கியம் "
எனக்கு ஒன்றும் புரியவில்லை , ஜானா சிலையாகி 10 நிமிடங்கள் ஆகிவிட்டன - அம்மா இதுவரை என்னிடம் ஒரு வார்த்தை இதைப்பற்றி சொன்னேதே இல்லை ...
அம்மா குனிந்து MD யை தூக்கினாள் --- விசு உன்னை எவ்வளவு நாட்களுக்கு பிறகு சந்திக்கிறேன் - ராஜுவை அப்பொழுது சுமந்து கொண்டிருந்தேன் உள்ளே - உன்னை வெளியே !!
"அம்மா என்னுடன் வந்துவிடுங்கள் , ராஜுவையும் அவன் family யையும் நான் பார்த்துக்கொள்கிறேன் . " MDயின் குரலில் கண்ணீரின் ஓட்டத்தின் சத்தத்தை உணர்ந்தேன் .
" விசு நீ இப்படி சொன்னதே போதும் - நன்றாக நீ இருக்க வேண்டும் "
MD எப்பொழுது கிளம்பினார் என்றே தெரியவில்லை - ஜானா மெதுவாக குரல் கொடுத்தவுடன் கண்களை திறந்தேன் . " என்னங்க அம்மாவையும் ஊட்டிக்கு அழைத்து செல்ல வேண்டும் - அம்மா வராவிட்டால் , எங்களுக்கு ஊட்டி தேவை இல்லை ---- குழந்தைகள் பாட்டியின் மடியில் கதைகளை பிடுங்கிக்கொண்டிருந்தன -- டிவி யை போட்டேன் -- பிரதோஷம் - இறைவன் தன் தேவியுடன் ரிஷபத்தில் வந்துகொண்டிருக்கும் காட்சி - கண்கள் டிவி யின் பக்கம் - கைகள் சேவித்தது அம்மாவின் பக்கம் -----------
Last edited by g94127302; 6th June 2015 at 05:49 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
6th June 2015 08:54 AM
# ADS
Circuit advertisement
-
6th June 2015, 08:58 AM
#702
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 49
ஜனணியின் தொடர்ச்சி :
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ
வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோஓஓஓஓஓஓ
பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ
வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோ
முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ
நித்தம் கத்துக் குயிலோ அது கண்ணன் குரலோஓஓஓஓஓஓஓஓஓஓ
முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ
நித்தம் கத்துக் குயிலோ அது கண்ணன் குரலோ
என்னை மறந்தேன் நான் உன்னை மறந்தேன்
இன்று தன்னை இழந்தேன்
சுகம் தன்னில் விழுந்தேன்
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ
என்ன நினைப்போ அது இன்பத்தவிப்போஓஓஓஓஓஓஓஓஓஓ
கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ
என்ன நினைப்போ அது இன்பத் தவிப்போ
தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ
அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ
தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ
அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ
கண்ணை அளந்தேன் அதில் பொன்னை அளந்தேன்
பிள்ளை நெஞ்சை அளந்தேன் புதுப் பூவை அளந்தேன்
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
கண்ணில் எடுத்தேன் நெஞ்சைக் கையில் கொடுத்தேன்
சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன்
சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன்
ராதை நினைப்பாள் அங்கு கண்ணன் இருப்பான்
அந்த கோதை சிரிப்பாள்அதைக் கண்டு ரசிப்பான்
அதைக் கண்டு ரசிப்பாள்
ஒன்றை நினைத்தேன் அந்த ஒன்றை அடைந்தேன்
என் அன்பைத் தருவேன்அந்த அன்பைப் பெறுவேன்
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th June 2015, 09:00 AM
#703
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 50

ஜனணியின் தொடர்ச்சி :
மல்லிகைப் பூ போட்டு
கண்ணனுக்கு மங்கள நீராட்டு...
செண்பகப் பூ போட்டு
பாடு ஒரு செந்தமிழ் தாலாட்டு...
படம்: தாலாட்டு
-
6th June 2015, 09:02 AM
#704
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 51
ஜனணியின் தொடர்ச்சி :
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்ல கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
நிலவே மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே
—
எட்டி நிற்கும் வானம்
உன்னை கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்
எட்டி நிற்கும் வானம்
உன்னை கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்
விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம்
கண்ணே நீ காட்டு
விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு
பாடல் நீ கேட்டு
—
நிலவே மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
—
புன்னை இலை போலும்
சின்ன மணி பாதம்
மண்ணில் பட கூடாது
பொன்னழகு மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் பட கூடாது
புன்னை இலை போலும்
சின்ன மணி பாதம்
மண்ணில் பட கூடாது
பொன்னழகு மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் பட கூடாது
மயில்களின் இறகினில் அழகிய விழிகளை
நீ தான் தந்தாயோ
மணி குயில் படித்திடும் கவிதையின் இசையென
நீ தான் வந்தாயோ
—
நிலவே மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்ல கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
நிலவே மலரே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th June 2015, 09:04 AM
#705
Junior Member
Seasoned Hubber
-
6th June 2015, 09:23 AM
#706
Senior Member
Diamond Hubber
( ரொம்ப நாளா டாடி எனக்கொரு டவுட்டு.. பக்கத்திலோ காரிகை மேலே நிலவு கீழே வைக்கோல் போர் இந்தாள் என்னடானா கடிதம் லாம் எழ்தறறார்.. (தமிழ் ஜெய்யும் தெலுகு ராஜாவும்)
ரொம்ப அக்கப்போர்தான்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
6th June 2015, 09:32 AM
#707
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
( ரொம்ப நாளா டாடி எனக்கொரு டவுட்டு.. பக்கத்திலோ காரிகை மேலே நிலவு கீழே வைக்கோல் போர் இந்தாள் என்னடானா கடிதம் லாம் எழ்தறறார்.. (தமிழ் ஜெய்யும் தெலுகு ராஜாவும்)
ரொம்ப அக்கப்போர்தான்

போரடிக்காமல் அக்கப்போராவது அடிக்கிறாரே ... விடுவீரா 
என்ன ஜி. நலம் தானே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th June 2015, 09:56 AM
#708
Senior Member
Seasoned Hubber
மாய மோதிரம் என்றவுடன் பல விட்டலாச்சார்யாவின் படங்கள் நினைவுக்கு வரும்
folklore அதாவது தெலுங்கில் ஜானபத கதைகளை அழகாக படமாக்கி நம்மை வியப்பில் ஆழ்த்தியவர்.
ராமாராவ், காந்தாராவ் என இருவரும் இவரது பல படங்களில் தூள் கிளப்பியவர்கள்
அப்படி ஒரு படம் பந்திபொட்டு .. அதிலும் கண்டசாலாவின் இசையில் இந்த பாடல் நம்மை எங்கோ கொண்டு செல்லும்
இந்த பாடல் படத்தில் இடம்பெற முதலில் விட்டலாச்சார்ய அனுமதிக்கவில்லை. பின் கண்டசாலா மற்றும் ராமாராவ் அவர்களின் வேண்டுகோளுக்காக
சேர்க்கப்பட்டு படத்தின் பிரபலமான பாடலானது
அதே படம் எல்லாம் அதே .. ஆனால் கன்னடம்.. ராஜ்குமார் லீலாவதி ..
இசையரசி மற்றும் கண்டசாலா கன்னடத்திலும்
வாசு ஜி உமக்காக உமக்காக இந்த பாடலும் இனிமையும் உமக்காக
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
6th June 2015, 10:05 AM
#709
Senior Member
Diamond Hubber
அருமை ஜி!
என்ன ஒரு சாங்! உத்தமபுத்திரன் நடிகர் திலகம் ஸ்டைல் டிரெஸ் போட்டு இருக்கிறார் ராஜ்குமார். 'அவர்கள்' ரஜினி அம்மா (லீலாவதி) ரொம்ப யங்காகத்தான் இருக்கிறார். ஆனால் கிருஷ்ணகுமாரியுடன் நெருங்கவே முடியாது.
தெலுங்கு ஒரு படி டாப். இது இந்த நாட்டாமையின் தீர்ப்பு. நல்ல பாடல்களுக்கு நன்றிஜி!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th June 2015, 10:06 AM
#710
Senior Member
Diamond Hubber
ஜி! இதே ராகத்தில் இதே பாடலை தமிழில் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் யோசித்து சொல்கிறேன்.
Bookmarks