-
16th September 2011, 02:32 PM
#11
இங்கு நடிகர் திலகம் புகழ் பாடும் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம்,
இது ஒரு சத்யமான வார்த்தை, எல்லா சிவாஜி ரசிகர்களின் மனதில் இருக்கும் மாறாத வடு;ஒரு உயர்ந்த இடத்தை தனது திறமையாலும், கடுமையான உழைப்பாலும் மட்டுமே எட்டிய ஒரு தமிழனை, சக தமிழர்களும், கூட இருந்து குழி பறித்தவர்கலுமே அதிகம் என்பதை நமது ரசிகர்கள் ஒவ்வொருவரும் அறிவர்; திரு. வாசுதேவன் மற்றும் சாரதா மேடம் அவர்களின் உள்ளக் குமறலை நானும் வழி மொழிகிறேன்.
இந்த திரியை, நமது நடிகர் திலகம் புகழ் பாடும் இந்த நூலகத்தை, பல்கலைகழகத்தை ஒரு மாதம் முன்புதான் காணும் வாய்ப்பு கிடைத்தது; பெரும் பாக்கியம் பெற்றேன்;என்னைபோலவே இங்கு பல முகங்களை காண்கிறேன், ஆனால், உங்களைப் போல் எல்லாம் என்னால் இந்தத் திரியில் என்னால் பங்கு கொள்ள முடியாது, ஆனால், இதையெல்லாம் பார்த்து, நடிகர் திலகத்தின் நடிப்பை பார்ப்பது போல், பார்த்து, படித்து பரவச முடியும், ஏனென்றால், இன்று வரை நம்மால் அப்படி வேறு ஒரு நடிகரை அடையாளம் காண முடியாததால்.
இங்கு பங்கேற்கும் அனைத்து நமது சிவாஜி ரசிகர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள், இப்படி ஒரு திரியை ஆரம்பித்து , அணையா விளக்கைப்போல், நாளொரு மேனிபோல் வளர்த்துக் கொண்டிருப்பதற்கு!!!!!
Anm
-
16th September 2011 02:32 PM
# ADS
Circuit advertisement
Bookmarks