வரும் ஞாயிற்று கிழமை ntf சார்பில் என் தம்பி திரையிடல் என்று கேள்வி படுகிறேன். உண்மையா?
Printable View
வரும் ஞாயிற்று கிழமை ntf சார்பில் என் தம்பி திரையிடல் என்று கேள்வி படுகிறேன். உண்மையா?
அது மட்டுமில்லை Joe . 1970 களில் நிறைய திமுகவினர் நடிப்பு,திரைப்படங்கள் என்றால் நடிகர்திலகமே என்று புகழ்ந்து ,அவர் படங்களை ஆசையோடு பார்த்தவர்கள். உதாரணங்கள்- டி.ஆர்.ஆர்.,ஆளவந்தார் போன்ற என் தமிழ் ஆசிரியர்கள், என் நண்பர்கள் ராஜமகேந்திரன், ரவீந்திரன் போன்றோர். இன்னும் நிறைய.
அண்ணாவும் ,கலைஞருமே மானசீக சிவாஜி ரசிகர்களே. பாலும் பழமும் போன்ற படங்கள் ரிலீஸ் ஆன போது,அண்ணா, முதல் நாளே படம் பார்த்து, அவர் உடல் சற்றே பெருத்ததை குறிப்பிட்ட சகாக்களிடம், கணேசன் நடிப்பை பார் ,அவரை விட உலகில் சிறந்த நடிகர் இல்லை. என்ன தரமான படங்கள். என்று குறிப்பிட்டதாக குறிப்புகள் உண்டு. கலைஞரும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ,நடிகர்திலகம் படம் பார்த்து ,டி.வீ. பெட்டியை வாஞ்சையுடன் தடவி நீதாண்டா ஒரே நடிகன் என்று தழுதழுப்பாராம்.
கனிமொழி மற்றும் அழகிரி சிவாஜி ரசிகர்களே. கனிமொழி ,அரவிந்தனிடம் சிவாஜி படங்களை பற்றி discuss பண்ணியதை ஒரு பேட்டியில் குறித்துள்ளார்.திருச்சி சிவா ,வை.கோ போன்றோர் குறிப்பிட பட வேண்டியவர்கள்.
என்ன தல .. மக்கள் திலகம்ம் திரியில் நான் சொன்னது சம்பந்தமாகவா ?
நீங்கள் உதாரணத்துக்கு வேறெங்கும் போக வேண்டாம் . நானே உதாரணம் . எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து நான் நடிகர் திலகத்தின் ரசிகன் .அதே நேரத்தில் எப்போதும் நான் திமுக அபிமானியாகவே (இடையில் சிறிது காலம் மதிமுக-வை ஆதரித்தது தவிர்த்து) இருந்திருக்கிறேன் .
எங்கள் கிராமத்தை பொறுத்தவரை அண்ணா காலத்தில் திமுக-வின் கோட்டையாக இருந்திருக்கிறது . விரல் விட்டு எண்ணக்கூடிய காங்கிரசு குடும்பங்கள் இருந்திருக்கின்றன .பின்னர் எம்.ஜி.ஆர் அதிமுக ஆரம்பித்த பிறகு பெரும்பகுதி அதிமுக-வுக்கு சென்றது . திமுக-வில் தங்கிவிட்டோர் பலர் எம்.ஜி.ஆர் ரசிகர்களாகவும் தொடர்ந்தார்கள் . ஆனால் நான் சிறுவனாக இருந்த போது எங்கள் ஊரை பொறுத்தவரை அதிமுக-வினர் எம்.ஜி.ஆர் படங்களை திரையிடும் போது அதற்கு இணையாக சிவாஜி படங்களை திரையிட்டது திமுக-வினர் தான் . காங்கிரசார் சீன்லயே கிடையாது . நான் மட்டுமல்ல என் வயதில் சிவாஜி ரசிகர்களாக இருந்த என் நண்பர்கள் பலர் அரசியலில் திமுக அனுதாபிகள் தான் .
ஒரு ரகசியம் சொல்லட்டுமா? பெரும் தலைவர் மேல் எனக்கு மிக மிக மரியாதை இருந்தாலும், சிவாஜியை பயன் படுத்திய அளவு, அவருக்கு அங்கீகாரம் கொடுக்காத காங்கிரஸ் மேல் எனக்கு கசப்புணர்வே. நான் திமுக கலைஞர் அனுதாபியாகவே தொடர்ந்தேன். எதிர்ப்பலையிலும் திமுகவை கட்டு கோப்பாய் வைத்திருந்த கலைஞரை நான் வியக்காத நாளேயில்லை. ஆனால் வை.கோ வின் மேல் எனக்கிருந்த மரியாதை நிமித்தம் ,சிறிது காலம் (1998 வரை) வைகோ அனுதாபியானேன்.(சிவாஜி மறைந்ததும் அவருக்கு பாரத் ரத்னா வழங்க மேல்சபையில் குரல் எழுப்பியவர். )
இன்றும் தி.மு.க ,கலைஞர் என்றால் சிறிதே மனம் இளகும்.
சிவாஜியும் ,கலைஞரும் இணைந்த 1980 எனக்கு மகிழ்வு தந்த காலம்.(மற்றோரோடு அவர் மேடையில் தோன்றியது எனக்கு மனது ஒப்பியதே இல்லை) .1988 இல் அவர் தி.மு.க வோடு தேர்தல் உடன்பாடு கண்டிருந்தால், அரசியல் சரித்திரம் திருத்தி எழுத பட்டிருக்கும்.
எனது கல்லூரிப்பருவத்தில் எனது நெருங்கிய நண்பராகவும், நடிகர்திலகத்தின் தீவிர ரசிகராகவும் விளங்கியவர் நண்பர் ஜபருல்லாஹ். திருச்சி மாவட்டம் லெப்பைக்குடிக்காடு என்ற ஊரைச்சேர்ந்தவர். எங்களை நண்பரகளாக்கியதே நடிகர்திலகத்தின் மீது கொண்ட அபிமானம்தான். சிறுவயதிலிருந்தே நடிகர்திலகத்தின் தீவிர ரசிகராம் அவர். 70-களின் இறுதிப்பகுதிகளில் அவரோடு சேர்ந்து பார்க்காத படமே இல்லையெனலாம். ராயப்பேட்டை புதுக்கல்லூரியிலிருந்து மவுண்ட் ரோடு ஏரியாவிலிருந்த அத்தனை தியேட்டர்களுக்கும் நடந்தே போவோம். பிற்பட்டோருக்கான அரசு விடுதியில் (முதலில் கோடம்பாக்கம் பாலத்தின் கீழே இருந்த ஹாஸ்டலிலும், பின்னர் நந்தனம் எம்.சி.ராஜா ஹாஸ்டலிலும்) தங்கிப்படித்தார். அப்போதே திருச்சி பகுதிகளில் நடிகர்திலகத்தின் படங்கள் ஓடும் விபரங்களை அவருடைய நண்பர்கள் மூலம் கடிதங்கள் வாயிலாகவும், செய்தித்தாள் விளம்பரங்கள் வாயிலாகவும் தருவித்து அவற்றைக் கல்லூரிக்கு கொண்டுவந்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதுபோல சென்னை விளம்பரங்களையும் அவர்களுக்கு அனுப்புவார். ஆனால் இந்த வேலைகளில் கவனம் செலுத்தினாலும் படிப்பைக் கோட்டை விட்டுவிட மாட்டார். படிப்பில் அசகாய சூரர்.
பி.காம். பட்டப்படிப்பு முடிந்ததும் திருச்சி சென்றவர் அங்கேயே வேலையில் செட்டில் ஆனாலும் திருச்சியில் நமது படங்களின் சாதனைகள் குறித்த கடிதங்களையும், தினத்தந்தி கட்டிங் களையும் தவறாமல் அனுப்பி வந்தார். ஆனால் சிறிது காலம் மட்டுமே. அதன்பின்னர் துபாயில் நல்ல வேலை கிடைத்திருப்பதாகச்சொல்லி புறப்பட்டுச்சென்றார். நானும் வேலை கிடைத்து சென்னையைவிட்டு வெளியேறியதால் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கும் நண்பர் ஜபருல்லாஹ்வுக்கும் இடையே இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. இருவருக்கும் திருமணம் ஆகி குடும்பம், குழந்தைகள் என்று ஆனதும் முக்கிய காரணம். (திருமணம் ஆனதும் முதலில் தொலைப்பது இதுபோன்ற சந்தோஷங்களைத்தானே).
நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும், எனது நண்பருமான ஜபருல்லாஹ் இப்போது எங்கேயிருக்கிறார், எப்படியிருக்கிறார் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் மகிழ்ச்சி.....
அன்புள்ள வாசுதேவன் சார்,
தங்கள் பாராட்டு மழைக்கு மிக்க நன்றி. (பாராட்டு கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்த போதும்). தங்கள் நம்பிக்கையைத் தக்கவைக்க நிச்சயம் போராடுவேன்.
அன்புள்ள முரளி சார்,
தங்களுடைய ஸ்பெஷாலிட்டியே இதுதான். எப்போதோ ஒருமுறை சொன்னதையெல்லாம் இவ்வளவு நினைவில் வைத்து சமயம் வாய்க்கும்போது மறவாமல் குறிப்பிடுவது, மற்றவர்கள் பதிவுக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய கௌரவம். (பெரும்பாலோரிடம் இதைக்காண முடிவதில்லை) . சென்னை, மதுரை போல திருச்சியில் நமது நடிகர்திலகத்தின் சாதனைகளை யாரும் எடுத்துரைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் சொன்னது உண்மை. அதை நீங்கள் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திருச்சி பிரபாத், ஜுபிடர், ராஜா, பேலஸ், ராக்சி, வெலிங்க்டன் அரங்குகளில் நடிகர்திலகத்தின் சாதனைச்சுவடுகளை பதித்த படங்கள் ஏராளம்.
அன்புள்ள ராமச்சந்திரன் சார் மற்றும் பொன்.ரவிச்சந்திரன் சார்,
நல்வரவு. தங்கள் துவக்கப்பதிவுகளே அருமையாக உள்ளன. நாங்கள் எதிர்பார்ப்பதுபோல திருச்சி நகர சாதனைகளை அள்ளி வீசுங்கள். அதன்மூலம் திருச்சியும் நமது கோட்டையே என்று நிரூபியுங்கள்.
அன்புள்ள ராகுல்ராம் சார்,
தங்களின் 'சிரஞ்சீவி' பட ஆய்வு மிகவும் அருமை. டேவிட் சிரஞ்சீவியின் பாத்திரப்படைப்பை நன்றாக அலசியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். அப்படம் எடுக்கப்பட்ட 'எம்/வி.சிதம்பரம்' சொகுசுக்கப்பல் இப்போது இல்லை. அக்கப்பலின் நினைவுச்சின்னம் சிரஞ்சீவி படம் மட்டுமே. அப்படத்தில் வரும் சில்க் ஸ்மிதாவின் நடனக்காட்சி மட்டும் ஸ்டுடியோவில் படமாக்கப் பட்டது.....
90-களின் ஆரம்பத்தில் நான் திருச்சியில் இருந்த போது இந்த திரையரங்குகள் இரண்டாம் நிலை திரையரங்குகளாக இருந்தன .. கல்லூரி விடுதி நண்பர்கள் சிப்பி , மாரிஸ் என மொய்க்கும் போது என்னுடைய வார விடுமுறை பெரும்பாலும் இங்கே தான் ..ஏனென்றால் இந்த திரையரங்குகள் தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களை மாற்றி மாற்றி திரையிட்டு வந்தன . குறிப்பாக பிரபாத் , ஜூபிடர் , பேலஸ்.
திருச்சியில் நான் தங்கிய ஒரு வருடம் மறக்க முடியாதது. பிஷப் ஹீபர் கல்லூரியில் பீ.யு.சி படித்தேன். அந்த வருடம் சத்குருதாஸ் ,சாமிராஜ் என்ற ப்ரின்சி- correspondent மோதலில் பாதிக்கும் மேற்பட்ட நாட்கள் கல்லூரி மூட பட்டே இருந்தது. பிரபாத்தில் தங்க பதக்கம்(வெள்ளி விழா நோக்கி),ராஜாவில் என் மகன்,பாலஸ் அன்பை தேடி, பிரபாத் மனிதனும் தெய்வமாகலாம் என்ற புது படங்கள்.என் நண்பன் ராஜா குணசிங் சென் ஜோசெப் பில் படித்து வந்தான். இருவரும் கிட்டத்தட்ட 28 பழைய சிவாஜி படங்கள் ராக்சி,வெலிங்டன் , ராஜா,ராமகிருஷ்ணா ,வில் சனி,ஞாயிறு நூன் ஷோ பார்த்திருப்போம். பா வரிசை, நிறைய 60,61,62,63,64,65,66,67 ஆம் வருட படங்கள் . தங்கியிருந்தது ஆனைகட்டி மைதான் ,பீம நகர். அக்கம் பக்கம் எல்லாம் சிவாஜி ரசிகர் மயம். ஒரே ஒரு ஆள் முனவர் பாச்சா என்பவனை தவிர. ரவி சந்திரன் தன்னை சீர்திருத்தி விமலாவுடன் இணைந்து கொண்டிருந்த காலகட்டம், போன் பண்ண எங்கள் வீட்டுக்கு வருவார்.அருணாவில் பாபி, வெலிங்டன் யாதோங்கி பாராத்.பாபி ஒரு பத்து முறை.(மும்பை யில் இருந்து கோவை வந்த போது பக்கத்து சீட்டில் டிம்பிள்.கடலைதான்)
என் தம்பிகள் இருவர் சென் ஜோசெப் பில் பீ.காம் படித்தனர். தங்கை சீதா லட்சுமியில் டிகிரி.. எங்கள் குடும்பத்திற்கு(சிவாஜி ரசிகர்கள்) திருச்சியுடன் நெருங்கிய உறவாக்கும்.
கண்ணனையும், அந்தோணியையும் நாம் எடுத்து வளர்த்தால் போதும். சிரஞ்சீவியை அனாதையாக விடுவதே எல்லோருக்கும் நல்லது.