ராகவேந்தர் சார்,
நடிகர்திலகம் பல்வேறு இசைக்கருவிகளை இசைக்கும் புகைப்படத் தொகுப்பு ஒரு அசுர சாதனை. இத்தனை இசைக்கருவிகள் இசைக்கும் புகைப்படங்களையும் திரட்டி, ஒரே அளவில் பதித்து, அவற்றை ஒரே புகைப்பட வடிவில் தருவதென்பது, உங்களைப்போன்ற அபார கற்பனா சக்தி கொண்டவர்களால் மட்டுமே நிகழ்த்தப்படக்கூடியது.
தாங்கள் அளித்திருக்கும் அந்தப்பதிவு மிகப்பெரிய பொக்கிஷம். பதினாறு சுவைகளை உள்ளடக்கிய விருந்து. நன்றிகள் ஏராளமாய்.
பம்மலார் சார்,
நடிகர்திலகத்தின் கடைசிக்காவியமான 'பூப்பறிக்க வருகிறோம்' பட விளம்பரம் ஜோர். அப்படத்தில் அவரோடு இணைந்து நடித்த மாளவிகா போன்ற இன்றைய தலைமுறையினரின் கருத்து பற்றிய பத்திரிகை கட்டிங் எதுவும் இருக்கிறதா?.




Bookmarks