இன்றைய ஸ்பெஷல் (29)
பெருந்தலைவர் பிறந்த நாள் ஸ்பெஷல்
இன்று மனிதப் புனிதரின் 112 வது பிறந்த நாள்.
'இன்றைய ஸ்பெஷலா'க மனிதர்களுள் மகுடமாய் ஜொலித்த நம் பெருந்தலைவரை நடிகர்களுள் மனிதனாய் ஜொலித்த நடிகர் திலகம் போற்றிப் புகழும் ஒரு பாடல். பொருத்தமாய் இருக்கும்தானே!
படம்: 'தாய்'.
பேனர்: பாபு மூவீஸ்
இசை: மெல்லிசை மன்னர்
பாடல்கள்: கவியரசர்
கதை வசனம்: எம்.எஸ்.சோலைமலை
ஒளிப்பதிவு: விட்டல்ராவ்
தயாரிப்பு: எஸ்.எஸ்.பிரகாஷ்,எஸ்.எஸ்.ராஜன்
'தாய்' (1974)திரைப்படத்தில் நடிகர் திலகமும்,ஜெயலலிதாவும் ஆடிப் பாடும் பெருந்தலைவர் புகழ் போற்றும் அற்புதமான பாடல்.
http://i812.photobucket.com/albums/z...psb08c93c1.jpg
அந்த கிராமத்திற்கு நல்லது செய்ய நினைத்து வந்திருக்கும் 'மேஜர்' சுந்தரராஜனைப் புகழ்ந்து கிராமத்து இளைஞர் நடிகர் திலகமும், அவர் காதலியாக வரும் ஜெயலலிதா மற்றும் ஊர் மக்கள் பாடுவது போல் வரும் இந்தப் பாடல் முழுக்க முழுக்க காமாராஜர் அவர்களை மனதில் கொண்டே எழுதப்பட்டது. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை பெருந்தலைவரின் புகழை இப்பாடல் எடுத்துரைக்கிறது.
http://i1087.photobucket.com/albums/...55/erdtg-1.jpg
பெருந்தலைவரை தெய்வமாகப் போற்றிய நடிகர் திலகம் தன் படப் பாடல்களில் அம்மேதையின் புகழ் பாட மறந்ததேயில்லை. எவ்வித எதிர்பார்ப்புமின்றி, எவ்வித ஆதாயமும் தேடாமல் பெருந்தலைவரின் புகழை தன் பாடல்கள் மூலம் மக்கள் உணரச் செய்தார் அந்த நடிக மாமேதை
'பள்ளி சாலை தந்தவன் ஏழைத் தலைவனை தினமும் எண்ணுங்கள்'
என்று மக்களை எந்நாளும் நினைத்துப் பார்க்கச் சொன்ன தலைவரின் தன்னகரில்லா தொண்டன். அவரை மறக்காமல் மக்களுக்கு நினைவூட்டிய விசுவாசத் தொண்டன்.
'செடி மேல் படர்ந்த கொடிகளைப் போல
பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம்
அவர் மடியினில் எதையும் மறைத்ததில்லை
இந்த மாநிலம் அவர் வசம் ஆகலாம்.
தியாகமும் சீலமும் தேசத்தை ஆளலாம்
தியாகமும் சேலமும் தேசத்தை ஆளலாம்'
என்று எட்டுத்திக்கும் தன் தலைவர் புகழை எதிரொலிக்க வைத்த ஏழைப் பங்காளனின் எளிமைத் தொண்டன்.
'சிவகாமி உமையவளே முத்துமாரி
உன் செல்வனுக்குக் காலம் உண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்துக் கூறி
இந்த மக்களெல்லாம் போற்ற வேண்டும் கோட்டை ஏறி'
என்று தீராத நம்பிக்கையோடு தீச்சட்டி கையில் ஏந்தி களிப்புற்றவன்.
அது உண்மையான பெருந்தலைவரின் மேல் அந்த உண்மையான மனிதனுக்கிருந்த இருந்த பக்தி, பாசம், மரியாதை.
தன் தலைவன் புகழ் பாடும் எங்கள் தலைவன்
இந்தப் பாடலை பெருந்தலைவரின் பிறந்தநாளில் முதன் முறையாக இணையத்தில் தரவேற்றி உங்கள் அனைவருக்கும் அளிப்பதில் பெருமையும், பேரானந்தமும், உவகையும் அடைகிறேன்.
நாடாள வந்தாரு நாடாரா வந்தாரு ஹேய்
நாடாள வந்தாரு நாடாரா வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா
கல்லாமை கண்டாரு இல்லாமை தந்தாரு
கல்லூரி தந்தாரம்மா
அம்மம்மா கல்லூரி தந்தாரம்மா
நாடாள வந்தாரு நாடாரா வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா
கல்லாமை கண்டாரு இல்லாமை தந்தாரு
கல்லூரி தந்தாரம்மா
அம்மம்மா கல்லூரி தந்தாரம்மா
பாண்டிய நாட்டுச் சீமையிலே
ஒரு பச்சைக் குழந்தை அழுததடி
பாலுக்காக அழவில்லை
அது படிப்புக்காக அழுததடி
மாடு மேய்க்கும் சிறுவனைக் கண்டு
மனதும் உடலும் பதைத்ததடி
வளரும் பிள்ளை தற்குறியானால்
வாழ்வது எப்படி என்றதடி
நாடாள வந்தாரு நாடாரா வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா
பெற்ற தாயையும் மறந்ததடி
அது பிறந்த பொன்னாட்டை நினைத்ததடி
பெற்ற தாயையும் மறந்ததடி
அது பிறந்த பொன்னாட்டை நினைத்ததடி
உற்றார் உறவினர் யாரையும் மறந்து
உலகம் காக்கத் துணிந்ததடி
கல்யாணம் செய்யவும் எண்ணமில்லை
ஒரு காசுக்கும் பணத்துக்கும் ஆசையில்லை
எல்லார்க்கும் எல்லாமும் வேண்டுமென்றே
தினம் எண்ணுவதல்லால் ஏதுமில்லை
நாடாள வந்தாரு நாடாரா வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா
கல்லாமை கண்டாரு இல்லாமை தந்தாரு
கல்லூரி தந்தாரம்மா
அம்மம்மா கல்லூரி தந்தாரம்மா
(கீழே வரும் பாடலின் பகுதி வானொலியின் ஒலிபரப்பில் கிடையாது. அதையும் சேர்த்தே வீடியோவில் அளித்துள்ளேன்).
பிறப்பினில் பச்சைத் தமிழனடி
அவர் பெரியவர் என்போம் நாங்களடி
கர்ம வீரனை தனா காந்தி என்று
அழைப்பார் இந்திய மக்களடி
அவரை அழைப்போம் வாங்களடி
ஓர் அரசை அமைப்போம் நாங்களடி
விருது கொடுத்து நகர்வலம் வருவோம்
வெற்றி முழக்கிடக் கூறுங்கடி
வெற்றி முழக்கிடக் கூறுங்கடி
முதன் முறையாக இணையத்தில்
https://www.youtube.com/watch?v=f5L1...yer_detailpage