டியர் ராகவேந்தர்,
வாவ்....., எத்தனை சிரமப்பட்ட தொகுப்பு. அற்புதம்... அற்புதம்.
உங்கள் எண்ணம் எப்படியெல்லாம் ஓடுகிறது, அதற்கு உடனே எப்படியெல்லாம் செயல்வடிவம் கொடுக்கிறீர்கள். இவை அத்தனை இசைக்கருவிகள் வாசிக்கும் புகைப்படங்களை சேகரிப்பதும் அவற்றை இங்கே பதிப்பதும் லேசான வேலையா?.
நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் உங்கள் செயல்பாடுகள் புல்லரிக்க வைக்கின்றன. (எங்க மாமா படத்தில் அக்கார்டியன் இசைக்கும் புகைப்படமும் உங்கள் தொகுப்பில் உள்ளது. ஆகவே அக்கருவியையும் நீங்கள் அளித்துள்ள பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்).
நிச்சயமாக உலகத்தில் வேறு யாரும் இத்தனை இசைக்கருவிகளை இசைப்பவராக நடித்திருக்க முடியாது. ஏனென்றால் அவற்றில் பல வாத்தியங்கள் நம் நாட்டுக்கே உரித்தானவை.
அட்டகாசம்... அருமை... அற்புதம்...
சாதனை நாயகனுக்கேற்ற சாதனை ரசிகர் நீங்கள்.